Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிறுகதைகள் - I
சிறுகதைகள் - I
சிறுகதைகள் - I
Ebook278 pages1 hour

சிறுகதைகள் - I

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாணிக்கவாசகம் உடைந்துபோன வாஷ் பேசினுக்கு முன்பாய் நின்று விழுந்தவை போக எஞ்சி நின்ற தன் பத்தொன்பது பற்களையும் கடந்த பத்து நிமிஷ நேரமாய் டூத் பிரஷ்ஷால் தேய்த்துக் கொண்டிருந்தார். மனசுக்குள் சிறிதும் பெரிதுமாய் நிறையக் கவலைகள் வரிசையில் வந்து வலியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தன. அதில் பெரிய கவலை அவருடைய பெண்ணின் கல்யாணம்.
 இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணத் தரகர் சாமித்துரை வந்து விடுவார். மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் பிடித்து இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவர் தயாராக வேண்டும். நகை, புடவை, மண்டபம், சீர் என்ற குட்டிக் குட்டித் தலைப்புகளுக்குக் கீழே நிறையப் பேச வேண்டும், இருக்கிற கவலைகளிலேயே இதுதான் பெரிய கவலை. சின்னக் கவலை எது என்றுபார்க்கப் போனால் அண்ணாச்சி கடை மளிகை பாக்கி. பள்ளிக்கூடத்திற்கே போன் செய்து அண்ணாச்சி இரண்டு தடவை கேட்டுவிட்டார், பாதித் தொகையாவது கொடுத்தால்தான் அடுத்த மாசம் வரைக்கும் அண்ணாச்சி வாயைத் திறக்கமாட்டார். இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர்மெண்ட், கழுத்தில் ஒரு மாலையைப் போட்டு கையில் ஒரு தஞ்சாவூர்த் தட்டை நினைவுப் பரிசாய்க் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். அதற்குப் பிறகு அண்ணாச்சி மளிகைக் கடை கடன் தர ரொம்பவே யோசிப்பார். நிராகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
 "இன்னுமா பல்லைத் தேய்ச்சுட்டு நிக்கறீங்க...! தேய்க்கிற தேய்ப்புல இருக்கிற மிச்சப் பல்லும் கொட் டிடப் போகுது"பின்புறம் எழுந்த குரல் கேட்டுத் திரும்பினார். அவருடைய மனைவி விசாலாட்சி தன் பெரிய இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கடுகடுவென்று நின்றிருந்தாள். மொத்த முகத்திலும் சித்திரை வெய்யிலின் அனல்.இதோ ஆச்சு... விசாலம்! வாஷ் பேசின்ல தண்ணி வரலை போலிருக்கு... ஒரு சொம்பு தண்ணி கொண்டா. இப்படி ஜலதாரைப் பக்கம் நின்னுட்டு வாயைக் கொப்பளிச்சுடறேன்..."மாணிக்கவாசகம் சொல்ல விசாலாட்சி கோபத்தில் குரலை உயர்த்தினாள்.
 "வாஷ் பேசின்ல ஏன் தண்ணி வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா?"
 "தெரியலையே...?"
 "வீட்டு வாடகை மூணு மாசம் பாக்கி வெச்சதாலே வீட்டுக்காரர் தண்ணி விடறதுல தன்னோட கோபத்தைக்காட்டறார். ஒரு மாசப் பணத்தையாவது தரணும். ஏற்பாடு பண்ணுங்க..."
 "அரியர்ஸ் பணம் வந்ததும் கொடுத்து விடலாம்..."
 "அரியர்ஸ் பணம் எப்போ வரும்...?"
 "எப்படியும் ரெண்டு மாசத்துக்குள்ளே வந்துடும்..."
 "இதே பதிலைத்தான் ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க...?"
 "இல்லே விசாலம்... போன வாரம் சி.ஈ.ஓ. ஆபீஸுக்குப் போயிருந்தப்ப அங்கே இருக்கிற ஆபீஸர் ஒருத்தர் உறுதியாச் சொன்னார். அரியர்ஸ் தொகை வந்துட்டா மொதல்ல வாடகை பாக்கியையும் பேங்க்ல வாங்கியிருக்கிற நகைக்கடனுக்கான வட்டியையும் கட்டிடலாம்..."
 "ம்... என்னமோ சொல்றீங்க... நடக்கும்போதுதான் நிஜம்."
 விசாலாட்சி சொல்லிக் கொண்டே உள்ளே போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். வாயைக் கொப்பளித்து சுத்தமாக்கிக் கொண்டவர். 'இனி குளிக்கப் போகலாமா?' என்று யோசித்த விநாடி வாசற்படி ஏறி வரும் கல்யாணத் தரகர் சாமித்துரை வருவதைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
 "வாங்க சாமித்துரை... காலையில் எந்திரிச்சதிலிருந்து உங்க நினைப்புதான்..."
 சாமித்துரை சிரித்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223187929
சிறுகதைகள் - I

