Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வரப் பிரசாதம்!
வரப் பிரசாதம்!
வரப் பிரசாதம்!
Ebook97 pages33 minutes

வரப் பிரசாதம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் ரங்கா சீக்கிரமே புறப்பட்டுப் போய் விட்டான்.
 ரங்கா, பி.டெக் முடித்து எம்.பி.ஏ.வும் முடித்திருந்தான். மாதச்சம்பளம் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கு மேல்!
 அயல் நாட்டோடு கூட்டுறவு கொண்ட தனியார் நிறுவனம் அது! அதி புத்திசாலி ரங்கா! நாலு முறை வெளிநாடு சென்று பணத்தை அள்ளிக்கொண்டு வந்தான்!
 உமா ஒரு வங்கியில் வேலை பார்ப்பவள்!
 ஒரு கட்டத்தில் குடும்பத்தையும் பராமரித்து, ரங்காவையும் படிக்க வைத்தாள். வயது கடந்து போக, அதுவும் ஒரு காரணம்! இன்று அக்காவை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க, சகல தகுதிகளும் ரங்காவுக்கு உண்டு!
 "உமா! பேங்குக்கு தாமதமாக போகலாம் என்ற அம்மாவிடம் எல்லா விவரங்களையும் உமா சொல்லி முடித்தாள்!"
 "இது கண்டிப்பா நடக்காது!"
 "ஏன்மா நடக்காது?"
 "அவ பணக்காரி - கோடீஸ்வரி! இவனுக்கு சின்ன முதலாளி! இது சரிப்படுமா?"
 "ஏன் சரிப்படாது? இவனும் நல்லா படிச்சவன். புத்திசாலி, அழகானவன்! ஒரு கம்பெனியை நிர்வகிக்கற அளவுக்கு திறமைசாலி. என்ன இல்லை என் தம்பிகிட்ட? இவனை விட ஒரு நல்ல புருஷன் யாருக்குக் கிடைக்கும்?"
 "எல்லாம் சரிதாண்டி! அந்த மனுஷனும் சம்மதிச்சு, கல்யாணம் நடக்கும்! இவனை தன்னோட அவ கூட்டிட்டுப் போவா! இவன் படிப்பை, உழைப்பை அவங்க பயன்படுத்திப்பாங்க. நமக்கு இவன் இல்லை

