Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chirotkavin Payam
Chirotkavin Payam
Chirotkavin Payam
Ebook101 pages1 hour

Chirotkavin Payam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் சுவாரசியமிக்கவை. நம்மை தைரியமூட்டி, நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் கருத்துக்கள் அடங்கியவை. நம்முடைய மனக்கண்களை திறந்து தெளிவுப்படுத்தும் இச்சிறுகதைகளை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateJun 5, 2023
ISBN6580109909889
Chirotkavin Payam

Read more from Kanchana Jeyathilagar

Related to Chirotkavin Payam

Related ebooks

Reviews for Chirotkavin Payam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chirotkavin Payam - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரோட்காவின் பயம்

    (சிறுகதைகள்)

    Chirotkavin Payam

    (Sirukathaigal)

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கேட்கும் ஜெபம்

    2. கடவுளின் கடிதம்

    3. ஏழையால் ஏன்றது…

    4. குப்பையிலிருந்து ஒரு பாடம்

    5. அழைப்பும், அர்ப்பணமும்

    6. உதவி உதவும்!

    7. நன்றி மறவாமை!

    8. (சிறு) பிள்ளையைப் போல...

    9. சீனாவிலிருந்து ஒரு பாடம்

    10. நடத்துதல்...

    11. ஓயாத பரிசுத்தம்!

    12. எதில் என் சந்தோஷம்?

    13. புத்தியுள்ள பிரதியுத்தரம்?

    14. நன்மையாகவே நடக்கும்!

    15. முதலானவைகள் முதலானவைகளாவே இருக்கட்டும்!

    16. அவர் நினைவில் நாம்...

    17. அலையடித்தாலும் அஞ்சிடேன்

    18. நீ நீயாக...

    19. சிரோட்காவின் பயம்

    20. அனைத்திலும் அன்பு

    21. பலன்...

    22. சமாதானப் பறவை!

    23. மன்னிப்பின் மகிழ்ச்சி

    24. ஜீவனுள்ள வார்த்தை

    25. நம் நியாயமான நாதன்

    1. கேட்கும் ஜெபம்

    ஆலயத்திலிருந்து வந்ததும் ஜெப, பாடல் புத்தகங்களை அவற்றிற்கான வழக்கமான இடத்தில் வைத்தாள் ஜமுனா. மேஜையில் தயாராயிருந்த எலுமிச்சம் பழங்களை வெட்டி, அகன்ற கண்ணாடி பாத்திரத்தில் பிழியலானாள் தேவையான சர்க்கரையும் நன்னாரிச் சாறும் சேர்த்து கலக்கினாள். இது ஞாயிறு ஆலய ஆராதனை முடிந்ததும் நடக்கும் நியமம்தான்.

    எதையும் திட்டமிட்டு அதன்படி நடத்த வேணும் ஜமுனாவிற்கு. பழரசத்தை ஊற்றிப் பரிமாறுவதற்கான குவளைகள் கூட மேஜையில் தயாராய் நின்றன. இப்படி கட்டும் திட்டமுமானவளுக்கு வாய்த்த கணவன் நேர்மாறு...!

    ஆண்டவர் ஜோடி சேர்ப்பது அப்படித்தானே?

    பதட்டமான ஒரு ஆணுக்கு ‘கூல்’ மனைவி, சங்கு சக்கரமாய் சுழலும் பெண்ணிற்கு ஆமையாய் வீட்டுள் அடைந்து கிடக்கும் கணவன் என்று!

    அப்படியான தாம்பத்தியத்தில்தானே சுவையும் சுவாரஸ்யமும்?!

    ஜமுனாவிற்கு சின்ன விவரங்களும் அவசியம் - ஆனால் சேகரோ தகவல்களை ஒரு காதில் வாங்கி அப்படியே மறுகாதில் வழிய விட்டுவிடும் ரகம்! ஏதும் மூளையில் பதிவாகாது.

