Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veppamara Theankoodu...
Veppamara Theankoodu...
Veppamara Theankoodu...
Ebook185 pages2 hours

Veppamara Theankoodu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிருணாளினி டார்ஜிலிங் செல்கிறாள். அங்கே மிதுனை அவள் சந்திக்க போவது எதற்காக? வியாபார நிமித்தமா? அல்லது அதில் காதலுக்கு இடம் உண்டா? மிதுனுக்கு வேறொரு பெண் மீது நோக்கம் உண்டு என்று அறிந்தும் மின்னல்களின் தேசமாகிய டார்ஜிலிங்கில் மிருணாளினி தேடிப்போனது கிடைத்ததா? அல்லது மின்னலாக மறைந்து போனதா? தேயிலைத் தோட்டத்தின் ஊடாக ஓர் அற்புதமான கதை இது. வாசித்துப் பாருங்கள்...

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580109909460
Veppamara Theankoodu...

Read more from Kanchana Jeyathilagar

Related to Veppamara Theankoodu...

Related ebooks

Reviews for Veppamara Theankoodu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veppamara Theankoodu... - Kanchana Jeyathilagar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வேப்பமரத் தேங்கூடு...

    Veppamara Theankoodu...

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கொல்கட்டா நூற்றி அம்பது வருஷங்கள் நம் நாட்டின் தலைநகரமாய் இருந்துச்சாமே, அப்பம்மா?

    பேத்தி கேட்க, ரயிலின் தாளத்திற்கு ஏற்ப தன் குண்டு உடலை ஆடத் தந்திருந்த தயாம்மா, முணங்கினாள்.

    ம்ம்...

    ‘கௌஹாத்தி எக்ஸ்பிரஸ்’ஸின் முதல் வகுப்பு, அகண்ட பஞ்சு படுக்கையில் உடலைச் சாய்த்திருந்த பெரியவளுக்கு அரைத் தூக்கம். ரயிலின் தாலாட்டில் விளைந்த சுகம் அது.

    அது பிரிட்டிஷ்காரரின் வசதிக்காக போல - 1911 வரை கொல்கட்டா தலைநகர். ஆனா அதன் பிறகு டெல்லிதான்.

    நாடி வரைப் போர்த்தியிருந்த வெள்ளை விரிப்பைத் துளி விலக்கிய தயாம்மா சலித்தாள்.

    பிறகு எப்படிடீ எனக்குத் தெரியும்? எம்மூத்த அக்காவே பிறந்தது அதற்கப்புறந்தானே?

    என்ன அப்பம்மா, இந்தியா சுதந்திரம் வாங்கினப்போ, எங்கப்பா கூடத்தான் பிறக்கலை. ஆக எனக்கு சுதந்திரம், அதற்கான போராட்டம் பற்றியெல்லாம் ஏதும் தெரியத் தேவையில்லைன்னு சொல்ல வர்றீங்களா?

    போடி வாயாடி. கைக்கு கிடைச்சதெல்லாம் வாசிச்சுட்டு, எனக்கு வேட்டு வைக்கிற நீ?

    இந்தியாவின் கிழக்கு திசையில் நம்ப பயணம். ஆக அதைப் பற்றி ஓரளவு தெரிஞ்சுக்கலாமேன்ற ஆர்வம்... கொல்கட்டா பெரிய துறைமுகம் - ஆக அங்கேயிருந்து வணிகம் செய்வது ஆங்கிலேயர்க்கு...

    ரெயிலின் லயம் மாறுதே... வெளியே பாரு பேத்திக்கு உத்தரவிட்டாள் தயாம்மா.

    கனத்த நீல நிறத் திரையை விலக்கி ஜன்னல் வழியே பாய்ந்த இளையவளின் கண்கள் விரிந்தன.

    பாலத்தின் மேல போறோம் - ஹா... என்னா அகண்ட ஆறு...? கடலாட்டம். மறுகரையே தெரியலை, எழுந்து பாருங்க அப்பம்மா...

    ஆனால் தயாம்மா துளி அசைந்து தரவில்லை.

    தன் பாட்டிக்குமாய் சேர்த்து, விரிந்து தளும்பிய ஆற்று நீரைதான் ஆர்வமாய் பார்த்திருந்தாள் மிருணாளினி.