நிரந்தரமா நீ நின்னு போகணும்! இது கொடுமை இல்லையாடீ! இதுக்கு ஒரு நாளும், நான் சம்மதிக்கமாட்டேன்."
 உமா பேசவில்லை!
 "ஏன் வாயடைச்சுப் போயிட்டே? நான் சொல்றது உனக்கு நியாயம்னு படுதா?"
 "கொஞ்சம் இரும்மா! படபடன்னு பேசி, நீயும் பதட்டமாகி, மத்தவங்களையும் பதட்டமாக்காதே."
 "என்னடீ பேசற நீ? பதட்டப்படாம? இது உன் வாழ்க்கைப் பிரச்னைடி! உன் கழுத்துல எப்ப ஒரு தாலி ஏறும்னு நான் தவிச்சுகிட்டிருக்கேன்."
 "அம்மா! தம்பி பணக்காரியை காதலிக்கலைனாலும், என் கழுத்துல தாலி ஏற ஒரு யோகம் வேணும்! புரியுதா? இதுக்கு அவனைக் குற்றம் சொல்ல முடியாது? அவன் இந்த வீட்டை விட்டுவிடலை, கடமையை உதறலை, பாசத்தை மறுக்கலை!"
 "இப்ப நீ சொல்ற எதுவும் நடக்கலை! ஆனா நாளைக்கே நடந்தா, ஆச்சரியமில்லை.
 "நிறுத்தம்மா! உன் பிள்ளை மேல இத்தனை அவநம்பிக்கையா உனக்கு?"
 "பயம்மா இருக்குடி! உங்கப்பன் பொறுப்பான ஒரு மனுஷனா வாழலைடி. வேலையை விட்டுட்டு வந்து நிப்பாரு. நான் தட்டிக் கேட்டா அடிப்பாரு. குடிப் பழக்கம் ஓவராகி குடல் வெந்து தானேடீ செத்தார்? உங்க ரெண்டு பேரையும் ஆளாக்க நான் பட்ட அவமானங்கள் கொஞ்சமா? நீ ஒருத்தி தலை தூக்கின பிறகுதானே நான் தெளிஞ்சேன். ஆம்பளை ராசி இந்தக் குடும்பத்துக்கு இல்லாம போயிடக் கூடாது உமா! என் பயம் இதுதான்டி! புரிஞ்சா முயற்சி செய்!"
 உமாவுக்கு அம்மாவைப் பார்க்க சோதனையாக இருந்தது?
 அம்மா, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
 "உனக்கொரு வாழ்வு அமைஞ்சிருந்தா, ரங்கா யாரைக் கட்டிக்கிட்டாலும் நான் ஏன்னு கேக்க மாட்டேண்டி! அது இன்னும் அமையாத காரணமா, இந்த வயிறு பதறித் துடிக்குதுடிஅம்மா அவசரப்படாதே! ஒரு விஷயத்தை நீயும் புரிஞ்சுக்கணும்! வாழ்க்கைல அடிபட்டு வந்த உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! எது நடக்கணுமோ, அது நடந்துதான் தீரும். யார் தடுத்தும் நிக்காது! அப்பா போயிட்ட காரணமா, நீ தெருவுல நின்னியா? படிப்போ, உத்யோகமோ இல்லாத நீயே கரையேறி வந்திருக்கே! நான் கடல்ல விழுவேனா? சொல்லும்மா?"
 "அதில்லைடி! திங்கற சோறும், வாழற வாழ்க்கையும் எல்லாருக்குமே வாய்க்கும் உமா! அதுக்காக நான் கவலைப்படலை. நல்லா படிச்சு, கண் நிறைஞ்ச பிள்ளை எனக்கு வாச்சப்ப, புருஷனால பட்ட அவமானங்கள் மொத்தமும் கரைஞ்சு, இப்ப நான் தலைநிமிர்ந்து பூரிச்சுப் போயிருக்கேன்! இது கலைஞ்சு, பழையபடி நாதியில்லாத நிலை வந்துடுமோனு பயம்மா இருக்குடி."
 "அப்ப நீ என்னை நம்பலை?"
 "அப்படி இல்லைம்மா! காலம் முழுக்க உன் கால்ல விலங்கு பூட்டற ஒரு சூழ்நிலையை உன் தம்பி உருவாக்கிடக் கூடாதேனு நான் பயப்படறேன்!"
 உமா பெருமூச்சுடன் அம்மாவைப் பார்த்தாள்!
 "இதப்பாரு! நான் ரொம்ப தன்னம்பிக்கையான பொண்ணு. என்கூடப் படிச்சவங்க பல பேர் இன்னிக்கு புருஷனும் குழந்தையுமா இருக்காங்க. நான் கலங்கலை. எதையாவது பேசி, என்னை சலசலக்க வச்சிடாதே! போய், வேலையைப் பாரு! ரங்காகிட்ட வேகமாப் பேசி, அவனோட கசப்புக்கு ஆளாயிடாதே! இப்ப எந்தத் தப்பும் செய்யாத பையனை நாமே தப்பு செய்ய வச்சிடக் கூடாது! புரியுதா? ஆழமா யோசி! அனுபவப்பட்ட உனக்கு நீதான் ஆசான். புரியுதா?
 உமா உள்ளே போய் விட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223509233
வரப் பிரசாதம்!

Read more from Geeye Publications

Related to வரப் பிரசாதம்!

Related ebooks

Related categories

Reviews for வரப் பிரசாதம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வரப் பிரசாதம்! - Geeye Publications

    ւebook_preview_excerpt.htmlZnF~:gEA{6)KۤX,64B̃)!ғ*BRrrq"rɝoo?_/Ti9}t ޞ}5W}}Wf_=R}GpӢپz;m]#.{!vQ[{n%-:)`5@ }U9i{Tpw;A\} Qݬd{{ѰTp}h[+oٝBU^µI 'B'٠D#CË+'`n|Y3_M-{f)zklP3Q [V;*w H uS{ZUOŝ_@A黳`~4vOă_pVnj|9EkFIAx'Į\8L$J䀹 EgTB,H;,ж¿FA0"U411'/*L Ht1/b'#vδC19Cǖ"!`5\wԶEd9@\\ K)rv9yI`}fl60CY3+TyQ6biP(2syIys4RCIF/~GMHmfJ+N3*'/?e*|Ӗ&@8AȔ3}U.7XiRttGjfXZq 9SLuUؚ:(Ւ)x=˖ӧo`?ќǸ.#1:r19k2~!a?8HVwYzjVg&T 7)tDG[nDD+ o$q'N>t13wƭt`g}wC]h"=RR|jg66KS nr1ʴvDjk7s3 7sS6tЄnx\HlXs!h?z5PG z 2Y2/S3rxqU],گBAЙ٧2ƆU ^PwKT|szd& ck5]% S)x2$*;_B`$&-wV /eHwUH"Ril5SzjF6Dbwx1SWIs']qJWn*[Q5#ϼ7>M|T3j'zt"m#h++
    Enjoying the preview?
    Page 1 of 1