Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மலரே என்னை நெருங்காதே!
மலரே என்னை நெருங்காதே!
மலரே என்னை நெருங்காதே!
Ebook98 pages35 minutes

மலரே என்னை நெருங்காதே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதை அறை என்று சொல்ல முடியாது. மொட்டை மாடியில் நான்கு பக்கம் பத்துக்கு பத்து அடி என்கிற அளவில் சுவர் ஏற்றி... சீமை ஓடு வேயப்பட்டிருந்தது. கால் உடைந்த மர நாற்காலிகள், தட்டு முட்டு சாமான்கள் என்று பழைய வேண்டாத பொருட்களை போட்டு வைக்கும் ஸ்டோர் ரூமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் எலிகளோடு... மோகனும் சேர்ந்து வாசம் செய்து கொண்டிருந்தான்.
 ஐந்து வருடம் முன்பு வரை. அவன் கீழே இப்போது பார்கவி தங்கியிருக்கும் அறையில்தான் தங்கியிருந்தான். கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வீட்டிற்கு வந்த அக்காவிற்காக அந்த அறையை ஒதுக்கிவிட்டு இவன் இந்த அறையில் வந்து இடம் பிடித்துக் கொண்டான். அன்றுமுதல் இங்குதான் படுக்கை. காலப்போக்கில் அந்த அறையில் உள்ள பொருட்களைப் போலவே அவனும் வேண்டாத பொருளாக வீட்டினரால் உதாசீனப்படுத்தப்பட்டான்.
 அந்த அறையில் மின் விசிறி இல்லை. இரண்டு ஜன்னல்களை விரிய திறந்திருந்ததில் சூரிய கதிர்கள் பரவலாய் சிதறிக் கிடந்தன. பாயில் குப்புறப்படுத்திருந்த மோகனை பாதிக்குமேல் வெயில் சுடுவதுக் கூட உறைக்காமல் படுத்திருந்தான். முதுகெல்லாம் வியர்த்து வெளிச்சத்தில் வைரமாய் ஜொலித்தன.
 அவனைப் பார்க்கவே மீனாவுக்கு பரிதாபமாய் இருந்தது. தன் தாவணியால் அவன் முதுகை ஒற்றியெடுத்தாள்.
 அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்து எழுந்தான்.
 "அண்ணா... காபி!"
 வாங்கிக் கொண்டான்.
 "டைம் என்ன மீனா?"ஆறரை!"
 "அடடா... டைமாய்டுச்சே! அஞ்சரைக்கே எந்திரிக்கணும்னு நினைச்சேன்."
 "ஏன்... அவசரமா வெளியே கிளம்பணுமா?"
 "ஆமா... நம்ம கிருஷ்ணன் இருக்கானில்லே... அவனுக்கு தெரிஞ்ச ஒரு கம்பெனியிலே வேகன்ட் இருக்காம். ரெண்டு வாரம் முன்பே ஆள் வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்களாம். நேத்து கிருஷ்ணனை எதேச்சையா பார்த்தப்பதான்... இந்த விஷயத்தை சொன்னான். காலையிலே எட்டு மணிக்கெல்லாம் அந்த ஆபீஸுக்கு வரச் சொன்னான்!''
 "இன்னும் நேரமிருக்கு... கவலைப்படாதே!"
 "இல்லே... மீனா... ஆபீஸ் திருவான்மியூர்ல இருக்கு...''
 "நாளைக்கு வேலை விஷயமா வெளியே போகணும்னு தெரியுதுல்லே! சீக்கிரமா வந்து படுக்கணும்னு தோணுதா? போண்ணா... நீயும் சரியில்லே! அப்பா சத்தம் போடறதுக்கு ஏத்த மாதிரிதானே நீயும் நடந்துக்கறே?" என்றாள் விசனமாக.
 "எனக்கும் புரியாமலில்லே மீனா! சீக்கிரம் வந்துட்டா... எல்லாரோடயும் சேர்ந்து மொத்தமா உட்கார்ந்து சாப்பிடணும். அப்ப மட்டும் அப்பா சும்மாவா இருப்பார்? தண்டமா சோறு திங்கறதை சொல்லிக் காட்டுவாரே! என்னம்மா செய்யட்டும்? நான் வேலைக்குப் போக மாட்டேன்னா சொல்றேன். கிடைக்கலியே...! தினமும் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டுதான் இருக்கிறேன்." மோகன் எங்கோ பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தான். அவன் கண்களில் நிரந்தர வேதனை தங்கியிருந்தது.
 பெருமூச்சு விட்டாள் மீனா.
 "சரி... காபிய குடிச்சிட்டு... குளிக்கப் போ! அக்கா குளிக்க ரெடியா இருக்கா! அவ குளிச்சிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும். நீ சீக்கிரம் வா...!" என்று கூறிவிட்டு, அவன் குடித்து முடிக்கும் வரை இருந்து டம்ளரை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223132318
மலரே என்னை நெருங்காதே!

