Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சதிகள் இலவசம்
சதிகள் இலவசம்
சதிகள் இலவசம்
Ebook88 pages30 minutes

சதிகள் இலவசம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையகலக் கண்ணாடியை வைத்துக் கொண்டு, பவுடர் பூசும் முயற்சியில் வெகு தீவிரமாக இருந்தாள் மேனகா.


அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மா, எட்டிப் பார்த்தாள் மெல்ல.


“எங்கேயாவது போறியா மேனகா?”


“லைப்ரரிக்கும்மா!”


“எங்க போனாலும் அப்பா வர்றதுக்குள்ள வீடு வந்துரு. சாயங்கால நேரத்துல, வயசு வந்த பெண்ணை ஏன் வெளிய அனுப்பறன்னு சத்தம் போடுவார்!”


மேனகா உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.


“ஆமா... அப்பாவோட பொறுப்பு தெரியாது? வயசுப் பெண்ணை வீட்ல வச்சுட்டு, ராத்திரி அப்பா அடிக்கற கூத்து...! ப்ச்!”


வேறு புடவை மாற்றி அணிந்து கொண்டாள்.


புறப்பட்டு விட்டாள்.


“ஏண்டீ... லைப்ரரி போறேன்னு சொல்லிட்டு, கையில புத்தகம் இல்லாம போறியே!”


மேனகா ஒரு நொடி தடுமாறிப் போனாள்.


“அ... அது வந்து... நம்ம பங்கஜம் இல்லை... அவகிட்ட இருக்கு புத்தகம்!”


அடுத்த நொடியும் அங்கே தாமதித்தால், இன்னும் உளற வாய்ப்புண்டு என்பதால் சரேலென வாசலை அடைந்து விட்டாள். ஓட்டமும் நடையுமாக தெருவைத் தாண்டியதும், நிம்மதியாக மூச்சு வந்தது.


வீடு சிந்தாதிரிப்பேட்டையில்!


சாமி நாயக்கன் தெருவில்


நடந்தே சிம்சனை அடைந்து, குறுக்கே ஓடிய அகலசாலையைக் கடந்து, ராஜாஜி மண்டபத்தைத் தொட்டு, விலகி, ஆடம்ஸ் சாலையில் கால் பதித்து, நாலடி நடப்பதற்குள், பின்னால் வந்தது அந்த நர்மதா வண்டி.


“நடையா இது நடையா!”


'விருட்'டென்று திரும்பினாள்.


“அவளை உரசியபடி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான் வெங்கடேசன்.”


“சரியா வந்துட்டியே! ம் ஏறி ஓக்காரு!”


பயத்துடன் விழிகளை ஒருமுறை ஓட விட்டாள்.


“யாரும் வர மாட்டாங்க. தைரியமா ஏறி ஒக்காரு!”


அவள் உட்கார்ந்ததும், சட்டென வண்டியைக் கிளப்பி, டி.வி. ஸ்டேஷனை தொட்டுக் கொண்டு, பாலமேறி, பீச் ரோட்டில் பிரவேசித்து எம்.ஜி.ஆர். சமாதி கடந்து, காந்தியைக் குறிவைத்து விரட்டினான்.


நாலு மணி வேளை... வெயில் இன்னும் முற்றிலுமாக விலகாமல், கடற்காற்று வரட்டுமா என்று கேட்கத் தொடங்கியிருந்த நேரம்.


காந்தி சிலையை அணுகி, சற்று உள்பக்கமாக வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தார்கள். சற்று ஒதுக்குப் புறமான பகுதியைத் தேர்ந்தெடுத்து உட்கார,


“ம், சொல்லு மேனகா!”


“நீங்கதான் எதையும் சொல்றதில்லை!”


“என்ன சொல்லலை உனக்கு?”


“நீங்க வேலை பாக்கற இடத்தைச் சொல்லலை. உங்களுக்கு என்ன சம்பளம்னு சொல்லலை. உங்க அப்பா, அம்மா பத்திச் சொல்லலை!”


“எத்தனை நாளா பழகறோம் ரெண்டு பேரும்?”


“நாலு மாசமா!”


