Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சஹாரா பூக்கள்
சஹாரா பூக்கள்
சஹாரா பூக்கள்
Ebook148 pages37 minutes

சஹாரா பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிஃபென்ஸ் காலனி. நேரம் அதிகாலை ஐந்தரை மணி.
 மேஜர் சரண்தீப் தன் ஐம்பது வயது உடம்புக்கு ஜாக்கிங் சூட் கொடுத்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். டெல்லிக்கே உரிய அந்த ஜனவரி பனிக்காற்று மேஜரின் உடம்பை ஒற்றியெடுத்தாலும் அதையும் மீறி அவர் வியர்த்து இருந்தார்.
 யாருமற்ற நடைபாதையில் வேக நடைபோட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து இருந்த போது, ராணுவத்தின் இண்ட்டெலிஜென்ஸ் பிரிவைச் சேர்ந்த பர்மன் தன் மெகா சைஸ் தொப்பையோடு வந்து ஒரு "குட்மார்னிங்" சொல்லி இணைந்து கொண்டார்.
 "என்ன பர்மன்... இன்னிக்கு நீங்க பத்து நிமிஷம் லேட் போலிருக்கே...!"
 "எஸ்...! யூ ஆர் கரெக்ட்... நேற்றைக்கு டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துவிட்டு படுக்கைக்கு போகும் போது பன்னிரண்டரை மணி. தூங்கும் போது ஒரு மணி. கொஞ்சம் அசந்து தூங்கியதில் பத்து நிமிஷம் லேட்.
 "இந்தியாவுக்கு தோல்வியா வெற்றியா?"
 "வெற்றிதான்...! ஏழு விக்கெட் வித்தியாசம். டெண்டுல்கர் சொதப்பினாலும் யுவராஜ்சிங் பட்டையைக் கிளப்பிட்டான்."
 "அப்ப மேட்சைக் கண் விழிச்சுப் பார்த்ததுக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுது..."
 "கண்டிப்பா...! நம்ம பசங்களைக் கண்டபடி திட்டினாலும் அவங்க ஜெயிக்கும்போது மன சுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கத்தான் செய்யுது... அதுவும் பாகிஸ்தானை ஜெயிக்கும்போது நமக்குக் கிடைக்கிற சந்தோஷம்இருக்கே... சொல்லி மாளாது." பேசிக் கொண்டே போன பர்மன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு கேட்டார்.
 "என்ன மேஜர் ஸார்... இன்னிக்கு நீங்க மட்டும் தனியா வாக்கிங்... உங்க பொண்ணு சிம்ஹா எங்கே...? டெல்லி குளிர்க்குப் பயந்து தூக்கமா...?"
 "நோ... நோ...! என்னோட டாட்டர் சிம்ஹா இந்த குளிர்க்கெல்லாம் பயப்படற டைப் கிடையாது... குவாலியரில் அவளோட ஃப்ரண்டுக்கு கல்யாணம். நேத்து ராத்திரிதான் கிளம்பிப் போனாள்."
 பர்மன் சிரித்தார். "உங்க பொண்ணு சிம்ஹாவுக்கு நேர் எதிர் டைப் என்னோட பொண்ணு அனிதா. வீட்டை விட்டு வெளியே போகணும்ன்னு சொன்னாலே அவளுக்கு யாராவது ஒருத்தர் துணை வேணும்!... என்ன செய்யறது... அவ அம்மாவோட 'ப்ராட் அப்' அப்படி!"
 "ஒரு பொண்ணு எதுக்காகவும் யார்க்காகவும் பயப்படக்கூடாது. ஸிம்ஹா தன்னோட அஞ்சாவது வயசிலேயே ஸ்விம் பண்ணுவா. பத்தாவது வயசுல ஹார்ஸ் ரைடிங்... பதினஞ்சாவது வயசுல ரைஃபிள் சூட்டிங். இருபதாவது வயசுல ஃப்ளைட் ட்ரெய்னிங்... அப்புறம்... இப்ப..." என்று சொல்லிக் கொண்டு போனவரை அவருடைய ஜாக்கிங் சூட்டில் இடம் பெற்றிருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டு தடுத்தது.
 செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். ஒரு புது எண் பளிச்சிட்டது.
 'இது யாருடைய எண் ?' என்ற யோசிப்போடு செல்போனை காதுக்கு ஒற்றி "எஸ்" என்றார்.
 இனிமையாய் ஒரு பெண் குரல் கேட்டது. பாஷை ஹிந்தி.
 "மேஜர் சரண்தீப்...!"
 "எஸ்..."
 "உங்க டாட்டர் பேர் சிம்ஹாவா?"
 "எஸ்..."
 "அவங்க இப்ப வீட்ல இருக்காங்களா?"
 "இல்லை.  வெளியூர்எப்ப கிளம்பினாங்க...?"
 "நேத்து ராத்திரி...! நீங்க யாரு...? எதுக்காக என்னோட பொண்ணைப்பத்தி விசாரிக்கறிங்க...?"
 "ஸார்... உங்க பொண்ணு... நல்ல உயரம்... ஷீ மே பி ஃபைவ் எய்ட்...! ஏம்... ஐ... கரெக்ட்...?"
 "எஸ்...!"
 "நல்ல சிவப்பு... கர்லி ஹேர்...?"
 "எஸ்... எஸ்...! ஃபார் வாட் பர்ப்பஸ் யூ ஆர் காலிங் மீ...?" - மேஜர் சரண்தீப் எரிச்சலாகி கத்த அந்தப் பெண் அமைதியாய் சொன்னாள்.
 "மேஜர் ஸார்... கோபப்படாதீங்க...! இப்ப நான் சொல்லப்போகிற விஷயத்தைக் கேட்டு டென்ஷன் ஆயிடாதீங்க... நீங்க நினைக்கிற மாதிரி உங்க பொண்ணு வெளியூர் போகலை..."
 "என்னது! வெளியூர் போகலையா...?"
 "எஸ்...! அவ இதே புது டெல்லியில்தான் இருக்கா. ஒரு வி.வி.ஐ.பி.யின் மகனால் கடத்தப்பட்டு இருக்கா...!"
 மேஜர் வியர்த்தார். "ஏய்... நீ என்ன சொல்றே?"
 "ஒரு அப்பட்டமான உண்மையைச் சொல்லிகிட்டு இருக்கேன்... மேஜர் ஸார்... உங்க பொண்ணு சிம்ஹா இந்த நிமிஷம் தன்னோட மானத்துக்காகவும், உயிரைக் காப்பாத்திக் கிறதுக்காகவும் போராடிக்கிட்டு இருக்கா..."
 "யார் அந்த வி.வி.ஐ.பி?"
 "சொன்னா நம்ப மாட்டீங்க...!"
 "இதோ பார்...! டயத்தை வேஸ்ட் பண்ணாமே சொல்லு... யார் அந்த வி.வி.ஐ.பி...?" - மேஜர் உஷ்ணமாகிக் கத்தினார்.
 மறுமுனையில் பெண் குரல் சில விநாடிகள் அமைதியாய் இருந்துவிட்டு சொன்னது. "இந்த இந்தியத் திருநாட்டின் ராணுவத்துறை அமைச்சர் ஜெகன் பட்டேல்...

