Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velvet
Velvet
Velvet
Ebook236 pages2 hours

Velvet

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466510
Velvet

Read more from Sudha Suresh

Related to Velvet

Related ebooks

Related categories

Reviews for Velvet

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velvet - Sudha Suresh

    35

    1

    சிகாகோ

    நேரம் இரவு 08.11...

    நகரின் ‘வில்லீஸ் டவர்’ கட்டிடத்தின் உச்சியை முத்தமிடப் போட்டி போட்டு, தோற்றுப் போன உயரமான கட்டிடங்களில் ஒன்று...

    வான் முட்டும் அந்த கட்டிடத்தில், ஒரு ‘லேப் டேப்’ பேக் ஒன்றை பின்னால் தொங்கவிட்டபடி, அறுபத்தியோராம் தளத்தின் லிஃப்ட்டிலிருந்து அவன் இறங்கிக் கொண்டான்!

    கொடுமை என்னவென்றால்..?

    சுண்டிவிட்டால் இரத்தம் வரும் செக்கச் செவேலென்ற அழகான சிவப்பு முகம்! அவ்வப்போது நெற்றியை நலம் விசாரிக்கும் லூசான ப்ரௌன் நிற கேசம்! ஸகேல் வைத்து திருத்தியது போல் கச்சிதமாய் வெட்டப்பட்ட அடர்த்தியான அதே நிற மீசை! பிசிறில்லாத கன்னம்! அட! ஒரு ஆண் மகனுக்கு இத்தனை ஈர்ப்பான இதழா, என மானசீகமாய் பலரை முத்தமிடச் செய்த இதழ்!

    இத்தனை அழகான தன் முகத்தினை மறைத்து, ஒரு சாதரண முகமாய் இறங்கினான்!

    அது ஒரு பங்கு வர்த்தகம் சார்ந்த அலுவலகம்! வெளியே இரவு என சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத அளவு அந்தத் தளம் மின்சார உபயத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது! நீ...ஈ..ஈ..ள காரிடரை கடந்து செல்கையில் ஆங்காங்கே இருந்த காமிராக்கள் அவனை உள் வாங்கியதை எண்ணிச் சிரித்துக் கொண்டான்! அவன்தான் இறந்து இன்றோடு பதினேழு நாட்கள் ஆகிவிட்டதே! அந்த நேரத்திலும் இருந்த ரிஷப்ஷனிஸ்ட்டின் அழகைக் கண்டு பெருமூச்சு விடாமல், அவளைக் கடந்து சென்றான்! நேராக ரெஸ்ட் ரூம் இருந்த பக்கம் சென்றவன், இரு புறமும் வரிசையாக இருந்த அறைகளில் இடது புற கடைசி அறைக்குள் நுழைந்தான். உள்ளே மூடப்பட்ட பேஸின் மேல் அமர்ந்து அலைபேசியில் கேம்ஸ் ஆடத் துவங்கினான்!

    அலுவலகம் முடிந்து அனைவரும் வெளியேற, ஒன்பது மணிக்கு மேல் ஆகும்! காத்திருந்தான்!

    கச்சிதமாய் திட்டமிடப்பட்ட செயல்! ஒவ்வொரு புள்ளியையும் கூர்ந்து கவனித்து, திட்டம் வகுக்கப்பட்டிருந்தது! அலுவலகம் முடிந்த பத்து நிமிடத்தில் செக்யூரிட்டி செக்கிங் வரும்! அந்த சீரான நடையை மூளையில் நன்கு பதிவு செய்திருந்தான்! நேரம் கடந்தது! வேறு இடத்தில் விபத்தில் இறந்திருந்த ஒருவனின் முக அமைப்பாய் முகத்தில் பொருத்தியிருந்த ‘மாஸ்க்’ வேறு அரித்தது! பொறுத்துக் கொண்டான்!

