Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முத்தமிட ஆசை!
முத்தமிட ஆசை!
முத்தமிட ஆசை!
Ebook122 pages43 minutes

முத்தமிட ஆசை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தோ ஒரு புதிய ஊருக்குப் பயணப்படுவதைப் போன்ற உணர்வு எழுந்தது ரம்யாவிற்கு. மக்களின் வேகம் அவளுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது.
 இத்தனைக்கும் இருபத்திரண்டு வருடமாய் இதே ரோடில் பயணப்பட்டவள்தான். பள்ளிக்கும் கல்லூரிக்கும் இதே பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறாள். இன்றென்னவோ, மனிதர்கள் உட்பட அனைத்துமே புதிதாய்த் தெரிகிறது. இதுவரை அம்மாவின் கையை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்திருந்தாள். இனி அப்படியில்லை. அவளுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவளே இரை தேடுமளவிற்கு அம்மா ஆளாக்கிவிட்டு விட்டாள்.
 "அம்மா!"
 அம்மாவை நினைக்கும் போதே மனசு நெகிழ்ந்தது. அன்பு சுரந்தது.
 பாவம் அம்மா! ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமண வாழ்க்கை என்பது இன்பத்தின் திறவுகோலாக இருக்கும். ஆனால் சுந்தரிக்கு மட்டும் அது விதி விலக்காகி விட்டிருந்தது.
 நடுத்தரக் குடும்பத்தில் நான்கு பெண்களில் இரண்டாவதாகப் பிறந்த சுந்தரியைத் துறைமுகத்தில் சாதாரண கிளார்க்காகப் பணிபுரிந்த பலராமனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்து கணவனுடன் வாழ்க்கை நடத்தியவளுக்கு வசந்த காலமே ஒரு மாதம் வரை மட்டும்தான். ஒரு மாதம் வரை கஷ்டப்பட்டு, குடிக்காமல் வாயைக் கட்டிப் போட்டிருந்த பலராமனால் அதன் பிறகு கட்டுப்படுத்த முடியவில்லை.
 வாங்குகிற சம்பளமெல்லாம் சாராயக் கடைக்கே போனது. பட்டினியோடும், சிகரெட், சாராய நாற்றத்தோடும் வாழ்க்கையை ஓட்டச் சிரமப்பட்டாள். இன்னும் இரு பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிக் கரையேற்ற வேண்டிய கட்டாயம். பிறந்த வீட்டிற்கும் போக முடியாமல் திண்டாடிய சுந்தரி கருவுற்றாள். ரம்யா வயிற்றில்ஏழு மாதச் சிசுவாக இருக்கும்போதே, கண்மண் தெரியாத போதையில் பதினெட்டுச் சக்கர லாரியில் கூழாகிப் போனான். வயிற்றுப் பிள்ளையோடு என்ன செய்வாள் சுந்தரி? திக்குத் தெரியாமல் திண்டாடினாள்.
 ஆனால், அந்த சூழ்நிலையிலும் தற்கொலை என்ற எண்ணமே வராமல் குழந்தைக்காகவாவது வாழ்ந்தாக வேண்டும் என்கிற வைராக்கியம்தான் பிறந்தது. பதினெட்டு வருடமாய்ப் பெற்றவர்கள் வளர்த்து, கணவன் என்று இடையில் வந்து, ஒப்பந்தம் முடித்து ஒரு வருடத்தில் போய்ச் சேர்ந்து விட்டவனுக்காக இருக்கிற காலத்தையும் சோர்ந்து போய்க் கழிக்க விரும்பவில்லை.
 பலராமன் அந்த லோன், இந்த லோன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. எஞ்சியிருந்த லொட்டு லொசுக்கு பணத்தையும் நிர்வாகம் அவ்வளவு எளிதில் கொடுத்துவிடவில்லை. சுந்தரிதான் பலராமனின் மனைவி என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படி, இப்படி என்று ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு நடையாய் நடக்க வைத்தார்கள்.
 அப்போது சமயத்தில் உதவியவர்தான் பாண்டியன். பலராமனோடு பணி புரிந்தவர். மேலிடத்தில் பேசி அவளுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ததோடு, ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் துணிகளை இஸ்திரி போடுகிற வேலையும் வாங்கிக் கொடுத்தார். நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். அதில் கிடைத்த வருமானம் அவளுக்குப் போதுமானதாய் இருந்தது. குழந்தை பிறந்தது முதல், ரம்யாவை ஸ்கூலில் சேர்க்க... இன்ஸ்டிட்யூட்டில் சேர்க்க என்று பாண்டியன்தான் உதவி செய்தார். பி.காம். கம்ப்யூட்டர் கோர்ஸ், எதற்கும் இருக்கட்டுமே என்று இன்ட்டீரியர் டெகரேஷன், ஷார்ட் ஹாண்ட்... எல்லாமே படித்துத் தேறினாள், ரம்யா.
 ஹிண்டுவில் விளம்பரம் பார்த்து அப்ளை செய்த கம்பெனியில் இன்டர்வியூ வந்ததும் மகிழ்ந்து போனாள். அவள் அட்டென்ட் செய்த முதல் இன்டர்வியூவிலேயே செலக்ட் செய்யப்படுவாள் என்று சத்தியமாய் அவளே எதிர்பார்க்கவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223214953
முத்தமிட ஆசை!