Read more from R.Manimala

Related to மலரே என்னை நெருங்காதே!

Related ebooks

Related categories

Reviews for மலரே என்னை நெருங்காதே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மலரே என்னை நெருங்காதே! - R.Manimala

    1

    வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மாவுக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த மீனா குளித்து தலையில் டவலோடு சேர்த்து கொண்டைப் போட்டிருந்தாள்.

    மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. பால் கவரை உடைத்து... காய்ச்சிவிட்டு குக்கரில் பருப்பை வேகப் போட்டாள்.

    பாலை இறக்கி சர்க்கரை டிகாஷன் கலந்து தம்ளர்களில் ஊற்றிக் கொண்டாள்.

    பார்கவி எழுந்துவிட்டிருப்பது திறந்திருந்த கதவு உணர்த்தியது. பாத்ரூம் சென்று முகம் கழுவிக் கொண்டு கட்டில் மீது வந்தமர்ந்தாள்

    "கூப்பிடணும்னு நினைச்சேன். நீயே வந்துட்டே. பயங்கர தலைவலி மீனா...!’’ வலியால் கண்களை சுருக்கியபடி காபியை எடுத்துக் கொண்டாள்.

    நேத்தே ரொம்ப லேட்டாதான் வந்தே! வந்ததுமில்லாம சாப்பிட்டு முடிச்சதும் ஆபீஸ் ஃபைலை பார்த்துட்டு நடுராத்திரியிலே படுக்கப் போனே! பின்னே தலைய வலிக்காம என்ன செய்யும்?

    "என்ன பண்றது? ஏகப்பட்ட வேலை! இன்னொரு ஆபீஸ் ஸ்டாஃப் பிரசவத்துக்காக ஒரு வருஷம் மெடிக்கல் லீவு எடுத்துக்கிட்டா! அவளோட வேலையெல்லாம் சேர்த்து நான் தான் பார்க்க வேண்டியிருக்கு!’’

    கண்ணெல்லாம் தூங்காததால் சிவந்து கிடக்கு. பேசாம இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கக்கா!

    "இன்னைக்கு லீவு போட்டேன்னு வையி! நாளைக்கு முழுக்கத் தூங்காம வேலை செய்யணும்!’’ என்றாள் பார்கவி.

    நான் சொன்னா கேக்கவாப் போறே? சரி... நீ பாட்டுக்கு வழக்கம் போல பச்சைத் தண்ணியிலே குளிக்கப் போய்டாதே! உனக்கு தலைய வலிக்க ஆரம்பிச்சாலே காய்ச்சல் வந்துடும். வெந்நீர் போட்டுத் தர்றேன். குளி... என்ன?

    வேண்டாம்னா விடவாப் போறே? என்றாள் செல்லமாய் உதட்டைச் சுளித்து.

    ஸ்கூலுக்குப் போகணுமில்லே... சங்கீதாவை எழுப்பி விடு!

    நீ காபியை இப்படி வச்சிட்டுப் போ! நான் அவளை எழுப்பி கொடுத்திடறேன்.

    மீனா காபியை முக்காலி மேல் வைத்துவிட்டு அப்பாவின் அறைக்குப் போனாள்.

    பார்கவி... காபியை குடித்து முடித்து தம்ளரை வைத்துவிட்டு மகளைப் பார்த்தாள்.

    லேசாய் வாய்பிளந்து ஒரு கையை தலைக்கு முட்டுக்கொடுத்து ‘எஸ்’ போல் வளைத்து படுத்திருந்த சங்கீதாவிற்கு ஆறு வயது மகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். அவள் படுத்திருந்தவிதம் அப்படியே சைலேந்திரனைப் போலவே இருந்தது. முகச்சாயல் கூட அப்படியே சைலேந்திரன்தான்!

    சைலேந்திரன் - சங்கீதாவின் அப்பா. பார்கவியின் கணவன். இப்போது உயிரோடு இல்லை. நான்கு சட்டத்தின் நடுவே சந்தன மாலை, அணையா விளக்கு நடுவே நிழற்படமாய் இருப்பவன்.

