Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு முக்கிய அறிவிப்பு
ஒரு முக்கிய அறிவிப்பு
ஒரு முக்கிய அறிவிப்பு
Ebook83 pages26 minutes

ஒரு முக்கிய அறிவிப்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எம்.எல்.ஏ. மாமல்லன் சிக்கன் சூப்பை குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு எதிரிலிருந்த நபரைப் பார்த்தார்.
 "கேஸட் கொண்டு வந்திருக்கியா...?"
 "கொண்டு வந்திருக்கேன் ஸார்..."
 "காஸெட்டை போடு... கேட்கலாம்...''
 எதிரில் நின்றிருந்த ஆள் கைப்பையில் வைத்திருந்த கேஸட்டை எடுத்து டீபாயின் மேலிருந்த நேஷ்னல் பானாஸோனிக் டேப் ரிகார்டரில் சொருகி 'ப்ளே' பட்டனைத் தட்டினான். காஸெட் சுழல ஆரம்பித்தது. பேச்சுக் குரல்கள் ஸ்பஷ்டமாய் கேட்டது.
 "ஜெயச்சந்திரன்... நீ சொல்றது நிஜம்தானே...?"
 "இதோ பார பூபால்...! நான் என்னிக்குமே பொய் சொல்ற பேர்வழி இல்லை... மனசுக்குப் பட்டதை சொல்லிடுவேன்... எம்.எல்.ஏ. மாமல்லன் மாதிரி ஒரு அயோக்கிய ராஸ்கலை பார்த்ததே கிடையாது. அந்தக் கட்சியில் இத்தனை நாள் இருந்ததுக்காக நான் வெட்கப்படறேன்... அந்த மாமல்லன் ஜெயிக்கணும்ங்கிறதுக்காக... எத்தினி ராத்திரி தூங்காமே... கண்விழிச்சு... ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து மைக்கை பிடிச்சு தொண்டைத் தண்ணி காயற வரைக்கும் அவனுக்கு வோட்டு போடச்சொல்லி கத்தி... கத்தி...! ம்... கஷ்டப்பட்டதெல்லாம் என்னை மாதிரியான தொண்டனுங்க... அவன் 'பேர்'க்கு பின்னாடி எம்.எல்.ஏ.ன்னு போட்டுகிட்டு ஊருக்கு நல்லது பண்றதா சொல்லிகிட்டு... ஊரையே கொள்ளையடிச்சுட்டு இருக்கான்..."
 "உனக்கு இப்பாவாவது புரிஞ்சுதே...! எதிர்க்கட்சி ஆளு நான். எத்தினி மீட்டிங் போட்டு சொல்லியிருப்பேன்... சரி... சரி... உன்னோட சேர்ந்து மொத்தம் எத்தினி பேர் எங்க கட்சியில் சேர்வீங்க...?

