Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathal Abaayangal
Kaathal Abaayangal
Kaathal Abaayangal
Ebook244 pages1 hour

Kaathal Abaayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Thekkur Anitha
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466831
Kaathal Abaayangal

Related to Kaathal Abaayangal

Related ebooks

Related categories

Reviews for Kaathal Abaayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathal Abaayangal - Thekkur Anitha

    1

    உஷாதேவி. பி.ஏ...

    "உனக்கு இருக்கிற அழகுக்கும், பி.எஸ்ஸி. படிப்புக்கும் கதை எழுதுகிறவனை ஆசைப்படாதே. ரொம்பத் தப்பு, ஜெயந்தி!

    ஒரு பெரிய ஆபீஸரோட வொய்ப்ன்னு சொல்லிக்கிறதுல இருக்கிற கம்பீரத்தைப்பாரு. அவனை மெல்ல கழட்டிவிட்ரு. பாங்க் ஆபீஸர், டாக்டர், என்ஜினியர்னு பெரிய லெவல்ல காதல் பண்ணு!"

    யோகேஸ், எம். எஸ்ஸி.,

    இதப்பாரு பிரதாப். பொண்ணுக்கு அழகு மட்டும் இருந்தாப் போதாது... பணமும் இருக்கணும். 500 ரூபாய் சம்பளம் வாங்கற பொண்ணு கூடத்தான் அழகா இருக்கா ட்ரஸ் பண்ணிக்கிட்டு. தோள்ல ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டு ஆபீசுக்குப் போறது மாதிரிதான் போறா... அவ அழகா இருக்கா அப்படிங்கறதுக்காக காதலிக்க முடியுமா? காதலுக்கு இந்தக் காலத்துல டிகிரி தேவையாய் இருக்கு! நாம படிச்ச எம்.எஸ்ஸிக்கு வேலைதான் கெடைக்கல. அட்லீஸ்ட் காதலுக்காவது உதவட்டுமே... ஒரு கொழுத்த பணக்கார வீட்டுப் பொண்ணா பாரு... காதலி... கல்யாணம் பண்ணிக்க... லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணு!

    "ஜெயந்தி!"

    என்னம்மா?

    உனக்கு இந்த வேலையாவது கிடைக்கணும்... போறப்போ தெருமுனைல இருக்கிற பிள்ளையார்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு போ... மேஜை மேல பத்து. ரூவா வச்சிருக்கேன். ஃபஸ் செலவுக்கு எடுத்துக்க. பூக்காரிகிட்ட ரெண்டு மொழம் மல்லிப் பூ வாங்கி தலையில வச்சுக்கிட்டு போ.

    பாத்ரூமிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

    சரிம்மா...என்ற ஜெயந்திக்கு இருபத்தி மூன்று வயசு... உங்களை ‘ஜொள்ளு’ விட, வைக்கும் தோற்றம். போன வருஷம் வரை அவளுக்கு ‘கறுப்புப் பூனைப்படை’ போல் காலையிலும் மாலையிலும் நிறைய செக்யூரிட்டி. வீட்டிலிருந்து காலேஜுக்கு கிளம்பும்போது துவங்கி மாலை வீடுவரை வந்து சேர்த்து விட்டுச் செல்லும். ஆனாலும், ஒருத்தனுக்குக் கூட அவளிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லத் துணிவில்லை. அப்படித் துணிந்த ஒன்றிரண்டு பேர்களின் கன்னங்களை அவளின் கை பதம் பார்த்திருக்கிறது. ஆனாலும் அவளை ‘சைட்’ அடிப்பதை மட்டும் அவர்கள் நிறுத்தவில்லை.

    ஜெயந்தி மேஜை மேல் இருந்த பணத்தை எடுத்து ஹேண்ட் பேக்கினுள் வைத்திருந்த பர்ஸில் வைத்துக் கொண்டாள்.

    போயிட்டு வர்றேன்மா.

    கால்களில் செருப்பணிந்து கொண்டாள். நடந்தாள். பஸ் ஸ்டாப்பை நோக்கி.

    ‘ப்ரேம் அப்ளயன் சஸ்’ அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்தது. வழவழப்பான நீண்ட காரிடார். அறைக்கு வெளியே அவர்கள் ஐம்பது பேர் காத்திருந்தார்கள். ‘ஹிண்டு’வில் வாண்டட் காலம் பார்த்துவிட்டு, அப்ளிகேஷன் போட்டவர்கள். இன்றைக்குத்தான் இண்டர்வியூ. பெண்கள் எல்லோருமே பெண்கள். இருபத்தி நான்கு வயதிற்குட்பட்டவர்கள்.

