Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priyasagaa
Priyasagaa
Priyasagaa
Ebook92 pages54 minutes

Priyasagaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Priyasagaa

Read more from Sudha Suresh

Related to Priyasagaa

Related ebooks

Related categories

Reviews for Priyasagaa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priyasagaa - Sudha Suresh

    24

    1

    வரிசையாக சிலைகள்..

    அடுத்தடுத்து சமாதிகள்.. முனுக்கென்றால் போராட்டங்கள்.. என்று என்னதான் நீங்கள் ஆயிரமாயிரம் இம்சைகளை எனக்கு தந்தாலும்.. காலங்காலமாக., ஜென்ம ஜென்மாந்திரமாக என்னை மனதார நேசிக்கும் காதலர்களுக்காய்..

    இத்தனையையும் பொறுத்துக் கொண்டுத் தாங்கிக் கொள்கிறேன்’ என, தன் அலை கரங்களால் சதா கரையில் அடித்து சத்தியம் செய்யும் அழகிய மெரீனா கடற்கரை......

    ....இன்னும் ஒன்னே ஒன்னு... கேட்ட அருணைச் செல்லமாய் அடித்தாள் ப்ரியா.

    உத படுவ படவா! வாரத்திற்கு ரெண்டு நாள் பீச்.. ட்ரிப்புக்கு ஒரு ‘இச்’ அதான் நம்ம டீலிங்ச்.. மீறின அடுத்த வாரம் வரமாட்டேன்..

    சரிங்க ப்ரிய ராணி.. உடனே லெக்சர் தொடங்கிடாதீங்க...

    நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நான் ப்ரிய ராணிதான். இவனோட ப்ரியா ராணி

    இதுல ஒன்னும் குறைச்சலில்ல.. ஆனாலும் நீ போங்கு.. லவ்பண்ணத் தொடங்கி ஒரு வருசம் ஆச்சு இப்பதான் முத்தத்ல வந்து நிக்குது. அதுவும் கோட்டா சிஸ்டத்துல..

    போதும் போதும் இடத்த கொடுத்தா மடத்த புடுங்குற ஜாதி நீங்க..

    ஹஹ.. ஹா... ஓய்.. என்ன சந்துல சிந்து பாடற... அந்த மாதிரி ஆள்லாம் நான் இல்லம்மா கண்ணு! உண்மையிலேயே சொல்றேன் ப்ரியா.. நீ இந்த ஒன்னை கூட தரலைனாலும் பரவாயில்ல.. நீ வந்தாலே போதும்..

    சார்.. சார்.. போதும் போதும் டயலாக்கெல்லாம்.. என்று சிரித்தவள் கேட்டாள்.. ஓகே அருண் பீ சீரியஸ்.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி..

    கொஞ்ச நாளைக்கு ப்ரியா.. உமாவை பொண்ணு பார்த்துட்டு போன இடத்துல ஓகே சொல்லிட்டாங்க..

    ஓ... நீ போன்ல ஒரு க்ளாட் நியூஸ்னு சொல்லும்போதே நினைச்சேன்.. சரி.. வருங்கால நாத்தனார்க்கு கல்யாணம் செட்டாயிருச்சுனு.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா..

    ஆமா ப்ரியா! அப்பா இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே முடிச்சிருப்பார்.. பச்.. இட்ஸ் ஓகே!

    ஏய்.. லீவிட்யா! இப்ப மட்டும் என்ன! அவர் ஸ்தானத்திலுருந்துதான் நீ எல்லாம் செய்றியே! பணத்துக்கெல்லாம் ரெடி பண்ணிட்டியாடா! நாவேணா வீட்டுக்குத் தெரியாத, காதுங்காதும் வச்ச மாதிரி ஆஃபீஸ்ல லோன் போட்டுத் தரவா

    வேண்டாம்பா! அப்பா வாங்கிப் போட்ட காவாங்கரை இடத்துல பாதிய விக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டேன்.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. விடு

    என்னமோடா.. வீட்ல மைல்டா டவுட் வந்துருச்சோனு எனக்கு டவுட் வருது.. வாரத்ல ரெண்டு நாள் பீச்சுக்கு வந்துட்டு போறதே மனசு திக் திக்குனு இருக்கு..

