Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கும் விவேக்! எதிலும் விவேக்!
எங்கும் விவேக்! எதிலும் விவேக்!
எங்கும் விவேக்! எதிலும் விவேக்!
Ebook142 pages35 minutes

எங்கும் விவேக்! எதிலும் விவேக்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விவேக்கும், விஷ்ணுவும் அயர்ந்து போனவர்களாய் சக்கரவர்த்தியையே பார்க்க - அவர் குரலைத் தாழ்த்திக் கொண்டார்.
 "மிஸ்டர் விவேக்...! நான் உங்களை என்னுடைய அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைத்துப் பேசினால் அது வெட்ட வெளிச்சமாகி, செய்தி, போகக் கூடாதவர்களின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விடும். அதைத் தவிர்க்கத்தான் நான் கடந்த ஒரு மணி நேரமாய் இந்த பீச்சில் பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டு இருக்கிறேன். டின்களைத் தூக்கிக் கொண்டு அலைவது பழக்கம் இல்லாத வேலையாதலால் உடம்பு சீக்கிரமே களைத்துப் போய்விட்டது."
 "ஸார்! நீங்கள் எதற்காக இப்படி கஷ்டப்பட வேண்டும்...? உங்களுக்குக் கீழே வேலை செய்யும் எந்த அதிகாரியையாவது அனுப்பி வைத்து இருக்கலாமே...?"
 சக்கரவர்த்தி புன்னகைத்தார்."எனக்குக் கீழே அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனது நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லையே...?"
 "ஸார்... வாட் டூ யூ மீன்...?"
 "உங்கள் அதிர்ச்சி எனக்குப் புரிகிறது மிஸ்டர் விவேக்! ஆனால் நான் சொன்னதுதான் உண்மை. நான் இந்திய உளவுத்துறையின் தலைவர் என்ற பதவியில் இருந்தாலும் இந்த நாட்டில் நடக்கிற பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. அதனால் தான் நாட்டில் இப்போதெல்லாம் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன."
 "ஸார்! எங்களுக்கு நீங்கள் சொல்லப் போகும் செய்தி என்ன...? நாங்கள் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்...?"
 சக்கரவர்த்தி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டபடி பேச ஆரம்பித்தார்.
 "மிஸ்டர் விவேக்...! வருகிற பதினைந்தாம் தேதி ஊட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் 134 பேர் ஒரே இடத்தில் கூடி ஒரு விஞ்ஞான கருத்தரங்கை நடத்த உள்ளார்கள். அந்த கருத்தரங்கு மொத்தம் மூன்றுநாள் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கின் இறுதி நாள் அன்று மத்திய அமைச்சர் குல்ஜாரிலால் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இதைப்பற்றிய செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தீர்களா விவேக்...!"
 "பார்த்தேன் ஸார்... நேற்றைய ஹிண்டுவில் போட்டிருந்தான்...!"
 சக்கரவர்த்தி சில விநாடிகள் மௌனமாய் இருந்து விட்டு பிறகு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
 "இந்த விஞ்ஞானிகளின் கருத்தரங்கைப் பற்றிய செய்தியை மேம்போக்காக படித்தால் இது ஒரு நல்ல விஷயம்; ஆபத்து இல்லாத விஷயம் என்று தோன்றும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். இல்லையா மிஸ்டர் விவேக்...?"எஸ்...! விஞ்ஞானிகள் எல்லோரும் ஒரு இடத்தில் ஒன்றாய் கூடி ஒரு கருத்தரங்கை நடத்துவதால் நாட்டுக்கு அது நன்மைதானே?"
 "ஆனால்... இந்த கருத்தரங்கில் ஒரு ஆபத்து ஒளிந்து கொண்டு இருப்பதாக எனக்கு ஒரு ரகசிய செய்தி கிடைத்தது. அந்த செய்தியைப் படித்ததில் இருந்து எனக்குள் ஒரு கலக்கம். அந்த செய்தி உண்மையா, பொய்யா என்று எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் பொய் என்று அதை உதாசீனம் செய்யவும் முடியாது. உண்மை என்று எடுத்துக் கொண்டு விசாரணை செய்யவும் முடியாது. அந்த செய்தி சம்பந்தமாய் ஒரு உதவி கேட்கத்தான் நான் வந்தேன்."
 "சொல்லுங்கள் ஸார்...! உங்களுக்கு எது மாதிரியான உதவி வேண்டும்?"
 "முதலில் எனக்கு தபாலில் வந்த இந்த கடிதத்தைப் படியுங்கள் மிஸ்டர் விவேக்...!"
 சுண்டல் டின்னுக்குள் பத்திரப்படுத்தி வைத்து இருந்த அந்த கவரை எடுத்துக் கொடுத்தார் சக்கரவர்த்தி. விவேக் வாங்கிப் பார்த்தான். கவரின் மேல் 'PURELY PERSONAL' என்று சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தெரிய, கவரின் வாயைப் பிரித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து செல்போனின் டார்ச் வெளிச்சத்தில் படித்தான். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தைப் படிக்கும் போதே மனசுக்குள் தமிழாக்கம் ஓடியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224905843
எங்கும் விவேக்! எதிலும் விவேக்!

