Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நயாகரா புயல்...!
நயாகரா புயல்...!
நயாகரா புயல்...!
Ebook88 pages28 minutes

நயாகரா புயல்...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"உயிர் இப்போதுதான் பிரிந்திருக்கிறது" என்றார். ஹாஸ்பிடலில் இருந்த அந்த ஒரே டாக்டர்.
 "நீடில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். அடி வயிற்றில் ஒரு பாய்ஸன் நீடில் முழுமையாகப் பாய்ந்து புதைந்து போயிருக்கிறது. தலையையும் கனமான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார்கள். இவரை எங்கே கண்டெடுத்தீர்கள்?"
 தமிழ்மணி குறுக்கிட்டு சொன்னான். "சாலை எண் 113-க்கு அருகாமையில்..."
 "மூன்று பேரும்... அப்படி உட்காருங்க, போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறேன். அவர்கள் வந்து உங்களை முறைப்படி விசாரித்ததும் நீங்கள் போகலாம்..."
 டாக்டர் எதற்கோ உள்ளே போய்விட –
 ரூபலாவும் தமிழ்மணியும் விவேக்கை முறைத்தார்கள்.
 தமிழ்மணி முனகினான்.
 "அமெரிக்க போலீஸ் லேசில் விடமாட்டார்கள்" விசாரணைங்கிற பேரில் நேரத்தை கொன்று நம் சந்தோஷத்தை பாழடித்து விடுவார்கள்"
 "சொன்னா கேட்டாத்தானே? நாம பாட்டுக்கு போயிருக்கலாம். வேலியில் போற ஓணானை எடுத்து காதுல விட்டுகிட்ட கதையாச்சு. இவரைச் சொல்லிக் குத்தமில்லை தமிழ்மணி! இவரோட ராசி அப்படி. தூக்க நாய்க்கன் பாளையத்துக்கு போனாலும் சரி, துபாய்க்கு போனாலும் சரி, இவர்க்காக அங்கே ஒரு கேஸ் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும்"
 ரூபலா கடுகடுப்பா சொல்ல –
 அவர்கள் புலம்பல்களோடு காத்திருக்க -அடுத்த சில நிமிடங்களில் - ஒரு நீல நிற போலீஸ் பெட்ரோல் கார் - தலையில் சுழலும் சிவப்பு விளக்கோடு வந்து நின்றது. கருநீல யூனிபார்மில் ரோஸ்மில்க் நிற முகங்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் இறங்கி உள்ளே வந்தார்கள். டாக்டர் எதிர்கொண்டு விவரம் சொல்ல - அதிகாரிகளின் நீலநிறக் கண்கள் விவேக், ரூபலா, தமிழ்மணியை – சந்தேகமாய் பார்த்தன.
 டாக்டரிடம் பேசிவிட்டு விவேக்கிடம் வந்தார்கள்.
 "இண்டியா?"
 "எஸ்"
 "ஷோ மீ யுவர் பாஸ்போர்ட் அண்ட் விசா?"
 விவேக் தன் பாஸ்போர்ட்டையும் உத்யோக அட்டையையும் எடுத்துக் காட்ட - போலீஸ் அதிகாரிகளின் நெற்றிகளில் வியப்பு வரிகள் உதித்து மறைந்தன.
 "க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர்?"
 "எஸ்"
 இருவரும் மஞ்சள் பற்களைக் காட்டி கை குலுக்கினார்கள்.
 விவேக் - ரூபலாவையும், தமிழ்மணியையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
 அதிகாரிகளில் ஒருவர் சொன்னார். "யூ... ஹேவ் டன் ஏ குட் ஜாப். பொதுவாய் கனடா அமெரிக்கர் பாதையில் விபத்துகளோ... இது மாதிரியான அசம்பாவிதங்களோ நடந்தால் அதை யாருமே கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுத்துக் கொண்ட உங்களுக்கு போலீஸ் துறையின் சார்பில் நன்றி"
 விவேக் புன்னகைத்தான். "ஒரு போலீஸ் மேனின் கடமை அது..."ஃபாதரின் உடலை பார்ப்போம் வாருங்கள்..." விவேக்கை அழைத்துக்கொண்டு டாக்டரோடு - பக்கத்து அறைக்குள் நுழைந்தார்கள். அதிகாரிகள். தொப்பிகளைக் கழற்றிக் கொண்டே - மேஜையில் மல்லாந்திருந்த ஃபாதரின் உடலை நெருங்கியவர்கள் திடுக்கிட்டார்கள்.
 "மைகுட்னஸ்"
 "என்ன?" "இவன் ஃபாதர் இல்லை!"
 "பிறகு...?"
 விவேக் ஆச்சர்யப்பட்டான்.
 "இன்னும் சில நாட்களில் மின்சார நாற்காலிக்கு போகவிருந்த மரண தண்டனைக் கைதி. இவனைத்தான் அமெரிக்க போலீஸ் மும்முரமாய் தேடிக் கொண்டிருக்கிறது. இவன் மிராண்டோ. யார்க் சிட்டி சிறையிலிருந்து இவன் தப்பி இன்றைக்கு ஏழு நாட்கள் ஆகிறது. ஃபாதர் வேஷம் போட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தவனை யாரோ கொலை செய்திருக்கிறார்கள்"
 சொன்ன அதிகாரி நீளமான கோட் பைக்குள் கையை நுழைத்து, பாலிதீன் கண்ணாடி கவரில் வைத்திருந்த போட்டோ ஒன்றைக் காட்டினார்.
 அதில் மிராண்டோ சிரித்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223896654
நயாகரா புயல்...!