Read more from Rajeshkumar

Related to சிறுகதைகள் - I

Related ebooks

Reviews for சிறுகதைகள் - I

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிறுகதைகள் - I - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1. ஜன்னலோர சொர்க்கம்

    புனே ரயில்வே ஸ்டேஷன் வேபர் விளக்குகளின் வெளிச்ச மழை தூவும் ராத்திரி எட்டுமணி. இரண்டாவது பிளாட்பாரத்தில் ஏகப்பட்ட இரைச்சலோடு வந்து நின்ற மெட்ராஸ் ஜனதா எக்ஸ்பிரஸ் 'சி' கம்பார்ட்மெண்டில் கும்பலில் முண்டியடித்து ஏறியதும் - அப்படியொரு சொர்க்கம் எனக்காகக் காத்துக் கொண்டிருக்குமென்று நான் .0001 சதவீதம் கூட நினைக்கவில்லை.

    நேர் - ஜன்னலோர சீட்டில் சற்றுத் தளர்வாய் உட்கார்ந்தபடி, 'மொழு, மொழு' கையால் தன் சந்தன நிற மோவாயைத் தாங்கியிருந்தாள் அவள். டீன் ஏஜ் முடியப்போற கடைசி சில மாதங்களில், முகத்தில் இரண்டொரு இளஞ்சிவப்பு பருக்களோடு தெரிந்தாள், மேல் உதட்டுக்கு மேலே ஒரு கடுகு மச்சத்தை பிரம்மன் அவளுடைய அழகுக்கு போனஸாய்க் கொடுத்திருந்தான்.

    கொஞ்சமும் - விழிகளை இமைக்காமல் அவளைப் பார்த்தபடியே நடந்தேன்.

    அண்ணா! நம்ம சீட் நெம்பர் இங்க இருக்கு...எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த என் தங்கை இந்து என்னுடைய கையைப் பற்றி நிறுத்தினாள். பார்த்தேன். மனசுக்குள் சந்தோஷ அலையடித்தது. அந்த சொர்க்கத்திற்கு நேர் எதிர் சீட்டுகள்.

    உட்கார் இந்து, இந்த சீட்டு தான்...

    சூட்கேஸையும் தோல் பையையும் சீட்டுக்கடியில் தள்ளிவிட்டு உட்கார்ந்தேன். அவள் என்னையும் இந்துவையும் ஒரு விநாடி பார்த்து விட்டு மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

    அண்ணா! வண்டி எத்தனை மணிக்கு டிபார்ச்சர்?

    ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவான்...

    அண்ணா... ஏதாச்சும் ஒரு கூல்ட்ரிங் கிடைக்குமா பாரேன்... தாகம் தொண்டையை வறட்டிவிடுது. வண்டிதான் பத்து நிமிஷம் நிற்குமே...

    நான் எழுந்தேன்.

    லக்கேஜை பத்திரமா பார்த்துக்கோ. கூட்டம் 'திமு திமு'ன்னு ஏறுது...

    பிளாட்பாரத்தில் இறங்கி குளிர்பான ஸ்டாலை அவளைப் பார்த்துக் கொண்டே, அடைந்தேன். என்னமாய் இருக்கிறாள். நிச்சயமாய் இவள் தமிழ்ப் பெண் இல்லை. ஹிந்தி மாதிரித் தெரிகிறது. அந்த இனப் பெண்களுக்குத்தான் இப்படியொரு அசரவைக்கிற உடம்பு வாகு இருக்கும்! நெற்றி வகிட்டில் தெரிந்த செந்தூரம் அவள் ஒருவனுக்குச் சொந்தம் என்பதை எனக்கு உணர்த்த நான் அவனைத் தேடினேன். அவளுக்கு எதிரே இருந்தசீட் காலியாக இருந்தது. ஒருவேளை தனியாகப் போகிறாளா...?

