Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிஸ்டல் முத்தம்
பிஸ்டல் முத்தம்
பிஸ்டல் முத்தம்
Ebook116 pages38 minutes

பிஸ்டல் முத்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயப்பிரசாத் அதிர்ச்சியோடு முகத்தை நிமிர்த்தினான். "வாட் டூ... யயூ... மீன்...?"
 ராம்மோகன் அதே இறுகிய முகத்தோடு கேட்டான். "ஸ்வாதியோடு கட்டிலை பகிர்ந்துகிட்டீங்களா... இன்னும் இல்லையா?"
 "இப்படி கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை?"
 "இதிலென்ன வெட்கம்? ஸ்வாதி ஒரு பெண். நீங்க ஒரு ஆண். இந்தக் கால காதலைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். படுக்கையை பகிர்ந்துக்கிறதுக்காகவே அவசர அவசரமா உருவாகிற தெய்வீக அன்புக்குத்தான் காதல் என்கிற பேர்..."
 "நான் படுக்கையை பகிர்ந்துகிட்டேனா இல்லையாங்கிறதை உங்க - சிஸ்டர் ஸ்வாதிகிட்டயே கேட்டிருக்கலாமே?"
 சிகரெட்டை உருவி - உதட்டின் இடுக்கில் சிக்க வைத்து - இடது கை ஆட்காட்டி விரலால் லைட்டரைத் தட்டி - சிகரெட் முனையை சிவப்பாக்கினான். "நான் மிலிட்டிரியில் இருக்கிறவன். எதிலேயுமே ஸ்ட்ரெயிட் பார்வேர்ட். பொய் பேசறது... துரோகம் பண்றது. எனக்குப் பிடிக்காத சமாச்சாரங்கள்..."
 "எனக்கும் பிடிக்காதுதான்."
 "ஸ்வாதி காப்பி கொண்டு வர்றதுக்குள்ளே நான் சில விஷயங்களை. உங்ககிட்டே சொல்லியாகணும் ஜெயப்பிரசாத்..."
 "சொல்லுங்க..."
 "நீங்க ரொம்பவும் வசதியான ஃபேமிலியைச் சேர்ந்தவங்கன்னு ஸ்வாதி என்கிட்டே சொல்லியிருக்கா. பட் எங்க ஃபேமிலி ரொம்ப ரொம்ப சாதாரணம்...தெரியும்..."
 "உங்க வீட்ல இந்தக் காதலைப் பற்றி சொல்லிட்டீங்களா?"
 "இன்னும் சொல்லலை..."
 "ஏன்?"
 "வீட்ல கல்யாணப் பேச்சை எடுக்கும் போது சொல்லலாம்ன்னு இருக்கேன்..."
 "உங்க வீட்ல நீங்களும் உங்கப்பாவும் மட்டுந்தான்னு கேள்விப்பட்டேன்."
 "ஆமா..."
 "பின்னே என்ன? கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?"
 "அப்பாகிட்டே உடனடியாக இதைப் பத்தி பேசிட முடியாது. சமயம் பார்த்துதான் பேசணும்..."
 "இந்தக் காதலை உங்க ஃபாதர் ஏத்துக்குவாரா?"
 "ஏத்துக்குவார்ன்னுதான் நினைக்கிறேன்."
 "அப்படி ஏத்துக்கிற பட்சத்துல... சீர் வரிசை, நகை நட்டெல்லாம் எதிர்பார்ப்பாரா?"
 "நிச்சயமா எதிர்பார்க்க மாட்டார்..."
 "உங்க கம்பெனிக்கு நீங்களும் உங்கப்பாவும் மட்டுந்தான் பார்ட்னர்ஸா? இல்லே... வேற யாராவது இருக்காங்களா?"
 ஸ்வாதி காப்பி டம்ளர்களோடு வெளிப்பட்டுக் கொண்டே சொன்னாள்: "அவரும், அவரோட ஃபாதரும் மட்டும்தான் பார்ட்னர்ஸ்... ஏண்ணா... நான்தான் ஏற்கனவே உங்களுக்கு எல்லா டீடெய்ல்ஸூம் சொல்லியிருக்கேனே...?"
 ஜெயப்பிரசாத் குறுக்கிட்டான். "இருந்தாலும்... உன்னோட ப்ரதர் என் மூலமா அதை வெரிஃபை பண்ணிக்கிறார் ஸ்வாதி. நானும் ஒருதடவை இவர்கிட்டே சொல்லிடறேன். மிஸ்டர் ராம்மோகன். 'டெக்ஸ் கார்ட்ஸ்' ங்கிறது எங்க கம்பெனியோட நேம். மெட்ராஸ் கஸ்தூரி நகர்ல அஞ்சு ஏக்கர் விஸ்தீரணத்துலகம்பெனியோட கட்டிடம் இருக்கு. டெக்ஸ்டைல் மில்ஸுக்கு வேண்டிய ஸ்பேர் பார்ட்ஸ்ல எழுபது சதவீதம் மேனுபாக்சர் பண்றோம்... மொத்தம் நானூத்தி பத்து பேர் வேலை செய்யறாங்க... அப்பா கம்பெனியோட நிர்வாகத்தை பார்த்துக்கிறார். நான் ப்ரொடக்ஷனை பார்த்துக்கிறேன். ஆடிட்டிங் ரிப்போர்ட், பாலன்ஸ் ஷீட், பிராபிட் அண்ட் லாஸ் அக்கௌண்ட்... இதெல்லாம் உங்களுக்கு தெரியணும்ன்னா என்னோட கம்பெனிக்குத்தான் நீங்க. வரணும்..."
 ராம்மோகன் சிரித்தான்.
 "நாட் நெசசரி. ஜெயப்பிரசாத்! சொத்தை நான் என்னிக்குமே பெரிசா நினைச்சதில்லை. எனக்கு இருக்கிற ஒரே பந்தம் என்னோட சிஸ்டர்தான். அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. காப்பியை எடுத்துக்கோங்க..."
 ஜெயப்பிரசாத் காப்பி டம்ளரை எடுத்துக் கொண்டான். ராம்மோகன் கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் புதைத்துக் கொண்டே சொன்னான். "என்னோட ரெண்டு மாச லீவு முடியறதுக்குள்ளே... கல்யாணத்தை நடத்திடணும்ன்னு நான் நினைக்கிறேன். உங்க ஃபாதரை வேணுமின்னா நான் வந்து பார்க்கட்டுமா?"
 "வேண்டாம். அவசரப்பட்டா... எல்லாம் கெட்டுடும்..." காப்பியை குடித்து முடித்து விட்டு - நிமிர்ந்த ஜெயப்பிரசாத்தை ஸ்வாதி கேட்டாள்.
 "குளிச்சுடறீங்களா?"
 "ம்..." ஏர்பேக்கைத் திறந்து - டவலை எடுத்துக் கொண்டவன் டூத் பேஸ்ட்டை பிதுக்கிக் கொண்டான். குளியலறையை நோக்கி நடந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 10, 2023
ISBN9798223194163
பிஸ்டல் முத்தம்

