Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இருட்டைத் தேடி!
இருட்டைத் தேடி!
இருட்டைத் தேடி!
Ebook154 pages35 minutes

இருட்டைத் தேடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருபா அநாதை இல்லம்.
 புறநகர்ப் பகுதியில் அஸ்பெஸ்டாஸ் கொட்டகையோடு அந்தக் கட்டிடம் தெரிந்தது. மூங்கில் தப்பைகளால் செய்யப்பட்ட அகலக் கதவுக்குப் பின்னால் பசேலென்று செடி, கொடிகள் ஊதா வண்ண சாமந்திப் பூக்கள் ஆங்காங்கே தெரிந்தன. பின்புறம் கம்பி வேலியை ஒட்டி ஒரு மாட்டுத் தொழுவம் தெரிந்தது. அதில் வரிசையாய் ஆறேழு மாடுகளும், அதைப் பராமரிக்கிற சில பெண்களும் தெரிந்தார்கள். இடதுபுறம் ஒரு அலுவலகமும் சின்ன முற்றமும் இருந்தது.
 அலுவலக நாற்காலியில் மங்களம்மாள் உட்கார்ந்திருந்தாள். வயது ஐம்பத்தெட்டுக்கு மேல் சொல்லலாம். முகத்தில் சுருக்க வரிகள், நாலணா சைசுக்கு குங்குமப் பொட்டு. இலவம் பஞ்சு வெள்ளைச் சேலை ஓரங்களில் கத்திரிப்பூ நிறக் கோடு சென்றது. அவளது நிரந்தர சீருடை.
 அவள் மேசைக்கு எதிரே நின்றிருந்த இளம்பெண்கள் இரண்டு பேரும் அதே வண்ணச் சேலை கட்டியிருந்தார்கள்.
 மங்களம்மாளுக்கு இடது புறம் நின்றிருந்தாள், இந்து. குடும்பப்பாங்கான முகம். தலைமுடியை எண்ணெய் இட்டு வழித்துச் சீவியிருந்தாள். ஆசிரமத்தில் பூத்த மல்லிகைப் பூக்கள் சரமாய் மாறித் தலையில் மணத்தது. மாநிறமாய் நல்ல உடம்புவாகு. புன்னகைத்தால் இடது கன்னத்தில் குழி விழும். அதைப் பார்த்து மற்ற பெண்கள், 'உனக்குப் பணக்கார யோகம் இருக்கிறது!' என்று சொன்னால் மனசுக்குள் சிரித்துக் கொள்ளுவாள். அப்பா, அம்மாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஆசிரமத்தில் வளர்ந்து - வீடு வீடாகப் போய்க் கதர் சோப்பைவிற்கிற எனக்கா பணக்கார யோகம்? இன்றைக்குக் கிடைக்கிற கஞ்சியும், கூழும் என்றைக்கும் கிடைத்தால் அதுவே பெரிய யோகம்தான்... என்று நினைத்துக் கொள்வாள்.
 அவளுக்குப் பக்கத்திலிருந்தவள் சியாமளா. சுமாரான தோற்றம். இந்துவின் வயது. மங்களம்மாள் அவர்கள் இருவரையும் ஏறிட்டாள்.
 "இன்னிக்கு உங்கள் இரண்டு பேருக்கும் அடையாறு ஏரியா. இந்த இரண்டு பண்டல் சோப்பையும் எப்படியும் வித்துடணும்."
 "அடையாறில் பாதிக்கு மேல பணக்காரங்க. அவங்ககிட்டே போய் இந்த சோப்பை விக்க முடியுமா...?"
 சியாமளா கேட்டதும் - மங்களம்மாள் கோபப்பட்டாள்.
 "மத்த சோப்புக்கு இது எந்த வகையில் குறைச்சல்? இதுல தேய்ச்சா அழுக்கப் போகாதா...?"
 இந்து புன்னகையுடன் குறுக்கிட்டாள்.
 "நீங்கள் கவலைப்படாதீங்கம்மா... சியாமளாகிட்டே இருக்கற பண்டலையும் சேர்த்து நான் வித்துத் தர்றேன்."
 "இந்துவை பார்த்தியா சியாமளா...? இங்கிருக்கற ஒவ்வொரு பொண்ணும் இந்துவைப்போல இருந்தா இந்த ஆசிரமம்... வெறும் அநாதை ஆசிரமமா இருக்காது... பெரிய நிறுவனமாகியிருக்கும்..."
 இந்துவும், சியாமளாவும் துணிப்பைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டார்கள். நல்ல கனம்.
 வெளியே வந்தார்கள்.
 வாசலைக் கடக்கிறபோது சியாமளா இந்துவைக் கோபித்தாள்.
 "இன்னிக்கு உன்னால் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கட்டிகிட்டேன்."
 "திட்டினாங்களா... எவ்வளவு இதமா எடுத்துச் சொன்னாங்க...? அதுவுமில்லாம நீயாகத்தான் வாயை குடுத்து வாங்கிக் கட்டிகிட்டே..."
 பேசிக்கொண்டே கொஞ்ச தூரம் நடந்ததும் அகலமான பூந்தமல்லி நெடுஞ்சாலையைத் தொட்டார்கள். ஒரு நிமிடத்துக்குக் குறைந்தது இரண்டு லாரிகளாவது பெரிய இரைச்சலுடன் அந்த இடத்தைக் கடந்துசென்றன. டூரிஸ்ட் கும்பல் ஒன்று சன்னல் நிறையக் கைகளை முளைக்கவிட்டு உற்சாகக் கூச்சலோடு இருவரையும் பார்த்துக் கத்திக்கொண்டு போனது. போனமாத மழையில் துருப்பிடித்துக் கிடந்த பேருந்துக் கூரைக்குக் கீழே நின்றார்கள் இந்துவும், சியாமளாவும்.
 பத்து மணி வெயில் சுள்ளென்று இடது கன்னத்தை அறைந்தது. ஐந்து நிமிடம் காத்திருப்பில் கரைந்து போயிருக்க அந்த டவுன் பஸ் - நிறையக் காலி இடங்களோடு அந்த ஸ்டாப்பிங்கில் டயரைத் தேய்த்துக் கொண்டு நின்றது.
 இருவரும் ஏறிக் கொண்டார்கள்.
 புகையைக் கக்கிக்கொண்டு பஸ் புறப்பட்டு அரைமணி நேரத்தை விழுங்கி அடையாறு நிறுத்தத்தில் - நின்றபோது சியாமளா முகம் மலர்ந்தாள்.
 ஒரு இளைஞன்- பல்லைக் காட்டிச் சிரித்து சியாமளாவிடம், "குட்மார்னிங்...!" என்றான். வரிவரியாய்ப் போட்ட டிசர்ட்டும், வழவழப்பான பேன்ட்டும் அணிந்திருந்தான்.
 பதிலுக்கு சியாமளாவும் சிரித்தாள்.
 அவர்களுக்குப் பின்னால் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தான், அவன். சியாமளா இந்துவிடம் திரும்பி, "நான் அவர்கிட்டே பேசிட்டு வர்றேன்..." என்று சொல்லிவிட்டு இந்துவின் பதிலை எதிர்பார்க்காமல் பின்னாலிருந்த சீட்டுக்கு மாறினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798215007587
இருட்டைத் தேடி!

