Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துரத்தும் துரோகங்கள்
துரத்தும் துரோகங்கள்
துரத்தும் துரோகங்கள்
Ebook106 pages32 minutes

துரத்தும் துரோகங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரெயில்வே ஸ்டேஷன்.
 அந்த பாஸஞ்சர் ட்ரெயின் அப்போதுதான் வந்து நின்றிருந்தது. ஜனங்கள் இறங்கி எக்ஸிட் கேட்டை நோக்கி நடந்துக் கொண்டிருக்க - பிளாட்ஃபாரத்தில் ஒருவித சுறுசுறுப்பு தொற்றியிருந்தது. டீ, காஃபி வியாபாரக் குரல்கள் அதிக வால்யூமில் இரைய ஆரம்பித்திருந்தது.
 பக்கத்து பிளாட்ஃபாரத்தில் டெல்லி போகும் எக்ஸ்பிரஸ் ஒன்று நின்றிருக்க ரோலர் சூட்கேஸ்களை உருட்டிக் கொண்டு - ஒரு ஹிப்பி தம்பதிகள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
 ப்ளாட்ஃபாரத்தில் வழிந்து கொண்டிருந்த கும்பலை விலக்கிக் கொண்டு - கெளசிக் வேகவேகமாய் - நடை போட்டுக் கொண்டிருந்தான். இருபத்தியாறு வயது. கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் உயரம். தோளில் ஜோல்னாப்பை. ஒரு சின்ன டேப்ரிக்கார்டர். கூடவே ஒரு குட்டி மைக்.
 'ஜி' கம்பார்ட்மென்ட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு நாற்பது வயதுக்காரரை அணுகினான்.
 "ஸார்... எக்ஸ்க்யூஸ்மி..."
 ப்ரீஃப்கேஸோடு போன அவர் திரும்பிப் பார்த்தார்.
 "எஸ்..."
 "நான் மேகம் பத்திரிகை ரிப்போர்ட்டர்... ரயில் பிரயாணத்தில் இருக்கிற செளகரியம் அசௌகரியங்களைப் பத்தி ஒரு பேட்டி - எடுத்திட்டிருக்கேன். நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா...?"
 அவர் தன் சொற்பமான தலைமுடியைக் கீறிக்கொண்டே புன்னகைத்தார்.
 "செளகர்யங்கள் ட்ரெயின்ல நிறைய இருக்கு... அசெளகரியம்னு எடுத்துக்கிட்டா... பெரும்பாலான ட்ரெயின்கள் கரெக்ட் டயத்துக்கு வந்து போகாம இருக்கறது பெரிய அசெளகரியம்..."தாங்க்யூ ஸார்..."
 கெளசிக் நகர்ந்தான்.
 எதிரே வந்த ஒரு மார்வாடி –
 அப்புறம் கூடைக்காரி - ஒரு கல்லூரிப் பெண் - ஒரு வயசான கிழஜோடி - எல்லோரையும் பேட்டி! எடுத்துக் கொண்டு அந்த கம்பார்ட்மென்ட்... வந்ததும் அப்படியே நின்றான்.
 கம்பார்ட்மென்ட்டின் ஜன்னலோரமாய் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் நீலப்புடவையை உடம்புக்குக் கொடுத்து அதே நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். நெற்றியின் மையம் வெறிச்சிட்டு போயிருக்க - கழுத்தில் காதில் இமிடேஷன் சமாச்சாரங்கள் தெரிந்தது. அவளுடைய பிரகாசமான நிறம் முகத்தில் தெரிந்த சோகத்தின் காரணமாய் அடிபட்டு போயிருந்தது.
 இவளிடம் பேட்டி எடுக்கலாமா...? யோசிப்போடு கம்பார்ட்மென்ட்டுக்குள் ஏறினான். அவளை நோக்கி நடக்க - நடக்க - சட்டென ஒரு திகைப்பு அவனை அள்ளியது.
 அவளுக்கு இரண்டு பக்கமும் அந்த இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் வந்து உட்கார்ந்தார்கள்.
 "இவள்... கைதியா...?"
 அவர்களை குழப்பமாய் நெருங்கி நின்றான் கெளசிக்.
 "எக்ஸ்க்யூஸ்மி..."
 ஒரு கான்ஸ்டபிள் தலை உயர்த்திப் பார்த்தாள்.
 "என்ன வேணும்...?"
 "இவங்களை நான் பேட்டி எடுக்கலாமா...?"
 "நீங்க... யாரு...?"
 "மேகம் பத்திரிக்கை ந்யூஸ் ரிப்போர்ட்டர்...! ட்ரெயின்ல வர்ற பாஸஞ்சர்ஸ்கிட்டே ஒரு பேட்டி எடுத்து வர்ற பொங்கல் மலர்ல போடப் போறோம்..."இவ ஒரு கைதி. இவகிட்டே என்ன பேட்டி எடுக்கப் போறீங்க?"
 "இவங்க என்ன தப்பு பண்ணினாங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?"
 "தாராளமா தெரிஞ்சுக்கலாம்... இவ ரெண்டு பேரை கொலை பண்ணியிருக்கா...!"
 கௌசிக் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.
 அவள் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224651511
துரத்தும் துரோகங்கள்