    நதியின் விளிம்பில் குளித்தவர்களை, துணி துவைப்பவர்களை, நடு ஆற்றில் வலை விட்டு மீன்களை அள்ளக் காத்திருக்கும் சில படகுகளை, அங்கும் இங்குமாய் செல்லமாய் சுழித்து ஓடும் நீரை, சிறு பெண் போல கண்டு ரசித்தாள். பாலத்தின் முடிவில் தெரிந்த எழுத்துக்களை எம்பி வாசித்தாள் - ‘கிருஷ்ணா நதி.’

    அந்த ‘தண்டா பாணி’ விற்றுப் போகும் பயலைக் கூப்பிடு - மறு ஸ்டேஷன் என்னனு அவன்ட்ட கேட்கணும் தயாம்மாவின் உத்தரவின்படி விசாரிக்க,

    விஜயவாடா என்று பதில் கிடைத்தது.

    பெரிய ஸ்டேஷனாச்சே - பதினைஞ்சு நிமிஷமேனும் நிற்கும் - என்ற மிருணாளினி எழுந்து சோம்பல் முறித்தாள்.

    நீங்களும் இறங்குவீங்கல்ல அப்பம்மா?

    எங்கால் முட்டி ரெண்டும் கழண்டே விழுந்திரும்போல. உனக்கு என் சிரமம் புரிஞ்சாத்தானே? முழுசா ரெண்டு நாளு இந்த ரயில்ல குலுங்க வச்சுட்டே - டப்பா போலிருக்கற இந்த டாய்லெட்டிற்குள் நுழைஞ்சு கதவை மூடறதுக்குள்ள எனக்கு மூச்சடைக்குது. சென்னையிலேருந்து பிளேனில் ஏறியிருந்தால் ரெண்டே மணி நேரத்துல கொல்கட்டாவா...ல்ல கல்கத்தாவுக்கு போயிருக்கலாம். பிறகு உன் டார்ஜிலிங்குக்கு காருல ‘விர்ரு’னு கிளம்பிடலாம். இப்ப ஃபிளைட் டிக்கெட்ஸை கூவி கூவி விக்கறான். காமா சோமா பயல்க எல்லாம் பறந்து வர்றான், பறந்தே போறான். நாம இப்படி லொடக்லொடக்குனு ஏம் போகணும்?

    சொன்னேனே பாட்டிம்மா... எனக்கு இந்த அவகாசம் தேவை. தவிர நீண்ட ரயில் பயணத்தை நான் அனுபவிச்சதே இல்லை. முதல் வகுப்பு கேபின், உதவிக்குக் கூடவே மானேஜர்னு சௌகர்யமாத்தானே இருக்குது பயணம்? இப்படி போற வழியை ரசிச்சிட்டு, புத்தகம் வாசிச்சு, பேசி முக்கியமாய், நிதானமாய் யோசிச்சபடி போறது எவ்வளவு புதுமையாயிருக்கு - ரிலாக்ஸிங் டூ.

    பெரியவங்க இருக்கையில் சிறுசுங்க ஏன் யோசிக்கணும்? சென்னையில உன்னைத் தேடி எத்தனை வரன் வந்தது தெரியுமா? அதுவும் எப்பேற்பட்ட வரனுங்க? ஜட்ஜ் மகன், கலெக்டர் பயல், நம்மைப் போல வியாபாரத்துல செழித்த குடும்பம்னு... நீயான்னால் இந்த மாப்பிள்ளைப் பயலைத் தேடி ஓடறே.

    தன் மகன் வயிற்றுப் பேத்தியைக் கடிந்தார் தயாம்மா.

    அவருக்கு மட்டும் இந்தப் பயணத்திற்கான காரணம் மேலும் விளக்கமாய் தெரிந்திருந்தால்,

    ‘அதெல்லாம் நான் உன் துணைக்கு வர முடியாது’ என்று முறுக்கிக் கொண்டிருப்பார்!

    ‘என்னது அந்த மாப்பிள்ளைப் பயலின் பாட்டி, தேவிகாம்மா உன்னை டார்ஜிலிங் வரச் சொல்லி கெஞ்சி கேட்டுக்கிட்டாங்களா? உடனே நாம மூட்டையக் கட்டிக்கிட்டு கிளம்பிடணுமா? பிள்ளை வீட்டுக்காரங்க பெண் கேட்டு இங்க வரணும் - அதுதான் முறை. அந்த தேவிகாம்மாவுக்கு உடம்பு அத்தனை சுகமில்லையாமா? ஏன் என்னை மட்டும் இரும்பாலயா அடிச்சு வச்சிருக்கு?’ என்று பொரிந்து தள்ளியிருப்பார்கள்.

