Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பாகீரதி
பாகீரதி
பாகீரதி
Ebook93 pages37 minutes

பாகீரதி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் விசாலத்தின் கணவர் வந்து விட்டார். விசாலம் கதறித் தீர்த்து விட்டாள்!
அவர் மௌனமாக இருந்தார்.
“நீங்க எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”
மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டார்.
“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? கோபாலும் நல்ல பையன்! விடும்மா! ஒரு நல்ல நட்பு உடையுது! அதுதான் வேதனை!”
“என்ன சொல்றீங்க?”
“அந்தக் குடும்பத்தோட நமக்குள்ள நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!”
“சரிங்க! அந்த கூனி சும்மா இருப்பாளா!”
“ஒதுங்கிப் போறவங்களை என்னம்மா செய்ய முடியும்? அவங்க நல்ல குடும்பம்! நான் அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியும்! பாதிப்பு கோபாலுக்குத்தான்! வேணுமா! அவ அண்ணன் கோவிந்தனும் எனக்குக் கீழேதான் வேலை பார்க்கறான். அவனை யாருக்கும் புடிக்காது. விடு பாத்துக்கலாம்!” அவர் பெருந்தன்மையாக நடந்தார்.
ஆனால் கூனி விடவில்லை!
அம்மா, அண்ணனிடம் இதைப் பேச அவர்கள் வந்துவிட்டார்கள்.
“முதல்ல ரேஸ்... இப்ப தப்பான சகவாசமா!”
“நிறுத்து கோவிந்தா! உன் தங்கச்சி பக்குவமில்லாம பேசறான்னா, நீ யோசிக்கணும்.”“யோசிக்க என்ன இருக்கு! புருஷன் வெளியூருக்குப் போன நேரம் மாப்ளையோட துணை எதுக்கு? பெரியவங்க உங்க ரெண்டு பேருக்கும் புத்தி இல்லையா! பிள்ளை என்ன செஞ்சாலும் அதுக்கு ஆதரவு தருவீங்களா?”
“என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!”
“புரியுதே லட்சணம். இப்பிடி நடந்தா, உங்க பிள்ளைக்கு உங்களை அப்பானு சொல்லமாட்டாங்க! மாமானு பேசுவாங்க!”
கோபால் பாய்ந்து கோவிந்தனை அறைய,
“என் பிள்ளையைக் கொல்றாங்க!” என பெரிய கூனி கதற,
அக்கம் பக்கம் கூடி விட -
வீட்டு விவகாரம் வீதிக்கு வந்து விட்டது.
ஆள் ஆளுக்கு நாட்டாமை பேச,
“அந்த மலையாள வீட்டம்மாதானே? அது ஒரு மாதிரித்தான்!” என யாரோ ஆரம்பிக்க,
“பாவம் அவங்க! நல்ல பொம்பளை!” என வேறு ஒருத்தி பேச, பிரச்சனை பெரிதாகி விட்டது!
யாரோ மத்யஸ்தம் செய்தார்கள்!
இந்த பரபரப்பில் கஸ்தூரி போய் ஒரு மத்திய அரசு வேலைக்கான தேர்வை எழுதி விட்டு வர,
அப்பா அம்மா விசாலம் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்க.
“விடுங்க! நீங்க பெரியவங்க! எங்களைப் பெத்தவங்களுக்கு சமம்! உங்க மேல உள்ள பாசம் குறையாது! ஆனா இந்தப் பேயை கோபால் அடக்கணும்!”
“அது முடியாது விசாலம்!”
“கோபால் நிம்மதியா வாழணும்மா!”அவனை நாங்களே குழில தள்ளிட்டோம். படிச்ச வேலை பாக்கற பொண்ணு வேணும்னு கேட்டான்! குடும்பத்துக்கு தோதா ஒரு குத்து விளக்கு வேணும்டானு கேட்டு இவளைத் தேர்ந்தெடுத்தோம்!”
“இவ குத்திட்டாம்மா! நெஞ்சுல குத்திட்டா!” அப்பா குரல் இடறியது!
“அப்பா! நீங்க கலங்காதீங்க!”
“இல்லை விசாலம்! அவ புருஷன் குடும்பம் தாங்கறானாம். நாங்க ஓசிச் சோறாம்! எனக்கு அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை!”
“அப்பா! கோபால் உங்க மகன்! உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீங்க எதுக்கு விட்டுத்தரணும்?”
“இல்லைம்மா! அந்த பிசாசுகூட தினசரி காலத்தை ஓட்டணுமே!”
“உங்க பிள்ளை, எப்பவும் உங்க பக்கம்தானேப்பா?”
“சரிம்மா! மனசுல நிம்மதி இல்லாம எப்படி நாட்களைக் கடத்த முடியும்?”
“அப்பா! கஸ்தூரிக்கு கல்யாணம் நடக்கணும்! தேவா படிக்கறான் உங்களுக்கும் நிறைய பொறுப்பு இருக்கு! விட்டு விலக முடியுமா!”
அம்மா உள்ளே வந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பாகீரதி