    க்யா ஹோனா ஸாப்?குளிர்பான ஸ்டால் சிப்பந்தி என்னிடம் கேட்க, நான் தலையைத் திருப்பி ஏக் ஆரஞ்என்றேன்,

    அவன் - நீட்டிய பாட்டிலை வாங்கிக் கொண்டுபோய் கம்பார்ட்மெண்ட் ஜன்னல் வழியே இந்துவிடம் கொடுக்க முயற்சித்தேன்.

    இந்து... இந்தா...! சீக்கிரம் குடிச்சுட்டு பாட்டிலைக் குடு. பர்ஸ்ட் பெல் கொடுத்துட்டான்...நான் பாட்டிலை நீட்ட, இந்து உள்ளேயிருந்து எழுந்து வந்து வாங்குவதற்குள், ஜன்னலோரமாய் உட்கார்ந்திருந்த அவள் பாட்டிலை வாங்கி இந்துவிடம் கொடுத்தாள். நான்தாங்க்யூஎன்றேன். அவள் ஒரு புன்னகைகூட செய்யாமல், தலையை மட்டும் லேசாய் அசைத்து நான் சொன்ன நன்றியை ஏற்றுக் கொண்டாள்.

    நான் ஜன்னல் கம்பிகளைப் பற்றிக் கொண்டு இந்தியில் மெதுவாய் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.

    நீங்க எதுவரைக்கும்?அவள் சில விநாடிகள் என்னைப் பார்த்து விட்டு கடப்பாஎன்றாள்.

    தனியா போறீங்களா... இல்லை கூட யாராவது வர்றாங்களா?

    அவள் முதன் முறையாய் புன்னகைத்தாள்.

    தனியாகத்தான் போகிறேன்... என்னோட ஹஸ்பெண்ட் கடப்பாவில் வந்து ரிஸீவ் பண்ணிக்குவார்.

    இஸிட்?போலியாக ஆச்சரியப்பட்டுக் கொண்டே இந்து கொடுத்த காலியான பாட்டிலை வாங்கிக் கொண்டேன்.

    நீங்க கூல்ட்ரிங் சாப்பிடறீங்களா?

    நோ, தாங்க்ஸ்.பேசும்போது அவளுடைய உதடுகள் விரியும் விநாடிகளில் தெரிந்த அந்தப் பல் வரிசை மனசைச் சுண்டியது. அந்த ஈரம் ததும்பும் ரோஸ் உதடுகள், என்னுடைய நரம்பு செல்களுக்கு ஏகப்பட்ட கலோரி வெப்பத்தை ஊட்டியது.

    குளிர்பான ஸ்டாலுக்குப் போய் காலி பாட்டிலையும் பணத்தையும் கொடுத்து விட்டு சீட்டுக்குத் திரும்பினேன்.

    இந்து ஒரு வாரப் பத்திரிகையில் மூழ்கியிருக்க, அந்த ஜன்னலோர சொர்க்கம் பிளாட்பாரத்துப் பரபரப்பை ரசித்துக் கொண்டிருந்தது. என்னுடைய வருகையில் அவள் சட்டெனத் திரும்பினாள், இந்தியில் கேட்டாள்.

    இந்தப் பெண் உங்க தங்கையா?

    உட்கார்ந்தபடியே தலையை ஆட்டினேன்.

    உம்... காலேஜ் லீவில் ஒரு மாதம் புனே வந்து தங்கியிருந்தாள். திரும்பவும் அவளை மெட்ராஸ் கூட்டிட்டுப் போறேன். மெட்ராஸில் அப்பா, அம்மா இருக்காங்க.

    இங்கே... புனேயில் என்ன வேலையில் இருக்கீங்க நீங்க?

    ஒரு பாங்கில் கிளார்க்கா இருக்கேன். ராஸ்தாபேட்டையில் ரூம் எடுத்து தங்கியிருக்கேன்.