    சைலேந்திரன் பார்கவியின் திருமண வாழ்க்கை இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது தான் கொடுமை. பைக்கில் மனைவியோடு சினிமாவுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி பைக்கை தூக்கி அடித்தது. ஒருபுறம் சைலேந்திரன், மறுபுறம் பார்கவி! சைலேந்திரன் விழுந்த ஸ்பாட்டிலேயே வளைவிலிருந்து திரும்பிய தீயணைப்பு வண்டி அவளை நசுக்கிவிட்டுதான் கடந்து சென்றது. பார்கவிக்கு கையில் மட்டும் தான் அடி! அதிர்ச்சியில் மயங்கி விட்டாள். சைலேந்திரன் அவளைவிட்டு ஒரேயடியாக பிரிந்தபோது சங்கீதா அவள் வயிற்றில் எட்டு மாதக் குழந்தை,

    கணவனின் நிரந்தரப் பிரிவு பார்கவியை வெகுவாய் துன்புறுத்திய தென்னவோ நிஜம். சங்கீதா பிறந்த பிறகே அவள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தெரிந்தது. குழந்தையின் உருவில் கணவனைக் கண்டு திருப்திபட்டுக் கொண்டாள்.

    இளம் வயது. அரசாங்க வேலை! எல்லாத் தகுதியிலிருந்தும் அவள் வாழ்க்கை முடிந்து போன அவலத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பார்கவியின் தந்தை மட்டுமல்ல, அவளின் மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டு மனிதர்கள் அனைவருமே அவளை மறு கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது தீர்மானமாய் மறுத்துவிட்டாள்.

    நான் இனி வாழப்போகும் ஒவ்வொரு கணமும் என் மகள் சங்கீதாவுக்காக மட்டுமேயன்றி வேறு யாருக்காகவும் இல்லை என்றாள்.

    புகுந்த வீட்டில் ஒவ்வொரு செங்கல்லும் ஆசைக் கணவனை நினைவுபடுத்தி இதயத்தைக் குத்தி கிழித்ததால் குழந்தையோடு பிறந்த வீட்டிற்கே நிரந்தரமாய் வந்து தங்கி விட்டாள்.

    குழந்தையை மீனா கவனித்துக் கொள்வாள். பார்கவி அலுவலகம் சென்று விடுவாள். அப்பா சோமசுந்தரத்துக்கு தன் இரண்டு பெண்களின் மீதிருந்த அன்பும், ஆசையும் மகன் மோகன் மீது இல்லை.

    பார்கவி மெல்ல மகளருகே குனிந்தாள்.

    சங்கீதா... சங்கீதா குட்டி... எந்திரிடா!

    .....

    "என் செல்லமில்லே... டயமாய்டுச்சி குட்டிமா... எந்திரி... ஸ்கூல் வேன் வந்திடும்!’’

    "எனக்குத் தூக்கம் தூக்கமா வருது மம்மி!’’ கண்களைத் திறக்காமலேயே புரண்டு படுத்தாள்.

    அவளை அப்படியே அள்ளி மடியில் கிடத்திக் கொண்டாள். "நீ நல்லப் பொண்ணுதானே? உன் க்ளாஸ் மிஸ்ஸுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் தானே? ஆனா, நீ இவ்வளவு லேட்டா எந்திரிக்கிறேன்னு தெரிஞ்சா... உன்னை கெட்டப் பொண்ணுன்னு சொல்லிடுவாங்களே...!’’

    "நான் நல்லப் பொண்ணு மம்மி!’’

    "அப்ப... சீக்கிரம் ஓடிப்போய் ப்ரஷ் பண்ணிட்டு வருவியாம். அப்புறம் காபி குடிப்பியாம்.’’

    "சரி... மம்மி...’’ என்று அவள் மடியைவிட்டு இறங்கி ஓடினாள்.

    சோமசுந்தரம் அப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தார். கையடக்க டிரான்ஸ்சிஸ்டர் எப்போதும் அவர் தலையணைக்கடியில் படுத்துக் கிடக்கும். பாட்டாகட்டும், சொற்பொழிவாகட்டும், செய்தியாகட்டும்... டிரான்சிஸ்டர் ஓய்வேயில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

    அப்பா... காபி! என்றபடி உள்ளே நுழைந்தாள் மீனா.

    Enjoying the preview?
    Page 1 of 1