Read more from தேவிபாலா

Related to பாகீரதி

Related ebooks

Reviews for பாகீரதி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பாகீரதி - தேவிபாலா

    1

    வெறும் பள்ளிப் படிப்பு படித்த கூனி, கிராமத்தில் வளர்ந்தவள். உலக ஞானம் உண்டோ இல்லையோ, குடியைக் கெடுக்கும் புத்தி நிறைய!

    யாராவது சிரித்து சந்தோஷப்பட்டால், ஒரு குடும்பம் ஆனந்தமாக இருந்தால் கூனிக்கு பொறுக்காது!

    உள்ளே புகுந்து அவர்கள் குடியைக் கெடுத்து குடும்பத்தை துண்டு துண்டாக உடைத்து விடுவாள்!

    அவர்கள் பரஸ்பரம் முகம் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு செய்த பிறகுதான் அங்கிருந்து விலகுவாள்!

    இன்றைய மெகா சீரியல் வில்லிகளுக்கெல்லாம் இந்தக் கூனி தலைவி!

    இவளுக்குப் பேர் இல்லையா?

    பாகிரதி என்ற பழங்காலப் பெயர். மங்கலமான பெயர். நமக்கு அது வேண்டாம்.

    கதை முழுக்க இவள் கூனியாகவே இருக்கட்டும்.

    முதலில் கூனியின் கதையை பார்த்து விடலாம்.

    எந்தத் தகுதியும் இல்லாத கூனிக்கு அடித்தது ஜாக்பாட்; நல்ல கணவன்!

    ‘படித்தவர். பேங்க் உத்யோகம்! பட்டதாரி! யாரோ உறவுக்காரர்கள் சொல்லி, ஜாதகம் பொருந்தி, எக்குத் தப்பாக விதி வேலை செய்ததில் அந்த மனிதன் கோபால் சிக்கிக் கொண்டான்.

    விதி யாரை விட்டது?

    கல்யாணம் நடந்து விட்டது!

    அதுவே ஒரு கோயிலில் வைத்து வெகு சுமாராக நடந்த கல்யாணம்.

    கூனியின் குடும்பம் இவர்களுக்கு சாப்பாடு கூட சரியாகப் போடாமல் எஸ்கேப் ஆகி விட்டது!

    கோபாலுக்கு அப்பா, அம்மா, ஒரு தங்கை, தம்பி... இதுதான் குடும்பம்!

    அப்பா ரிடையர் ஆனவர். அம்மா குடும்பத்தலைவி! தங்கை கஸ்தூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் இருந்தாள்! தம்பி பள்ளிக்கூடப் படிப்பில்!

    வாங்கிய கடனுக்கு அப்பாவின் பணம் கரைந்து போக, சொந்த வீடும் இல்லை. வாடகை வீடு! ஐம்பது வருடங்களுக்கு முன்பு எல்லாரும் சொந்த வீடா வைத்திருந்தார்கள்?

    கோபாலின் வருமானம் தான் பிரதானம். அது நார்மலாக குடும்பம் நடத்த மட்டுமே சரியாக இருந்தது!

    கஸ்தூரிக்கும், கோபாலுக்கும் எட்டு வயது வித்யாசம்.

    கஸ்தூரி படிப்பை முடித்து 20 கூட நிரம்பவில்லை; கோபாலுக்கு 28. காக்க வைக்க வேண்டாம் என்று பெரியவர்கள் பிள்ளை வாழ வேண்டும் என்ற தப்பான முடிவை எடுத்தனர். விளைவு... கூனி உள்ளே புகுந்து விட்டாள் - கோபாலின் மனைவியாக

    கோபாலின் அம்மா அந்தக்கால மனுஷி! கடுமையான உழைத்துப் பழகியவள்.

    அதனால் மருமகளை வேலை செய்ய விடவில்லை.