Read more from Rajeshkumar

Related to பிஸ்டல் முத்தம்

Related ebooks

Related categories

Reviews for பிஸ்டல் முத்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிஸ்டல் முத்தம் - Rajeshkumar

    1

    ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷன். காலை ஆறு மணி. செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் எக்கச்சக்க இரைச்சலோடு இரண்டாவது பிளாட்பாரத்திற்குள் நுழைந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டதும் - ஜெயப்பிரசாத் முதல் ஆளாய் இறங்கினான். ராத்திரி சரியாய் தூங்காததால் - சிவப்பு உறைந்து போன கண்கள். காற்றில் சிலும்பும் அடர்த்தியான தலைமுடி, ‘கீப் ஃபிட்’ என்ற வாசகங்களோடு ஒரு லூஸ் ஃபிட் பனியனையும் - ஸ்டோன் வாஷ் பேண்ட்டையும் தரித்து ஒரு கல்லூரி மாணவனைப் போல் தோற்றம் காட்டினான். தோளில் ஒரு ஏர்பேக். கால்களில் ‘ச்ச்பக் ச்ச்ச்பக்’ என்று சத்தம் எழுப்பும் நார்த் ஸ்டார் ஷுக்கள். ஸ்டேஷனில் கூட்டம் நெரித்தது.

