Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seettu Kattu Maaligai
Seettu Kattu Maaligai
Seettu Kattu Maaligai
Ebook138 pages1 hour

Seettu Kattu Maaligai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பவித்ரா, ரூபாவிற்கு இடையே படிக்கும் காலத்தில் அரும்பிய நட்பு, அந்த இளம் பெண்கள் இணைந்து வேலை பார்க்கும் வரைக்குமாய் வளர்கின்றது.
மலை கிராமம் ஒன்றிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் பொறுப்பேற்கும் அவர்களுக்கு நம்பவே முடியாத அனுபவங்கள் காத்திருக்கின்றன.
சீட்டுக்கட்டின் 52 சீட்டுகளைக் கொண்டு வித விதமான அமைப்புகளை உருவாக்குவது ஒரு கலை.
துல்லியமாய் அவற்றை இரண்டு, மூன்று அடுக்கு மாளிகையாய் கூட எழும்பி விடலாம்- அதற்கான திறமை இருந்தால்...
ஆனால் சுவை நிலைத்து நிற்குமா என்ன? அதே போல சிநேகிதிகளின் வாழ்வில் நம்ப முடியாத அதிசய நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
காதல், பயம், மர்மம், குழப்பம் - கலந்து எழும் அவர்களது மாளிகை சீட்டுக்கட்டாய் சரிந்து, சிதறுமா அல்லது சுவாரஸ்யம் குறையாமல் நிற்குமா?
நிச்சயம் இது உங்களை வெகு சுவாரஸ்யமான உலகிற்கு கூட்டிப் போகும்...
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580109906328
Seettu Kattu Maaligai

Read more from Kanchana Jeyathilagar

Related to Seettu Kattu Maaligai

Related ebooks

Reviews for Seettu Kattu Maaligai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seettu Kattu Maaligai - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    சீட்டுக் கட்டு மாளிகை

    Seettu Kattu Maaligai

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சற்று முன்பு ஆவி பறக்க தன் முன் வைக்கப்பட்ட தேநீர், முழுக்க ஆறியிருந்தது...

    ஆக எத்தனை நேரமாய் தான் இப்படியே உட்கார்ந்திருந்தது...?

    குழப்பமாய் யோசித்தாள் பவித்ரா.

    டீ ஆறிடுச்சு பாரு... சித்தி ஆசையா உனக்காய் போட்டது. ஸ்கூல், காலெஜ் படிக்கும் போது கூட இதுக்காய் எவ்வளவு ஆசையாய் வீட்டுக்கு ஓடி வருவே?

    பெருமூச்செறிந்த ரஞ்சிதா, இளையவளிடமிருந்து பதில் வராததால்,

    வேற டீ போடவா, பவி? கொஞ்சலாய் கேட்டாள்.

    தேநீர் கோப்பையை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. சித்தி தயாரிக்கும் தேநீர் அலாதி.

    சீவிய இஞ்சியோடு கொதிக்கும் நீரில் தேயிலையை சேர்த்து மூடி விட்டு, பீங்கான் குவளையில் கால் கரண்டி பாலும் அளவான சர்க்கரையும் இட்டு, இரண்டாம் நிமிடம் அதில் வடிகட்டிய தேநீர் சேர, கிளம்பும் மணம் வேறெங்கும் கிடைக்காது.

    ஆறினால் இதில் ஆடை தட்டுவதுமில்லை.

    ஆனாலும் அதை மறுபடி சூடாக்க, சித்தி சம்மதிப்பதில்லை.

    'வேறென்ன வேலை எனக்கு? ரெண்டு நிமிஷத்துல புதுசாய் ரெடி பண்ணிடறேன்' என்று பறப்பாள்!

    அது அவளது டெக்னிக்... தன் காரியங்களை சாதித்துக் கொள்ளும் வழிமுறை!

    அப்படித்தான் தலைவி இல்லாத இந்த வீட்டில் ரஞ்சிதா புகுந்தது!

    அம்மா இறந்த பின் அப்பா துரைசாமியும் இவளுமாய் எஞ்சிய வீட்டில், வெறுமை இருந்ததென்றாலும், இருவரும் ஒருவரை மற்றவர் அன்பால் தாங்கி, திருப்தியாகத்தான் இருந்தார்கள்.