    ஆகவே நிறைய்ய்ய இளமை, நிறைய்ய்ய செழுமை. லோஹிப்பில் தழைய தழைய ஷிஃபான் சேலைகட்டி, லோகட் ஜாக்கெட்டில் கொஞ்சம் போல் செழிப்பான மார்பு காட்டி ‘கவர்ச்சி’ என்ற பதத்திற்கு அர்த்தம் போல் இருந்தார்கள். சிலர் மாடர்ன் டிரெஸில் புத்தம் புது மலராய் பூத்திருந்தார்கள். ஜெயந்தி தன் ஹை ஹீல்ஸ் சப்திக்க அங்கே வந்தபோது, ‘பொறாமை’, என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது.

    காத்திருந்தார்கள்.

    அந்தக் கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் அந்த ஒயிட் நிற ஃபியட் கார் சப்தமில்லாமல் வந்து நின்றது. டிரைவிங் ஸீட்டிலிருந்து அவன் இறங்கினான். அழகாக இருந்தான். இளமையாக இருந்தான். க்ரே கலரில் சஃபாரி ஷ்ட்... கால்களில் சாக்லேட் கலரில் லெதர் ஷூ கண்களில் ரேபான். கைகளில் கோல்டு செயின். வாட்ச், ப்ராஸ்லெட், விரல்கள் இரண்டில் புது டிசைன் மோதிரம். ஒரு கையில் ப்ரீப்கேஸ் வைத்திருந்தான்.

    பின் கதவைத் திறந்தான்.

    அவள் இறங்கினாள். உயரமாய் இருந்தாள். அழகாய் இருந்தாள். புன்னகை கீற்று நெளிந்து இதழ்களில் லிப்ஸ்டிக், லிப்க்ளாஸ் தீற்றியிருந்ததில் ஒளிர, கூந்தலை ஒழுங்காகக் கத்தரித்து ஹேர்பேண்ட் போட்டிருந்தாள். அவளிடம் மிதமாய் ‘சார்லி’ மணத்தது.

    இருவரும் அந்த கட்டடத்தின் முதல் ஃப்ளோரை அடைந்தார்கள். பெஞ்சில் அமர்ந்திருந்த ஐம்பது பேர்களையும் மேலோட்டமாய்ப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.

    நுழைந்ததும், பெரிய ஹால். தரையில், சிவப்பு கார்ப்பெட் விரிப்பு. ஹாலின் மூன்று பக்கங்களில் நீளமான விலை உயர்ந்த சோபாக்கள். சுவர்களில் வால் பேப்பர், இரண்டு மார்டன் ஆர்ட். கான்கிரீட் கூரையின் நடுவாக, கொத்தாய் அலங்கார விளக்கு. அருகில் உஷா ஃபேன்.

    அதைக் கடந்து அதன் பக்கத்திலேயே பாங்கில் இருப்பதைப் போன்று ப்ளைவுட் தடுப்பில் மற்றொரு அறை. கதவில் ‘ப்ரேம், மானேஜிங் டைரக்டர்’ பித்தளை எழுத்துக்கள்.

    அதன் கதவை திறந்து கொண்டு நுழைந்தார்கள்.

    அந்த அறை பிரமாதமாய் இண்டீரியர் டெக்ரேஷன் செய்யப்பட்டிருந்தது. மேஜையில் பூக்கள் சிதறின விரிப்பின் மேல் கண்ணாடி விரிப்பு. அதன் மேல் இரண்டு டெலிபோன்கள். ஒரு இண்டர்காம். எல்லாம் ஒரே வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவை. பணம், அது செய்த சாகசம்.

    ஏஸியை ‘ஆன்’ பண்ணினான், எக்ஸிக்யூட்டிவ் மெத்தைச் சேரில் அமர்ந்ததும்,

    ஸ்நேகா, நீ போய் ஒவ்வொருத்தியாய் உள்ளே அனுப்பு.

    அந்த ஸ்நேகா உதட்டைச் சுழித்துச் சிரித்து தோள்களை குலுக்கிக்கொண்டே வெளியேறினாள்.

    அவள் உள்ளே வந்தாள்.