    ரே. பாலகிஷ்டய்யா... அக்கட சூடு. சிரஞ்சீவி திகிபோதா உன்னாடு...

    பக்கனா... ஒவ்ரு...? ராதாவா...?

    அதே... - பாகம் உண்டாதி... ஜெயப்பிரசாத் திரும்பிப் பார்த்தான். யாரோ இரண்டு தெலுங்கு ரசிகர்கள் பேசிக் கொள்ள - அடர்த்தியான சிவப்பு நிற பனியன், வெள்ளை பேண்ட்டில் சிரஞ்சீவியும் மஞ்சள் நிற சூடிதாரில் ராதாவும் தெரிந்தார்கள். செயற்கையாய் சிரித்து பேசிக்கொண்டு போனார்கள். பவுடர் பூசாத அந்த முகங்களைப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. தற்காலிகமாய் ஒரு ரசிகர் கும்பல் திரள - அவர்கள் இருவரும் சிரமமாய் - அவர்களை சமாளித்து எக்ஸிட் கேட்டுக்குப் போனார்கள். ஜெயப்பிரசாத் - ஒரு காபி பாரை நெருங்கி ஏழு ரூபாய் கொடுத்து - அட்டை டம்ளரில் ஊற்றித் தந்த கழுநீர் காப்பியை விழுங்கினான். இரண்டு நிமிஷம் கழித்து - ஸ்டேஷன் வாசலுக்கு வந்திருந்த போது ராதாவும் சிரஞ்சீவியும் காணாமல் போயிருந்தார்கள். ஆட்டோ டிரைவர்கள் தெலுங்கு பாஷையோடு மொய்த்தார்கள்.

    ஸார்... ஆட்டோ காவல...?

    இக்கட ரண்டி ஸார்... மீட்டர் சார்ஜு...

    ஜெயபிரசாத் ‘மீட்டர் சார்ஜ்’ என்று சொன்னவனோடு நடந்தான். அவன் ஆட்டோவைக் காட்ட, ஏறி உட்கார்ந்து சனத் நகர் என்றான்.

    நீங்க மெட்ராஸா ஸார்? ஆட்டோ டிரைவர் தமிழில் கேட்டுக் கொண்டே ஸ்டார்ட்டரை இழுத்தான்.

    ஆமா...

    நானும் மெட்ராஸ்தான் ஸார். எண்பத்தி ரெண்டுல இங்கே வந்தேன்... ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் கொட்டியிருந்த கும்பலில் - ஆட்டோவை லாவகமாய் நுழைத்து - ஆக்ஸிலேட்டரை ‘விர்... விர்...’ரென்று முறுக்கி நிமிஷ நேரத்தில் மெயின் ரோட்டுக்கு வந்தான்.

    இன்னிக்குத்தான் ஸார்... ட்ரெயின் கரெக்டா வந்திருக்கு... கடந்த ஒரு வாரமா. செம லேட்டு. ஆட்டோ டிரைவர் லொட லொடவென்று பேசிக் கொண்டே வர ஜெயபிரசாத் ஸ்வாதியின் நினைவில் அமிழ்ந்தான்.

    ‘ஸ்வாதி நிச்சயமாய் என்னை எதிர்பார்க்கவே மாட்டாள்.’

    என்னங்க... இது...? லெட்டர் கூட போடாமே... திடீர்ன்னு வந்து நிக்கறீங்க...?

    ‘கண்களில் சந்தோஷ திடுக்கிடல் காட்டி - வீட்டுக்குள் நுழைந்ததும் கட்டிப் பிடித்து - நெற்றி பூராவும் முத்தம் பதிப்பாள்.’

    சனத் நகர்ல எங்கே ஸார் போகணும்...? - டிரைவர் கேட்டான்.

    உஸ்மானியா ரோடு.

    இங்கே வேலை பார்க்கறீங்களா...? பிசினஸா ஸார்...?

    பிசினிஸ்தான்...

    ஆட்டோ டேங்க் பண்ட் ரோட்டில் வீறியது. செக்ரட்டேரியட்டைக் கடந்து - காய்ராபாத் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் திரும்பியது. அந்தக் காலை நேரத்தில் செகந்திராபாத் ரோடுகள் - ட்ராபிக் இல்லாமல் கொஞ்சம் பனிப்புகையோடு ஓய்வாய் தெரிந்தது.

