Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchanthirangalin Nadanam!
Natchanthirangalin Nadanam!
Natchanthirangalin Nadanam!
Ebook150 pages1 hour

Natchanthirangalin Nadanam!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

அஸ்வினி, பரணி என்ற நாயகி , நாயகனின் பெயர் பொருத்தம், அவர்கள் வாழ்வில் அத்தனை அம்சமாய் அமையவில்லை. நட்சத்திரங்கள் மின்னி, மறைந்து ஆகும் கண்ணாமூச்சி ஆட்டம் போல போகும் அவர்கள் வாழ்வு நாடகத்தை செட்டிநாட்டு தளத்தில், அவற்றின் அழகான வீட்டில் சுவாரஸ்யமாய் அமைத்திருகிறார் காஞ்சனா ஜெயதிலகர்.

இருவரின் தாத்தாமார் இளையவர்களை இனைக்க முயற்ச்சித்தாலும், வேறு சில விசித்திரமான கதாபாத்திர்ங்கள்ள் நடமாடிய அவ்வீட்டில் அது சுலபமாயில்லை... குழப்பமும், திகிலுமான சூழலில் வாசகர்கள் அமிழ்ந்து போவது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580109904930
Natchanthirangalin Nadanam!

Read more from Kanchana Jeyathilagar

Related to Natchanthirangalin Nadanam!

Related ebooks

Reviews for Natchanthirangalin Nadanam!

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchanthirangalin Nadanam! - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    நட்சத்திரங்களின் நடனம்!

    Natchanthirangalin Nadanam!

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஓங்கிய மரங்கள் அசைவற்று நின்றன.

    காற்றடித்தால் ஆடுவதற்கென்றே அவை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது, அஸ்வினிக்கு! மலைச்சரிவின் மரங்கள் காற்றுக்குப் பேயாடுவதை அவள் பார்த்ததுண்டு. இப்போது அப்பிராணி போல நிற்கின்றன...

    தன் நிலைமை நேர்மாறு என்று பட்டது அவள் மனதில்.

    இத்தனை காலம் பெரும் பதட்டமின்றி கழிந்த வாழ்வில் சூறாவளி பாயப் போகிறது!

    இதுவரையான நாட்கள் சுலபமானவை... சுகமானவை என்று விட முடியாது. அஸ்வினி சிறுமியாய் இருந்த போதே அம்மா இறந்தது, தொடர்ந்து அப்பா சொல்லாமல் தேசாந்தரம் போனது... பெரிய வீட்டில் புழங்கிய தான், வேற்று நாடு போய் அங்கே ஒரு சிறு வீட்டில் வாழ்ந்தது என்று குலுங்கலான வாழ்க்கைதான்.

    ஆனால் தாத்தாவின் பாதுகாப்பு இருந்தது. தமிழ்நாட்டை விட இலங்கையில் பள்ளிப் படிப்பு சுலபமும் சுவாரஸ்யமும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறாள். பிரியமான எளிய மக்களின் நட்பு, மலைப்பகுதியின் தனி வீட்டில் வேண்டியளவு தனிமை, என்று இருந்தாலும் தாத்தாவிற்கு நிறைய வருத்தம்.

    அன்னம்மை பங்களா'வில் இருக்க வேண்டிய உன்னை இப்படி ஓட்டு வீட்டில வச்சிருக்கேனே அஸ்வி?

    அதுவும் காரை அதாவது ஒட்டு சுண்ணாம்பு வீடுதானே தாத்தா?

    விவரம் தெரியாம சிரிக்கறே... அது பாட்டி வழியே உங்கம்மாவின் சீதனமாய், உனக்கானது. அத்தனை பெரிய வீட்டிற்கு ஏற்ப நகையும் பட்டுமாய் நீ அங்க இருக்கறதை நான் பார்க்கணும்டா.

    நீங்க... உங்களோட இருக்கறதே எனக்குப் போதும்.

    என்னாலத்தான் பிரச்சனை. உம் பாட்டி அன்னம்மை என்னைக் காதலிச்சதில் அவ வீட்டாருக்கு ஆத்திரம்... நமக்குச் சமதையான பயல் இல்லை இவன்ர காட்டம்! ஆனால்... இப்போ யோசிக்க அது சரிதான். எனக்கு செட்டி நாட்டுக்காரங்களைப் போல காசைக் கையாளவோ, பெருக்கவோ தெரியலைதான். பல பெருந்தனக் குடும்பங்களைப் போல அன்னம்மை அவ வீட்டுக்கான ஒரே வாரிசு. இள ரத்தமாயிருந்த எனக்கு அவங்க வருத்தம் விளங்கலை... அவங்க உயிரையே பரிச்சிட்டது போல துடிச்சாங்க...