    மிருணாளினியின் அப்பா சுந்தரம் இருபது வருஷங்களுக்கும் மேலாய் வேலை பார்த்தது - டார்ஜிலிங்கில்தான். அதுவும் தேவிகாம்மாவின் கணவர் நாதனின் தேயிலை தோட்டத்தில், மேற்பார்வையாளராய் சேர்ந்து, பொறுப்பான நிர்வாகியாய் உயர்ந்தவர். தமிழரான தேவிகாம்மாவிற்கு, தமிழரான, முக்கியமாய் நாணயஸ்தரான சுந்தரத்தை மிகவும் பிடித்துப் போனது.

    ‘எங்களுக்குப் பிறந்தது ஒரே பொண்ணு. உன்னைய எங்களுக்கான பிள்ளையாய் கடவுள் அனுப்பியிருக்காருப்பா’ என்று உருகிக் கொண்டாடுவார்.

    சென்னையிலிருந்த சுந்தரத்தின் தாயார் தயாம்மாவும், அண்ணன் சந்தானமும் அவருக்குப் பெண் தேடி வைக்க, சமர்த்தாய் வந்து கட்டிக் கொண்டு, மனைவியை டார்ஜிலிங் கூட்டிப் போனார் சுந்தரம். கடல் மட்டத்திற்கு மேல் எட்டாயிரம் அடி உயரத்தில் இருந்த அந்த மலைதேசம் அவர் மனைவிக்கு ஒத்துக் கொள்ளாமல் அவளை மூச்சிழைக்க வைத்தது. அத்தோடு மசக்கையின் படுத்தலும் சேர, அவசரமாய் மனைவியை சென்னைக்கே அழைத்து வந்தார்.

    நீ இங்கேயே இருடா மீனா - அங்கே ஐயாக்கு நானில்லாம முடியாது - நீதான் பார்த்தியே - கொஞ்சம் வேலை ஒழிஞ்சா இங்கே உன்னை, நம்ப குட்டி பயலைப் பார்க்க ஓடி வந்துடறேன் என்று போனவரால் வர முடிந்தது வருஷத்துக்கு இரண்டு முறைதான்!

    அந்நாட்களில் விமானப் பயணம் அரிது, பெரிது. ஆக போக வரவே ஆறு நாட்களாகிப் போகும்! நினைத்ததும் வந்து போக அது அத்தனை வசதியில்லையே!

    மீனாவிற்கும் சுந்தரத்திற்கும் பிறந்தது குட்டிப் பெண். மிருணாளினி என ஆசையாய் பெயரிட்டது பெற்றவள்தான். ஆனால் மிக சீராட்டி வளர்க்குமளவில் அவளுக்குத் தேக தெம்பில்லை. ஆக மிருணாளினியை வளர்த்தது அப்பம்மாதான்.

    மீனா, கணவரைக் கெஞ்சுவாள்.

    இங்கயே ஏதேனும் வேலை பாருங்களேன். உங்களைப் பார்க்காம இருக்கறதுதான் எனக்குச் சுகக்கேடு - என்ன? என்றால், அவர் தான் எப்படி டார்ஜிலிங் போக நேர்ந்தது என்று கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்.

    முதல்ல மூணார் டீ எஸ்டேட்டிலதான் சேர்ந்தேன். ஏனோ அந்த பசுமையும் குளிரும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அப்ப அங்கே வந்த ஒரு மானேஜர் சதா டார்ஜிலிங்கை சிலாகிச்சுப் பேசுவார். ஒரு பக்கம் அரணாய் இமயமலை - மறுபக்கம் சரிவெல்லாம் தேயிலைக் குத்துச் செடிங்க - அங்கேயுள்ள தேயிலை விசேஷமாம் - சீனாவிலிருந்து டாக்டர் காம்பெல் என்பவர் கொண்டு தன் தோட்டத்துல உருவாக்கின ரகம். உற்பத்தியாகற மொத்த சரக்கும் ஏற்றுமதிதான். உள்ளூர் விற்பனையெல்லாம் கிடையாதுன்னுவார்.