    நீங்க அடிக்கடி செகந்திராபாத் வருவீங்களா ஸார்...?

    ம்... மாசத்துக்கு ரெண்டு தபா வருவேன்...

    நான் தொண தொணன்னு உங்ககிட்டே பேசறதா நினைக்காதீங்க ஸார். நான் இந்த செகந்திராபாத்ல என்னிக்காவது ஒருநாள்தான் தமிழ் பேசறேன். அதுவும் உங்களை மாதிரி யாராவது ஒருத்தர் வண்டியில ஏறினாத்தான்...

    பரவாயில்ல பேசு...

    தமிழ்நாட்டுல ஜெயலலிதாவிற்கு அப்புறம் பாலிடிக்ஸ் எப்படி ஸார் இருக்கு...?

    எனக்கு பாலிடிக்ஸ் தெரியாது.

    தீபா வந்துடுவாங்கன்னு சொல்றாங்களே ஸார்?

    ஜெயபிரசாத்துக்கு எரிச்சலாய் வந்தது. இருந்தாலும் எரிச்சலை அடக்கிக் கொண்டு யார் வந்தா என்ன... தமிழ்நாடு அப்படியேதான் இருக்கப் போகுது...

    இந்த வாட்டி ஸ்டாலினுக்கு ஒரு சான்ஸ் இருக்கு ஸார்.

    ‘ஸ்வாதி இந்நேரம் தூங்கி எந்திரிச்சிருப்பா... போய் காலிங்பெல்லைத் தட்டும் போது குளியலறையிலிருந்து வெளிப்படலாம்...’

    நீங்க என்ன ஸார் சொல்றீங்க...?

    இந்த அரசியலைப் பத்தி பேசாமே... வேற ஏதாவது பேசுப்பா...

    கோச்சுக்காதீங்க ஸார். ஏதோ பேசிட்டேன்...

    ஆட்டோ ஹசேன் நகர் எல்லையைத் தொட்டது. நகர் பூராவும் பெரும்பாலும் ஹவுஸிங் யூனிட் கட்டிடங்கள் முளைத்திருந்தது. காலி மைதானங்களில் ஓடிக் கொண்டிருந்தவர்களோடு தொழிலாளர்கள் கும்பல் கும்பலாய் சைக்கிள்களில் போனார்கள்.

    என்ன டிரைவர்... பக்கத்துல ஏதாவது ஃபாக்டரி இருக்கா...?

    ஆமா... ஸார்... ‘யூசூப் குடா’வில் லெதர் ஃபாக்டரி ஒண்ணு இருக்கு ஸார்... ஆந்திராவிலேயே பெரிய ஃபாக்டரி அது...

    மேலும் ஒரு பத்து நிமிஷ பயணம். சனத்நகர் பசுமையான மரங்களோடு வந்தது. உஸ்மானியா ரோட்டில் நுழைந்து - வேகம் குறைந்தது.

    எந்த வீடு ஸார்...?

    நேரா போய்... லெப்ட்ல திரும்பினா மொதல் வீடு... கம்பி போட்ட காம்பௌண்ட் கேட் இருக்கும்.

    ஆட்டோ அவன் சொன்ன மாதிரியே லெப்டில் திரும்பி கம்பி போட்ட காம்பௌண்ட் கேட்டுக்கு முன்னால் நின்றது.

    ஜெயபிரசாத் ஆட்டோவினின்றும் இறங்கி மீட்டர் பார்த்து சார்ஜைக் கொடுத்து அனுப்பிவிட்டு காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான். சென்ற தடவை வந்தபோது பார்த்ததைவிட லான் ஓரம் வளர்ந்திருந்த செடிக.ள் - புஷ்டியாய் இருந்தது. ஜன்னல் கதவுகள் குளிர்க்காக - இறுக்கமாய் சாத்தப்பட்டிருக்க அவன் வாசற்படி ஏறி காலிங்பெல்லைத் தொட்டான்.

    பிங்க்.. பாங்க்... பிங்க்... பாங்க்க்...

    வீட்டின் உள்ளே - காலிங்பெல்

    Enjoying the preview?
    Page 1 of 1