    டேக் யுவர் ஸீட்

    த்தேங்க் யு

    அவள் அமரும் முன் அவன் பார்வை அவள் இடுப்புப் பகுதியில் மேய்ந்தது. படு கவர்ச்சியான இடை. கவனமா செதுக்கினாற்போன்ற அற்புதமான வளைவுகள். லோஹிப் பின் உபயத்தில் - க்ளிவேஜ்’ தெரிந்தது.

    பார்வை மேலே உயர்ந்து எடுப்பான மார்புப் பகுதியில், இன்னும் மேலே உயர்ந்து முகத்தில்,

    திருப்தியாய் உணர்ந்தான் ப்ரேம். தீர்மானித்தான்...

    இவளையே அப்பாய்ட்மெண்ட் செய்துவிட வேண்டியதுதான். வெளியே காத்திருக்கிறவர்களிடம் கண்துடைப்புக்காக இண்டர்வியூ செய்து அனுப்பி விட வேண்டும்.

    மிஸ் ஜெயந்தி, பி எஸ்ஸி, படிச்சிருக்கிற நீங்க எதுக்காக இந்த சாதாரண போஸ்ட்டுக்கு அப்ளை செஞ்சீங்கன்னு எனக்குப் புரியலை! படிப்புக்குத் தகுந்த மாதிரி வேலை தேடிக் கொள்ளலாமே... இல்லே டைம் ஃபாசிங்காகத்தான் இதுக்கு அப்ளை செஞ்சீங்களா?

    நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி. டைம் பாசிங் என் நோக்கமில்லை சார். இந்தக் காலத்துல படிப்புக்கேத்த வேலை தேடினா ஆயுசு பூராவும் வீட்லதான் உட்கார்ந்திட்டிருக்கணும்.

    ‘யு’ர் பர்ஃபெக்ட்லி ரைட். இந்த ஏஜென்ஸியை இப்பத்தான் புதுசா ஆரம்பிக்கிறேன். ஜனங்க காஸ் சிலிண்டருக்காகப் படுகிற அவதியைப் பார்த்துத்தான் எனக்கு இந்த லிக்யூட்’ சிலிண்டர் ஐடியாவே தோணிச்சு. இதுக்கு ஜனங்ககிட்டே நல்ல வரவேற்பு இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

    ஷ்யூர் ஸார்

    வெல், நீங்க போய் ஹால்லே வெயிட் பண்ணுங்க. மீதமிருக்கிறவங்களை ஒரு மணி நேரத்துக்குள்ள இண்டர்வியூ பண்ணிட்டு உங்களைக் கூப்பிடுறேன். அப்போ வாங்க.

    ஜெயந்தி இன்ஸ்டன்டாய் அதிர்ந்தாள்.

    ஸார் அப்போ என்னை நீங்க இண்டர்வியூ பண்ணப் போறதில்லையா?

    நாட் நெஸஸரி! பார்த்தாலே போதும். புரிஞ்சுக்குவேன்! டோன்ட் ஒர்ரி மிஸ் ஜெயந்தி.

    ஜெயந்தி எழுந்து தன் பின்புறங்கள் அசைய அசைய நடந்து வெளியேறினாள். ப்ரேமின் மனசுக்குள் அவள் படுக்கையில் எப்படி இருப்பாள் என்ற யோசனைகள் தோன்றின.

    காலிங் பெல்லை அழுத்தினான்.

    இரண்டொரு நொடி அவகாசத்தில் அடுத்தவள் தோன்றினாள். அதீத மேக்கப் அணிந்திருந்தாள்.

    ப்ரேம் அவளை சுவாரஸ்யமில்லாமல் இன்டர்வியூ செய்தான். உலகிலேயே நீளமான நதி எது? உயரமான சிகரம்? முதன் முதலில் பாதாள ரயில் எந்த ஆண்டிலிருந்து ஓடத் துவங்கியது? உலகின் முதல் பணக்காரர் யார்? பிடித்த கிரிக்கெட் வீரர்? பிடித்த நடிகர்? நடிகை?

    செக்ரட்டரி வேலைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கவில்லை அவள்...

    தெரிந்தால் பதில் சொன்னாள். தெரியாதென்றால் திரு திருவென்று விழிக்காமல் தெரியாது!’

    அதற்குப்பின் வந்தவர்களிடமும், இதே ரீதியில் கேள்விகள். அபத்தங்கள். ஆயிற்று. இண்டர்வியூ ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

    ஸ்நேகா உள்ளே வந்தாள்.

