Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என்னுடைய ஆகாயம்
என்னுடைய ஆகாயம்
என்னுடைய ஆகாயம்
Ebook80 pages22 minutes

என்னுடைய ஆகாயம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெய்து கொண்டிருந்த மழையில் அந்த மாநகர போக்குவரத்து பஸ் ஊட்டியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராத்திரி மணி எட்டரை.
 மழை அவ்வளவு பலமில்லை. இறங்கி நடந்தால் உடம்மை சொட்டு சொட்டாய் நனைக்கின்ற ரகம். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பின் சீட்டில் உள்ளோரத்தில் தலைக்கு ஸ்கார்ப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் பிரியதர்ஸினி.
 அழகு என்று சொல்ல வைத்தாள். சற்றே பூனைத்தனமான இங்கிலாந்து நிறக் கண்கள். அடர்த்தியான தலை கேசத்தை போனி டெய்லாக்கி ரப்பர் வளையத்தை மாட்டியிருந்தாள். காதுகளில் சின்ன சின்ன தங்க தொங்கட்டான்கள். கழுத்தில் மெல்லிய செயின். சல்வார் கம்மீஸ் தரித்து மார்பின் திரட்சிகளை மறைக்க - மேலுக்கு துப்பட்டாவை போட்டிருந்தாள்.
 'மலைகளின் அரசி உங்களை வரவேற்கிறாள்' பெயர்ப்பலகை, பார்வையில் பட்டதுமே தன் சிறிய சூட்கேஸை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள் பிரியதர்ஸினி... லேசாய் திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியே குளிர் உள்ளே நுழைந்து ஊசியாய் மாறி தைத்தது.
 அப்பா என்னை எதிர்பார்த்திருக்கமாட்டார். சித்தி மட்டும் திட்டுவாள். "ஏண்டி... உம் மனசுல எவ்வளவு, தைரியம் இருந்தா... இந்த ராத்திரி நேரத்துல புறப்பட்டு வருவே... பகல்ல புறப்பட்டு வந்தா என்னவாம்? ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துட்டா அப்புறம் மூஞ்சிகளை கொண்டுபோய் எங்கே வெச்சுக்கிறதாம்...?"
 சித்தியின் வழக்கமான டயலாக் இது.
 மழையில் ஈரமான ஊட்டியின் தெருக்கள் நகரசபையின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஆள் நடமாற்றம் சற்று தெரிந்தன.ஆவின் பால் நிலையத்துக்கு அருகே பஸ் நின்று இரண்டு பேர்களை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட்டை நோக்கி விரைந்தது.
 பிரியதர்ஸினி மணிக்கட்டில் நேரம் பார்த்தாள்.
 மணி 8.40
 'ஆட்டோ பிடித்து செர்ரி க்ராஸிங்கில் இருக்கும் வீடு போய் கேர, ஒன்பது மணியாகிவிடும்'
 வயிறு இப்போது பசித்தது. மேட்டுப்பாளையத்தில் சாப்பிட்ட வடை சாம்பார், காப்பி இப்போது வயிற்றுக்குள் காணாமல் போயிருந்தது.
 நீண்ட ஹார்ன் - சத்தத்தோடு பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழைந்து நின்றது.
 பிரியதர்ஸினி தன் சிறிய சூட்கேஸோடு இறங்கினாள். மழை சிலுசிலுவென்று முகத்தில் அடித்தது. பஸ்ஸ்டாண்ட் பள்ளங்களில் தேங்கியிருந்த நீரை ஜாக்கிரதையாய் கடந்து வெளியே வந்தவள் ஆச்சர்யப்பட்டாள்.
 ஆட்டோ ஸ்டாண்ட் வெறிச்சிட்டது.
 பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பழக்கடை வைத்திருந்த கிழவியிடம் கேட்டாள். "என்ன பாட்டி ஒரு ஆட்டோவைக் கூடக் காணோம்...?"
 "சினிமாக்காரங்க ஏதோ ஷூட்டிங் எடுக்கறாங்களாம். அதுல கலந்துக்க அம்பது அறுவது ஆட்டோ வேணும்னு மத்தியானம் வந்து கூட்டிகிட்டு போனாங்க... போன ஆட்டோ எதுவும் திரும்பி வரலை..."
 "போச்சுடா..."
 பழக்கடை கிழவி கேட்டாள்.
 "நீ எங்கே போகணும் கண்ணு..."
 "மெர்ரி கிராஸிங்"
 "மெள்ளமா நடந்து போயிடு... இங்க நின்னுட்டு இருக்கறதுல பிரயோஜனம் இல்லை..."