Read more from R.Manimala

Related to முத்தமிட ஆசை!

Related ebooks

Related categories

Reviews for முத்தமிட ஆசை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முத்தமிட ஆசை! - R.Manimala

    1

    பூமிப் பெண்ணின் கறுத்த முகத்தைத் துடைத்து பவுடர் போட்டுப் பளிச்சிட வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது, விடியத் தொடங்கிய சூரியன்.

    டேப்பில் சுப்ரபாதம் கசிந்து கொண்டிருக்க... சுந்தரி குளித்து முடித்து நெற்றியில் விபூதி பளிச்சிட... சாமி படங்களின் முன் கண் மூடிக் கரம் குவித்திருந்தாள். தீவிரமாய் எதையோ யாசித்துக் கொண்டிருந்தன உதடுகள்.

    மெல்லிய கொலுசுச் சப்தத்தில் கண் திறந்தாள் சுந்தரி.

    கூந்தலை அவிழ்த்தபடி, தோளில் தேங்காய்ப் பூ டவலைச் சுமந்து கொண்டு பாத்ரூமை நோக்கி அவசரமாய் நடந்து கொண்டிருந்தாள் ரம்யா.

    ரம்யா...

    என்னம்மா? திரும்பிப் பார்த்தாள்.

    என்ன இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்டே?

    இவ்வளவு நாளும் ஏழு மணி வரைக்கும் ஜாலியா தூங்கிட்டிருந்தேன். இனி அப்படி முடியுமா? இன்னைக்கு வேலையிலே ஜாய்ன் பண்ற நாள்... மறந்து போச்சாம்மா?

    மறக்கலேம்மா! ஆனா அதுக்காக அஞ்சரை மணிக்கே எந்திரிச்சிடணுமா? அரக்கப் பரக்க பஸ்ஸைப் பிடிச்சு ஓடுவே. இங்கேர்ந்து எட்டரை மணிக்குக் கிளம்பினாக்கூட போதுமே! உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக்காதே ரம்யா!

    என் செல்ல அம்மாவே! நீயே என்னைச் சோம்பேறியாக்கிடுவே போலிருக்கே! பாரேன்... பேசிக்கிட்டிருந்ததிலேயே அஞ்சு நிமிஷம் பஞ்சாய்ப் பறந்து போய்டுச்சு... நான் குளிச்சிட்டு வர்றேன்...

    நகர்ந்தவளைத் தடுத்தாள் அம்மா.

    வெந்நீர் வச்சு தர்றேன்...

    ம்ஹூம்... இனிமேல் வெந்நீருக்கு ஒரு பெரிய கும்பிடு. சூடான சென்னை சிட்டியிலே இருந்துக்கிட்டு வெந்நீர்ல குளிக்கறோம்னு தெரிஞ்சாலே வித்தியாசமா பார்ப்பாங்க. உன் அஞ்சு வயசுக் குழந்தை ரம்யாவுக்குப் பச்சைத் தண்ணியிலே குளிச்சா ஒண்ணும் ஆகாது. வழியை விடும்மா! கிண்டலாய்க் கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள் ரம்யா.

