Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சக்கரம்
சக்கரம்
சக்கரம்
Ebook87 pages31 minutes

சக்கரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரியாக ஆறுமணிக்கு கதிரின் பைக் வந்து பங்களா வாசலில் நின்றது! சொப்னாவும் அதிலிருந்து இறங்குவதை அப்பா தன் அறையிலிருந்தே பார்த்தார்.
எல்லா பக்கமும் வீட்டுக்குள் அவர் காமிரா பொருத்தியிருப்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது!
இருவரும் உள்ளே நடந்து வந்தார்கள்.
அவனது நடை, தோற்றம், கம்பீரம் - சகலத்தையும் தனசேகர் கணக்கெடுத்து விட்டார்.
அவர்கள் ஹாலில் உட்கார்ந்த சில நொடிகளில் அம்மா மஞ்சுளா வந்து சொல்ல, மெதுவாக எழுந்து வந்தார்!
கதிர் எழுந்து நின்று வணங்கினான்!
பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தார். எதிரே உட்கார்ந்தார்.
“சொப்னா எல்லாம் சொன்னா! உன்னைப் பற்றி நானும் விசாரிச்சேன். உள்ளே வா! உன்கிட்ட மட்டும் நான் கொஞ்சம் பேசணும்!”
எழுந்து நடக்க, கதிர் பின்தொடர்ந்தான்.
அவரது அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
“ஒக்காரு!”
“இருக்கட்டும்!”
“சொப்னா கோடீஸ்வரன் மகள்! அவ உன் வீட்ல வந்து வாழ முடியாது!“அப்படியா?”
ஒரு பெட்டியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.
“இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. உங்க கேன்டீனை பெரிய ஹோட்டலா மாத்துங்க! பிழைச்சுப் போங்க! என் மகளை நீ விட்டுத்தர உனக்கு நான் தர்ற விலை!”
கதிர் சிரித்தான்.
“ஏன் சிரிக்கற?”
“என்னை நீங்க புரிஞ்சுக்கலை! சொப்னா உங்க மகள். இப்ப அவ உங்க சொத்து! அதை நான் விட்டுத் தர்றதுக்கு விலையா? அபத்தமா இருக்கு. நான் என்கிட்ட வச்சுக்கிட்டாத்தான் விட்டுத்தர விலை தரணும். பணமெல்லாம் வேண்டாம். ‘இந்தப் பையன் உனக்கு வேண்டாம்’னு சொல்லி சொப்னாவை தடுத்து நிறுத்திடுங்க! இதுக்குப் போய் ஏன் அஞ்சு லட்சம் செலவு?”
அவர் மிரண்டு போனார்.
“அவ கேக்க மாட்டாளே! சொப்னா பிடிவாதக்காரி. கதிர்தான் வேணும்னு சொல்லுவா!”
“அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?”
“நீ அவளை விட்டு விலகணும். அவ மனசுல கசப்பை உண்டாக்கணும்!”
“எதுக்கு?”
“எனக்கு நீ மாப்பிள்ளையாக முடியாது!”
“அதுக்காகப் பொய்சொல்றதோ, சொப்னா கிட்ட நாடகமாடறதோ எனக்குப் பிடிக்காத விஷயம்!”
அவர் அவனயே கூர்ந்து பார்த்தார்.
“நீ பொய் சொல்லமாட்டே! பணத்துக்கும் விலை போக மாட்டே இல்லையா?”
“ஆமாம்அருகில் வந்து தோளில் கை போட்டார்.
“வெரிகுட்! நீதான் எனக்கு மாப்பிள்ளை!”
“சார்!”
“என் மகளை சந்தோஷமா உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்! ஆனா நீ என் வீட்டோட வந்துடணும். பொறுப்புகளை ஏத்துக்கணும். உன் அப்பா, அக்கா வாழ எல்லா வசதிகளையும் நான் செஞ்சு தர்றேன்!”
கதிர் எழுந்து விட்டான்.
“ஸாரிங்க! அதுக்கு வாய்ப்பே இல்லை.”
“என்ன பேசற? என் மகள் உன் வீட்ல வந்து வாழணுமா?”
“அதுதான் முறை!”
“இது நடக்குமா?”
“சொப்னாவை நான் கட்டாயப்படுத்தலை. அவ விரும்பினா இதுக்கு சம்மதிக்கட்டும். கோடீஸ்வரர் தனசேகரோட மாப்பிள்ளையா நான் ஆயிட்டாலும், அன்பும் ஆதரவும் மட்டும்தான் எனக்கு வேணும். வேற எதையும் நான் எதிர்பாக்கலை. உங்க மகளையும் கேட்டு கலந்து முடிவெடுங்க! தேவைப்பட்டா மேற்கொண்டு பேசலாம்!”
வணங்கினான்.
கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
சக்கரம்

