Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆசைக் கிளியே…
ஆசைக் கிளியே…
ஆசைக் கிளியே…
Ebook134 pages45 minutes

ஆசைக் கிளியே…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அசிங்கமா இருக்கு ஜனனி. ஒரு வாரமா வந்து தொல்லை கொடுக்கிறான்."
 "எப்படிம்மா! சம்பளப் பணம் கொடுத்து இருபது நாள்கூட ஆகலியே! அதுக்குள்ளே எப்படி ஆயிரம் ரூபாய்க்கு கடன் இருக்கும்?"
 "இது போனமாச பாக்கி!"
 "அதான் சம்பளப் பணத்தை அப்படியே கொடுத்திடுறேனே! அதிலே கொடுக்க வேண்டியதுதானே?"
 "இருந்தாதானே கொடுக்கிறதுக்கு? நீ தர்ற ஆறாயிரம் ரூபாய் இந்த விலைவாசிக்கு பதினைஞ்சு நாள் வர்றதே பெரிய விஷயம்."
 "உன் கை ஓட்டை! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? போதாதுக்கு அப்பாவோட பென்ஷன் பணம் நாலாயிரம் வருது. அதெல்லாம் என்ன பண்ணுறே?"
 "என்னடி... பெத்தவகிட்டேயே கணக்குக் கேட்கிறியா? எல்லாம் என் தலையெழுத்து! அவர் வாங்குற பென்ஷன், வீட்டு வாடகைக்கும், மருத்துவச் செலவுக்குமே சரியா இருக்கு. நான் என்ன பண்ணட்டும்?"
 "நான் மட்டும் என்னம்மா பண்ண முடியும்? சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்திடுறேன். உங்களுக்குத் தெரியாம எனக்கு வேறு ஏதாவது வருமானம் வருதா என்ன? சிக்கனமா செலவு செய்தா நான் சம்பாதிக்கிற பணத்தில் இதே மாதிரி இன்னொரு குடும்பத்தையும் காப்பாத்தலாம். என்கிட்டே இனி பணமில்லே. ஆளைவிடுங்க... நேரமாயிடுச்சு!" எரிச்சலுடன் தெருவில் இறங்கி வேகமாய் நடந்தாள், ஜனனி.
 முகத்தில் அறையப்பட்ட உணர்வில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள், பரிமளம்.
 அம்மாவின் அருகில் வந்தான், உதயன்.
 "எல்லாம் என் போதாத காலம்டா..." என்றபடி விசும்பினாள்.அம்மாவின் அழுகுரல் கேட்டு, உடை மாற்றிக்கொண்டிருந்த சுஜாதா, பதறி ஓடிவந்தாள்.
 "என்னம்மா... என்னாச்சு? ஏன் அழுறே?"
 அந்த விசாரிப்பு அவள் அழுகையை இன்னும் அதிகப்படுத்தியது.
 "என்னம்மா?"
 "எல்லாம் இந்த வீட்டு ஹிட்லரால வந்தது!" என்றான், உதயன்.
 "யாரு... அக்காவையா சொல்லுறே?"
 "வேற யாரு? ஆனாலும், வர வர ரொம்பதான் ஆடுறா. சம்பாதிக்கிற திமிர். இவளாலதான் சம்பாதிக்க முடியுமா? என்னால முடியாதா? எப்பவும் இதே மாதிரியா இருந்திடப் போறேன்?"
 "பெத்த தாய்கிட்டே எந்தப் பொண்ணாவது கணக்கு கேட்பாளா? மளிகைக் கடைக்காரனுக்கு ஆயிரம் ரூபாய் தரணும். கொடும்மான்னு கேட்டா... 'சம்பளத்தை என்னப் பண்ணினே, ஏதுப்பண்ணினே'ன்னு நிக்கவச்சு கேள்வி கேட்கிறா. என் பொறப்பென்ன, வளர்ப்பென்ன? பெத்தப் பொண்ணுகிட்டேயே என்னை கையேந்தி நிக்க வேண்டிய நிலமைக்கு தள்ளிட்டானே பாழாய்போன கடவுள்!"
 "அழாதேம்மா... அழுதா உனக்கு ஆகாது!" என்று கவலையுடன் தேற்றினாள், சுஜாதா.
 "எனக்கு அசிங்கமா இருக்குடி சுஜாதா! அள்ளி அள்ளிக் கொடுத்த பரம்பரையிலேருந்து வந்தவ நான்! கடன்காரியா நிக்கிறேனே! மளிகைக் கடைக்காரன் வருவானே... என்ன பதில் சொல்லுவேன்? பணம் கிடையாதுன்னு முகத்திலடிக்கிற மாதிரி சொல்லிட்டுப் போயிட்டாளே... அந்த ஆணவக்காரி!"
 "என்ன இங்கே சத்தம்?" உறங்கிக்கொண்டிருந்த பூபாலன், அறையிலிருந்து வெளியில் வந்தார்.
 அங்கு மனைவி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார்..
 "பரிமளம்... என்னாச்சு? ஏம்மா அழுறே?"
 "அம்மாவை அக்கா ரொம்ப மோசமா திட்டிட்டாளாம்ப்பா!"
 "ஏன்... ஏன் திட்டினா? கூப்பிடு அவளை... ஜனனீ!" கோபமாய்க் கத்தினார்இங்கே எங்கே இருக்கிறா? ஆபீசுக்கு போயிட்டா!"
 "அவ திட்டிட்டுப் போறவரைக்கும் நீங்களெல்லாம் பார்த்துக்கிட்டா இருந்தீங்க?"
 "அம்மாவையே எதிர்த்துப் பேசுறவ... நான் சொன்னா மட்டும் அடங்கிப் போயிடுவாளா?"
 மனைவியின் தோளை இதமாய் அழுத்தினார், பூபாலன்.
 "அழாதே பரிமளம். முதல்ல இதைக் குடி!" அருகில் இருந்த தேநீரை எடுத்துக் கொடுத்தார்.
 "வேணாங்க! என்னையே கணக்குக் கேட்கிறா. அவ சம்பாதிச்ச பணத்தில் அவளே போட்ட டீ... எனக்கு வேணாங்க!"
 பூபாலன் யோசித்தார்..
 "உன்னைக் கேட்டா... என்னைக் கேட்ட மாதிரிதானே? இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கிறவரைக்கும் நானும் இந்த வீட்டுலே பச்சைத் தண்ணீர்கூட குடிக்கப் போறதில்லே..."
 "எதுக்குங்க? உங்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கு... இது உடம்புக்கு ஆகாது!"
 "உனக்கும்தான் ஆகாது. அதெல்லாம் பார்த்தா நடக்காது. நான் சாப்பிடப் போறதில்லே!"
 அழுத்தமாய்ச் சொன்ன கணவனை பாசத்துடன் கண்ணீர் பொங்கப் பார்த்தாள்.
 "நீங்களே சாப்பிடாதப்ப... நான் மட்டும் ஏன் சாப்பிடணும்? எல்லாம் அந்தம்மாவே வந்து கொட்டிக்கட்டும்" பதிலுக்கு உதயனும் சூளுரைத்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223475033
ஆசைக் கிளியே…

