Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sudum Nilavu Sudaatha Sooriyan
Sudum Nilavu Sudaatha Sooriyan
Sudum Nilavu Sudaatha Sooriyan
Ebook258 pages2 hours

Sudum Nilavu Sudaatha Sooriyan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580109901641
Sudum Nilavu Sudaatha Sooriyan

Read more from Kanchana Jeyathilagar

Related to Sudum Nilavu Sudaatha Sooriyan

Related ebooks

Reviews for Sudum Nilavu Sudaatha Sooriyan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sudum Nilavu Sudaatha Sooriyan - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    சுடும் நிலவு சுடாத சூரியன்

    Sudum Nilavu Sudaatha Sooriyan

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jayathilakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    சுடும் நிலவு சுடாத சூரியன்

    1

    புரண்டு புரண்டு படுத்தாள்.

    தூக்கம் வராமலில்லை. ஆனால் நெருங்கிய உறக்கம் அடிக்கடி நழுவியும் கொண்டிருந்தது.

    காரணம், படுத்திருந்த முரட்டுக் கட்டில்.

    இதைக் கட்டில் என முடியாது.

    மொரமொரப்பான நாலு மாம்பலகைகளைச் சேர்த்தடித்து, சட்டமிட்டு நான்கு அரையடி உயர கால்களின் மேலே பரத்தி விட்டால் அது சயனத்திற்கு ஏற்றதாகி விடுமா என்ன?

    போகட்டும் - அதன் மேல் ஒரு மெத்தையும் கன்னத்தை உறுத்தாத பஞ்சுத் தலையணையும் இருந்தால் சமாளித்து உறங்கலாம்.

    ஆனால் தாத்தா நிர்தாட்சண்யமாய் மறுத்து விடுவார் –

    'வீணாய் ஆடம்பரத்துக்கு உடம்பைப் பழக்காதே சந்திரலேகா, அதெதுக்கு மெத்தை? வெற்று கட்டையில நீட்டி நிமிர்ந்தா வியாதியும் வலியும் அண்டாது.'

    'இந்த துணி மூட்டையை தலைக்கு வச்சா - பாரமாய் இருக்குது தாத்தா.'

    'வைக்காதே - அவசியமில்லைங்கறேன். செளகர்யங்கள் உடம்புல திமிரை ஏத்திடும் - மனசின் விறைப்பை இளக்கிடும் - அதுக்கு இடந்தராம உடம்பை நாம நம்ப வசத்தில் வச்சால் மனசும் அடங்கி நிக்கும். குஷியாய் உடம்பைப் பேண ஆரம்பிச்சால் உள்ளே ரெக்கை முளைச்சு புத்தி எகிறும் - பிறகு நாம அதைப் பிடிச்சாப்பலதான்...'

    தாத்தாவின் தத்துவங்கள் பேத்திக்கு ஒத்து வருவதில்லை.

    மண்டும் எரிச்சலை வெளிக்காட்டாமல்தான் நிற்பாள்.

    ஆனால் மனிதர் கெட்டிக்காரர் - ஆக சிறு முறுவலோடு –

    'ஆசைதான் மனுஷனின் அத்தனை அவதிக்கும் அடிவேர்' என்பார் முடிவாய்.

    'கட்டிலுக்கு மெத்தை, தலையணை போட்டுக்கறது பேராசையா?'

    'அது ஆசையின் ஊற்றுக் கண்ணுனு வையேன். பிறகு அது பெருகி ஓடும் - பட்டுப் போர்வையை விலக்கி எழுந் தால் குடிக்க பாதாம் பால், குளிக்க பன்னிரு, தினத்துக்கும் கறி சோறு, தங்க - மாட மாளிகை, போக பிளைமோத்காருனு..'

    'சம்பாதிக்க திராணியிருந்தா அனுபவிக்கறதுல என்ன தப்பு?'

    'இப்போது அனுபவிக்கற வசதி குறைஞ்சிடுமோன்ற பயங்கிளம்பி, வெறியாய் ஒட வைக்கும்... அதுல குறுக்கு வழியிலேயுஞ் சாடத் தோணும்... எதுக்கு?'

    அருகே சேவல் கூவியது உற்சாகமாய்.