ஒரு அம்பது பேர் தேறும்..."
 "எங்க கட்சித் தலைவர்கிட்டே சொல்லி ஒரு விழா மாதிரி ஏற்பாடு பண்ணட்டுமா...?"
 "அதெல்லாம் வேண்டாம் பூபால்... நான் வேற ஒரு ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேன்..."
 "என்ன...?"
 "இதைப்படி..."
 டேப் ரிக்கார்டர் சில விநாடிகளுக்கு மெளனம் சாதித்தது.
 காகிதம் பிரிபடும் சத்தம் கேட்டது. பின் ஜெயச்சந்திரனின் குரல்.
 "பலமாவே படி பூபால்"
 பூபால் படிக்க ஆரம்பித்தன்.
 "தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு. உண்மையான அரசியல்வாதிகளையும் மக்களுக்காக உழைக்கும் தலைவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்நாட்டு மக்களே! இனியும் நீங்கள் மெத்தனமாக இருந்தால், கட்டியிருக்கும் கோவணம் கூட களவு போய் விடும் அபாயம் வந்து விட்டது. ஜனநாயக நலக்கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்காக எங்களைப் போன்ற உண்மையான கட்சித் தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி பாடுபட்டோம். ஆனால் பதவிக்குப் போன ஜனநாயக நலக்கட்சி, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு தன்னுடைய கட்சிகளுக்கு, எம்.எல்.ஏ.க் கள் தங்கள் வீடுகளுக்குப் பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு காரணம் எம்.எல்.ஏ. மாமல்லன் அவர்கள். மாமல்லன் ஊழலின் மொத்த உருவம். கடந்த மூன்று வருஷகாலத்தில் அவர் சேர்த்துக் கொண்ட சொத்து விபரங்களை விரைவில் அடுத்த போஸ்டரில் விலாவாரியாக இடம் பெறும். நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள். இது போன்ற முக்கிய அறிவிப்புகள் இனிமேல் போஸ்டர்களாக உருவெடுக்கும் இப்படிக்கு எம்.எல்.ஏ. மாமல்லனின் சுயரூபத்தை புரிந்து கொண்ட சில ஏமாளித் தொண்டர்கள்."
 டேப் ரிக்கார்டரில் சில விநாடிகள் மெளனம். பின்ஜெயச்சந்திரன் கேட்டான்.
 "வாசகங்கள் எப்படியிருக்கு பூபால்?"
 "நெருப்பாட்டம் இருக்கு..."
 "இந்த போஸ்டர்களை ஆயிரக்கணக்கில் அடிக்கணும். அதை மெட்ராஸ் பூராவும் ஒரு சுவர் பாக்கியில்லாமே ஒட்டணும். போஸ்டர்ஸ் பிரிண்ட் பண்ற செலவை உங்க கட்சிதான் ஏத்துக்கணும்..."
 பூபால் சிரித்தான்.
 "இது ஒரு பிரமாதமா...? நம்ம கட்சித்தலைவர்கிட்டே சொன்ன போதும்... ஆயிரக்கணக்குல போஸ்டர்ஸ் வேணும்...?"
 "ஒரு இருபத்தஞ்சாயிரம் போஸ்டர்ஸம்... அதை ஒட்டறதுக்கு ஆட்களும் வேணும்..."
 "எப்ப வேணும்...?"
 "அடுத்த வாரம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை எம்.எல்.ஏ. மாமல்லனுக்கு சேலைச் செம்மல் விருது குடுக்கிற விழா நடக்கப் போகுது. அன்னிக்கு மெட்ராஸ் பூராவும் நம்ம போஸ்டர்ஸ் 'ஜே ஜே'ன்னும் ஒட்டியிருக்கணும் ஜனங்க அதைப்பத்தி பரபரப்பா பேசணும். கட்சித் தொண்டர்கள் சேர்ந்ததும் ஒரு விழாவை ஏற்பாடு பண்ணி உங்க தலைவர் முன்னாடி கட்சியில் சேர்ந்துடறோம்..."

Languageதமிழ்
Release dateDec 9, 2023
ISBN9798223299578
ஒரு முக்கிய அறிவிப்பு

Read more from Geeye Publications

Related to ஒரு முக்கிய அறிவிப்பு

Related ebooks

Related categories

Reviews for ஒரு முக்கிய அறிவிப்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு முக்கிய அறிவிப்பு - Geeye Publications

    1

    அப்ஸரா குளியறையினின்றும் வெளிப்பட்டு தட்டு முட்டாய் சேலை சுற்றப்பட்ட உடம்போடு, ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் போய் நின்றாள். உதடுகளில் ஒரு ஹம்மிங். வெளிநாட்டு சோப் ஆயிரம் ரோஜாவாய் மணத்தது. கழுத்து வரைக்கும் போர்வையை போத்திக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த நிகில் வெற்று மார்போடு எழுந்து உட்கார்ந்தான். ரோமக் காடாய் மண்டிய மார்பில் தங்கச் சங்கிலி ஸ்வஸ்திக் டாலரோடு மினுமினுத்தது.

    அப்ஸரா...

    கொஞ்சலாய் முனகினாள்.

    என்னவாம்...?

    நாம காதலர்களா இருந்தப்ப காட்டிலும். கல்யாணம் ஆன பின்னாடிதான் நீ அழகாயிருக்கே...! நிறம்... என்னமா கூடியிருக்கு தெரியுமா...?

    இப்ப நான் என்ன நிறமாம்...?

    புதுசா பறிச்ச காரட் நிறம்...

    அப்படீன்னா நான் மண் மண்ணா இருக்கேனா...? மண்ணெல்லாம் ஒட்டிகிட்டு... பார்க்கவே சகிக்காது...

    "சரி கழுவின பின்னாடி ஒரு காரட் எப்படியிருக்குமோ... அப்படியொரு நிறம் உனக்கு...’’ - சொல்லிக் கொண்டே நிகில் கட்டிலினின்றும் எழுந்து மெதுவாய் நடந்து வந்து, அப்ஸராவின் பின்னால் நின்று அவளை ‘மெத்’தென்று கட்டிக் கொண்டான்.