    டக்.. டக்.. ஒரே இடைவெளியில் ஓசை! ‘யாரேனும் இருக்கிறீர்களா’ சத்தம் கேட்டவுடன், கதவினை லேசாக.. மிக மெதுவாக கொஞ்சம் திறந்து வைத்தான். ஒவ்வொரு அறை வாசலையும் கவனித்தபடி வந்த செக்யூரிட்டி, இவன் இருந்த அறை வாசல் முன் நின்றான்! கதவு சற்றே திறந்திருக்க, கொஞசம் திறந்து பார்த்தான்! திறந்த கதவிற்குப் பின்னால் கையில் பிஸ்டலுடன் மூச்சை இறுக்கி பிடித்தபடி, ‘இறந்தவன்’ நின்றிருந்தான்! பிஸ்டலுக்கு வேலை தராமல், கதவினை வெளிப்புறம் தாழிட்டு காவலன் சென்றான். சிறிது நேரத்தில் மின்சாரம் முழுதும் நின்று கும்மிருட்டானது!

    நூற்றியிருபது நொடிகள் நேரம் கொடுத்து, பையிலிருந்த ஒரு உபகரணத்தின் உதவியால் ‘இறந்தவன்’ வெளியில் வந்தான்! கொஞ்சம் கூட பதட்டமடையாமல் ரிஸ்ட் வாட்சின் அலாரத்தை அதிகாலை இரண்டு மணிக்கு வைத்து, ரிசப்ஷன் மேசையில் படுத்தவன், நிம்மதியாய் தூங்கினான்!

    சரியாக இரண்டு மணி! ‘க்விங்.. க்விங்...’ அலாரம் எழுப்ப, சோம்பல் முறித்தபடி எழுந்தவன், அவன் இருந்த அலுவலகத்தின் நேர் எதிர் கட்டிடத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட அறைக்கு எதிராக வசதியாய் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்து கொண்டான்! இரண்டு கட்டிடங்களுக்கும் இடையில் இருநூறு அடி தூரம் இருக்கும்! இடைப்பட்ட சாலையில் அந்த நேரத்திலும் கீ....ழே.. எறும்புகளாய் வாகனங்கள் ஊர்ந்தன! கிட்டத்தட்ட இரண்டு கட்டிடங்களும் தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் இருட்டு!

    எதிர் கட்டிடத்தில் இருந்த ஒரு அறையை பிரத்யேக பைனாகுலர் வழியே நோட்டமிட்டான்! மயான அமைதிக்கு நடுவே அந்த லாக்கர் இருக்கிறது! அது இருக்குமிடம் தனக்கும் தன் நண்பனுக்கு மட்டுமே தெரியும்!

    நண்பன்!? ஆம், இதோ கூடவே அழைத்து வந்திருக்கிறானே!

    செல்லமாய் தான் கொண்டு வந்த பையை ஒரு தட்டு தட்டிவிட்டு, அந்த குட்டி ரோபோவை,

    ( மன்னிக்கவும்... ரோபோ என்றால் அவனுக்கு கோபம் வரும் ) நண்பனை வெளியே எடுத்தான்.

    ஒரு ஜானுக்கு சற்று உயரமுள்ள அந்த குட்டி ரோபோ, மனிதனைப் போல் கைகால்களை மடக்கவும், காமிரா கண்களுடனும், பாதம் அடியில் மெல்லிய ஸ்டீல் ஷூக்களாகவும், கைகளின் விரல் நுனிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தேவைக்கேற்று உபயோகப்படுத்தும் ஆயுத நுனியாகவும் என.. ஒரு மினி ‘டூல்ஸ் பாக்ஸை’ தன்னுள்ளும் கொண்ட பிரத்யேக ரோபோவாகத் திகழ்ந்தது! அதனால் தான் அதனை ‘நண்பன்’ என்றான்!

    ‘ஹாய் ஜூனியர் குட் மார்னிங்.. எல்லாம் ஞாபகமிருக்கில்லையா’

    என்று அந்த அஃறினையை சிரித்தபடியே கேட்டவன், தன் தலையினையே தட்டிக் கொண்டான்!

    நிதானமாய் சன்னமாய் விசிலடித்த படியே, ஏதோ பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதற்கு செய்யும் ஏற்பாடுகள் போல், கொண்டு வந்த உபகரணங்களை கையாண்டன். அந்த ஐந்து மில்லிமீட்டர் அளவே கொண்ட இரும்புச் சுருளை, பிரத்யேக துப்பாக்கி கொண்டு எதிர் கட்டிடத்தின் ஜன்னலின் கீழுள்ள கான்கிரீட்டை நோக்கி சுட, அது ‘பச்சக்’ என பொருந்திக் கொண்டது!