    அம்மா வழியில் நெருங்கிய உறவாய் பெரியவர்களில்லை அப்பா வழியில் இருந்தவர்கள், இரண்டாம் திருமணத்திற்கு ஏவினார்கள் தான்.

    'இந்த பருவத்து பொம்பளைப் புள்ளைய வளக்கது லேசில்லை, துரை.’

    'என்ன சித்தி கொடுமையா? அம்மாக்காரி ரெண்டு அடி வைக்காமலேயேவா வளர்ப்பா? அதோட தாயோட கவனிப்பும் கிடைக்குமில்ல? நீ வெளிய வாசலுக்கு போவணுமில்ல?'

    'இன்னும் பத்து வருஷத்தில் பவிக்கு கல்யாணமாகும். அப்ப உனக்கு அம்பது வயசு கூட இராது... சொச்ச வாழ்க்கைக்கு உனக்குன்னு துணை அவசியம்ப்பா.'

    இந்த தூபம் ஏதும் வேலை செய்யவில்லை.

    ஒரு மழை நாள் சாயங்காலம் மழைக்கு இவர்கள் வீட்டு வாசலேறி நின்ற ரஞ்சிதம் உரிமையாய் உள்ளே வந்தாள்.

    'அடடே, இது உன் வீடா பவித்ரா? மழை அதிகம்' என்றபடி துரைசாமியும் மரியாதை காட்ட, பேசி பல தகவல்களை சேகரித்த ரஞ்சிதா, அடுத்த முறை உரிமையாய் சமையல் கட்டிற்கு போய் தேநீர் தயாரித்தாள்.

    பருகிய அதன் சுவையும், அதனூடே பரிமாறப்பட்ட ரஞ்சிதாவின் கலகலப்பான பேச்சும், தகப்பன் - மகளை ஒருசேரத் தட்டி விட்டது! வீட்டில் இப்படி பேச்சும் பரிவுமாய் ஒரு பெண் இருந்தால் அதன் வெளிச்சம் தனிதான் என்ற யோசனை இருவருக்குள்ளும்!

    பள்ளியிலும் பவித்ராவிற்கு தனி கவனிப்பு கிடைத்தது.

    சுவையான பலகாரம், கியூடெக்ஸ், பிரத்யேக சிரிப்பு போக, சின்னவளை தன்னருகே அமர்த்தி பேசுவாள்.

    'உனக்கு வயசு பன்னிரெண்டு ஆயாச்சுல்ல, பவி?'

    'ஆமாம் மிஸ்.’

    ‘பெரிய பொண் ஆகறது பற்றி ஏதும் தெரியுமா?’

    ‘ம்ம்...’

    ‘யெஸ் ஆர் நோ?’

    ‘நாலு பேர் எங்க கிளாஸ்ல அப்படி ஆயாச்சு... சொன்னாங்க.'

    அந்த மாற்றம் பற்றி எளிமையாய், மிரட்டாமல் விளக்கியவள்

    மொத்தத்தில் அது சந்தோஷமான விஷயம். முழு பெண்ணாகிறே அவ்வளவுதான். இப்பவே இத்தனை அழகாய் இருக்கற நீ, உங்கப்பா போல உயரமாய் நின்றால் அசத்துவே... ரிலாக்ஸ்டாய் இரு. என்ட்ட சொல்லு சரியா?

    விதம் விதமாய் உடுத்தி வரும் ஒரு ஆசிரியை, தன்னிடம் இத்தனை நெருக்கமாய் பேசியதில், பவித்ரா நெகிழ்ந்தாள்.

    இளகிய மனம் ஒட்டிக் கொண்டது.

    ரஞ்சிதாவின் 34 வயதை, அவளது சற்று பருமனான உடலும், தாடை பிதுங்கலும் மறைக்காமல் காட்டின.

    'குடிகார அப்பன், மக சம்பாத்யத்துல நீந்தறான். ரஞ்சிக்கு இனி கல்யாணமானது போலதான்.'

    என்ற ஊரார் பேச்சு இவர்கள் வரையில் எட்டியிருந்தது.

    தன் வீடு வேறு பக்கம் என்றாலும், பவித்ராவுடன் மாலை சேர்ந்து வரும் ரஞ்சிதா, தேநீர் தயாரித்து அதை அவர்களோடு உட்கார்ந்து பேச்சோடு பருகி விட்டுத்தான் போவது.

    அந்த நேரத்தை மகளும் தகப்பனும் எதிர்பார்க்கத் துவங்கினார்கள்.