    இனியும் யோசனைகளுடன் உடம்பு நோக உருள்வதில் பயனில்லை என்ற முடிவுடன் எழுந்தவள் அறையின் சின்ன ஜன்னல் வழியே பார்வையை விட்டாள்.

    சிரமப்படாமல் காணும் தொலைவிலேயே நின்றது 'சுடர் பவனம்' எனும் அந்த மாளிகை.

    வெள்ளைக் கப்பல் ஒன்று கரை தட்டி நிற்கும் பிரம்மாண்டத்தில்… நிலவைக் கரைத்து அதன் சுவர்களை மெழுகியது போல பளபளப்பில் நின்ற வீடு.

    விளக்கை மறைத்து, ஒளியை மட்டுமே காட்டும் தினுசில் அமைத்திருந்ததால் இருளிலும் கூட கவர்ச்சி குறையாமல் தோன்றியது.

    அறுபது வாட் குண்டு பல்பை எரிய விட, மின் விசிறியைச் சுழல விட, ரெண்டு தரமேனும் யோசிக்கும் இவளுக்கு 12 மணி நேரம் வெளியாட்களின் கண்களைப் பறிக்கவென்றே விரயமான அத்தனை மின்சாரத்தில் மனம் எரிந்தது!

    இந்த சிற்றுாரின் பெரும்பாலான மக்கள் வறுமை கோட்டினுள் உழல, இப்படி ஒரு குடும்பம் தங்கள் வீட்டையும், இடுப்பு அளவையும் விஸ்தரித்திருந்தது ஆத்திரமூட்டியது.

    பஞ்சு மெத்தையிலிருப்பவர்களை உறக்கம் நெருங்காது என்பதெல்லாம் சும்மா - வறட்டு வேதாந்தம்.

    பள்ளி காலத்தில் அவள் ரசித்து பலமுறை வாசித்த தேவதை கதை ஒன்று இன்னும் நன்றாகவே நினைப் புண்டு.

    ஒரு இளவரசன் தனக்குத் தகுந்த உயர்குலப் பெண்ணைத் திருமணத்திற்காய் தேட, பலர் தங்களைப் பெருங்குடியினராய் காட்டி அவனை ஏமாற்ற முயலுகின்றனர்.

    அவர்களின் சாயத்தை வெளுக்க வைக்கும் யுக்தியாய் பயன்படுவது ஒரு அன்னத்தூவி பரப்பிய கட்டில்தான்.

    ஏழு அடுக்கு மென்மைக்குக் கீழே ஓரிரு உலர்ந்த பட்டாணிகளை இட்டு வைக்க, பல பெண்கள் அதில் ஆனந்தமாய் உருண்டு சயனிக்கின்றனர். ஏழையாகிப் போன ஒரு நிஜ இளவரசிக்கு மட்டும் அதில் உறக்கம் பிடிக்காது.

    காலையில் 'நல்ல உறக்கமா?' என்ற கேள்விக்கு,

    "ஏதோ ரொம்ப உறுத்தியதா... ஆக உறக்கமில்லை' என்று பதிலளித்தாளாம் அம்மெல்லிய பூவை!

    அவளது மேனியும் ஏழடுக்கு தூவியின் கீழ் புதை யுண்ட பட்டாணியால் ஆங்காங்கே நீலம் பாரித்திருக்க, அவளோடு இளவரசனின் கல்யாணம் விமர்சையாய் நடந்து அவர்கள் ஆனந்தமாய் வாழ்ந்ததாய் முடியும் கதை!

    தாத்தா, உசிதம் என்றும் உன்னதம் என்றும் இவளுக்குத் தரும் வாழ்வில் இளவரசன் என்ன, அரண் மனைத் தோட்டக்காரன் கூட அமையாது!

    வாழ்க்கையை இந்த சந்திரலேகா அப்படி நழுவ விடுவதாயில்லை.

    செளகர்யங்கள் முக்கியம் - இன்பங்கள் அவசியம்.

    பிரமாண்டமான ஒரு வாழ்வைக் குறி வைத்தால்தான் ஒரளவேனும் நல்ல நிலையை எட்ட முடியும்.

