Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Guna Thaanam!
Guna Thaanam!
Guna Thaanam!
Ebook93 pages1 hour

Guna Thaanam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடவுளுடைய வார்த்தை குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. வேத வசனத்தின்படி நம்முடைய வாழ்க்கையை நடத்தும்போது நம்முடைய வாழ்வும் வளம்பெறும். சின்ன சின்ன எடுத்துக்காட்டுகளுடன், இக்கதைகள்தான் எத்தனை சுவாரஸ்யம்.

Languageதமிழ்
Release dateJun 3, 2023
ISBN6580109909891
Guna Thaanam!

Read more from Kanchana Jeyathilagar

Related to Guna Thaanam!

Related ebooks

Reviews for Guna Thaanam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Guna Thaanam! - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குண தானம்!

    (சிறுகதைகள்)

    Guna Thaanam!

    (Sirukathaigal)

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அடிமைப்படுத்தும் ஆசைகள்...

    2. நீரிலும் நெருப்பிலும் நீங்காதவர்

    3. சிரிப்பும் சிந்தனையும்...

    4. உயிரையும் தரும் உன்னத நேசம்!

    5. பாலையும் பசுமையும்

    6. ரத்தினம்

    7. கனிந்தது நெஞ்சம்

    8. நல்ல பொக்கிஷம்

    9. துதியோடு எழுவோம்

    10. பரிசுத்தத்தின் பிம்பங்களாய்...

    11. தாயினும் மேலானவர்

    12. எரிச்சலுக்கு இடமில்லை

    13. அறிந்தவர்

    14. பலப்படுத்துகிறவர்...

    15. பயம் எதற்கு?

    16. அலையடித்தாலும் அஞ்சிடேன்...!

    17. ராட்சதற்கும் பயமில்லை...

    18. பணிந்து கொள்ள?

    19. முள்ளை மீறிய மலர்கள்...

    20. குண தானம்!

    21. ஒரு துளி ஈரம்...

    22. சாக்கு போக்குகள்

    23. அளவுகள்...

    24. சின்ன சின்ன பாவங்கள்

    25. குழப்பமில்லாத காலங்கள்...

    1. அடிமைப்படுத்தும் ஆசைகள்...

    இந்த சிகரெட் புகையில் என்னதான் மாயம் இருக்கோ? நமக்கு நாற்றம் குமட்ட, பல ஆண்களின் கையில் ஆறாவது விரலாட்டம் சிகரெட் தொத்திக்குது! அதற்கு அப்படி அடிமைப்பட்டு போயிடறாங்க...

    தோளைக் குலுக்கினாள் கலா.

    ஏழு, எட்டு பெண்களாய் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் சேர்ந்து மனம் விட்டு பேசுவது ஒரு வருஷமாய் பழக்கமாகி இருந்தது. கூடவே பலகாரம், பானங்களும் உண்டு.

    கலா சொன்னதை ஆமோதித்தாள் சுகுணா -

    கெட்ட பழக்கத்தை ஆரம்பிச்சுட்டா போதும். அது நம்மைச் சுருட்டி தன் கைப்பிடிக்குள் அழுத்திடுதுல்ல? நம்மை அடிமையாக்கி ஆளுது.

    கெட்ட பழக்கங்கள் மட்டுமில்லை... எங்க மாடி போர்ஷனில் ஒரு பொண்ணு - 104 கிலோ எடை! ஹப்பா... நிற்க நடக்க எல்லாமே பாடுதான் - புரண்டு படுத்தாலும்கூட மூச்சு வாங்குமாம். அது பலீமியான்னு ஒரு வியாதிங்கறார் டாக்டர் - அதாவது அசாத்திய பசி...! பசி... அவளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவலம்...

    அடடே... பரிதாபம்தான்... எதுவும் நம் கையை மீறும் போது நம் நிலை பரிதாபம்தான்...

    பெருமூச்சுடன் இடைபுகுந்தாள் லதா -

    நாமும் இப்படிப்பட்ட அடிமைத் தனத்திற்கு விதிவிலக்கில்லைன்னு தோணுது... அவள் பேச, மற்றவர்கள் அவளை பிலுபிலுவென மொய்த்தனர்.

    என்ன இப்படி சொல்றே லதா?

    சரி. நான் என்னைப் பற்றி மட்டும் சொல்றேன். இன்னைக்கு எம்மகன் ஸ்கூலில் பேரன்ட் - டீச்சர் மீட்டிங்... பனிரெண்டு மணிக்கு அங்கே போகணும் - நானோ நம்ப அரட்டைக் கச்சேரிக்கு வந்துட்டேன். முடிஞ்சால் வர்ரேன்னு வேற சொல்லியாச்சு... யோசிச்சா இது ஒரு பொழுதுபோக்கு – அவ்வளவுதானே… அப்படி ஆரம்பிச்ச பழக்கம் என்னை இப்போது அடிமைப்படுத்திருச்சுன்னு தோணுது...

    மற்றவர்கள் மௌனமாய் இருந்தனர்.

    எனக்குக்கூட ஒரு குற்ற உணர்வு உள்ளே குடையுதுப்பா... நேத்து கடைத் தெருவுக்குப் போனேன்... அங்கே ஒரு புது ஸாரியும் வாங்கிட்டேன்... எண்ணூறு ரூபாய்க்கு... குறைப்பட்டாள் சித்ரா.

    அடடே... என்ன கலர்?

    ம்ப்ச்... வீட்டில் நூறு செலவுகள் காத்திருக்க, என் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் அத்தனை ரூபாயை தூக்கி விட்டது ரொம்ப வருத்தமாய் போச்சு...

    நாம என்ன தினமுமா புடவை. நகைன்னு வாங்கறோம்?

    சமாதானம் சொன்னாள் விநோதா.

    ல்ல விநோ - சித்ரா சொல்றது சரிதான் - போன மாசம் எங்கக்கா மகள் கல்யாணத்திற்கு நகை வாங்க நகைக் கடைக்கு போனோம் - அழகாய் ஒரு பவள ஸெட் பார்த்தேன்... அது வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டு, பிடிவாதமும் பிடிச்சேன்னு வையேன்... அவர் பாவம்... வரும் போனஸ் பணத்தில் வாங்கிக்கோன்னார்... நானும் நகைக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்திட்டேன்... ஆனா குஷிக்கு பதிலாய் குற்ற உணர்வுதான் இருக்குது – இப்படி, மொத்த பணத்தையும் சுருட்டிக்கறோமேன்னு என் மேலேயே வெறுப்பும்கூட...

    ம்ம்... புரியுது...

    பிள்ளைங்களுக்கு மியூஸிக் கிளாஸ்ல சேரணும்னு ஆசை... அம்மாக்கு பல் செட் கட்டணும்... ஆபீஸ் போறவருக்கு இன்னும் ரெண்டு, மூணு நல்ல செட் டிரஸ் தேவை. அத்தனையையும் ஓரங்கட்டிட்டு ஒரு நகைன்னா...

    நாம் ஆசைக்கு அடிமைப்பட்டுட்டோம்னு தோணுது... பேராசைக்கு இடங்கொடுத்துட்டோம்...

    உண்மைதான் - எனக்கும் ‘ஸென்ட்’ வகைகளில் ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது - குளியலறையிலேயே மூணு பாட்டில் ஸென்ட்... இருந்தும்...

    "கட்டுப்படாத

    Enjoying the preview?
    Page 1 of 1