Read more from Rajeshkumar

Related to எங்கும் விவேக்! எதிலும் விவேக்!

Related ebooks

Related categories

Reviews for எங்கும் விவேக்! எதிலும் விவேக்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கும் விவேக்! எதிலும் விவேக்! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1.

    விவேக்கின் டயரியிலிருந்து:--

    கிளி ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் 25 பைசா கொடுத்து நான் கிளி ஜோசியம் பார்த்தேன். ஏன் தெரியுமா...? அந்த இரண்டு நிமிடமாவது கிளி கூண்டை விட்டு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டுமே என்றுதான்!

    மெரீனா பீச்சில் மறு ஜென்மம் எடுத்து வந்து அதே ஆக்ரோஷத்தோடு நின்று இருந்த கண்ணகி சிலைக்குப் பின்னால் தப்பு செய்யக் காத்து இருந்தார்கள் தெய்வீக காதல் ஜோடிகள். பானி பூரியும், பாப்கார்னும் அமோக விற்பனையில் இருந்தன. அண்ணா சதுக்கத்திலும், எம்.ஜி.ஆர்.நினைவிடத்திலும் வெளியூர் ஜனங்கள் சூட்கேஸும் பைகளுமாய் தெரிந்தார்கள். பஸ்சைவிட்டு இறங்கிய ஒரு சுடிதார் பெண்ணுக்கு எவ்வளவு மார்க் போடலாம் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டிருந்த விநாடி - பக்கவாட்டில் அந்தக் குரல் கேட்டது.

    ஸார்!

    விஷ்ணு திரும்பிப் பார்த்தான்.

    ஒரு பூக்காரி. இடுப்பில் இடம் பிடித்து இருந்த கூடையில் நெருக்கமாய்க் கட்டிய மல்லிகை மணத்தது.

    என்ன?

    பூ வேணுமா ஸார்...?

    உன் பேர் என்ன...?

    சாந்தி ஸார்...

    சாந்தின்னு பேர் வெச்சிருக்கிற எந்த பொண்ணுகிட்டேயிருந்தும் நான் எதையும் வாங்க மாட்டேன்... போய்ட்டு வா...

    சரியான லொள்ளுதான்...! பூக்காரி முணுமுணுத்துக் கொண்டே நடக்க - விஷ்ணு குரல் கொடுத்தான்.

    என்னது...! லல்லுபிரசாத் யாதவ் உனக்கு சொந்தமா? இதை நீ மொதலிலேயே சொல்லக் கூடாதா...? சொல்லியிருந்தா இந்த கூடை பூவையும் வாங்கியிருப்பேனே...!

    யோவ்...! இந்த நக்கல் பேச்சையெல்லாம் என்கிட்டே வெச்சுக்காதே...! நான் யார் தெரியுமில்ல...?

    அதான் சாந்தின்னு சொன்னியே...?

    நான் சாதாரண சாந்தி இல்லேய்யா... சைதை சாந்தி...! ராத்திரி பத்து மணிக்கு மேல என் கையில் பூக்கூடை இருக்காது. அரிவாள்தான் இருக்கும். பூ வேணுமான்னு கேட்டா வேணும் வேணாம்ன்னு சொல்லுவியா...! அத்த உட்டுட்டு நக்கலா பண்றே...! மவனே...! நரம்பை எடுத்துடுவேன்...!

