Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனதோடு... பேச வா..!
மனதோடு... பேச வா..!
மனதோடு... பேச வா..!
Ebook87 pages30 minutes

மனதோடு... பேச வா..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விவேக் அவள் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. எளிமையான அலங்காரத்திலும் தேவதைப் போல் நின்றிருந்த அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.
 உடைத்த கோதுமை நிறம். ஆழத் துளைக்கும் நீள விழிகள். மையிடாமலேயே பட்டாம்பூச்சியாய் படப்படத்தது. எந்நேரமும் உதட்டோரம் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருந்த புன்னகை. பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்லும் முகம். கடைந்தெடுத்த சிற்பமாய் உடல்வாகு. அவள் தலையாட்டி பேசும்போது கூடவே நடனமாடிய ஜிமிக்கி... அந்த முகத்திற்கு மேலும் அழகு கூட்டியது. இருபது வயது பளிங்குச் சிலை வைசாலி.
 விவேக்கை பார்த்ததில் முகம் சலிப்பிற்கு மாறி இருந்தது.
 "கோவிலுக்கு கிளம்பிட்டிருக்கியா?" கையில் அர்ச்சனை கூடையை பார்த்து விட்டான்.
 "தெரியுதுல்லே! அப்புறமென்ன அபசகுணமா வெளியே போறியான்னு ஒரு கேள்வி வேற...?" என்றாள் வெடுக்கென்று.
 "வைசாலி... என்ன இது... கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிக்கிட்டு?" சாமுண்டீஸ்வரி மகளை அதட்டிவிட்டு, "வாப்பா... உள்ளே வாப்பா!" என்று வரவேற்றாள்.
 வைசாலியின் அப்பா குருமூர்த்தியின் அக்கா மகன்தான் விவேக். முறைப்பெண் என்கிற உரிமையுடன், வைசாலியை சுற்றி வரும் நல்ல இளைஞன். துறைமுகத்தில் காண்ட்ராக்டராக பணிபுரிபவன்.
 "விடுங்க அத்தை... இதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு? நம்ம வைசாலிதானே? பேசட்டுமே. புதுசாகவா பேசறா? நம்ம வீட்லே குழாய் புட்டு செஞ்சாங்க! வைசாலிக்கு ரொம்ப பிடிக்குமேன்னு அம்மா குடுத்து விட்டாங்க. இந்தாங்க!"
 நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் சாமுண்டீஸ்வரி"இந்தா வைசாலி... இதை வாங்கிக்கொண்டு போய் வச்சிட்டு... விவேக்கிற்கு 'நீ செய்த கேரட் அல்வாயை கொண்டு வந்து தா"
 "என்னது? வைசாலி அல்வா செய்தாளா? கண்லே. கண்ணீர் வர்ற அளவுக்கு, காரத்தை அள்ளிக் கொட்டியிருப்பாளே! அப்ப அவசியம் நான் சாப்பிட்டே ஆகணும். கொண்டு வா... கொண்டு வா!" கைகளை பரபரவென்று தேய்த்தபடி சேரில் அமர்ந்தான் விவேக்.
 "ரொம்ப அலையாதே! அந்த அல்வாவை நான் யாருக்கும் தரமாட்டேன்! அது என் மாமனுக்கு மட்டும் தான். உனக்கு வேணுமின்னா... நல்லா காரமா அல்வா கிண்டித் தர்றேன்... அதுவும் இப்பயில்லே! கோவிலுக்குப் போய்ட்டு வந்து! வரட்டுமா?" கிண்டலாய் கூறிவிட்டு நகர்ந்தாள்.
 அந்த வார்த்தை விவேக்கை காயப்படுத்தியது. அதை மறைக்க, அசட்டுத்தனமாய் அத்தையைப் பார்த்து சிரித்தான்.
 "அவ விபரம் தெரியாம பேசிட்டுப் போகிறா. மனசிலே எதையும் வச்சுக்காதே விவேக்!" தயவாய் கேட்டாள் சாமுண்டீஸ்வரி.
 "எனக்கு வைசாலியப் பத்தி தெரியாதா? நான் எதையும் தப்பா எடுத்துக்கமாட்டேன் போதுமா? நான் வர்றேன் அத்தை!"
 "இருப்பா... காபி கூட சாப்பிடாம கிளம்பறே!"
 "பரவாயில்லே அத்தை! இன்னொரு நாள் வந்து சாப்பாடே சாப்பிட்டுக்கறேன். நேரமாய்டுச்சு. வேலைக்குப் போகணும். வரட்டுமா?"
 "போய் வாப்பா! அம்மாவை கேட்டதா சொல்லிடு!"
 "சரி!"அர்ச்சகர் நீட்டிய தீபாராதனையை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவள்... அவர் தந்த பிரசாதத்தையும், அர்ச்சனைத் தட்டையும் வாங்கிக்கொண்டு... அம்மனை கை கூப்பி வணங்கிவிட்டு பிரகாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
 சாஸ்திரத்திற்கு ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு வெளியே வந்தாள்.
 "நேரமாகிவிட்டது. மாமா வெளியே எங்கேயும் சென்றுவிடுமுன்... அவர் வீட்டிற்குப் போயாக வேண்டும்!" யோசித்தபடி... பஸ் ஸ்டான்ட் நோக்கி நடந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223713265
மனதோடு... பேச வா..!