    ‘ஹாய் பேபி... உனக்கு வழி செஞ்சு கொடுத்தாச்சு.. நீ உன் வேலையை துவங்கலாம்’ என்றபடி நண்பனை எடுத்து அந்த சுருளின் மீது ஒரு கையால் வைத்தவன், மறுகையிலிருந்த சாதனத்தில் ஒரு பொத்தானைத் தொட, ரோபோவின் ஸ்டீல் பாதம் காந்த மயமாகி அந்த இரும்புக் கயிற்றில் ஒட்டிக் கொண்டது!

    அதன் பின் தன்னிடமிருந்த மினி எலக்ட்ரானிக் சாதனம் வழியே நண்பனை இயக்கத் துவங்கினான்.

    சுருளில் ஒட்டியிருந்த பாதம் அழகாய் ஸ்கேட்டிங் செய்வது போல் விரைவாக நகர, அந்த பக்கம் சென்றது ரோபோ!

    இங்கே இவன் கருவியில் இணைந்த டிஸ்ப்ளேயில் பார்த்தபடி இயக்க இயக்க.. அது தன் விரல் ஆயுததத்தால் ஜன்னல் கண்ணாடியில் துளையிட்டது.. துளையில் முக்கால் பங்கிற்கு மேல் அதன் உடலை நுழைத்ததும், இங்கே காந்த விசையை நிறுத்தினான். காந்த சக்தி இழந்ததும் தொப்பென்று உள்ளே ‘விழுந்தது’ ரோபோ!

    இங்கே கொடுத்த கட்டளைகளுக்கு கீழ் படிந்து, அழகாக ராஜ ஸகேட்டிங் போட்டு அறையை வலம் வந்தது! லாக்கர் இருக்கும் அறை தெரிய, அந்த கண்ணாடிக் கதவிலும் துளையிட்டு உள்ளே நுழைந்தது! அதன் எதிரே கம்பீரமாய் லாக்கர்!

    இங்கே டிஸ்ப்ளேயில் லாக்கரைக் கண்டதும் இவனின் உடம்பில் படபடப்புத் தொற்றிக் கொண்டது! கைக்கு எட்டும் தூரத்தில் ‘வின்ஸ்டன் ப்ளூ’ வகை வைரம்! கிட்டத்தட்ட இருபத்தைந்து மில்லியன் டாலர்.. படபடப்பை அடக்கிக் கொண்டு, வந்த வேலையில் கவனம் வைத்தான்!

    மினி ரோபோவின் காலில் ஸ்கேட்டிங் சக்கரம் மறைந்து ஸ்ப்ரிங் முளைத்தது! மிகச்சரியாய் லாக்கரின் திறவுகோள் உயரம் வரை ஸ்ப்ரிங் எழும்பியது!

    அடுத்ததாக, ஒரு கண்ணில் காமிரா மறைந்து லேசர் பாதுகாப்பினை காணும் பிரத்யேக கண்ணாடி வரவழைத்தான்! நான்கு விரல்கடை அளவு லேசர் ஒளி பாய, ‘பொறு குட்டிப் பையா’ என்றபடி ரோபோவை அப்படியே குறுக்கு வெட்டாய் மாற்றி, லேசர் ஒளியின் மீது படாமல் உள்ளே அனுப்பி மீண்டும் நிமிர்த்தினான்!

    அதன் பின் கடகடவென எல்லாம் நடந்தது!

    இவன் இயக்கத்திற்கு கட்டுப்பட்ட ஊழியனாய், அதன் முதுகில் இருந்த குட்டிப் பையின் ஜிப்பினை திறந்து ஒரு மினி உருளையை அதில் பொருத்தியது ரோபோ! அடுத்த வினாடி, ஷேம்பெயின் பாட்டிலினை திறக்கும் ‘விஷ்க்’ என்ற ஒரு சத்தம்! அவ்வளவுதான்.. அதன் எதிரே அழகாக தூங்கிக் கொண்டிருந்தது வைரம்! ‘வ்வ்வ்வாவ்’, விசிலடித்தவன் ரோபோவிற்கு ஆணைகள் இட, வைரத்தை எடுத்து, போன வினாடி வெடி இருந்த பைக்குள் போட்டு மறக்காமல்(!) ஜிப்பை இழுத்து மூடியது...