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224272129
சஹாரா பூக்கள்

Read more from Rajeshkumar

Related to சஹாரா பூக்கள்

Related ebooks

Related categories

Reviews for சஹாரா பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சஹாரா பூக்கள் - Rajeshkumar

    ebook_preview_excerpt.htmlZKnGh/S?|AIb'9ZX … !)yOuUO4#o Ou׫WuoY6e>(2ٴ',TNOxΉ[j0vQf2l¼~5U5MO mn_t}?tc?u~wtlg]~G;zf?{UK.iƸi 2erʄ 7׭&a_V7 2ە(Tu:|m|M`G\wҫeV`ĮQnc ˤ\J8+ؘ~oTu'y8h/S,Vko-Sc07ufmEеh&_W]$ufYrVmNSй')GgP4Rk8C4fM^r'٨#\q=(?֜@ǘ&8woep[[)^.gW9d[>y8;#8ݤ | pa&Mvu],k)g:cG귁#Pslōq" , _4P]fR94ӂphC$ &lXj :<5Cx"伃 'h1nqԨH.a΄@MkM)ˢUp!`ZFjƐAnS6`5LY !-pgNU['[̬yI:ya;JDFi*2 Nr[ߚ%\I^4xǹ ⮹a od dj`DakJZ&d}_]Q.;bcK0蝫dY h;J ,`8k&al͐S1[M*fmKLJz*εS|6 (ӷPzcF335bit۳pbI"FL2>lX  L ܚ~,' "Փ'nJ)3EL0bS1}H(QrdPJLc2t~~xFG!,71Rbg%6Rړ#Tx+D|ၿpNmC ѭ xX[?,?}2>IJ-V8L[q515."FtرN[)j5*gu- DC OC, Z|b{Bu<{ 4qG}I >ߨ1 E9;n ̝/I!8|U^JSR{En!SaxB@]ʐkv1Sso#ơ>{jBG?&zs0wK6P7{p;*E³g ݷYɘ9X+Z"L?t to#1Jk_KƊYZÀ jq,<{SIޓWEfLPo>|, S!ëOB7cyTt''EYs33h/"gA`Z ׺bCHz"s쵖C*0Qvs .^L\۱8Z)VG0+/ݺp*۔A}oLFi u(} QP^`߀1{a%#B9ޗD6ߥ/ I`q/x?W:M#=/8U(ViaXo.nmnso$3v+<1K{ֻo/4vu [5=0 8e>؁*!sjPK:$qht|Se^Řa,ky"RoH>4`WeR%֛ixZ lj:Wm6ROA_=u"P2zOu+9զ_rP|R| |)!YX[/՛b益2ZC]s x[=5Zmy,
    Enjoying the preview?
    Page 1 of 1