    வேண்டாங்க... இப்பதான் குளிச்சுட்டு வந்திருக்கேன். மறுபடியும் என்னை குளிக்கும்படியா பண்ணிடாதீங்க... பனி பெய்யற இந்த ராத்திரியில் அடிக்கடி குளிச்சா டபுள் நிமோனியா வந்து படுத்துக்க வேண்டியதுதான்...

    ப்ளீஸ் அப்ஸரா...! இன்னும் ஒரே ஒரு தடவை குளிச்சுடு. அப்புறம் விடியற்காலை அஞ்சு மணி வரைக்கும் உன் உடம்பு மேல என் கை படாது...

    அவனுடைய அணைப்பில் அப்ஸரா திமிறினாள்.

    வேண்டாங்க... என் உடம்பெல்லாம் ஒரே வலி. படுத்து தூங்கணும் போலிருக்கு. நேரத்தை பார்த்தீங்களா... பதினோரு மணி...

    ப்ளீஸ்... ஒரு தரம்... ஒரே ஒரு தரம்...

    விடமாட்டீங்களே...?

    திரும்பி நின்று அவனைக் கட்டிக் கொண்டாள் அப்ஸரா.

    நிகில் அவளை அள்ளிக் கொண்டு படுக்கைக்கு போய் சாய்த்தான். சோப் வாசனையோடு கூடிய அவளுடைய கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்.

    என்னங்க...

    ம்...

    விளக்கு வேண்டாங்க...

    ஏன்...?

    வெட்கமாயிருக்கு...

    இத பார்ரா...! வெட்கமாம் வெட்கம்...! கல்யாணமாகி ஆறு மாசம் ஆச்சு...! என்னமோ ஃபர்ட்ஸ் நைட்’ல வெட்கப்படற மாதிரி வெட்கப் படறியே...?

    வர... வர... நீங்க ரொம்ப மோசம்

    ஒரு ஜோக் சொல்லட்டுமா...? என்னோட ஆபீஸ் ஸ்நேகிதன் ஒருத்தன் எப்பவோ சொன்னது...

    சொல்லுங்க பார்க்கலாம்

    எதற்கெடுத்தாலும் சந்தேகம் படுகிற ஆபீஸ் மானேஜர் ஒருவர், ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி விசாரணை என்கிற பெயரில் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மனைவியிடமிருந்து டெலிபோன் வந்தது. பேசிமுடித்ததும் அவர் ஊழியர்களிடம் சொன்னார்.

    என் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள்...

    ஒரு விநாடி அமைதிக்குப் பின் ஊழியர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல் கேட்டது. யாரை சந்தேகப் படுகிறீர்கள்...

    அப்ஸரா சிரித்தாள்.

    போன வாரம் நான் பத்திரிக்கையில் படிச்ச ஒரு ப்ளேபாய் ஜோக்கை சொல்லட்டுமா...?

    ம்... சொல்லு... சொல்லு... உன் வாயாலே ப்ளேபாய் ஜோக்கா? ஒரே கிக்தான்...!

    ஒரு ஹோட்டல்ல ஒரு அழகான பெண் தனியா உட்கார்ந்துட்டிருந்தாளாம். அப்ப ஒரு இளைஞன் அவளை நெருங்கி ‘மிஸ்... உனக்கு ஏதாவது கூல்ட்ரிங் வாங்கித் தரட்டுமான்னு’ கேட்டானாம். அதுக்கு அவ ஹோட்டல்ல இருக்கிற எல்லார்க்கும் கேட்கிற மாதிரி என்ன என்னை ஹோட்டலுக்கு கூப்பிடறியா?ன்னு கத்தினா. இளைஞன் பதறிப்போய் இல்ல நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டே. உனக்கு ஒரு கூல்ட்ரிங் வாங்கித் தரட்டுமான்னு கேட்டேன் உடனே அவ இன்னமும் கோபமாகி படுக்கைக்கு வர்ற பொண்ணு நானில்லை... அதுக்கு வேற யாரையாவது பார்...ன்னு கத்த இளைஞனுக்கு படு சங்கடம். சுற்றிலும் இருந்தவங்க அவனை கேலியா பார்த்தாங்க. சிரிச்சாங்க. இவன். தலைகுனிஞ்சுகிட்டே போய் தனியா இருந்த மேஜைக்கு போய் உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஸாரி மிஸ்டர்! மத்தவங்க முன்னாடி உங்களை சங்கடப்படுத்தி விட்டேன். நான்

    Enjoying the preview?
    Page 1 of 1