“அதுக்குள்ள அவசரப்பட்டா? அப்பா, அம்மா சின்ன வயசுல செத்தாச்சு. எப்படியெல்லாமோ வளர்ந்து, இப்ப இப்படி இருக்கேன். உத்யோகம் ஒரு கம்பெனில விற்பனை உதவியாளன். ஆயிரத்துக்கும் மேல சம்பளம். போதுமா விவரங்கள்!”


“நம்மோட காதல் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா, நிலைமை மோசமாயிரும் வெங்கட். எனக்கு பயமாயிருக்கு!”


“இன்னும் நேரம் வரலை. நானே உங்கப்பாவைச் சந்திச்சுப் பேசறேன்! சுண்டல் சாப்டலாமா?”


ரெண்டு பொட்டலம் சுண்டல் வாங்கினான்.


ஒன்றை அவளிடம் நீட்டும் போதுதான், அதை கவனித்தாள்.


“என்ன வெங்கட் இது?”


“எது மேனகா?'“


அவன் முன் கையில் மணிக்கட்டுக்கும் சற்று மேலே, ஓரங்குல நீளத்துக்கு 'B' என்ற எழுத்து பச்சை குத்தப் பட்டிருந்தது.


அதை அவள் சுட்டிக் காட்டிய நிமிடம்,


அவன் முகம் சட்டென ஒரு நொடி, இருளுக்குப்போய், மறுபடியும் வெளிச்சம் வந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
சதிகள் இலவசம்

Read more from தேவிபாலா

Related to சதிகள் இலவசம்

Related ebooks

Reviews for சதிகள் இலவசம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சதிகள் இலவசம் - தேவிபாலா

    1

    காலை நேர மீனம்பாக்கம் திரிசூலம் ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இருந்தது.

    வரப்போகும் டெல்லி பிளைட்டுக்காக, அந்தக் கூட்டம் கண்களில் ஆர்வத்தைப் பூசிக் காத்திருந்தது.

    லதா இளம் ஆரஞ்சு நிற ஷிபானில், அதே நிற ரவிக்கையோடு, ஷாம்பு தலை முதுகில் வழிய, காதோரம் ஒற்றை ரோஜா பதித்து, வினைல் நாற்காலியொன்றில் தன் உடம்பைப் பதித்திருந்தாள்.

    கையில் ஸிட்னி ஷெல்டன்.

    ஒலிப்பெருக்கி தொண்டையை செருமிக் கொண்டது.

    ‘யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!’

    அத்தனை பேரும் சற்று நிமிர, புதுதில்லியிலிருந்து வரும் விமானம் பற்றிய அறிவிப்பை கரகரப்பாக ஆங்கிலத்தில் அந்தக் குரல் துப்ப,

    லதா எழுந்தாள்.

    செக்யூரிட்டி கேட் நோக்கி தன் கால்களைப் பதித்த சமயம்,

    சற்றுதள்ளி இரண்டு ஆண் குரல்கள் காதில் வந்து மோத, அதில் தெறித்த சில வார்த்தைகளில் சட்டென கூர்மையானாள்.

    கிசுகிசுப்பான குரலில் அவர்கள் பேசியது லதாவின் காதில் விழுந்தது.

    ‘செக்யூரிட்டி கேட் வரும்போது, மயக்கமாயிருவா. உடனே ரீயாக்ட் பண்ணு!’

    மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.

    இருவருமே இளைஞர்கள். ஒருவன் மெல்லிய பிரெஞ்சுத் தாடி வைத்து, ஒல்லியாக, சற்று கோதுமை நிறத்துடன், குறைந்த உயரத்தில் காணப்பட்டான்.

    மற்றவன் சினிமா பிரபு சைஸில் இருந்தான்.

    விமானம் வருவதாக அறிவிப்பு வர,

    லவுன்ஜில் பதட்டம் நிலவியது

    உயரத்தில் அலுமினியப் பறவை பெரிதாகிக் கொண்டே வந்து, ரன்வே தொட்டு சறுக்கிக் கொண்டே வந்து ஓய, பணியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்கள்.

    படிகளில், பயணிகளின் தலைகள் தெரிய,

    லதா இவர்களை தன் பார்வையில் நிறுத்தி வைத்துக்கொண்டு, விமானத்தை கவனித்தாள்.

    உச்சியில் பிரசன்னா தெரிந்தான்.

    சின்ன பெட்டியோடு மெல்ல இறங்க,

    பிரசன்னாவைப் பற்றிக் கவலைப்படாத லதா, இவர்களை கவனிக்கத் தொடங்கினாள்.