கிழவி சொல்றது சரிதான்.
 பிரியதர்ஸினி நடக்க ஆரம்பித்தாள்.
 பஸ் நிலையத்தை தாண்டி நூறு கெஜ தூரம் நடந்திருப்பாள். சிலுசிலுவென்று தூறிக் கொண்டிருந்த மழை பெரிய தூறல்களாக மாறி எதிர்பார்க்காத ஒரு விநாடியில் 'சோ'வென்று பிடித்துக் கொண்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223174110
என்னுடைய ஆகாயம்

Read more from Rajeshkumar

Related to என்னுடைய ஆகாயம்

Related ebooks

Related categories

Reviews for என்னுடைய ஆகாயம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என்னுடைய ஆகாயம் - Rajeshkumar

    1

    டி.வி. ஸ்டேஷன் வெளிச்ச வெள்ளத்தில் காமிரா ஓடிக் கொண்டிருக்க அந்தப் பெண் டாக்டர் உமாகல்யாணி யை நலவாழ்வு நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.

    டாக்டர்! - நீங்க மனநோய் மருத்துவ நிபுணரா எவ்வளவு - காலமாக பராக்டீஸ் பண்றீங்க...?

    தூய வெண்ணிற சேலையில் நாற்பத்தைந்து வயதுக்குரிய தோற்றத்தோடு ஒரு பாரிஜாத புஷ்பம் போல் இருந்த டாக்டர் உமாகல்யாணி - க்ளோசப் காமிரா, ஷாட்டில் புன்னகைத்தாள்.

    இந்தத் துறையில் ஏறக்குறைய இருபது வருஷமா - இருக்கேன்... என்னோட இருபத்தைஞ்சாவது வயசுல டாக்டர் படிப்பை முடிச்சேன்.

    நீங்க ஒரு ஸைக்கியாட்ரிஸ்டா வரணுங்கிறது உங்க விருப்பமா... இல்லை... உங்க பேரண்ட்ஸோட விருப்பமா...?

    என்னோட விருப்பம்தான்

    அதுக்கு ஏதாவது காரணம் உண்டா...?

    ஒரே ஒரு காரணம்தான் உண்டு...

    என்ன...?

    என்னைப் பெத்த தாய் ஒரு மனநோயாளியா இருந்ததுதான் காரணம். நான் பி.யூ.ஸி. படிச்சிட்டிருக்கும் போது... அப்பா ஒரு ஆக்ஸிடெண்டில் இறந்துட்டாங்க. அந்த அதிர்ச்சியில் அம்மா மனநோயாளியா மாறிட்டாங்க. அம்மாவை எந்த டாக்டராலேயும் குணப்படுத்த முடியலை. ஒரு வருஷ காலம் ஜன்னலுக்கு வெளியே - வெறிச்சு பார்த்துக்கிட்டேயிருந்து இறந்து போயிட்டாங்க. அம்மா மாதிரி மனநோயாலே பாதிக்கப்பட்டவங்க அதிலிருந்து மீளணும்ங்கிறதுக்காகத்தான் இந்த படிப்பை எடுத்துக்கிட்டேன். என்னால முடிஞ்ச அளவுக்கு புதிய புதிய யுக்திகள் மூலமாக மன நோயாலே பாதிக்கப்பட்டவங்களை குணப்படுத்தறேன்.