Read more from R.Manimala

Related to மனதோடு... பேச வா..!

Related ebooks

Reviews for மனதோடு... பேச வா..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனதோடு... பேச வா..! - R.Manimala

    1

    சரிவரத் துவட்டப்படாததால் ரோஜா இதழ்களில் பனித்துளிகள் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு வானில் எட்டிப் பார்க்க சூரியன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

    பறவைகள் சிறகுகளை படபடத்து சோம்பலை உதிர்த்தன. கூடவே மரக் கிளைகள் சலசலத்து... பழுத்தப்போன இலைகளை சிதறிவிட்டன.

    வாசலை அடைத்து கோலம் போட்டு முடித்த வைசாலி... ஒரு கணம் ஒதுங்கி நின்று தான் போட்ட கோலத்தை ரசித்தாள்.

    நெளி... நெளியாய்... எங்கே துவங்கி, எங்கே. முடிந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாத விடையாய் சிக்கலாய்... ஆனால் மிக அழகாய் இருந்தது.

    திருப்தியுற்றவளாய்... இடையில் உயர்த்தி செருகியிருந்த சேலையை இறக்கி விட்டுக்கொண்டு மாவு கிண்ணத்துடன் உள்ளேச் சென்ற வைசாலியின் நளினமான உருவம் இருள் பிரியாத இந்த அதிகாலை வேளையில் சில் அவுட்டாய் தெரிந்தது.

    குளித்து தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்து கொடியில் போட்டுவிட்டு... நீண்ட ஈரமான கூந்தலை, நுனியில் கொண்டை போட்டுக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

    பாத்திரம் உருளும் சப்தம் கேட்டு... கண்விழித்துக் கொண்டாள் சாமுண்டீஸ்வரி. எழுந்தமர்ந்தவள் அவிழ்ந்த கூந்தலை உயரத்தூக்கி கொண்டை போட்டபடி, வைசாலி என்றழைத்தாள்.

    என்னம்மா... அதுக்குள்ளே எந்திரிச்சிட்டியா? இன்னும் விடியலே... நீ தூங்கு! என்றாள் தலையை மட்டும் வெளியில் நீட்டி...

    என்னை விடு... நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே... அடுப்பங்கரையிலே? நான் ஏழு மணிக்குதானே காபி சாப்பிடுவேன்? என்றாள் ஆச்சர்யமாய்.

    உனக்கு ஏழுமணிக்குதான் காபி தருவேன். நீ தூங்கு!

    நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே வரலை!

    அடடா! தெரிஞ்சுக்கலேன்னா தலை வெடிச்சிடுமே உனக்கு! கேரட் அல்வா செய்யறேன்!

    கேரட் அல்வாவா? விடியற்காலையிலேயா? இன்னைக்கென்ன விசேஷம்? உன்னை யாராவது பொண்ணு பார்க்க வர்றாங்களா? எனக்கேத் தெரியாம?

    இந்த குசும்புதானே வேண்டாங்கறது? என்னை யாராவது பொண்ணு பார்க்க வந்துடுவாங்களா? வந்துட சொல்லேன் பார்ப்போம்! அவ்வளவுதான்... துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட வச்சிட மாட்டேனா? என் மாமனைத் தவிர... வேற எவனுக்கு அந்த உரிமையிருக்காம்?