Read more from Rajeshkumar

Related to இருட்டைத் தேடி!

Related ebooks

Related categories

Reviews for இருட்டைத் தேடி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இருட்டைத் தேடி! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ‘சுமங்கலி பட்டுச் சேலைகள்’ என்று பக்கவாட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த மாருதிவேன், பங்களாவின் அகன்ற வாயிலில் நுழைந்து குரோட்டன்சு செடிகளுக்கு நடுவில் நேராய் ஓடி - போர்டிகோவில் வந்து பதுங்கி நின்றது. வேனிலிருந்து இரண்டு சிப்பந்திகள் இறங்கினார்கள். பின்பக்கக் கதவை மேலே உயர்த்த வேனின் உள்ளே வரிசையாகப் பட்டுச் சேலைகளைக் கர்ப்பம் தாங்கிய அட்டைப் பெட்டிகள் நூற்றுக்கணக்கில் தெரிந்தன.

    சிப்பந்திகள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அட்டைப் பெட்டிகளை இறக்கி வைத்தார்கள்.

    மொத்தம் முன்னூறு பட்டுச் சேலைகள் கொண்டு வந்திருக்கோம். இதுல எவ்வளவு எடுப்பாங்கன்னு நினைக்கிறே... சுந்தரம்...?

    ஒரு இருபத்தஞ்சு எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    எனக்கென்னமோ நம்பிக்கையில்லை...

    நீ வேணுமின்னா பாரு... நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண இடமில்லை... இருக்கிற ஒரே பெண்ணுக்கு கல்யாணம்... மனுசன் செலவு பண்ணத் தயங்குவாரா... அதோ... அவரே வந்துட்டார்... பேச்சு நின்றது.

    மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். சிவானந்தம். ஐம்பது வயது. பழைய ரங்காராவ் உயரம். தங்க பிரேமிட்ட கண்ணாடியில் சங்கிலி கோர்க்கப்பட்டு காதுக்கும் போயிற்று. பிடரியிலும் காதோரத்திலும் நரைமுடிகள் பிழைத்திருக்க - மற்ற இடம் பளீர் வழுக்கை. கொக்கு வெள்ளையில் முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார் கைவிரல்களில் மோதிரங்கள் நிறம் நிறமாய் மின்னின.

    வேலையாள் ஒருவன் ஓடிவந்து எதிரில் நின்று பவ்யமாய், கைகட்டி சொன்னான்.

    அய்யா...! பட்டுச் சேலை வந்திருக்குங்க...