    பெரியவர் குமரகுரு பழைய ஞாபகங்களில் தளர்ந்து தழுதழுப்பார்.

    உங்களுக்கு கண்கள் போல ரெண்டு பொண்ணுக பிறந்தாங்களே - பிறகென்ன?

    ம்ம்... மூத்தவ அகிலா மிலிட்டரிக்கார மாப்பிள்ளையோட வடநாட்டுல சௌக்கியமாத்தான் இருக்கா. அவ பையனும் ஆர்மிலதான் சேரப் போறானாம்... இளையவ அமுதா, உம் பாட்டியைப் போல காதல்ல விழுந்துட்டாப் போ...

    தாத்தா உதட்டைப் பிதுக்க, பேத்தி அவரைக் கட்டிக் கொள்வாள்.

    உங்கப்பா உன் அருமையை உணராம ஓடிப் போயாச்சு...

    அப்படியில்ல தாத்தா... அம்மா 'திடும்'னு விபத்துல இறந்ததை அவரால தாங்கிக்க முடியலை.

    உம் பாட்டி இல்லாம நா இல்லையா அஸ்வி?

    அது வேற... பாட்டி தன் பொண்களுக்குக் கல்யாணம் செய்து, பேரன் பேத்தியையும் பார்த்தாங்க... ஓரளவு நிறைவான வாழ்க்கை... அம்மா புது ஊர் போய் குளிக்க இறங்கின இடத்தில் இறந்ததில் அப்பாக்கு பிரமை பிடிச்சிருக்கும்...

    எனக்குந்தான்... ஆனால் சமாளிச்சு இருக்கறது உனக்காகத்தான் அஸ்வி.

    பட்டாய் பளபளக்கும் பேத்தியின் தலையை வருடுவார் குமரகுரு.

    என் தைரியமும் நீங்கதான் தாத்தா...

    தாத்தா உனக்கு நல்லதுதான் செய்வேன்னு நம்பறே இல்லியா? என்ன?

    ம்ம்...

    நாலையும் யோசிச்சுதான் உன்னை பரணியைக் கல்யாணம் செய்துக்கச் சொல்றேன்.

    பேத்தியின் முக மாற்றத்தைக் கவனியாதவர் போல அந்தப் புகைப்படத்தை அவளிடம் தந்தவர் -

    நீ விளையாட்டுப் பிள்ளையாய் அவனைப் பார்த்திருப்ப... இப்போ எத்தனைப் பொறுப்புனர? முன்னே வெடவெடன்னு நின்னவன் இப்போ பார்வைக்கு ராஜாதான்.

    உடம்பு வளரும், மாறும் தாத்தா... ஆனா குணம்? நம்ப சுபாவம்ங்கறது லேசில் மாறாது. என்னைப் பொறுத்தவரை பரணி சரியில்லை.

    அழுந்த சொன்ன பேத்தியின் முகம் சிவந்ததைப் பார்த்தவருக்கு அதில் வெட்கம் இருந்ததாய் ஒரு எண்ண ம்...!

    புகைப்படத்துடன் மலைச்சரிவிற்கு வந்து அமர்ந்தவளின் கோபம் கூடியது.

    பெண்ணிடம் பையனின் படத்தைக் காட்டி கல்யாணத்தை நிச்சயிப்பது இன்றும் நடக்கிறதா என்ன?

    இந்தியாவின் சில பகுதிகளில் பால்ய திருமணங்களே உண்டாம்... ஆனால் படித்த வசதியுள்ள குடும்பங்களிலுமா?

    இந்த விஷயத்தில் படிப்பிற்கெல்லாம் வேலை இல்லை... பணம் வெகு வேலை பார்க்கிறது!

    அல்லது தனக்கு பரணி மீது ஆர்வமில்லை என்பது தெரிந்த தாத்தா ஏனிப்படி தன்னை வற்புறுத்துகிறார்?

    முன்னே நீ பார்த்து பழகினவன்தான்... ஆனால் இதுவரை நீ அவனைப் புருஷனாய் நினைத்திருக்க மாட்டாய்... இதில் அவன் ராஜா போலில்லை?

    படத்தின் தோற்றம், தோரணை எல்லாம் தாத்தா சொன்னது போலத்தான் - ஆனால் குணம்...? சில சம்பவங்களை அசை போட்டவளின் மனம் சுருங்கியது...