    அச்சா!என்றாள் அவள். அதற்குப் பிறகு, அவள் என்னிடம் பேசவில்லை.ஜன்னல் பக்கமாய் முகத்தைத் திருப்பியவள் இந்தப் பக்கம் திரும்பவேயில்லை. ஏதோ ஆழமாய் சிந்தனை வசப்பட்டவள் போல் வெளியே ஓடிவரும் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய உடம்பை மானசீகமாய் வருடிக் கொண்டிருந்தேன். இருட்டில் ஜனதா ஓடிக் கொண்டிருந்தது.

    தோன்ட் ஸ்டேஷனில் நின்றுவிட்டு வண்டி புறப்பட்டதும் அவள் படுத்துக் கொள்ள ஆயத்தமானாள். இரண்டு ஜன்னலோர சீட்டுக்களின் பலகைகளை ஒன்று சேர்த்து, அதன்மேல் ஒரு விரிப்பை விரித்து விட்டு ஏர்பில்லோவை ஊத ஆரம்பித்தாள்,

    அண்ணா... நாமும் படுத்துக் கொள்ளலாமா?இந்து வார இதழை 'டொப்'பென்று மூடிக் கீழே போட்டாள்.

    உம்...படு உனக்கு மிடில் பெர்த், எனக்கு அப்பர்...சொல்லிக் கொண்டே எழுந்து நடுப்பலகையை நிமிர்த்தி சங்கிலிகளால் கோர்த்து மிடில் பெர்த்தை இந்துவுக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டு, நான் பெட்ஷீட் சகிதம் அப்பர் பெர்த்துக்குப் போனேன். எனக்குத் தூக்கம் வர மறுத்தது. குப்புறப்படுத்தபடி தூங்குவது போல் பாவனை செய்து கொண்டே ஜன்னலோர பெர்த்தில், பார்வையைப் பதித்திருந்தேன். வெளிச்சத்தில் பார்த்ததை விட இருட்டில் அவளுடைய உடம்பு ரம்யமாய் இருந்தது. கருஞ்சிவப்பு க்யூடெக்ஸில் நனைக்கப்பட்டகால் நகங்கள் அந்தச் சிவந்த பாதங்களுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தன... ஜன்னலோரக் காற்றில் மேலே ஏறிய சேலை கணுக்காலின்பால் சதையைக் காட்டியது. உச்சகட்ட தூக்க நிமிஷங்களில் மார்பு சேலை நழுவிக் கொண்டிருக்க நான் பாய்லருக்குள் மாட்டிக் கொண்டவனைப்போல் தகிக்க ஆரம்பித்தேன்.

    சட்டென்று விழிப்பு தட்டியது. எழுந்தேன். மணிக் கட்டில் இருந்த கடிகாரம் மணி ஐந்தேகால் என்றது. ஜனதா இரைச்சலோடு தண்டவாளங்களை அரைத்துக் கொண்டிருக்க, இருட்டு இன்னமும் இருந்தது. கம்பார்ட்மெண்டில் நீலநிற வெளிச்சம் படர்ந்திருந்தது. ஜன்னலோர பெர்த்தை எட்டிப் பார்த்தேன். அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்திருந்தாள்.

    ராத்திரி முழுக்க அவளை ரசித்து வந்ததன் விளைவு, கண்களில் எரிச்சல் பீறிட்டது. வயிறு பாத்ரூம் போக வேண்டும் என்றது.

    பெர்த்தினின்றும் கீழே இறங்கினேன். இறங்குகையில் நடுபெர்த்தில் இந்து ஒரு சிவப்பு சால்வையால் போர்த்தப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். என்னுள் ஆச்சர்யம் கொப்பளித்தது.

    இந்து... இந்து...!நான் இந்துவை எழுப்பினேன்.

    ஒரு நிமிஷம்...என்றாள் அந்த ஜன்னலோரப் பெண். திரும்பினேன்.

    அவள் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு இந்தியில் கேட்டாள். அந்தப் போர்வை யாரோடுதுனு கேட்கத்தானே உங்க சிஸ்டரை எழுப்பப் போறீங்க?