    லவ்வுன்னா அப்டிதாம்மா! இந்த த்ரில்கூட இல்லைனா எப்படி! உமா கல்யாணம் முடிஞ்சு முப்பதே நாள்.. உங்க வீட்ல பொண்ணு கேட்டு வந்து டான்னு நிற்பேன்... டோன்ட் வொரி

    ம்.. பார்கலாம்! எனக்கென்னவோ அவ்ளோ ஈஸியா இருக்கும்னு தோணல.. பட் நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது

    இங்க மட்டும் என்னவாம் அதே நிலைதான்! ‘நோ ப்ரியா... நோ அருண்’ ஆனா ஒன்னு முடிஞ்சவரை போராடிப் பார்க்கனும் ப்ரியா.. லெட் அஸ் ஹோப் பாஸிடீவ்

    ம்.. அம்மாவை சமாளிச்சுட்டா அவங்கள வச்சே அப்பாவை வழிக்கு கொண்டு வந்துடுவேன்.. ஆனா அண்ணனை நினைச்சாதான் குலை நடுங்குது.. ஹஹ ஹா இங்க வந்துட்டு போறப்ப என்னிக்காவது அவன் வீட்ல இருந்து தொலைப்பான்.. அன்னிக்கு நீ என்னை பார்க்கனுமே! என்னோட ஆக்டிங்கைப் பார்த்த, அசந்துடுவ! அப்டியே உடம்பு முடியாதவ மாதிரி பில்டப்லாம் கொடுத்து வேக வேகமா என் ரூமுக்கு போய் படுத்துருவேன். ஷெபா.. நான் பர்ற பாடு எனக்குதான் தெரியும்

    ஹஹ ஹா அதுலயும் ஒரு த்ரில் இருக்கு ப்ரியா

    ஆமா... நீ ஆ..வூ..ன்னா த்ரில்னு சொல்லு

    ஏய்.. என்னப்பா இப்படி அலுத்துக்கற.. உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு! இனிமே வெளிய பார்த்துக்க வேணாம்! ஃபோன் பேச்சோட நிறுத்திக்குவோம்.. நீ கஷ்டப்பட்டா எனக்கு தாங்காது

    அட! நீ வேற.. அதுலையும் ஒரு த்ரில் இருக்குபா என்றதும் இருவரும் கலகலவென சிரித்தனர்..

    சரி சாரே! சமயமாயி! கிளம்பலாமா என்றவள் எழப் போனாள்..

    ம்... சரி சரி... ஆமா கல்யாணம் மேட்டர்லாம் பேசியிருக்கோம் ட்ரீட் ஒன்னும் இல்லையா...

    என்றவனின் கண்ணத்தில் பச்சக்கென்று ஒரு முத்தமிட்டவள்..

    போனா போகுதுனு இந்த ட்ரீட் என்றவள் மண்ணை தட்டியபடி எழுந்தாள். இருவரும் கைகோர்த்தபடி நடந்தனர்.

    மனசு முழுக்க வன்மத்துடனும், கோபத்தில் உடம்பு முழுவதும் ஆத்திரம் பற்றிக் கொள்ள... பல்லைக் கடித்தபடி அவர்களைத் தொடர்ந்தான் ஒருவன்.

    2

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்(?), பாலாறும் தேனாறும் ஓடும் என்றெல்லாம் அபரிமிதமாக வாக்கு கொடுக்க மாட்டோம்... ஆனால் தேனாறும் பாலாறுமாக ஓடவைப்பது சத்தியம்...

    தெருவை அடைத்தபடி போடப்பட்டிருந்த மேடையில்... வாங்கிய காசிற்கு வாய்க்கு வந்தபடி புழுகிக்

    Enjoying the preview?
    Page 1 of 1