    எத்தனை வயசானாலும்... நீ எனக்குக் குழந்தைதானேடி! என்றவளின் பேச்சில் அளவுக்கதிகமான அன்பு வழிந்தது.

    ‘சுமன் மேன்ஷன்!’

    சுண்ணாம்பு வாசம் கண்டு பல வருடங்களாகிவிட்டிருந்த... மூன்று மாடி காரை பெயர்ந்த கட்டிடத்தில் அந்த போர்டு மட்டும் உச்சியில் பளீரென்றுதான் கம்பீரமாய் இருந்தது. அந்த கம்பீரத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமின்றி... சுற்றுப்புறச் சுவர் மொத்தமும் மழை நீர் பட்டுக் கோடு கோடாய் அழுக்கையும், பாசியையும் உள்வாங்கியிருக்க... அசிங்கமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

    ஜனசந்தடி மிகுந்த திருவல்லிகேணியில்தான் இருந்தது அந்த மேன்ஷன். பிரம்மசாரிகள் ஒட்டு மொத்தமாய்க் - குவிந்திருப்பது அந்த ஏரியாவில்தானே! தடுக்கி விழுமிடமெல்லாம் அவர்களுக்கென்றே கட்டப்பட்ட மேன்ஷன்கள். அவர்கள் நசுக்கிச் சாகடிக்கவும், கைதட்டி நடனமாடவும் வளர்க்கப்படும் மூட்டைப் பூச்சியும், கொசுக்களுமாய்... கொசுறாய்க் கரப்பான் பூச்சியும், பல்லிகளும் அவர்களுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க...

    அப்படிப்பட்ட மேன்ஷனின் ஒரு அறையில் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

    தலைமாட்டிலிருந்த அலாரம் அநியாயத்திற்கு அலற... போர்வையிலிருந்து ஒரு கை நீண்டு அதன் தலையில் தொப்பென்று ஆசீர்வதிக்க... கீழே சாய்ந்து அடங்கிப் போனது. மறுபடி உறக்கம் தொடர்ந்தது

    சற்று நேரத்தில் தொடையில் நறுக்கென்று மூட்டைப் பூச்சி முத்தமிட... பட்டென்று தொடையில் அடித்துச் சொறிந்தபடி போர்வையை விலக்கினான். நழுவிக் கிடந்த லுங்கியைச் சரி செய்தபடி கட்டிலை விட்டு இறங்கியவன்... கொட்டாவி விட்டபடி ஜன்னலருகே வந்தான்.

    பார்த்தசாரதி கோவில் கோபுரம் தெரிந்தது.

    ஹலோ... தலைவா! குட்மார்னிங்! என்று கைதூக்கி விஷ் பண்ணிவிட்டுக் கீழே தெருவை எட்டிப் பார்த்தான்.

    வரிசையாய்ப் பலதரப்பட்ட கடைகள், ஹோட்டல்கள், அதையொட்டி பஸ் ஸ்டாண்ட்...

    அந்நேரத்திற்கே யூனிஃபார்மில் பஸ்ஸிற்காகக் காத்திருந்த மாணவ மணிகள். தேவன்

    ‘மணியென்ன?’ சட்டென்று உறைக்க... படுத்துக் கிடந்த அலாரத்தை எடுத்துப் பார்த்தான்.

    எட்டு பத்து ஆகியிருந்தது.

    மை காட்! மணி எட்டுக்கு மேலாகி விட்டதே! ஆறு மணிக்கு எழுப்பி விடச் சொல்லி அலாரம் வைத்தால் எட்டு மணிக்குக் கூவித் தொலைக்கிறது சனியன். இதை வாங்கியதற்குப் பதில் ஒரு சேவலையாவது வாங்கி வளர்த்திருக்கலாம்! இன்று ஆபீஸிற்குச் சீக்கிரமாய் வரச் சொன்னானே... சசி! பதறியபடி அலாரத்தைக் கட்டில் மேல் தூக்கி எறிந்தவன், அதே வேகத்தில் பாத்ரூமை நோக்கி ஓடினான்.