    ஆமாம்

    அவங்களை எழுப்பாதீங்க. அந்தப் போர்வை என்னோடதுதான்!

    சால்வையை எடுத்துப் பார்த்தேன்.

    உங்களுடையதா?

    ஆமா, உங்க அனுமதி இல்லாமே போத்தினது தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி யாரோ ரெண்டுபேர்க்கு டி.டி. பெர்த் அலாட் பண்ணினார். அதோ அந்த அப்பர் பெர்த்லேயும், மிடில் பெர்த்லேயும் படுத்திருந்தாங்களே அவங்கதான். ரெண்டு பேருமே தூங்காம உங்க சிஸ்டர் படுத்திருந்ததையே பார்த்திட்டிருந்தாங்க. எதேச்சையாக உங்க சிஸ்டர் படுத்திருந்ததைப் பார்த்தேன். கட்டியிருந்த சேலையெல்லாம் நழுவி ஒரு பொண்ணு எந்த மாதிரியான கோலத்துல படுத்திருக்கக்கூடாதோ அந்தக் கோலத்துல் படுத்திட்டிருந்தாங்க. அவங்களை எழுப்பி சரியாகப் படுக்கச் சொன்னாலும் மறுபடியும் தூக்க கலக்கத்துல அலங்கோலமாகத்தான் படுப்பாங்க. அதான் வேற வழியில்லாமே என்னோட சால்வையை எடுத்துப் போர்த்திவிட்டேன். அந்த நிமிஷம் உங்க சிஸ்டரை என்னோட சிஸ்டரா நினைச்சுட்டேன்... தட்ஸ் ஆல்...

    சாக்கடையில் நெளியும் ஒரு புழுவைக் காட்டிலும் ஒரு அற்பமான ஜந்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் - அதோடு நான் என்னை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

    2. பாலைவன நதிகள்

    மாணிக்கவாசகம் உடைந்துபோன வாஷ் பேசினுக்கு முன்பாய் நின்று விழுந்தவை போக எஞ்சி நின்ற தன் பத்தொன்பது பற்களையும் கடந்த பத்து நிமிஷ நேரமாய் டூத் பிரஷ்ஷால் தேய்த்துக் கொண்டிருந்தார். மனசுக்குள் சிறிதும் பெரிதுமாய் நிறையக் கவலைகள் வரிசையில் வந்து வலியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தன. அதில் பெரிய கவலை அவருடைய பெண்ணின் கல்யாணம்.

    இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணத் தரகர் சாமித்துரை வந்து விடுவார். மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் பிடித்து இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவர் தயாராக வேண்டும். நகை, புடவை, மண்டபம், சீர் என்ற குட்டிக் குட்டித் தலைப்புகளுக்குக் கீழே நிறையப் பேச வேண்டும், இருக்கிற கவலைகளிலேயே இதுதான் பெரிய கவலை. சின்னக் கவலை எது என்றுபார்க்கப் போனால் அண்ணாச்சி கடை மளிகை பாக்கி. பள்ளிக்கூடத்திற்கே போன் செய்து அண்ணாச்சி இரண்டு தடவை கேட்டுவிட்டார், பாதித் தொகையாவது கொடுத்தால்தான் அடுத்த மாசம் வரைக்கும் அண்ணாச்சி வாயைத் திறக்கமாட்டார். இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர்மெண்ட், கழுத்தில் ஒரு மாலையைப் போட்டு கையில் ஒரு தஞ்சாவூர்த் தட்டை நினைவுப் பரிசாய்க் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். அதற்குப் பிறகு அண்ணாச்சி மளிகைக் கடை கடன் தர ரொம்பவே யோசிப்பார். நிராகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

    இன்னுமா பல்லைத் தேய்ச்சுட்டு நிக்கறீங்க...! தேய்க்கிற தேய்ப்புல இருக்கிற மிச்சப் பல்லும் கொட் டிடப் போகுதுபின்புறம் எழுந்த குரல் கேட்டுத் திரும்பினார். அவருடைய மனைவி விசாலாட்சி தன் பெரிய இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கடுகடுவென்று நின்றிருந்தாள். மொத்த முகத்திலும் சித்திரை

    Enjoying the preview?
    Page 1 of 1