    உற்றார் உறவினர் இதைக் கண்டித்தார்கள்.

    அவ வேலைக்குப் போகலை, வீட்லதான் இருக்கா! அவ வேலைகளைச் செய்யட்டும். பொறுப்புகளை குடு! நீ மேற்பார்வை மட்டும் பாரு

    எதுக்கு? அவளும் கஸ்தூரி மாதிரி எனக்கொரு மகள்தான். ஏன் மருமகளா பாக்கணும். அவனோட சந்தோஷமா இருக்கட்டுமே பாவம்!

    கூனி கிராமத்தில் இருந்த காரணமாக நல்ல உணவுகளைக்கூட சாப்பிட்டதில்லை.

    இங்கே கோபால் அம்மா ஜானகி விதம் விதமாக ருசியாக சமைத்துப் போட, கூனி முதலில் சாப்பிட்டு விடுவாள்.

    பசி பொறுக்காது!

    வீட்டுப் பெரியவர்களும், கணவரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம் என இருக்கமாட்டாள்.

    அடுப்பிலிருந்து இறக்கியதும் நெருப்புக் கோழி போல அள்ளி அள்ளி விழுங்குவாள். சாகும் வரை அவளுக்கு சாப்பாட்டு ஆசை போகாது.

    ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட மாட்டாள்! அப்பாவும் ரிடையராகி, கோபால் உத்யோகம் பார்த்தது ஊட்டியில்! குளிர்ச்சியான ஊர்! கல்யாணம் ஆன புதிதில் மாமியாரே கூனிக்கு ட்ரஸ் செய்து, பிள்ளையோடு சந்தோஷமாக அனுப்பி வைப்பாள்!

    கல்யாணமாகி வந்து, மறுவீடு விருந்துகள் முடியும் வரை கூனி ஒழுங்காகத்தான் இருந்தாள்.

    குடும்பம் சந்தோஷமாக இருந்தது. மாமியார் எந்த நேரமும் சிரித்த முகமாக... மாமனார் கையில் குடும்பம் - பாசமான குடும்பம் - வந்து போகும் உறவினர்கள், நண்பர்கள் என அந்த வீடு எப்போதும் கல்யாண வீடு போல கலகலப்பாக இருக்கும்.

    கூனியின் அம்மா பெரிய கூனிக்கு பொறுக்கவில்லை.

    பாகி... எந்த நேரமும் இப்பிடி சந்தைக் கடை மாதிரி கூட்டமா இருந்தா எப்படி?

    அதாம்மா எனக்கும் புடிக்கலை!

    உன் மாமனாருக்கு பென்ஷன் வருதா?

    தெரியலைமா!

    கழுத்துல தாலி ஏறி மூணு வாரங்களாச்சு! இதையெல்லாம் தெரிஞ்சுகலைனா என்ன பொண்ணுடி நீ?

    அம்மா! இவர் சம்பளம்தான் பெரிசு! இந்தக் குடும்பம் அதுலதான் ஓடுது!

    சம்பளத்தை மாப்ளை யார்கிட்ட தர்றார்?

    அவங்கம்மா கிட்டத்தான்!

    அப்புறம் நீ எதுக்கு தண்டத்துக்கு? அதை தட்டிப்பறி ‘முதல்ல!

    இரும்மா! 21 நாள்ல சண்டையைத் தொடங்க முடியுமா!

    பாரதப் போரே 18 நாள்ல முடிஞ்சிருக்கு! இது ஒரு பெரிய சங்கதியா? அதுவும் உனக்கு?

    ஒரு சரியான காரணம் கிடைக்கணும்மா!

    கிடைத்து விட்டது!

    அப்போதெல்லாம் ஊட்டியில் குதிரைப் பந்தயம் பிரபலம்! கோபால் நண்பர்களுடன் குதிரைப் பந்தயம் நடக்கும் வார நாட்களில் தவறாமல் ஆஜராகி விடுவான்!

    அங்கே போய் பெரிதாக சூதாடி, ஆயிரக் கணக்கில் பணத்தை இழக்கும் நபரல்ல கோபால்!

    ஜாலியாக நண்பர்களுடன் போய் ஐம்பது, நூறு என வைத்து ஆடி ஏதாவது கிடைத்தால் லாபம்!

    இழப்பது மிகக் குறைவு!

    வீட்டிலும் இது தெரியும்.

    கோபாலுக்கு சிகரெட், மது, பெண் மோகம் என எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1