Read more from Rajeshkumar

Related to துரத்தும் துரோகங்கள்

Related ebooks

Reviews for துரத்தும் துரோகங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துரத்தும் துரோகங்கள் - Rajeshkumar

    1

    விஸ்வநாதன் தன் வீட்டின், காம்பௌண்ட் கதவைத் திறந்து உள்ள பிரவேசித்து வாசற்படிகளேறி கதவைத் தட்டினார்.

    பங்கஜம்... பங்கஜம்...

    ஐம்பத்தைந்து வயது விஸ்வநாதன் கவர்ன்மெண்ட் பாங்க் ஒன்றில் செய்த முப்பது வருஷ சர்வீஸை போன மாசம் முடித்துக் கொண்டு - பிரிவபசார பார்ட்டியில் ஐந்து நிமிஷங்கள் பேசி - கழுத்தில் மாலையையும் - கையில் ப்ரசன்ட்டேஷன் பாக்கெட்டையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டவர்.

    நிமிஷ அவகாசத்துக்குப் பின் - கதவு திறக்கப்பட. - உள்ளே நாற்பது வயதான பங்கஜவல்லி தெரிந்தாள். விஸ்வநாதனின் மனைவி. திருமணமான புதிதில் ‘மனைவியின் நச்சரிப்பால் எடுக்க வேண்டிய புடவைகள், மனைவியின் நச்சரிப்பால் போக வேண்டிய சினிமாக்கள் ஆகியவற்றுக்கு ஒரு தனி பட்ஜெட் போட்டு தயாராக முன்னேற்பாடாக இருந்த விஸ்வநாதனுக்கு புடவை மோகம் இல்லாத - சினிமா ஆசையில்லாத பங்கஜவல்லி பெரிய ஆச்சர்யமாகிப் போனாள்.’

    வெய்யிலில் வந்த அசதிக்கு ‘உஸ்ஸ்’ஸென்று மூச்சு விட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தவர் ஈஸிச்சேரில் உட்கார்ந்து - வேஷ்டி நுனியால் விசிறி விட்டுக் கொண்டார்.

    பங்கஜவல்லி சமையலறைக்குப் போய் - ஒரு டம்ளர் தண்ணீரோடு திரும்பி வந்தாள்.

    இந்தாங்க...

    விஸ்வநாதன் அவள் கையிலிருந்து டம்ளரை வாங்கி நீரை வயிற்றுக்கு வார்த்துவிட்டு - காலி டம்ளரை ‘டொக்’கென்று வைத்தார்.

    போஸ்ட் ஆஃபிஸ் போனீங்களா...?

    இல்லை...

    அப்புறம் இத்தனை நேரம் எங்கே போனீங்க...?

    என் ஃப்ரெண்ட் கருணாகரன் இல்லே... அவன் வீட்டுக்குத் தான் போயிருந்தேன்... ஏதேதோ பேசிட்டிருந்தோம்... நேரமாயிடுச்சு...

    ஜெயராஜ்கிட்டேயிருந்து லெட்டர் எப்படா வரும்னு நான் அலமந்திட்டிருக்கேன்... நீங்க என்னடான்னா அரட்டையடிச்சுட்டு வர்றீங்க...

    நான் மட்டும் எதிர்பார்க்கலையா என்ன...? இப்பதான் அவன் பம்பாய் போயிருக்கான்... அதுக்குள்ளே லெட்டர் வருமா...?

    என்ன இப்பதான்ங்கறீங்க... அவன் பம்பாய்க்குப் போய் முழுசா பத்து நாள் ஆச்சு... அவன் போன காரியம் என்ன ஆச்சு... வேலை கிடைச்சதா இல்லையா... ஒரு தகவலுமே தெரியவில்லையே...?

    ஏன் இப்படி படபடக்கறே...? லெட்டர் வந்திருந்தா இன்னும் பத்து நிமிஷத்துல போஸ்ட்மேனே கொண்டு வந்து போட்டுட்டுப் போவார்...

