Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Pon Maan
Maaya Pon Maan
Maaya Pon Maan
Ebook127 pages1 hour

Maaya Pon Maan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் பாட்டியிடம் வளர்ந்தால் நிவாஸினி. உறவுகளான நிவினுக்கும் நிவாஸினிக்கும் திருமணம் முடிக்க அவர்களது குடும்பமே நினைக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இடையே அந்த நோக்கம் இல்லை. முடிச்சுகள் இறுகிக் கொண்டே போகின்றன. இந்த தவறான புரிதல்களுக்கு காரணம் என்ன? உள்ளே நுழையும் வசீகரனின் பங்கு என்ன? நிறைய மர்ம முடிச்சுகள் வருகின்றன இக்கதையில். ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே வருவதில் யார் யாரை திருமணம் செய்ய போகிறார்கள் என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2023
ISBN6580109909464
Maaya Pon Maan

Read more from Kanchana Jeyathilagar

Related to Maaya Pon Maan

Related ebooks

Reviews for Maaya Pon Maan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Pon Maan - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    மாயப் பொன் மான்

    Maaya Pon Maan

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சிறு வெள்ளித் தட்டிலிருந்த பல வர்ண, வடிவ மாத்திரைகளை யோசனயாய் பார்த்திருத்தார். லில்லி, பெயருக்கு ஏற்றதுபோல் சாமந்தி மலரின் ஒடுங்கிய வெண்ணிற உடலமைப்பு அவருக்கு... என்ன, வயதிற்கு ஏற்ற வாட்டமுண்டு அதில்.

    எழுபத்துநாலு வருஷம் வாழ்ந்து தீர்த்தாச்சு. இனியும் எதுக்கு மருந்தும் மாயமும்? இதுக பின்னால் ஒளிய எனக்குப் பிடிக்கலை மதுரா. வாழ்வின் முடிவை தைரியமாய், ‘நான் ரெடி’-ன்னு சொல்லி ஏற்றுக்கறது எப்படி - அதுதானே அழகு?

    வழக்கமாய் மாத்திரைகளை எடுத்து வந்து, எத்த பாவனையும் இல்லாமல் நிற்கும் மதுரா, இன்று பேசினாள்.

    மாத்திர எடுத்துக்காட்டி நோயோடு அவதிப்படணுமேம்மா - அது எதுக்கு?

    உடம்பை இப்படி பேணிட்டே போனால் அது எப்பத்தான் இல்லாமப் போகும்டீ பெண்ணே?

    சலிப்பான கேள்விக்கு சளிக்காமல் பதில் வந்தது.

    அதெல்லாம் கடவுளின் பொறுப்பு - அவர் கையிலதானே காலம் இருக்குது? அது வரை நாம நம்ப கடமைகளைச் செய்துதான் தீரணும்!

    வழக்கத்தைவிட கூடுதலாய் பேசிய மதுராவை முதிய கண்கள் ஆராய்ந்தன. இந்தப்பெண் இங்கே வந்து இருபது வருஷங்கள் இருக்குமா?

    கான்வென்ட்டின் சிஸ்டர் அல்போன்ஸின் சிபாரிசில் இளம் பெண்ணாய் இந்த வீட்டில் அடைக்கலமானவள்.

    ‘வேலைக்கு’ என்று விடப்படவில்லை.

    அதே சமயம் எவ்வித உறவுமில்லை.

    ஓரளவு படிப்பும், நாகரீகமான பழக்க வழக்கங்களும் இருந்ததால் மதுராவிற்கு இவ்வீட்டில் கெளரவான ஒரு இடம் கிடைத்திருந்தது. வீட்டின் பொறுப்புகள் அவள் கைக்கு இப்போது முழுதும் மாறியிருந்தன. வேலையாட்களோடு உத்தரவு போட்டு விடாமல், நயந்து வேலை வாங்கும் திறமைசாலி. அதிகம் வாய் பேசாததால் வம்புகளும் குறைவு.

    ஆனால் தான், மதுராவின் முன் குறைபடுவது சரியில்ல எனப்பட்டது லில்லி அம்மாவிற்கு.

    திருப்திகரமான தாம்பத்யம் – மூன்று வருஷங்களுக்கு முன்பு வரை கணவரின் பாசத்திலும் பாதுகாப்பிலுமாய் சுகம் கண்ட வாழ்க்கை.

    ஐம்பது ஆண்டு தாம்பத்தியத்தில் குழந்தை இல்லாதது வெறுமைதான் என்றாலும், அதை ஈடு கட்டுமளவிற்கு பணம், பொருள், உறவினர், பாசம் எல்லாம் கிடைத்திருந்ததே.

    கணவர் தேவராஜனுக்கு கால், போலியோவால் நலித்திருந்ததாலோ என்னவோ அவருக்குப் பயணங்கள் பிடித்ததில்ல. ஆக தனக்கான வீட்டை வசதியும் வளப்பமாயும் கட்டிக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அதி நூதனமாய் அமைந்துவிட்டது. வீடு - பாறை நுனியில் கடலுக்குள் குதிக்கத் தயாராய் நிற்பது போலொரு அமைப்பு!

    முரட்டு பாறைகளும் அதற்கு ஈடான ஆக்ரோஷமுமுள்ள கடலுமான அக்கிராமத்திற்கு அது மிகப்பெரிய வீடுதான். பங்களா அமைப்பிலிருந்தது- அதாவது சுற்றிலும் நடைபாதை ஓடியபடி.