    எதுக்காக அந்தப் பொண்ணை வெயிட் பண்ணச் சொல்லியிருக்கே ப்ரேம்?

    அவளுக்குத்தான் அப்பாயிண்ட்மெண்ட்! ஃபிகர் பார்த்தியா... என்ன ஒரு அம்சமா இருக்கான்னு! கட்ஸ். கர்வ்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ஸ்நேகா!

    என்னையும் நீ படுக்கையில கையாளும்போது இதையேதான் சொன்னே!

    ஷிட்! இந்தப் பெண்களுக்கே பொறாமை கூடப் பிறந்தது! அடுத்தவள் தன்னைவிட அழகாய் இருக்கக்கூடாது. தன்னைவிட உசத்தி சேலை கட்டக் கூடாது. புது டிஸைனில் நகை போடக் கூடாது. போ ஸ்நேகா... அவளை கூட்டிக்கிட்டு வா

    ஸ்நேகா அவனை முறைத்துவிட்டு வெளியேறினாள்.

    ஜெயந்தியோடு திரும்பினாள்.

    மிஸ் ஜெயந்தி. உட்காருங்க... நீயும் உட்கார் ஸ்நேகா... ஜெயந்தி... ஸ்நேகா. வேற யாருமல்ல... எனக்குச் சித்திப் பொண்ணு! எம்.காம். படிச்சிருக்கா. பிஸ்னெஸ்ல என்கூட - ஒத்தாசை பண்றதுக்காக வந்திருக்கா...

    வெரி நைஸ்

    "பாம்பே’ல பாம்பே டெக்ஸ்டைல்ஸ், குப்தாதான் என் டாடி! டாடியோட பிஸ்னெஸை டெவலப் பண்றதுல என்ன இருக்கு? லைப்ல நமக்குன்னு ஒரு ஆம்பிஷன் இருக்கணும் பாருங்க... அதனால்தான் நான் இந்தப் பிஸினெஸை ஆரம்பிக்கிறேன்.

    நாளைக்கே நீங்க வேலையில ஜாயிண்ட் பண்ணிடுங்க. ஜெயந்தி! நீங்க வந்த பிறகுதான் ‘ஹிண்டு’ பேப்பர்ல நம்ம அப்ளையன்ஸ் பத்தி குவாட்டர் பேஜ் விளம்பரம் குடுக்கணும்."

    த்தேங்க்யூ சார்

    ஜெயந்தியின் முகத்தில் நூறு வாட் சந்தோச வெளிச்சம் தெரிந்தது.

    இந்த வேலையின் மூலமாய் தன் வாழ்வில் எத்தனை பெரிய சிக்கல்களை எல்லாம் சந்திக்கப், போகிறோம் என்று அவளுக்குத் தெரியாது!

    2

    பிரதாப்பிற்கு உலகமே வெறுத்துப் போயிற்று. மண்டையைப் பிளக்கிற வெயிலில் ரேஷனுக்காக க்யூவில் நின்று கொண்டிருப்பதே ஒரு அவஸ்தைதான். ‘அவன். விதி அப்படி. தின்கிற சோற்றுக்கு இதைச் செய்தேயாக வேண்டும். எம்.எஸ்.ஸி. படித்தும் திறமை இருந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பெற்ற தாய், தந்தைகூட அவனை வெறுக்கிறார்கள். பாங்கில் வேலை பார்க்கும் அண்ணனும் அண்ணியும் அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

    அந்த வீட்டிற்கு அவன் ஒரு உபயோகமில்லாத பொருளாகவே ஆகிவிட்டான். இருந்தும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுயநலம்! வேலைக்காரனுக்கு பதில் இவனை’ வேலைக்காரனாக்கி விட்டார்கள். மார்க்கெட் போய் வருவதற்கும் விடிகாலையில் எழுந்து பால் வாங்கி வருவதற்கும் ரேஷனுக்குப் போய் வருவதற்கும் இவனைத்தான் அனுப்புகிறார்கள்.

    இத்தனை செய்தும் அப்பாவிற்குத் திருப்தி இல்லை. அவர் ‘தண்டச் சோறு... தடி மாடு...’ என்று திட்டாத நாளில்லை. ஏதாவது பதிலுக்குச் சொன்னால் போதும். ருத்ரதாண்டவம் ஆடிடுவார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவும் இதைக் கண்டு கொள்வதில்லை!