Read more from R.Manimala

Related to ஆசைக் கிளியே…

Related ebooks

Reviews for ஆசைக் கிளியே…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆசைக் கிளியே… - R.Manimala

    1

    ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், ஜனனி.

    எங்கோ தொலைதூரத்தில் நாயின் குரைப்பொலி தேய்ந்து... மெல்ல செவியைத் தொட்டது... தொடர்ந்து ‘டொக்... டொக்... என்ற ஒலி இடைவிடாமல் அதிர்வாய்க் கேட்க...

    கொஞ்சம் கொஞ்சமாய் உறக்கத்திலிருந்து விடுபட்டாள், ஜனனி.

    படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், கண்களைத் திறக்காமலேயே கைகளை உயர்த்தி, சோம்பல் முறித்தாள்.

    எழுந்து நின்று கைகளையும், கால்களையும் உதறி சோம்பல் முழுவதையும் போக்கினாள். சுறுசுறுப்பு ஓடிவந்து ஒட்டிக் கொண்டது.

    ஜன்னல் திறந்தாள். பனியில் குளித்த மலர்களை கைநிறைய அள்ளி முகத்தில் வீசியது போலிருந்தது, சில்லென்று பாய்ந்துவந்த குளிர்த்தென்றல்.

    விடிய இன்னும் நேரமிருந்ததால் சொச்சமாய் இருள் சூழ்ந்திருந்தது.

    வானில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக்கொண்டிருக்க... அவர்களை வேவு பார்த்துக்கொண்டிருந்தது, நிலா.

    ‘டொக்... டொக்’ சத்தம் இப்போது தெளிவாய்க் கேட்டது. வேறொன்றுமில்லை... பக்கத்து வீட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் அடிக்கும் சத்தம்தான். எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு படுத்தும்பாடு... ஒரு மணி நேரம்தான் தண்ணீர் வரும். அதற்குள் பிடித்தாக வேண்டும்.

    ஜனனிக்குள் இப்போது கூடுதல் பரபரப்பு! அவசரமாய் குளியலறை சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.