    வைரம் கைக்கு வந்ததும் பதட்டமடையக் கூடாது! லேசரை மறக்கக் கூடாது என பல முறை பார்த்த ஒத்திகையில், அனுப்பியது போன்றே ‘நண்பனை’ வெளியே இழுத்தான். மீண்டும் கச்சிதமாய் பின்புறம் வைரப் பை தொங்க, நண்பன் போன வழியே, அதே முறையில் வரத் துவங்கினான்.

    ‘அருமை நண்பா! ஒரு பாடலை ‘ஹம்’ செய்த படி வாயேன்! எத்தனை பெரிய சாகசத்தை கொஞ்சமும் பிசகாமல் செய்திருக்கிறாய் தெரியுமா!?’ சந்தோஷத்தில் கொஞ்சம் உரக்கவே சொன்னான். இந்த பக்கம் வந்ததும் நண்பனுக்கு செல்லமாய் ஒரு முத்தமிட்டவன்.. பையை பிரித்து ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் வைரத்தை பார்த்தான்! அந்த கன நேரம் அந்த இடமே மின்னியது!

    எல்லா உபகரனங்களையும் சுத்தமாய் மீண்டும் பையில் போட்டுக் கொண்டான்.

    இத்தனை கடினப்பட்டு, உயிரை பணயம் வைத்து, வேலைகள் செய்தாலும் மார்டின் தருவதென்னவோ ஐந்தில் ஒரு பங்குதான்! அதை நினைத்தால் தான் அவனுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது! என்ன செய்ய மார்ட்டின் பொன் முட்டையிடும் வாத்தாயிற்றே! வைர விவரங்கள் எல்லாம் அவனுக்குத் தானே அத்துபடி! இனி இரண்டு பங்கு கேட்டு ‘ஸ்ட்ரைக்’ செய்ய வேண்டும்! இல்லையேல், வேறு யாராவது ஒரு பார்ட்னரைப் பார்த்துக் கொண்டு விட வேண்டியதுதான்!

    மனதிற்குள் நினைத்த படியே வெளியே வந்தவன், அனாதையாய் பார்க்கிங்கில் ஓரமாய் நிறுத்தியிருந்த தன் டூ வீலரில் பறந்தான்!

    2

    மார்ட்டின்

    தன் அருகில் படுத்திருந்தவளின் பூவிதழ்களை முரட்டுத் தனமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். சத்தியமாய் அவள் மனைவி அல்ல! ரோஸி.. ரீட்டா.. லாரா.. என, அவளின் பெயர் அன்றைய இரவில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. நாற்பத்தைந்தை நெருங்கும் மார்ட்டினுக்கு, அதற்குள் கட்டிய மனைவி அலுத்துவிட்டாள். முன்பெல்லாம் எப்போதேனும் ஒரு முறை வெளியே ருசித்தவனுக்கு இப்போது வாரம் ஒரு முறை இளம் பெண்கள் தேவைப்பட்டனர்!

    பணம்! பணம்! பணம்! வசதி கொடுக்கும் திமிர்! பின்னே.. மார்ட்டின் சாதாரண நபரா என்ன!? வைர வியாபார உலகின் சக்ரவர்த்திகளில் ஒருவராய் திகழும் சார்லஸ்ஸின் மூத்த தம்பி அல்லவா! அருகில் இருந்த யுவதியின் மேடு பள்ளங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்த மார்ட்டினின் காதுகளுக்கு அந்த நேரத்தில் அலைபேசியின் அலறல் நாராசமாய் இருந்தது.

    ‘ஒரு வேளை அண்ணனாக இருக்குமோ’ என நினைத்து டிஸ்ப்ளே பார்த்தவன், புது எண்ணைக் காட்டவும் கடுப்பாகிப் போனான்! வந்த கோபத்தை குரலில் காட்டினான்..

    ஹல்லோ.... ஹூ இஸ் திஸ்..!?

    மார்ட்டின்..!?

    ஆமாம்... நீ...!

    வைர வியாபார மன்னன் சார்லஸ்ஸின் முதல் தம்பி மார்ட்டின் தானே!?