    பெண்களுக்கு ஏற்படற மன நோய்களைப் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா டாக்டர்...?

    எல்லா மனநோய்களுக்கும் மூல காரணம் மென்ட்டல் பிரஷ்ட்ரேஷன்தான். கணவனோட கொடுமை, எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காமே போனதலே ஏற்படற விரக்தி, தாம்பத்ய பிரச்சனைகள் இப்படி எந்தக் காரணத்துக்காகவும் ஒரு பெண் மனதளவில் பாதிக்கப்படலாம்.

    மனநோயாளிகளை நீங்க எப்படி அணுகறீங்க டாக்டர்?

    பிரச்சனை என்னாங்கிறதை புரிஞ்சுகிட்டு பேஷண்ட்டை நான் தொடறேன்... போனவாரம் ஒரு கேஸ். கல்யாணம் தள்ளி தள்ளி போனதாலே விரக்தி அடைஞ்ச ஒரு பெண் மனநோயாளியா மாறியிருந்தா. அவளை என்கிட்ட கொண்டு வந்தாங்க...! ‘உனக்கு எப்படியும் கல்யாணம் ஆயிடும்’ங்கிற எண்ணத்தை அவ மனசுல உருவாக்கறதுதான் நான் மேற்கொள்ள போகிற, ட்ரீட்மெண்டோட நோக்கம்.

    உங்க ட்ரீட்மெண்ட்டோட சக்சஸ் ரேட்?

    அறுபது சதவீதம்

    இப்ப உங்க ஹாஸ்பிடல்ல மொத்தம் எத்தனை பேர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறாங்க...?

    அறுபத்தெட்டு பேர்...

    எல்லாருமே பெண்களா...?!

    ஆமா...

    ஆண்களுக்கு ட்ரீட்மெண்ட் தரமாட்டீங்களா?

    அதுக்குத்தான் ஆண் சைக்யாட்ரிஸ்ட் இருக்காங்களே?

    சிசிக்சைக்கான கட்டணம்?

    வசதி படைச்சவங்ககிட்ட மட்டும் கட்டணம் வாங்கிக்கறேன். வசதியில்லாத ஏழைகளுக்கு என்கிட்டே ப்ரீ ட்ரீட்மெண்ட்தான்.

    உங்க சிசிச்சை முறைகளைப் பத்தி தெளிவா சொல்ல முடியுமா?

    உமாகல்யாணி தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்த விநாடி, ஷுட்டிங் தளத்தின் கதவைத் திறந்து கொண்டு டி.வி... ஸ்டேஷனை சேர்ந்த அந்த ஆள் உள்ளே நுழைந்தான். காமிராவை இயக்கிக் கொண்டிருந்த நபரிடம் சொன்னான்.

    டாக்டரம்மாவுக்கு அவங்க ஹாஸ்பிடலில் இருந்து அவசரமா போன் வந்திருக்கு... நர்ஸ் லைன்ல இருக்காங்க

    காமிராமேன் திரும்பி கிசுகிசுத்தார்.

    பேட்டி பத்து நிமிஷத்தில் முடிஞ்சிரும்... அப்புறமா போன் வந்த விஷயத்தை சொல்லலாம்...

    ரொம்ப அவசரமாம்... ஒரு பேஷண்ட் மண்ணெண்ணை டின்னோடு இன்னொரு பேஷண்ட் ரூமுக்கு போய் - கதவைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு அந்த பேஷண்ட் தலையில் என்ணெயை ஊற்றி... ஹாஸ்பிடலே ஒரே களேபரமா இருக்காம்... டாக்டரம்மா வந்தாத்தான் அந்த பேஷண்ட் கட்டுப்படுவாளாம்

    காமிராவின் இயக்கம் நின்றது.

    லைட்ஸ் ஆஃப்

    விளக்குகள் அணைந்தது.

    உமாகல்யாணி திகைப்பாய்

    Enjoying the preview?
    Page 1 of 1