    அது புரிந்த ரஞ்சிதா பள்ளியின் சீனியர் ஆசிரியை ஒருவரை விட்டு திருமணப் பேச்சை எடுக்கச் சொல்ல, மற்றவை மளமளவென்று நடந்தன.

    எளிமையான வைபவம்...

    'மாதம் இவ்வளவு தந்துடறேன்' என்று தகப்பனை தள்ளி வைத்தாள்.

    சில நாட்களில் புரிந்தது - ரஞ்சிதா தேநீர் தயாரிக்க மட்டும்தான் அடுப்படிக்கு போவாள் என்பது!

    'எடுப்பு சாப்பாடு வாங்கிடுவோம். மளிகை, காய்கறி, கேஸ்னு எத்தனை செலவு? அதோடு சமைச்ச பிறகு பாத்திரம் கழுவற வேலை வேற! ஒரு நேரம் வாங்கற சாப்பாடே எங்களுக்கு ரெண்டு வேளைக்கு வரும்'

    அது கூட பரவாயில்லை. துரைசாமியும் பவித்ராவும் சமையலில் ஓரளவு தேறியிருந்தார்கள்.

    ஆனால் அதுவரை பணம் ஒரு பிரச்சனையாகவே இல்லாத அவ்வீட்டில், அது புது மிரட்டலாய் எழும்பியது!

    'என்ன ரஞ்சிதா, முக்கால் சம்பளத்தை உன்கிட்டதானே தர்றேன்?'

    ‘மீதி கால்வாசியும் வந்தால் ஓரளவு சமாளிக்கலாம்.’

    'சேமிப்பு அவசியம்மா. நமக்கு சொந்த வீடு தோட்டத்து காய்கறி...'

    ‘ரெண்டு பொண்ணுங்க இந்த வீட்ல இருக்கோம்னு நினைவிருக்கணும் உங்களுக்கு இளவயசிலதானே பூ, அடிக்கடி புதுசுன்னு ஆசைப்படுவோம்?'

    தன்னை தன் டீன்-ஏஜ் மகளுடன் சேர்த்துக் கொள்பவள், 'நகைச் சீட்டும் போடறேன். அது சேமிப்புதானே? அப்பா, மாசம் ரெண்டு சேலை எடுத்துத் தர்ரார் - அதுக்கு ஜாக்கெட் தைக்கவே நூறு, நூறுன்னு இரநூறாயிடுது' அலுப்பாள்.

    இதைப் பல்லைக் கடித்தபடி கேட்டு நிற்பாள் பார்கவி - ஏனெனில் சித்தியின் தகப்பன் தள்ளாடி, இந்த வீட்டைத் தேடி வருவது எதையேனும் வாங்கிப் போகவே தவிர, கொடுப்பதற்கில்லை என்பது மிகத் தெளிவு.

    'மிக்ஸி ரொம்பப் பழசு - டி.வி., ஃப்ரிட்ஜ் கூட நமக்கு புதுசு தேவை. ஸோபா - ஸெட் போட்டதும் வீடு எத்தனை களையாய் தெரியுது? இதையெல்லாம் பார்த்துதானே மற்றவங்க நம்ப அந்தஸ்தைக் கணிக்கறாங்க?'

    ‘அதெல்லாம் தேவையில்லாத... வறட்டு...’

    ‘நோ... நோ' ரஞ்சிதாவின் குண்டு முகம் மறுப்பாய் அசையும்.

    'இப்படி வசதியாய் வளர, பவி கான்ஃபிடெண்டாய் இருப்பா. மற்ற டீச்சர்ஸ் வந்து நம்ப வீட்டை நோட்டமிட்டுட்டு போக, நான் குறுகுவது போல, பவிக்கு... அந்த நிலைமை வேணாம்.'

    இப்படி சின்னவளை சாக்கிட்டு செலவுகள் பெருகின - வரவிற்குள் அடங்காமல் வீங்கின... சில வருடங்களிலேயே வைத்தியர்கள் கூட பெயர் வைக்கத் திணறிய நரம்பு தொடர்பான நோயில் அப்பா தளர்ந்தார்... மருத்துவ செலவு எகிற, கடன் வாங்க நேர்ந்த போதுதான் சித்தி, சீட்டு சேர்க்க ஆரம்பித்தது.

    'பண்டிகைக்கு சீட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1