    சரி... போய் அவங்களுக்கு உதவி பண்ணு. அறையில் சேலைகளை பரப்பி வைக்கச் சொல்லு...

    சரிங்கய்யா...

    அவன் பங்களாவின் முன் பக்கத்தை நோக்கி ஓட சிவானந்தம் வேட்டி சரசரக்க ஹாலின் கோடியில் இருந்த மகள் திவ்யாவின் தனி அறையை நோக்கிப் போனார்.

    அறைக்கதவு வெறுமனே சாத்தியிருக்க தள்ளிக்கொண்டே குரல் கொடுத்தார். திவ்யா...

    வாங்கப்பா... திவ்யாவின் குரல் தர்பூசணிப்பழ குளிர்ச்சியோடு உள்ளேயிருந்து வெளிப்பட்டது. கதவை திறந்து கொண்டு உள்ளே போக - கட்டிலுக்குச் சாய்ந்து உட்கார்ந்து - புத்தகமொன்றைப் பிடித்திருந்தாள் திவ்யா.

    கண்களைப் பறிக்கிற மாதிரி - அழகாக இருந்த திவ்யாவுக்கு இப்போது இருபத்தோரு வயது. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய உயரம். எலுமிச்சை நிறம். மை தீட்ட வேண்டிய அவசியமில்லாத கண்கள். மெலிதான நீலவர்ண பூனம் சேலை உடம்பின் மேடு பள்ளங்களில் பொருந்தியிருந்தது. செதுக்கின உதடுகளில் ஈரம் மினுமினுத்தது.

    என்னம்மா... நீ புத்தகத்தைப் படிச்சிட்டிருக்கே...?

    ஏம்பா...

    கல்யாணப் பத்திரிகையைத் தேர்வு பண்ணச் சொன்னேனே...?

    அதுக்கு இப்ப என்னப்பா அவசரம்...? கல்யாணத்துக்குத்தான் இன்னும் மூணு மாசம் இருக்கே...!

    அம்மா! மூணுமாசம்ங்கிறது... கைசொடுக்குப் போடற நேரத்துல வந்துடும். இப்பயிருந்தே ஒவ்வொண்ணையும் பண்ணினாத்தான்... கல்யாணம் பக்கத்துல வரும்போது பதட்டம் இல்லாமே இருக்கும்...

    இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே... கல்யாணப் பத்திரிகையைத் தேர்வு பண்ணிடறேம்பா... போதுமா...?

    சரி... இப்ப... வாம்மா...

    எதுக்கு...?

    பட்டுச் சேலைகள் வந்திருக்கு... வந்து உனக்கு வேண்டியதை இஷ்டம்போல எடுத்துக்க... ஒரு மாருதிவேன் நிறைய அடுக்கி கொண்டு வந்திருக்காங்க. நல்ல சேலைகளா... எடுத்துட்டு வரச்சொன்னேன்...

    எவ்வளவு எடுத்துக்கலாம்பா...?

    நீ எவ்வளவு ஆசைப்படறயோ... - அவ்வளவு எடுத்துக்கோம்மா...! நான் சம்பாதிக்கிறதெல்லாம்... உனக்கு ஒருத்திக்குத்தானே...? உங்கம்மா உயிரோடு இருந்திருந்தா... உனக்குக் கல்யாணம் நடக்கப் போகிற இந்த மகிழ்ச்சியில் எப்படி பூரிச்சு போயிருப்பா தெரியுமா... அதுவும் நீ அமெரிக்கா மாப்பிள்ளைக்கு...

    அம்மாவைப் பத்தி பேசாதீங்கப்பா... அப்புறம் எனக்கு அழுகை வந்துரும்... வாங்க... போகலாம்.

    இருவரும் அறை வாசலுக்கு வந்தார்கள்.

    அங்கே ஜவுளிக்கடையே வந்து இறங்கிய மாதிரி இருந்தது. அட்டைப் பெட்டிகளிலிருந்து வெளிப்பட்ட சேலைகள் தங்க ஜரிகை வேலைப்பாடுகளோடு நிறம் நிறமாய் ஜொலித்தன. திவ்யா குதிநடை போட்டுக் கொண்டு - பரப்பியிருந்த சேலைகளுக்கு முன்னால் போய் உட்கார்ந்தாள். எதை எடுப்பது...? எதைத் தவிர்ப்பது...? திணறினாள்.

    மயில் கழுத்து வண்ணப்புடவை ஒன்று கண்களைச் சுண்டி இழுக்க- அதை எடுத்தாள் திவ்யா.

    அதே விநாடி- பக்கத்து அறையில் தொலைபேசி உச்சமாய்க் கத்தி கூப்பிட்டது.

    நீ பாரம்மா...! நான் யாருன்னு பார்க்கறேன். கம்பெனியிலிருந்து மானேஜர்தான் பேசுவார். - சொன்ன சிவானந்தம் பக்கத்து அறைக்குள் நுழைந்து தொலைபேசியின் ஒலி வாங்கியை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1