Read more from தேவிபாலா

Related authors

Related to சக்கரம்

Related ebooks

Reviews for சக்கரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சக்கரம் - தேவிபாலா

    1

    மனித வாழ்க்கை நிச்சயமாக சக்கரம்தான். மேலே நிற்கும் சக்கரம் நிச்சயமாகக் கீழே வரும். கீழே உள்ளது உச்சிக்கும் வரும். யாருக்கு எப்போது என்ன வாய்க்கும் என்பது புரியாத புதிர் - யாரோ!

    இரவு ஏழு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தாள் சொப்னா! நேராக மாடிக்குப் போனாள்.

    நில்லுடி! - அம்மாவின் குரல் காலுக்குத் தடை போட, திரும்பினாள். சற்று தள்ளி அப்பா செல்போனில் யாருடனோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தார்.

    எங்கே போயிட்டு வர்ற?

    என்னம்மா புதுசா கேக்கற? கோச்சிங் க்ளாஸுக்குத்தான் போயிட்டு வர்றேன்!

    நீ பொய் சொல்ல மாட்டேனு நான் நம்பறேன் சொப்னா!

    அம்மா!

    பைக்ல யாரோ ஒருத்தன் கூட நீ போயிருக்கே! யாரவன்? -

    சொப்னா முகம் ஒரு நொடி நிறம் தப்பி மீண்டது!

    அம்மா... அது வந்து...!

    முழுங்காதே! யாரவன்?

    நீ எப்பப் பார்த்தே?

    பார்த்தது நான் இல்லை. உங்கப்பா! அவர் கார்ல போகும் போது சிக்னல்ல பைக்ல உன்னைப் பார்த்திருக்கார். சாதாரணமா ஒரு ஆண்கூட பைக்ல போறதைத் தப்புனு சொல்ற கட்டுப் பெட்டிக் குடும்பம் இல்லைடி இது! ஆனா அவன் தோள்ல ஒரு கை, இடுப்புல ஒரு கைனு நெருக்கமா நீ இருந்திருக்கே!

    மஞ்சுளா! இனி அவ பேசட்டும்! இதுக்கு மேல் நீ பேசாதே!

    அப்பாவின் குரல் உள்ளே புகுந்தது!

    சொப்னா பீதியுடன் அப்பாவைப் பார்த்தாள்.

    எங்க பார்வை வரைக்கும் வந்தாச்சு! இனிமே சொல்லிடு! யாரவன்?

    பேரு கதிர்!

    என்ன படிச்சிருக்கான்?

    சொப்னா பேசவில்லை!

    என்ன படிச்சிருக்கான்னே தெரியாதா?

    12வது வரைக்கும்!

    எங்க வேலை செய்யறான்?

    ஒரு கார்மென்ட் யூனிட்ல சூபர்வைஸரா இருக்கார். மாசச் சம்பளம் எட்டாயிரம். தவிர, எலக்ட்ரிக்கல் வேலை செஞ்சு, பார்ட் டைமா மாசம் நாலாயிரம் வரைக்கும் சம்பாதிக்கறார்!

    அப்பா - அம்மா?

    அம்மா இல்லை. அப்பா கேன்டீன் வச்சு நடத்தறார். ஒரு அக்கா கூட மாட கேன்டீனை பாத்துக்கறாங்க!

    எத்தனை நாளா பழக்கம்?

    ஒரு வருஷமா!