    சாமுண்டீஸ்வரி பெருமூச்சு விட்டாள்.

    ‘ஹூம்... இந்தப் பெண் அதுபாட்டுக்கு ஏதேதோ கற்பனைய வளர்த்துக்கிட்டிருக்கு. என்ன நடக்கப் போகுதோ? எது நடக்கப்போகுதோ? கடவுளே... என் பொண்ணு மனசுப்படி நல்லதையே நடத்திவை!’

    என்னம்மா பேச்சையே காணோம்?

    சரி... இந்த வீட்டுக்குள்ளே நுழைய உன் மாமனைத் தவிர, வேற எவனுக்கும் தைரியமில்லே! அந்தப் பேச்சை விடுவோம். இந்த அல்வாவை யாருக்காக மெனக்கெட்டு செய்துக்கிட்டிருக்கே? நான் சர்க்கரை நோயாளி. சாப்பிடமாட்டேன். உனக்கும் இதெல்லாம் பிடிக்காது. பிறகு யாருக்காக செய்யறே?

    வேற யாருக்காக? என் மாமனுக்காகத்தான்!

    யாரு... மாதவனுக்கா?

    ஆனாலும் உனக்கு இவ்வளவு கிண்டல் ஆகாதம்மா! மாமன்னா வேற, யாரு? அவர்தானே?

    அடடா... ஒரு பேச்சுக்குகூட கேட்கக்கூடாதா? இப்ப சொல்லு... என்ன விசேஷத்துக்காக மாதவனுக்கு இந்த அல்வா?

    அவருக்கு இன்னைக்கு பிறந்த நாளாக்கும்!

    ஓஹோ...!

    கேரட் அல்வான்னா அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்!

    யார் சொன்னது?

    உங்கண்ணன்தான்!

    உனக்குதான் இந்த மாதிரி பலகாரமெல்லாம் ‘சமைக்கத் தெரியாதே! இப்ப எப்படி சமைக்கறே?

    மாமாவுக்கு பிடிக்கும்னு தெரிஞ்சப்பிறகும் சமைக்க கத்துக்காம இருப்பேனா? பவானியோட அம்மா தெரியுமில்லையா? கல்யாணம், விசேஷம்னு சமைக்கறதிலே எக்ஸ்பர்ட். அவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்! பார்த்துக்கிட்டேயிரு! எப்படி சூப்பரா செய்யப் போகிறேன் பார்! என் மாமா இதை சாப்பிட்டு அசந்துட மாட்டாரா? அல்வாவை கிளறிக்கொண்டு அம்மாவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

    ஆமாமா... உன் அசத்தலான அல்வாவை சாப்பிட்டு பேச வாய் வராம...

    போதும்... போதும்... அறுதப் பழசான ஜோக்கெல்லாம் சொல்லாதே... சிரிப்பே வரலே! என் அல்வா கோந்துமாதிரி இருக்காது. சும்மா... பனிக்கட்டி மாதிரி நழுவிக்கிட்டு உள்ளே ஓடாதா?

    நீயே எடுத்துக்கிட்டு போய் கொடுக்கப் போறியா?

    பின்னே?

    என் அண்ணன்கிட்டே கொடுத்தனுப்பேன்ம்மா... அவர் மாதவனுக்கு கொடுத்துடுவார்.

    ஏன்... இதோ இருக்கு வீடு! நடந்தா பத்தே நிமிஷத்துலே போய் சேர்ந்திடலாம். நானே போய் கொடுத்திடுவேன்!

    இல்லே வைசாலி! வீட்டிலே உங்க அத்தை இருப்பா... என்றாள் கவலையுடன்.

    இருக்கட்டுமேம்மா... அதனாலென்ன?

    அவ உன்னைப் பார்த்தாலே... எதையாவது பேசி மனசை கஷ்டப்படுத்துவா! எதுக்கு வீண்வம்பு?

    "அத்தை என்னைக்குதான் பாசமா பேசியிருக்காங்க... இப்ப புண் படுத்தறாங்கன்னு வேதனைப்படறதுக்கு? இன்னைக்கு என் மாமனுக்கு பிறந்தநாள். அவரை நான் பார்க்கணும். நான் என் கையால செய்த அல்வாவை சாப்பிடனும். அவ்வளவுதான்! வேற எதைப்பத்தியும் நான் கவலைப்படப்

    Enjoying the preview?
    Page 1 of 1