    அங்கே உப்புக்காற்று அரிக்காதபடி இரும்பு இருக்கைகள் விதவிதமான டிஸைன்களின் பதிக்கப்பட்டிருக்கும்.

    வரவேற்பு, உணவிற்கு, சமையலுக்குப் போக ஐந்து படுக்கை அறைகள்... அதைக் கட்டியபோது தேவராஜனின் அண்ணனான நீதராஜன், தாளாமல் கேட்டேவிட்டார்.

    ‘உனக்குப் பிள்ளைங்க இல்லியே தேவா – பிறகேன் இத்தனாம் பெரிய வீடு? வயசான காலத்துல இதைக் கட்டிக் காப்பாத்தறது லேசாய் இராதுப்பா.’

    அப்படிச் சொன்ன நீதிராஜன் தன் மனைவியுடன் ஒரு விபத்தில் இறந்துபோக, அவரின் ஒரே மகன் நித்தனின் திருமண வாழ்வும் சுகப்படவில்லை.

    இதெல்லாம் தேவராஜன் எதர்பாராதது. விதி வலிமையாய் தன் குடும்பத்தை ஆட்டி வைப்பதாய் அவருக்கொரு வருத்தம். நித்தின்,

    ஆப்பிரிக்க சுரங்கங்களில் ஒரு வேலையை எடுத்துக்கொண்டதாய் சொல்லி இருண்ட கண்டத்தில் மறைந்தவர்தான்... எந்தத் தொடர்பும் இல்ல.

    தன் மகன் நிவின் ராஜனை, தனது சித்தப்பா நல்லபடி தன் வளர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை அவருக்கு. மனைவியை சமாளிக்க முடியாத தன்னால், அவள் உதறிவிட்டு போன மகனையும், சரிவர உருவாக்க முடியாது என்று ஒதுங்கியும் இருக்கலாம் நித்தின். ஆனால், தன் அண்ணனின் பேரனை கருத்தாதான் பார்த்துக்கொண்டார் தேவராஜன்.

    சில நூறு குடும்பங்களே உள்ள சிற்றூரில் அவருக்கு பெரு மதிப்பு. அவரை ‘ராசைய்யா’ என்றே குறிப்பிட்டார்கள். லில்லியை ‘ராசைய்யா வீட்டம்மா’ என்று.

    கேரள கட்டிட நிபுணரை வைத்து கட்டிய அந்த வீடு காத்திரமானது. இருந்தும் சின்ன வேலை வந்தாலும் உடனடியாய் சரிபார்த்து விடுவதில் நாற்பது வருஷங்களைத் தாண்டியும், அவ்வப்போது ‘பெயிண்ட்’ பூசிக்கொண்டு, வீடு பொலிவு மாறாமலிருந்தது...

    தேவராஜன் சற்று தன் உடலையும் பேணியிருக்கலாம். ஆரோக்கியத்தை அசுட்டைப் பண்ணியவரை வியாதி வந்து ‘சட்’டென கவ்விக்கொண்டதாய் லில்லியம்மாவிற்கு வருத்தம். ஒண்டியாய் விடப்பட்டவருக்கு தொடர்ந்து வாழ்வதில் பற்றில்லைதான் மரண தூதனுடன் ஒளிந்து ஆடுவதிலும் உடன்பாடில்லை. அதிலும் இனி பூமியில் இருந்து தான் செய்யாமல் தீராது என்ற எந்த கடமையும் இல்லாதபோது எதற்கிந்த இழுபறி?

    இன்றைய சிறுபிள்ளைகளுக்கு ‘பேசி’யைக் காட்டி உணவு தருவதுபோல, மூத்தவருக்கு பேசியே மருந்து தந்தாள், மதுரா.

    இன்னும் சில நாட்களில் நம்ப வீடு நிறைஞ்சு இருக்கப் போவுதும்மா. நீங்க ஏதும் எடுத்துச் செய்ய வேணாம்மா... ஆனா வரும் வீட்டுப் பிள்ளைங்க பேச்சு சிரிப்பைக் கேட்பதும் கூட கொடுப்பினை இல்லீங்க?

    அது நவம்பர் மாதமென்றதால் அறை ஜன்னல்கள் வெளியே மூடிக்கிடந்தும், அதை மீறி வெளியே அலைகளின் ஆரவாரம் கேட்டது... வீட்டின் மௌனத்தில், இதுதான் இவருக்கான பேச்சுத் துணை.

    ‘என்ன இன்னக்கு உன் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கு?’

    ‘செல்லம் கொஞ்சறியாக்கும்?’

    ‘பௌர்ணமி வருதே... ரொம்ப ஆடிடாத...’ என்று லில்லியம்மா அவ்வப்போது பேசுவது கடலின் அலைகளுடந்தான்!! வீடு மனிதர்களால் நிறைய, கடலின் ஓசை தானாய் அடங்கிவிடும்... ஆனால், இப்போது வீடு வருபவர்கள் ஆனந்தமாய் பேசி சிரிக்கப் போகிறார்களா? ஏதோ கலவரம் நடக்கப்போவதாய், அவருக்குள்ளே ஒரு கொத்தல்! கூட்டமிட்ட நினைவுகளுமே லில்லியைக் களைப்படைய செய்தன. முதுமை அப்படித்தானே.

    தான் செய்ய நினைத்தவையும், நிறைவேறாத பேனா, ஆசைகளும் அவரை பெருமூச்செறிய செய்தன.

    இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1