    ஆமாம்.. ஆமாம்.. அதே மார்ட்டின்தான்! நீ யார்.. என் பர்ஸனல் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது!?

    நான்.. நான்.. நான் ஒரு நிழலுலக இன்ஃபார்மர்

    இருந்துவிட்டுப் போ.. அதற்கென்ன இப்போது! எதுவாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் கழித்து பேசு.. நான் முக்கியமான ஒரு வேலையில் இருக்கிறேன்..

    நல்லது.. நான் சொல்லப் போகும் செய்தியை விட பிலிபைன்ஸ் அழகியின் சல்லாபம்தான் உங்களுக்கு அதி முக்கியமாய் படுகிறது! நான் உங்கள் தம்பி டேனியலைத் தொடர்பு கொள்கிறேன்.. உங்கள் ‘அதி முக்கிய’ வேலையைத் தொடருங்கள்.. நன்றி!

    தன் தற்போதைய நிலையைக் கூட தெரிந்து வைத்துள்ள இவன் யார்!? தன் தம்பி டேனியலைக் கூட சொல்கிறானே!

    ஹே.. யார்... யார்... நீ! உனக்கு என்ன வேண்டும்!?

    அவசரமாய் கொஞ்சம் பணம் வேண்டும்

    ப்ளடி.. ஆர் யு ப்ளேயிங்! ஹூ தி இடியட் யு ஆர்!

    கோபப்படாதீர்கள்.. என் பெயர் தேவையில்லை! சிறிது கவனமாய் கேளுங்கள்.. எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும்! மிக அவசரமாய்..! இனாமாகத் தரவேண்டாம்! மார்ட்டினுக்கு நங்கையை விட முதலாவதாய் எதில் விருப்பமோ, அது பற்றி நான் நூறு சதவிகித உண்மையானதொரு தகவலைத் தருகிறேன் என்றவன், அந்த ‘முதலாவதாய்’ என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னான்.

    இதோ பார்.. நிழலுலகம் என்கிறாய்.. யாரென்றே சொல்லாமல் பணம் வேண்டும் என்கிறாய்.. உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை..!

    சரி.. நீங்கள் அங்கேயே விளையாடுங்கள்... என்று இந்த பக்கம் லைனைக் கட் செய்தான் நிழலுலகம்.

    அமைதி...

    அமைதி...

    செல்லைப் பார்த்தான் மார்ட்டின்! இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது! கோபத்தில் அலைபேசியை தலையணை மேல் எறிந்தவன் அழகியை கட்டிப் பிடித்தான்.

    மஞ்சத்தில் மனம் ஈடுபடவில்லை! நெஞ்சம் முழுதும் போன் அழைப்பின் பேரிலேயே இருந்தது.

    யாரவன்...!? கூடவே..

    ‘முதலாவதாய்’ என்கிற வார்த்தை உறுத்தியது! ஐந்து நிமிடம் அதை புறந்தள்ள முயற்சித்தான்.. ம்ஹும்.. அந்த ‘முதலாவதாய்’ மூளையில் அலைமோதியது! காரணம்..

    உலகின் விலையுயர்ந்த வைரங்களை குறைவான விலைக்கு வாங்குவது மார்ட்டினுக்கு கைவந்த கலை! அதுவும் திருட்டு வைரங்கள், கடத்தல் வைரங்கள், என்றால் அடிமாட்டு விலையில் வாங்குவான். அதனை, அண்ணனிடம் வரும் வாடிக்கையாளரகளைத்தனியே அழைத்து, பேரம் பேசி விற்றுவிடுவான்! இதன் மூலம் வருமானம் பார்ப்பது இவன் வழக்கம்! அதிலும் சில நேரங்களில் அண்ணனிடமே விலையை கொஞ்சம் கூடுதலாய் சொல்லி விற்கும் பலே ஆள்! பின் இது போன்ற லாகிரி செலவுகளுக்கு என்ன செய்வதாம்!

    சட்டென அலை பேசி எண்கள் பார்த்து அவனே போன் செய்தான்.. மறுமுனையில் இருந்தவன் சிரித்துக் கொண்டான்! அவனுக்குத் தெரியும், மார்ட்டின் விடமாட்டான்!

    வைரம் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம்.. அதுவும் திருட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1