Read more from Rajeshkumar

Related to நயாகரா புயல்...!

Related ebooks

Related categories

Reviews for நயாகரா புயல்...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நயாகரா புயல்...! - Rajeshkumar

    1

    கனடா.

    விண்ட்ஸர் விமான நிலையத்தில் விவேக் - ரூபலா இறங்கியபோது - மத்தியான நேரம். வெய்யில் செல்லமாய் அடித்துக் கொண்டிருந்தது. ஏர்ஃபோர்ட் அழுக்காய் - நம் நாட்டு பஸ் ஸ்டாண்ட்டைப் போல அதிகப்படியான கும்பலோடு தெரிந்தது. நிறைய பெண்கள் மார்பில் சட்டை இல்லாமல் திரிந்தார்கள்.

    ரூபலா - விவேக்கின் தோளைத் தொட்டாள். என்னங்க?

    உங்க ஃப்ரெண்ட் தமிழ்மணி ஏர்ஃபோர்ட்டுக்கு வந்திருப்பாரா?

    கண்டிப்பா வந்திருப்பான்... ஓவர்சீஸ் போன்காலில் பத்து நிமிஷம் பேசியிருக்கேனே... வராமே இருப்பானா?

    வரலைன்னா என்ன பண்றது?

    வருவான். எப்படியும் வருவான்

    வரலைன்ன?

    அவன் வேலை பார்க்கிற விண்ட்ஸர். யூனிவர்ஸிடிக்கு டாக்ஸி பிடிச்சு போய் ஏண்டா வரலைன்னு கேட்க வேண்டியதுதான்! ஆனா பய வராமே இருக்க மாட்டான். அவனுக்காக எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதியிருப்பேன். அந்த நன்றியைக் கூடவா மறந்துடுவான்?

    என்னது. அவர்க்காக லவ் லெட்டர்ஸ் எழுதினீங்களா?

    ஆமா... பச்சையப்பன் காலேஜ்ல நானும் அவனும் படிச்சிட்டிருக்கும்போது - தமிழ்மணி ஹெலினாங்கிற. ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணை லவ் பண்ணினான். பயனுக்கு இங்கிலீஷ்ல லவ் லெட்டர் எழுதத் தெரியாது. நான் தான் உபயம்! மரத்தடியில் உட்கார்ந்து எத்தனை லெட்டர் எழுதி குடுத்திருப்பேன்

    ஈஸிட்? அப்புறம்... அந்தக் காதல் என்னாச்சு? உங்க ஃப்ரெண்ட் அந்த ஹெலினாவைத்தான் கட்டிக்கிட்டாரா?

    இல்லை.

    ஏன்...?

    அந்த ஹெலீனா ஏற்கெனவே ஒருத்தரை கல்யாணம் பண்ணி டைவோர்ஸ் வாங்கிகிட்டவளாம். உண்மை தெரிஞ்சதும் தமிழ்மணி ஆடிப்போயிட்டான்

    அடப்பாவமே...?

    ஏர்ஃபோர்ட் லௌன்ஞ்சுக்குள் நுழைந்தார்கள். பெண்களில் பல பேர் திறந்த மார்புகளோடு திரிவதைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள் ரூபலா முகத்தை சுழித்து, அய்யே! என்னங்க இது? என்றாள்.