    பெற்ற தாய்! மாற்றாந்தாய் மாதிரி நடந்து கொள்வதைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாய்தான் பாசத்தின் பிறப்பிடம் என்றெல்லாம் சொல்வார்களே... தன் தாய் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? சம்பாதிக்கிற அண்ணனுக்கு வெண்ணெயும் இவனுக்கு சுண்ணாம்புமாய் நடந்து கொள்வது ஏன்?

    சுயநலம்! வேறென்ன?

    சம்பாதித்து உட்காரவைத்து சோறு போடாத மகனை எந்தத் தாயும் விரும்பமாட்டாள் என்றுதான் தோன்றுகிறது. தாய்ப்பாசம் போல் சுயநலம் உலகத்தில் வேறில்லை என்று எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. பணம்! பணம்தான் இந்த உலகத்தின் எல்லாவற்றுக்கும் ஆதார சுருதி! அது மட்டும் இருந்தால் போதும்! பிள்ளை மகா அயோக்கியனாய் இருந்தாலும் பெற்றவள் கொண்டாடுவாள் என்று தோன்றியது.

    பிரதிபலன் பாராமல் இந்த உலகத்தில் எதுவும் நடைபெறுவதில்லை.

    சம்பாதித்துப் போடுகிற கணவனுக்கு மனைவி இரவுகளில் அதற்குப் பிரதி பலன் செய்ய வேண்டும். பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கியதற்கு பிள்ளை பெற்றோர்க்குப் பிரதிபலன். செய்ய வேண்டும்.

    இங்கே எல்லோருக்கும் சுயநலம். அப்பா சுயநலம். அம்மா சுயநலம். அண்ணன் சுயநலம். அண்ணி சுயநலம். உலகமே சுயநலம்.

    இந்த சுயநலத்தில் குடும்ப அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை பாசமெல்லாம் சுயநலம்தான். சுயநலத்தில் எப்படி அன்பு இருக்க முடியும்? குடும்ப வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்க முடியும்.

    எல்லோரும் மேக்கப் போடாமலே நடிக்கிறார்கள். புன்னகை முகம் அணிந்து கொள்கிறார்கள். உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே விரும்பத்தக்கதாய் வேறுமுகம் காட்டுகிறார்கள்.

    தன் முகம் எது என்று பிரதாப்பிற்குப் புரியவில்லை.

    ஹாய் பிரதாப்! குரல் கேட்டது.

    பிரதாப் சிந்தனை கலைந்தான். திரும்பிப் பார்த்தான். யோகேஷ் நின்று கொண்டிருந்தான். யோகேஷ் பி. ஜி.யில் கிளாஸ்மேட்...

    நானும் ரொம்ப நேரமா பார்த்திட்டிருக்கேன்... க்யூவிலே நின்னுகிட்டே பகல் கனவு காண்றே! உங்க தெருல குடியிருக்கிற எத்திராஜ் குயின் சுசரிதாவா?

    அவளை நீ ட்ரை பண்றதா சொல்லியிருக்கியே! என் நெலமைக்கு காதல் ஒரு கேடா?

    அதுக்கென்னடா? - இந்தியாவே ஏழைதான்! வருஷத்துல வர்ற வருமானமெல்லாம் வட்டி கட்டியே தீர்த்தர்றாங்க! - அதுக்காக ராக்கெட் விடாம இருக்காங்களா? அது பாட்டுக்கு அது... இது பாட்டுக்கு இது! இண்டர்வியூல திரும்பத் திரும்ப நோகறது மனசில மெண்ட்டல் டார்ச்சரைத்தான் ஏற்படுத்தும். அது கிரிமினல் வேஸ்ட். நீ மந்திரிக்கு மச்சானா இருந்தாத்தான் உனக்கு வேலை! விட்ரு... நான் சொன்னதை ட்ரை பண்ணிப் பார்த்தியா?!

    "கிறிஸ்டீன் காலேஜ்ல படிக்கிற நந்திதாதானே? எனக்குத் தாங்காது யோகேஷ்! அவ மாருதி கார்ல நூறு மைல் வேகத்துக்குப் போறா! அந்த ஸ்பீடுக்கு நான் அம்பேல்! அவங்க வீட்டைப்

    Enjoying the preview?
    Page 1 of 1