    ஏதோ நினைத்துக் கொண்டவனாய்த் தாடையைத் தடவிப் பார்த்தான். சொரசொரவென்றிருந்தது.

    ‘இப்படியே போனால் நன்றாயிருக்காது. அதுவும் இன்று புதிதாய் ஒரு இளம் பெண் ஆபீஸில் ஜாய்ன் பண்ணப் போவதாக நேற்றுச் சசிதரன் சொன்னானே! ஒரு வாரத்திற்கு நான்தான் அவளுக்கு வேலையைப் பற்றி சொல்லித்தர வேண்டும். அவள் பக்கத்தில் மூன்று நாள் தாடியோடு அமர்ந்தால் நன்றாகவாயிருக்கும்! அவள் எப்படி இருப்பாள்? சிநேகாவின் முகச்சாயலோடு, சிம்ரனின் உடல் வளைவுகளோடு... அவன் மூளை செய்த கற்பனைக்குச் சிரித்தபடி...! அவசரம் அவசரமாய் க்ரீம் தடவி, சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி ஷேவ் பண்ண ஆரம்பித்தான்.

    சென்ற வாரம்தான் ஹெட் ஆபீஸில் இண்டர்வியூ நடந்தது. அங்கிருந்து செலக்ட் பண்ணி, இவர்கள் ஆபிஸிற்குப் போட்டிருக்கிறார்கள்.

    அந்த தேவதை எப்படியிருப்பாள்? சராசரி பிரம்மசாரிகளின் எதிர்பார்ப்பில் மில்லி மீட்டர் அளவு கூட குறையாமல்... கார்த்திக்கின் இதயம் எதிர்பார்ப்பில் வேகமாய் எம்பிக் குதித்தது.

    பத்தே நிமிடத்தில் குளித்து முடித்து, அயர்ன் பண்ணி வந்திருந்த பேண்ட் சட்டையை அணிந்து டக் இன் பண்ணிக் கொண்ட கார்த்திக் இருபத்தெட்டு வயது நிரம்பிய அழகிய வாலிபன்.

    சட்டையைச் சரி பண்ணிக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது.

    திறந்தான்.

    மேன்ஷனில் எடுபிடியாகப் பணிபுரியும் பதினேழு வயதுச் சிதம்பரம் நின்றிருந்தான்.

    வணக்கம் சார்! டிபன், காபி வேணுமா சார்?

    வேணாம்ப்பா... நான் வெளியிலே பார்த்துக்கறேன். அப்புறம் சிதம்பரம்... அதோ... மூணு செட் டிரஸ் இருக்கு... எடுத்துச் சலவைக்குப் போட்டுடு!

    சரி... என்றபடி அறையைப் பெருக்கினான். ஐந்தே நிமிடத்தில் வந்த வேலையை முடித்துக் கொண்டு துணிகளுடன் வெளியேறினான்.!

    சற்று நேரத்தில் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் வந்தான்.

    எதிர்ப்பட்ட லாட்ஜ் மேனேஜர் பரமசிவம் இவனைப் பார்த்ததும் விஷ் பண்ணினார்.

    குட் மார்னிங்...

    குட்மார்னிங்... உங்களைத்தான் பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். நல்லவேளை, எதிரேயே வந்திட்டீங்க...

    என்ன சார் விஷயம்?

    இந்த மாசத்தோட கணக்கை முடிச்சுக்கறேன். காலி பண்ணிடறேன்!

    என்ன சார் திடீர்னு?

    வாடகையை மட்டும் கூசாம ஏத்தி வாங்கிடறீங்க. மூட்டைப் பூச்சிகளெல்லாம் சமாதியாகி, சுவரெல்லாம் ரத்தம். பார்க்கவே குமட்டுது. எத்தனையோ சொல்லியாச்சு. வொய்ட் வாஷ் பண்ணுங்கன்னு. இதோ அதோன்னு சொல்றீங்களே தவிர, இதுவரை ஒண்ணும் செய்யற மாதிரி தெரியலே.

    "இல்லே

    Enjoying the preview?
    Page 1 of 1