    விவேக் சிரித்தான்.

    காற்றோட்டமாக இருக்காங்க!

    அந்தக் கிழவியைப் பாருங்க... கண்றாவி...

    ப்ரெஸ்ட்டை எக்ஸ்போஸ் பண்ணிகாட்றது இப்போதைய பேஷன்... எந்த ஆம்பிளையாவது அதை கண்டுகிறானா பார். பெண்ணோட கையையும் காலையும் பார்க்கிற மாதிரிதான். அதையும் உணர்ச்சி இல்லாமே பார்த்துட்டு போறான்

    ரூபலா விவேக்கின் இடுப்பில் தன் ஆட்காட்டி விரலால் குத்தினாள். இப்ப உங்க பார்வைதான் சரியில்லை.

    ஒரு இருபதடி தொலைவில் - கும்பலுக்கு நடுவில் உயர்த்திய அட்டையில் மிஸ்டர் விவேக் அண்ட் மிஸஸ் ரூபலா என்ற வாசகங்கள் தெரிய, விவேக் கும்பலில் நீந்தி அதை நோக்கிப் போனான்.

    தமிழ்மணியின் குறுந்தாடியும், பளிச்சென்ற முகமும், தெரிந்தது. வாடா துப்பறியும் சிங்கமே...?

    என்னடா தமிழ்... ஆள் பெருத்துட்டே?

    இந்த ஊரோட மினரல் வாட்டர் மகிமை...? ஈறுகள் தெரிய சிரித்தவன், ரூபலாவைப் பார்த்து, வாங்க சிஸ்டர் என்றான்.

    நீ ஏர்ஃபோர்ட்டுக்கு வருவியோ மாட்டியோன்னு, ரூபலாவுக்கு ஏகப்பட்ட சந்தேகம்?

    இந்தியாவின் தலைசிறந்த க்ரைம் பிராஞ்ச் ஆபீசரை வரவேற்க வராமே இருப்பேனா... வாங்க காருக்கு போகலாம்...

    நடந்தார்கள்.

    என்னடா ஏர்ஃபோர்ட் இவ்வளவு மோசமா இருக்கு... சேலம் பஸ் ஸ்டாண்ட் மாதிரி...

    இது நயாகரா சீஸன்... இந்த ஸம்மர் பூராவும் ஏர்ஃபோர்ட் இப்படித்தான் இருக்கும். எல்லோருமே வெளிநாட்டு பயணிகள். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் படுத்து தூங்கி ரயிலை பிடிக்கிற மாதிரிதான் இங்கேயும்...? லக்கேஜ்களை சேகரித்துக் கொண்டு ஏர்ஃபோர்ட்டுக்கு வெளியே வந்தார்கள்.

    கார் ரேலி மாதிரி நூற்றுக்கணக்கான கார்கள். தமிழ்மணி தன்னுடைய காரை வரிசையிலிருந்து உருவிக்கொண்டு வெளியே வருவதற்குள் அரைமணி நேரம் கரைந்து போயிற்று.

    கார் ரோட்டைப் பிடித்து வேகம் எடுத்ததும் - காற்று ‘சில்’லென்று வீசியது. தமிழ்மணி 120 மைல் வேகத்தில் காரை விரட்டிக்கொண்டே சொன்னான்.

    அதோ, அந்த நதி தெரியுதே?

    ஆமா...

    அந்த நதிதான் அமெரிக்கா, கனடா நாட்டின் எல்லைகளை பிரிக்குது. நதியின் அந்தக் கரையில் கனடா கஸ்டம்ஸ் இமிக்ரேஷன் பகுதிகளும் இருக்கு

    நயாகரா நீர்வீழ்ச்சி ரெண்டு நாட்டுக்கும் பொதுவானது. இல்லையா... மிஸ்டர் தமிழ்மணி? ரூபலா கேட்டாள்.

    ஆமா சிஸ்டர்... - தலையை ஆட்டியவன் காரின் வேகத்தைக் குறைத்து - ரோட்டின் அந்த சந்திப்புக்கு வந்தான்.

    ரோடு நான்கு பாதைகளாக பிரிக்கப்பட்டு சாதாரண வேகம், வேகம், மிகவேகம், மிகமிக

    Enjoying the preview?
    Page 1 of 1