    ஸாரி சைதை சாந்தி...! நீங்க ஒரு பொம்பளை ‘தாதா’ன்னு தெரியாமே பேசிட்டேன். என் தொடையைப் பார்த்தீங்களா... எப்படி ஆடுதுன்னு

    ம்... இந்த பயம் எப்பவும் இருக்கட்டும். பீச்சுக்கு வந்தமா... காத்தை வாங்கினமான்னு போய்கிட்டே இருக்கணும்.

    சரிங்க... சாந்தி மேடம்...!

    சைதை சாந்தி மல்லிப்பூவேய்ய்ய்ய்...! என்று குரல் கொடுத்துக் கொண்டே நகர்ந்து போய்விட விஷ்ணுவின் முதுகில் ஒரு கை விழுந்தது.

    திரும்பினான்.

    விவேக்!

    பாஸ்...!

    அந்த பூக்காரிக்கும் உனக்கும் என்னடா சண்டை...?

    அது ஒண்ணுமில்லை பாஸ்... நீங்க வர்ற வரைக்கும் எனக்கு பொழுது போகலை. அதான் பூக்காரிகிட்டே ஒரு வீடியோ கேம் விளையாடினேன்...

    ஏன்டா...! வாயை வெச்சுக்கிட்டு உன்னால சும்மாவே இருக்க முடியாதா...?

    தூங்கும் போது என்னோட வாய்க்கு ஃபுல் ரெஸ்ட் குடுத்துடறேன் பாஸ்...

    விவேக் முறைக்க ஸாரி பாஸ்...! நீங்க என்னை அவசரமா புறப்பட்டு வரச்சொன்னீங்க... இதோ... வந்துட்டேன்...! என்ன விஷயம் சொல்லுங்க...? என்றான்.

    வா... அப்படி நடப்போம்...!

    மணலில் நடந்தார்கள். இப்போது இருட்டின் அடர்த்தி கூடியிருந்தது. தொலைவில் கடல் ‘உஷ்... உஷ்...!’ என்றது.

    சொல்லுங்க பாஸ்...!

    இந்திய உளவுத்துறையின் தலைவர் சக்கரவர்த்தி சென்னைக்கு வந்து இருக்கிறார். அது உனக்குத் தெரியுமா...?

    தெரியாது பாஸ்...

    அவரை நீ நேர்ல பார்த்து இருக்கியா?

    இல்லை பாஸ்... இந்திய உளவுத்துறையில் அவர்தான் சுப்பீரியர்...! அவரை நம்ம மாதிரியான ‘க்ரைம் ப்ராஞ்ச்’ ரேஞ்சில் உள்ளவர்கள் பார்க்க முடியாதே!

    பார்க்க முடியும்...

    அது எப்படி பாஸ்...?

    விவேக் சிரித்தான். நீயோ நானோ அவரைப் பார்க்க விரும்பினா பார்க்க முடியாதுதான். ஆனா... அவர் நம்மை பார்க்க விரும்பினால் அது முடியுமே?

    விஷ்ணுவின் விழிகள் வியப்பில் வங்காள விரிகுடாவாய் விரிந்தது.

    பாஸ்...! நீங்க என்ன சொல்றீங்க...? இந்திய உளவுத்துறையின் தலைவர் சக்கரவர்த்தி உங்களையும் என்னையும் பார்க்க விரும்பறாரா?

    எஸ்...! சரியாய் ஏழு மணிக்கு இதே இடத்துக்கு வரப்போகிறார்.

    வந்து...?

    நம்ம ரெண்டு பேர்கிட்டேயும் பேசப் போறார்...

    எதைப்பற்றி...?

    தெரியலை... அவர் எனக்கு போன் பண்ணி பேசும் போது அஞ்சு மணி இருக்கும். சரியாய் ஏழு மணிக்கு கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் இருக்கச் சொன்னார்...

    பாஸ்...!

    என்ன...?

    ஏதோ பனங்காயைத் தூக்கி நம்ம தலையில் வைக்கப் போறார்ன்னு நினைக்கிறேன்.

    மே... பி...! - விவேக் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் கத்தியது. விவேக் எடுத்து - அழைப்பது யார் என்று பார்த்தான்.

    இந்திய உளவுத்துறை

    Enjoying the preview?
    Page 1 of 1