    ஒரு மூலையில் கை கால்களை பரப்பி உறங்கிக்கொண்டிருந்தான், உதயன். இருபத்தி ஆறு வயது இளைஞன். வேலையை சல்லடைப் போட்டு தேடிக்கொண்டிருப்பவன்.

    நடு அறையில் தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக்கொண்டு, கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சுஜாதாவுக்கு பதினெட்டு வயது. பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவள்.

    இடதுபுற அறைக்கதவு மூடியிருந்தது. ஜனனியின் பெற்றோரின் அறை, அது.

    பரபரவென செயல்பட்டாள். ஓடுவேய்ந்த சின்ன வீடு. வீட்டின் சொந்தக்காரர் முன்புறம் தாராளமாக இடம்விட்டு சுவர் கட்டியிருந்தார். சுவர் ஓரமாய், குழாய் இருந்தது.

    ஜனனி, குடங்களை கொண்டுவந்து தண்ணீர் பிடித்து நிரப்பினாள்.

    வீட்டைச் சுற்றிலும் பூச்செடி, காய்கறி தோட்டம் அமைத்து உதிரும் சருகுகளை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை அழகிய நந்தவனமாக்கி இருந்தாள், ஜனனி.

    அவற்றுக்கும் நீர்வார்த்துவிட்டு மூச்சுவாங்க வீட்டுக்குள் நுழைந்தாள்.

    மணி ஐந்தரையாகிவிட்டது. உறக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் யாரும் விடுபடவில்லை.

    புது காய்கறிகளை எடுத்து நறுக்கினாள். குக்கரில் பருப்பை வேகப் போட்டாள். முன்தினம் அப்பா ‘வடைகறி சாப்பிட வேண்டும் போலிருக்கு’ என்று ஆசைப்பட்டது நினைவுக்குள் வர கடலைப்பருப்பை ஊறவைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

    பத்து நிமிடத்தில் புத்தம் புதுமலராய் மலர்ச்சியுடன் வெளிப்பட்டாள். பால்காரன் இரண்டு பால் பாக்கெட்டுகளை வழக்கம் போல ‘கேட்’டில் இருந்த துணிப்பையில் போட்டு விட்டுப் போயிருக்க, அதை எடுத்து வந்தாள்.

    உதயனிடம் லேசாய் அசைவு தெரிந்தது. அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் அவன் கண்களை கூசச் செய்தது.

    தலையை உயர்த்தி ஜனனியைப் பார்த்தான்.

    ஜனனி... பிளீஸ், விளக்கை அணைச்சிடேன்!

    பொழுது விடிஞ்சாச்சு... தூங்கினது போதும்!

    எந்திரிச்சி என்ன பண்ணப்போறேன்? அதோ... அவளை எழுப்பு... காலேஜூக்குப் போகணும். இப்பதான் பால் வந்ததா? காப்பிப் போட்டு முடிச்சதும் ஒரு குரல் கொடு எந்திரிச்சிடுறேன்.

    ‘எந்திரிச்சு என்ன பண்ணப்போறேன்?’ இருபத்தி ஆறு வயது நிரம்பாத எத்தனை சிறுவர்கள், உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தோடு அதிகாலையில் விழித்தெழுந்து செயல்படுகிறார்கள். அவர்களால் முடிகிற உழைப்பு... இளைஞனே... திடகாத்திரமான உன்னால் முடியாதா?’ ஜனனியின் நெஞ்சம் கசந்தது. வளர்ப்பில் ஏற்படும் பிசகல், இது!

    பெருமூச்சுடன் சுஜாதாவைத் தொட்டு உலுக்கினாள்.

    எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன். அந்த வெட்டி ஆபீசர் சொன்னார்னு நீயும் வந்து எழுப்புறியே! நடுராத்திரி வரை கண்விழிச்சு படிச்சதை நீயும்தானே பார்த்தே? ஏழு மணிக்கு முன்னாடி எந்திரிக்கிறதாயில்லே கண்களை திறக்காமலேயே பேசிவிட்டு நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள், சுஜாதா.

    உங்ககிட்டே வந்து நேரத்தை வீண் பண்ணுறேனே... என்னை சொல்லணும் முதல்ல ஜனனி அங்கிருந்து நகர்ந்தாள்.

    சமையலறைக்குள் நுழைந்தவள், வேகவேகமாய் வேலைகளைச் செய்தாள்.

    அப்பாவுக்கு எப்போதும் சுக்கு காப்பிதான் வேண்டும்.

    அம்மாவுக்கு சர்க்கரை போடாமல் டீ! மற்ற இருவருக்கும் காப்பி. தனக்கும் ஒரு தம்ளர் போட்டாள்... குடித்தாள்.