    ‘தோ வர்றா’ என்றது ஒரு குரல்.

    விமானத்தைப் பார்த்தாள் லதா. ரோஜா வண்ண சுடிதார் அணிந்து ஒரு பெண் இறங்கிக் கொண்டிருந்தாள்.

    ‘இவளா?’

    பிரசன்னா செக்யூரிட்டி கேட்டை நெருங்கிவிட,

    லதா அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்

    அப்போதுதான் அது நடந்தது.

    சொல்லி வைத்தாற்போல, தடக்கென விழுந்தாள் அந்தப் பெண். திடீரென அவள் காலும், கையும் வெட்டி வெட்டி இழுக்க, வாயிலிருந்து ரத்தமும், நுரையுமாக பெருகத் தொடங்க, கண்கள் செருகிக் கொண்டு மேலே போனது.

    அத்தனை பேரும் பதட்டத்துடன் கவனிக்க,

    ஏர்போர்ட் டாக்டர் சடுதியில் அழைக்கப்பட,

    இவர்கள் இருவரும் பாய்ந்து உள்ளே போனார்கள், கூட்டத்தைப் பிளந்து கொண்டு.

    ‘பப்பு... வாட் ஹேப்பன்ட்?’ ஓருவன் சட்டென தன் கையிலிருந்து ஒரு சாவிக் கொத்தை எடுத்து அவளிடம் செருகிட,

    ஏர்போர்ட் டாக்டர் வந்து விட்டார்.

    தேங்க்யூ. நாங்க கூட்டிட்டுப் போய், நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணிக்கறோம்! பிடி இம்மானுவல்!

    இரண்டு பேருமாக அவளைப் பிடித்து வெளியே கொண்டு வர, கூட்டம் கலைந்து தனித்தனியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு விலக,

    ஏய்... எங்க பாக்கற?

    பின்னால் வந்த பிரசன்னா, லதாவின் தோளைத் தொட்டான்.

    அந்த இருவரும் வெளியே வந்து, ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சாம்பல் நிற அம்பாஸிடரை அணுக,

    வாங்க பாஸ்!

    "எங்கே லதா?’

    டாக்ஸில பதிலைச் சொல்றேன்!

    லதா ஏறத்தாழ ஓடினாள். பிரசன்னா குழப்பத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான்.

    லதா ஒரு டாக்ஸியை அழைக்கும் நேரத்தில், அம்பாஸிடரில் அவளைக் கிடத்தினார்கள்.

    லதா, டாக்ஸிக்கு உத்தரவு கொடுத்த நேரத்தில்,

    அம்பாஸிடர் நகரத் தொடங்க,

    பிரசன்னாவுடன் டாக்ஸியில் ஏறிக் கொண்ட லதா, பரபரப்பானாள்.

    இங்கேருந்து தெரியுதா பாஸ் கண்ணுக்கு? எழுந்து உட்கார்றா பாருங்க அந்த சுடிதார்!

    எனக்கு சுத்தமா ஒண்ணுமே புரியலை லதா!

    "எனக்கும் இன்னதுன்னு தெரியலை, பாஸ். ஆனா அவ மயங்கி விழுவானு அந்த ரெண்டு பேரும் முன்கூட்டியே சொன்னப்ப, சந்தேகம் ஆரம்பமாச்சு!’

    டெல்லி பிளைட்தானே! கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் பிரச்சனை இருக்காதே!

    தப்பு பாஸ்! இவ வரப்போற தகவல் தெரிஞ்சு, யாராவது தகவல் தந்திருந்தா?

    ஆனா வலிப்பு இயல்பா இருந்ததே!

    இல்லை பாஸ். இது நாடகம். பின்னணில ஏதோ ஒரு பயங்கரம் இருக்கும்னு தோணுது!

    கார் ஹோட்டல் மாரிஸ் வாசலில் நிற்க,

    வெகு இயல்பாக இறங்கினாள் அந்தப் பெண்.

    இவளுக்கா பாஸ் ஃபிட்ஸ்?

    இரு பாக்கலாம்!

    அந்த இளைஞர்களும் இறங்க, மூன்று பேருமாக உள்ளே நுழைந்தார்கள்.

    பிரசன்னாவும் லதாவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1