    ஜெயராஜை முதல் முதலாக வீட்டுக்குள் கொண்டு வந்த சம்பவங்கள் ஞாபகத்தில் நிழல் அடித்தது.

    பங்கஜவல்லி - விஸ்வநாதனுக்கு திருமணமான ஐந்தாவது வருஷம்.

    என்னங்க நான் ஒண்ணு சொன்னா கோபிச்சுக்குவீங்களா...?

    உம்மேல நான் என்னிக்கு கோபப்பட்டிருக்கேன்...? நீ கேட்க வேண்டியதை தாராளமா என்கிட்டே கேக்கலாம்...

    நமக்கு இனிமே குழந்தை பிறக்கும்ங்கிற நம்பிக்கை இல்லீங்க... பேசாமே அநாதை விடுதிக்குப் போய் ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமா...?

    அநாதை விடுதியிலிருந்தா...?

    ஆமாங்க... ப்ராப்தம் வரும் வரும்னு எதிர்பார்த்துட்டிருந்தா... இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அது வராது...

    மூன்று நாட்கள் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தார்கள். கடைசியில் அந்த தீர்மானத்துக்கு வந்தார்கள். ஒரு அநாதை விடுதியிலிருந்து ஜெயராஜ் எட்டுமாத குழந்தையாக அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தான். ஜெயராஜ் வீட்டுக்குள் வந்த நேரம் அடுத்தடுத்த இரண்டிரண்டு வருஷங்களில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள் பங்கஜம்.

    போஸ்ட்...

    குரல் விஸ்வநாதனின் யோசிப்புகளைக் கலைக்க - திரும்பினார். முன்னறையிலிருந்து - வழுக்கிக் கொண்டு வந்தது அந்த போஸ்ட் கவர்.

    ஓடிப்போய்க் கவரை எடுத்தாள் பங்கஜம்.

    முன்னாலும் பின்னாலும் திரும்பிப் பார்த்து - ஃப்ரம் அட்ரஸைப் பார்த்ததும் முகம் பூராவும் வெளிச்சமானாள்.

    ஜெயராஜோட லெட்டர்தாங்க...

    சந்தோஷம் விஸ்வநாதனின் முகத்துக்கும் தாவியது.

    இங்கே கொண்டா...

    லெட்டரை வாங்கிப் பிரித்தார் விஸ்வநாதன்.

    அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

    வணக்கத்துடன் ஜெயராஜ் எழுதிக் கொள்வது.

    நான் இண்டர்வ்யூக்கு போன அந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து. சம்பளம் மூவாயிரம் ரூபாய். தற்சமயம் ஒரு ரூம் எடுத்து தங்கி இருக்கிறேன். விரைவில் கம்பெனி குவார்ட்டர்ஸ் கிடைத்துவிடும். மற்றபடி இங்கே வேறு எந்த பிரச்சனையுமில்லை. ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது.

    அன்புடன், ஜெயராஜ்

    லெட்டரைப் படித்து முடித்த போது இரண்டு பேரின் முகங்களிலும் சந்தோஷத்தின் சதவீதம் அதிகப்படியானது.

    ஜெயராஜை நினைச்சா பெருமையா இருக்குங்க...

    நமக்குப் பிறந்ததுக ரெண்டும் சரியில்லாத போது - கொண்டு வந்ததாவது உருப்படியா இருக்கே... அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்...

    மூணு பேரையும் ஒரே மாதிரிதான் வளர்த்தோம்... ஒரே பள்ளிக் கூடத்துலதான் படிக்க வெச்சோம்... ஜெயராஜ் மட்டும் பொறுப்பா படிச்சான்... மத்த ரெண்டு தடிமாடாட்டம் ஊரைச் சுத்திட்டிருக்காங்க...

    விஸ்வநாதன் புன்னகைத்தார்.

    சரி விடு... ஜெயராஜாவது நல்லா படிச்ச... நல்ல வேலைல உக்கார்ந்து... நம்ம மனசுல சந்தோஷத்தை வார்க்கறானேன்னு சந்தோஷப்படு...

    அந்த லெட்டரை மறுபடியும் மறுபடியும் படித்து - மனசு பூராவும் பூரித்துப்போனாள் பங்கஜம்.

    2

    ரெயில்வே ஸ்டேஷன்.

    அந்த பாஸஞ்சர் ட்ரெயின் அப்போதுதான் வந்து நின்றிருந்தது. ஜனங்கள் இறங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1