    அம்மா மஞ்சுளா பாய்ந்து வந்தாள்.

    என்ன நெஞ்சழுத்தம்டி ஒனக்கு? ஒரு வருஷமா ஒருத்தனோட - வீட்டுக்குத் தெரியாம பழகற? எங்கே புடிச்சே இவனை?

    மஞ்சு! அந்தக் கதையெல்லாம் தேவையில்லை! அடுத்த கட்டத்துக்குப் போவோம்!

    அப்படீன்னா?

    சொப்னாவிடம் வந்தார் அப்பா!

    நீ - கோடீஸ்வரர் தனசேகரோட ஒரே மகள்ன்னு அந்த கதிருக்குத் தெரியுமா?

    தெரியும்!

    ஸோ, பணத்தைக் குறிவச்சுத்தான் உன்கூட பழகறானா?

    நிச்சயமா இல்லை! இந்த நிமிஷம் வரைக்கும் அவருக்காக ஒரு ரூபாய் கூட நான் செலவழிச்சதில்லை. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை!

    உன் கூட அவன் பழகறது அவங்க வீட்டுக்குத் தெரியுமா?

    தெரியும்! என்னைக் கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தியிருக்கார்!

    அப்படியா? அவன்தான் வேணும்னு நீ உறுதியா இருக்கியா?

    ஆமாம்பா! அவர் நல்லவர்!

    காதல் பேச்சோட நிக்குதா? இல்லை...

    அப்பா! அவர் தப்பானவர் இல்லை. என்னை அவர் தொட்டது கூட இல்லை!

    சரி! நாளைக்கு சாயங்காலம் அவனை இங்கே கூட்டிட்டுவா! அவனோட அக்காவுக்குக் கல்யாணம் ஆயாச்சா?

    ஆயாச்சு! அவங்க புருஷன் குடிகாரன்னு தெரிஞ்சப்ப, இவங்க அதை ஏத்துக்க முடியாம பிறந்த வீட்டுக்கே வந்துட்டாங்க!

    வாழா வெட்டியா?

    சொப்னா பேசவில்லை.

    சரி! நாளைக்கு அவன் வந்து பேசட்டும். நீ போகலாம்!

    சொப்னா உள்ளே போய் விட்டாள்.

    என்ன செய்யப் போறீங்க?

    அவன் வந்து பேசட்டும். அவனுக்கும் ஒரு விலை இருக்கும். பேசினாத் தெரிஞ்சிடும்!

    காலையில் சொப்னா சீக்கிரமே தயாராகி கதிர் வீட்டுக்கே வந்து விட்டாள்.

    பின்புறம் வீடு; முன்புறம் கேன்டீன்.

    ருசியாக, கொஞ்சம் மலிவாகத் தருவதால் வியாபாரம் பொறி பறக்கும்!

    அப்பா, அக்காவுக்கு கதிரும் உதவுவான் - காலை நேரத்தில்!

    அடடா! வா சொப்னா! - கதிர் அழைக்க,

    சூடா டிபன் தரட்டுமா சொப்னா? - அப்பா கேட்டார்.

    பசிக்குது அங்கிள்! உங்க பொங்கலுக்காகவே கூட்டம் வருமே! குடுங்க!

    அக்கா சிரித்தபடி ஆவி பறக்கும் பொங்கல் - வடையை இலையில் வைத்துத் தந்தாள். சொப்னா ருசித்து சாப்பிட்டாள்.

    ரெண்டு இட்லி வைக்கட்டுமா சொப்னா?

    வேண்டாம்கா! இதுவே போதும். உங்க ஸ்பெஷல் காபி மட்டும் குடுங்க!

    பன்னண்டு ரூபாய் பணத்தை வை! - கதிர் சொல்ல.

    ஏய் சும்மாருடா! யார்கிட்ட பணம் கேக்கறதுனு இல்லையா?

    வியாபாரம்னு வந்துட்டா, யாரா இருந்தா என்ன?

    என் மருமகளுக்காக நான் குடுத்துர்றேண்டா! - அப்பா சொல்ல, சரக்கென

    Enjoying the preview?
    Page 1 of 1