    அது அநியாயமில்லையா? நம்ப மண்ணுல விளையறது நமக்கில்லாமயா?

    அங்கே போனதும்தானே மீனா அதுக்கான காரணம் புரிஞ்சுது. அந்த ரகத் தேயிலை நல்ல மணம். ஆனா திடமாயிருக்காது. துளி கசப்பான அந்த வித்தியாச சுவை நம்மவங்களுக்கு ஒத்துவராது. தவிர அந்த தேநீரை, இனிப்பும் பாலும் கலந்து பருக முடியாது... அதிலும் வெள்ளை தேயிலை ஒண்ணு உண்டு. வெறும் நுனி மொட்டை மட்டும் கொய்ந்து உலர்த்துவாங்க. விலை நூறு கிராமுக்கு முந்நூறு, நானூறு ரூபாய்! ஆனா நம்மூரின் வசதி, சம்பளம் அங்கே கிடையாது. நாள் முழுக்க உழைக்கிற கூலிக்கு 20 ரூபாய்க்கும் கம்மிதான் சம்பளம். வயிறு வாடுமோ என்னவோ அந்த நேபாள மக்களுக்கு முகம் வாடறதில்லை. எப்பவும் ஒரு சிநேக சிரிப்பு. வம்பு தும்பு சண்டைன்னு வராது. ஆனா இப்ப ஒரு பெரிய போராட்டம். தங்களை தனி மாநிலமாக்கணும்னு... வாரிசில்லாத நாதன் தம்பதிக்கு நான்தான் எல்லாம். அவங்க எஸ்டேட்டில நியாயமான கூலி. அன்பு, அனுசரணை எல்லாம் உண்டு. ஆக விட்டு வர மனசில்லையம்மா... என்று சுந்தரம் உருக, மனைவியும் தலையசைத்து விடுவாள்.

    ஆனால் சந்தானம் கடிந்து கொள்வார்.

    இப்ப நம்ம நிலைமை முன்னேறிடுச்சு சுந்தரம். மாசாமாசம் சம்பளம் வந்தால்தான் காலம் தள்ளலாம்ன்ற நிலைமை கிடையாது. ரியல் எஸ்டேட் ‘குப்’புனு ஆட்களை இப்ப தூக்கி விடுது. இந்தக் காத்துல நான் ஒத்தை இறக்கை அடிச்சிட்டிருக்கேன். நீயும் வந்தா நாம சேர்ந்து சீராய் பறக்கலாம் என்று.

    நாதன் ஐயாவின் உடல்நிலை சரியில்லைண்ணா, அதுவும் அவர் ஒரே மகள் இறந்ததிலேருந்து பித்து நிலைதான். அம்மா அவரைத் தேற்றி எஸ்டேட்டை நிர்வாகம் பண்றாங்க. ஏற்றுமதியிலும் நூறு கெடுபிடி.

    அவங்க மாப்பிள்ளை, பேரன் உதவலாம்ல?

    மாப்பிள்ளை கைய உதறிட்டுப் போயாச்சே... மகனையே இவங்ககிட்ட விட்டுட்டு போனவர்கிட்ட வேறு எதை எதிர்பார்க்க? பேரன் மிதுனுக்கு நம்ப பாப்பாவைவிட அஞ்சாறு வயதுதான் கூடுதல். ஸ்கூல் முடிச்சதுமே, படிப்புக்கு வெளிநாடு போகணும்ற ஆசை அவருக்கு... ஆக நான் அங்கே இருந்துதான் ஆகணும்.

    பேசாம சின்ன பயலைத் தொழிலைப் பார்க்கச் சொல்லுப்பா. அனுபவம் கற்றுத்தராததா?

    இப்ப தொழிலில் போட்டி அதிகம்ண்ணா. நேபாளம், சிக்கிம், திபெத் எல்லாம் ஒட்டியிருக்க, சைனா நாட்டுக்காரன் டார்ஜிலிங்கில் கை வைக்க பரபரங்கறான். தடுமாறுற எஸ்டேட்டுகளை வாங்கித் தன் பையில் போட்டு, டார்ஜலிங்கில் கால் ஊன்றத் திட்டம்.

    "அவங்க இங்கே எப்படிப்பா சொத்து

    Enjoying the preview?
    Page 1 of 1