    செட்டி நாட்டு வீடுகள் பொதுவாய் நீண்டு ஒடுங்கியவை - பல இடங்களில் வெளிச்சம் கம்மி. சாப்பாடு, சமையலறை உள்ள இரண்டாம் கட்டில் ஏறக்குறைய இருட்டுதான்.... மாலை நன்கு இருட்டிய பிறகே மங்கலான மஞ்சள் பல்புகள் ஒளிரும். அப்படி சுவிட்சை இவள் ஒரு மாலை நேரம் தட்டிய போது கட்டிக் கொண்டிருந்த இரு உருவங்கள் விதிர்த்து விலகின... குடுகுடுவென வேலைக்கார குட்டி ஓட, அசட்டுச் சிரிப்புடன் நின்ற பரணி...அந்த நினைவை மறக்க முடியுமா?

    வார இறுதியில் பெரிய திரைகட்டி வீட்டில் சினிமாப் படங்கள் காட்டப்பட, தன்னை எவ்வளவு ஒட்டி அமருவான்?

    திண்பண்டங்களை இவள் கையில் திணித்து, பேச முயன்ற நேரங்கள் கடும் சங்கடமாய் இருந்ததே?

    கடைசியாய் அவனைப் பற்றிய ஞாபகம், மேலும் வெறுப்பானது.

    காரைக்குடி வீடுகள் விஸ்தாரம். ஒரு தெருவில் ஆரம்பித்து அடுத்த தெரு வரை நீளும் - என்றாலும் கிராமத்து தெருக்கள் நேர்மாறானவை... இப்போதும் கூட மண்ணாலான ஒடுங்கிய தெருக்கள் தான். அம்மழைக் காலத்தில் அங்கே ததும்பிய சேறை அவனது பெரிய கார் இவள் மீது இறைத்த போது, இவளைத் திரும்பிக் கூட பார்க்காமலல்லவா போனான்? இவள் பாதை ஓரமாய் ஒதுங்கி நின்றதைப் பார்த்தவன் கார் வேகத்தைக் குறைக்காதது முதல் தப்பு... மெதுவாய் நகரும் வாகனம் அப்படி சேற்றைத் தெறிப்பதில்லை.. அப்போது வீட்டின் முன்பகுதி சீராக்கப்பட்டுக் கொண்டிருக்க, இவர்கள் தங்கியது பின்கட்டு அறைகளில். ஒற்றை 'ஃபேஸ்' மின்தொடர்பு கீஸருக்கு வழி விடவில்லை. ஆக அந்த மழை நேர இரவில் குளிரில் குளித்து, துணிகளை அலசியபோது இவளுக்குள் வெறுப்பின் வெம்மை.

    மொத்தத்தில் 'பொறுக்கி' என்ற பிம்பம்தான் பரணியைப் பற்றி அவளுள்... அவனைப் புருஷனாக ஏற்பது...?

    அவளுள் ஒரு நடுக்கம் ஓடியது.

    அஸ்வினியின் அப்பா தனசேகரனும் கண்காணாமல் போக, பேத்தியின் பொறுப்போடு பெரியவர் குமரகுருவிற்கு பங்களாவின் பராமரிப்பும் சேர்ந்தது.

    புரோக்கர் சிங்காரம் பசித்த ஓநாய் போல வீட்டை வட்டமிட்டான்... அரை உயிரில் கிடக்கும் சிறு விலங்குகளை அவை தின்னக் காத்திருப்பது போல.

    நாம ஒன்னும் டவுனில் இல்லீங்க... சிறு கிராமத்து வீடு. விலை பேசறது சிரமம். கதவு, ஜன்னல், தூணு, முகப்பு, அலமாரி, படங்கள், பெல்ஜியம் கண்ணாடி எல்லாத்தையும் பிரிச்செடுத்துடலாம். நல்ல காசு தந்து வாங்க ஆளுங்க ரெடி. உத்திரத்திலிருந்து அகப்பை வரை விற்கும் - சகலமும் பர்மா தேக்குல்ல?

    என்றவனை குமரகுரு விரட்டி விட்டார்.

    சிங்காரம் காரைக்குடி டவுன் பகுதியில் சின்னதாய் ஆரம்பித்த கடை மூன்று பங்காய் பெருகியிருந்தது. புராதன வீட்டின் பொருட்களை சொற்ப விலைக்கு அள்ளிக் கொள்பவன், அவற்றை பெரிய விலைக்கு விற்பான் - பூஜை அறை. படங்களும் சிறு விளக்குகளுமே ஒரு லட்சத்தை எட்டும்! மூதாட்டி ஒருத்தியின் ஆபரணம்,

    Enjoying the preview?
    Page 1 of 1