    16 ஆண்டுகளாய் கணவரது குணம் பழகி விட்டாலும் இன்று ஏனோ ஜமுனாவிற்கு எரிச்சல் மண்டியது. சாதம் ஆனதும் எப்போதும் விசிலடிக்கும் குக்கர் என்றேனும் ஒரு நாள் மூடியைப் பிய்த்தடிப்பது போல!

    என்னது, என்ன சொன்னீங்க? அவள் இடுப்பில் கை வைத்து கேட்ட தோரணையில் சேகர் சற்று அரண்டு விட்டான்!

    ல்ல... பக்கத்து வீட்டு கீதாவோட அண்ணன் இறந்துட்டாராமேன்னு... சொன்னேன்...

    அவளது பார்வை புருஷனைத் துளைத்தது!

    அது உங்களுக்கு இப்பதான் தெரியுமா?

    ம்ம்... சர்ச் வாசலில் வச்சு சொன்னாங்க...

    கீதாக்கு ஒரு அண்ணன் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

    தெரியாது ஜமு... ஆனா பாவம் வருத்தமாய் பேசினாங்க...

    கடந்த 12 வருஷமாய் அண்ணன் தங்கைக்கிடையே பேச்சே கிடையாதாம்...

    அடப் பாவமே!

    கல்யாணமாகாத அவர் சேலத்துல தனியாத்தான் இருந்தார்...

    ஓஹோ?

    போன வாரம் ஒரு கல்யாணத்திற்காய் சேலம் போயிருக்காங்க கீதா குடும்பத்தார். அங்கே இவங்களிடம் முன்பு வேலை பார்த்தவர் இவங்களைப் பார்த்திருக்கார். மாரடைப்புன்னு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன கீதாவோட அண்ணனையும் அகஸ்மாத்தாய் பார்த்தவர், அவர் இறந்ததும் சேலத்திலிருந்த இவங்களை சிரமப்பட்டு தேடி. விவரத்தைச் சொல்லியிருக்கார்!

    மற்றபடி அனாதைப் பிணமாய் போயிருப்பார் எங்கண்ணன், நான் பலமுறை போய் பேசியும் அவர் கோபம் ஆறலை... அவருடைய இறுதி சடங்குகளை, ஒரு ஜெபத்தையேனும் செய்ய ஆண்டவர் கிருபை செய்தாரேன்’னு கடந்த வெள்ளிக்கிழமை எங்க தாய்மார் கூட்டத்தில் கீதா சாட்சி சொன்னா...

    இப்போது சேகரின் முகத்தில் சிறு குழப்பம்.

    இத்தனையும் எங்கேயோ கேட்டது போலிருக்கோ?

    மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை!

    வெள்ளி, இரவு சாப்பாட்டின் போது இத்தனையும் சொன்னேன். நீங்க சுவரையேப் பார்த்தாலும் கவனிக்கறீங்ன்னு நினைச்சது தப்பு! இப்ப கீதா சொன்னதாய் எனக்கே தகவல் தர்ரீங்க... ம்ம்?

    ஓ… இதையேத்தான் நீ அப்ப சொன்னியோ?

    சமாளிங்க... நான் சொல்றதை கேட்டாத்தானே?

    அட… இன்றைய பிரசங்கமும் இதேதானே ஜம்மு?

    இப்போது ஜமுனா குழம்பினாள்.

    ஜெபங்கற பெயரில நாம் ஓயாமல் கடவுளிடம் முறையிடறோம், பேசி பட்டியலைத் தர்றோம்... ஆனால் அவரது வார்த்தைகளை காதில் போட்டுக்கறதில்லைன்னார் பாஸ்டர்...

    ஓ...?

    "ஆண்டவர் சொல்லைக் கேட்காமல் அவர் வழியில் மனுஷன் நடப்பதெப்படி? அதிகம் பேசி, புலம்பி, ஆனால் கேட்காமல் போவதுதான் நம் ஜெபத்தின் பெரிய குழறுபடியாம். வேதம் வாசிக்கும் போதும், ஜெபத்திலும் சில

    Enjoying the preview?
    Page 1 of 1