    பருப்பை இறக்கி, மதியத்துக்கு மணக்க மணக்க வெங்காய சாம்பார் செய்தாள். பீன்ஸ் பொரியல், மோர்க்குழம்பு, கேரட்டு சிறுபருப்பு கூட்டு, சோறு என எல்லாவற்றையும் முடித்து விட்டாள்.

    ஜனனி... அம்மாவின் குரல் கேட்டது.

    இதோ வந்திட்டேன்ம்மா!

    தூங்கி எழுந்து அறையைவிட்டு வெளியில் வந்தாள், பரிமளம்.

    செருக்கு மிச்சமிருந்தது.

    ஒரு காலத்தில் ஓகோவென்று வாழ்ந்தவள், பரிமளம். அவளின் தந்தைக்கு இரண்டு மனைவி. இரண்டாம்தாரத்து பிள்ளைகள் அவரின் இறப்பிற்குபின் சொத்தில் பங்கு கேட்டு வழக்குப் போட்டு, ஆண்டு கணக்கில் இழுத்துக்கொண்டிருந்தது. இருபக்க வக்கீல்களும் ஏகமாய்ச் சம்பாதிக்க... ஒருவழியாய் பத்து ஆண்டு கழித்து தீர்ப்பானது, அதுவும் இரண்டாம் தாரத்து பிள்ளைகளுக்கு சாதகமாக!

    வேறு வழியின்றி சொத்தை பிரித்துக் கொடுத்தபின், பரிமளத்துக்கு சொற்பமாகத்தான் பங்கு கிடைத்தது. வசதியாய் வாழ்ந்து பழகிப்போன அவளால் செலவுகளைக் குறைக்க முடியவில்லை. சொத்தை விற்றுக் கிடைத்த பணமும், இரண்டு வீடுகளும் ஐந்தே ஆண்டில் காணாமல்போயின.

    கணவர் பூபாலன், அரசாங்க ஊழியர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பவர். அவள் என்ன செய்தாலும் கடிந்து ஒருவார்த்தை சொல்ல அவருக்கு மனசு வராது. மூன்று ஆண்டுக்கு முன்தான் ஓய்வு பெற்றார். அவர் வாங்கிய சம்பளத்தில் அடக்கமாய், நிறைவாய் குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கும் ஓரளவு சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால், உடம்பு வளைத்து வேலை செய்யமுடியாத பரிமளம், சமைக்கவும் துவைக்கவும் இரண்டு வேலைக்காரிகளை போட்டிருந்தாள். வாய்க்கு சுவையாய் சாப்பிட்டுக் கரைத்தாள்.

    ஜனனி, படித்து முடித்த கையோடு வேலைக்கு சேர்ந்து ஆறு ஆண்டாகிறது. அவள் தலையெடுக்கவும் வேலைக்காரிகளை நிறுத்திவிட்டு, அவளே எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள்.

    உட்கார்ந்தே சாப்பிட்டதன் விளைவால் பரிமளத்துக்கு ஏகப்பட்ட நோய்கள் தேடிவந்துவிட்டன. பூபாலனுக்கும் ரத்த அழுத்தம் இருந்தது.

    இருவரும் இன்னும் எழவில்லை.

    நேரமாகுது... எந்திரிக்கிறாங்களா பாரும்மா! இந்தாம்மா டீ! சுஜா... மணி எட்டாகப் போகுது... காலேஜூக்குப் போகிற மாதிரி எண்ணம் இல்லையா?

    என்னது மணி எட்டா? உன்னை ஏழு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேனே! திடுக்கிட்டு எழுந்தாள்.

    சமையலைப் பார்ப்பேனா? உன்னைப் பார்ப்பேனா? இன்னும் அரை மணி நேரத்திலே நான் ஆபீசுக்கு கிளம்பியாகணும். அதுக்குள்ள காலைச் சாப்பாடு செஞ்சு முடிச்சாகணும்!

    கடவுளே... நான் எப்ப குளிச்சு, எப்ப கிளம்புறது?

    ஜனனியை உர்ரென்று பார்த்தபடி குளியலறையை நோக்கிச் சென்றாள், சுஜாதா.

    ஜனனி, அம்மா... எனக்கும் நேரமாயிடுச்சு... கொஞ்சம் வந்து உதயனுக்கு காப்பி எடுத்துட்டுப்போய்க் கொடுத்துடேன்! என்றாள், கெஞ்சலாக.

    சரி என்றாள்.

    அதன்பின் அவசர அவசரமாய் எல்லா வேலையையும் முடித்துவிட்டு, தனக்கும், சுஜாதாவுக்கும் மதிய சாப்பாட்டை எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1