    இத்தகு எண்ணங்களை தாத்தாவிடம் இவள் பகிர்வ தில்லை. தாத்தாவை மற்றவர்கள் கூப்பிடுவது வேம்பு வைத்தியர் என்று.

    அவர் இவளது சொந்த தாத்தா அல்ல என்றாலும் சொந்தந்தான்... அதாவது அப்பா வழி தாத்தாவின் உடன் பிறந்தவர். திருமணத்திற்கு அவசரம் காட்டாத அவருக்கு அந்த பந்தம் பிறகும் வாய்க்காமலேயே போய் விட்டது.

    'எனக்குக் கீழே பிறந்தது ரெண்டு பொட்டைப் பிள்ளைக. அதுகளுக்கு ஒரு வழி வகைக் காட்டாம நா போயிட்டா சரியில்லைன்னு நின்னேன் - அப்படியே நிக்க வச்சிருச்சுகாலம். சரி, அண்ணம் பேத்திய ஆளாக்கி விடற கடமைக் காகத்தான் இப்படி காத்திருந்தோம் போலன்னு இப்பப் புரியுது. சந்திரலேகா சூட்டிகை மட்டுமில்ல, பாசக்காரியுந்தான் - பிறகென்ன?' என்பார்.

    தன் தாத்தாவைத் தேடி வைத்தியத்திற்காய் ஆடு, மாடு, கோழிகளோடு வரும் ஜனக்கூட்டத்தைக் கண்டும் பேத்திக்கு பெருமிதமுண்டு. அதையும் அவளிடம் தெளிவு படுத்தி விட்டார்.

    'நா வைத்தியமெல்லாம் படிச்சதில்ல பிள்ளை. டவுனு வெட்டினரி - அதாவது மிருக ஆஸ்பத்திரியில நா அட்டென்டர். சீக்கா வர மிருகங்களை வைத்தியரு சோதிக் கறப்ப வாயைக் கட்டி, அதுக காலை அமுக்கிகிட்டே நிப்பேன். பார்த்து ஓரளவு விவரம் தெரிஞ்சதுல அம்புட்டு தொலைவு வர முடியாதவங்களுக்கு இங்கே நா உதவறதுல மக்களுக்கு எம்மேல ஒரு அபிமானம் - அந்த மரியாதையில கூப்பிடுறதுதான்.'

    இவளுக்கு சற்று ஏமாற்றமாயிருந்தாலும், தாத்தாவின் நேர்மையினால் அவர் மீதான அன்பு கூடவே செய்தது.

    டிகிரி முடித்தவளுக்கு கேம்ப்பஸ் தேர்வின் போதே சென்னையில் வேலை கிடைத்தபோது பூரித்துப் போனாலும், தொடர்ந்து தன் ஒரே முதிய உறவைப் பிரிந்து போக அவளுக்குப் பிரியமில்லை.

    ஆக இதோ சித்திரப்பாவூர் எனும் இந்த சிற்றுாருக்கு மீண்டும் வந்து சேர்ந்தாயிற்று.

    'படிப்புக்குத் தோதா ஏதோ, வேலை கிடைச்சதுன் னியே பிள்ளை - ஏம் போகலை?"

    'ம்ப்ச்... சும்மாதான்'- என்றாளே தவிர,

    'உங்களின் கூட இருக்கலாம்னுதான் தாத்தா. தவிர உங்க உடம்பும் முன்ன போலில்ல - ஏதும் சரியாய் சாப்பிடறதில்லை' என்றெல்லாம் சொல்லவில்லை.

    ஆனால் சின்னவளின் மன ஓட்டம் புரிந்தவர்,

    'உன்னால சும்மாவெல்லாம் இருக்க முடியாது - இங்கன உள்ள ஒரே கம்பெனி சுடர் சோப்பு கம்பெனிதா - அங்க ஏதேனும் வேலை கேளேன்'. - தூண்டினார்.

    'கம்ப்யூட்டரைஸ் பண்ணிட்டாங்களா? கம்பெனி விளம்பரம் சகட்டு மேனிக்கு பேப்பர், டி.வி.யில வருது - வீட்டையும் பெருசு பண்ணியிருக்காங்க வெளேர்னு தாஜ் மஹாலாட்டம் நிக்குது?'

    'ம்ம் - வீட்டம்மா வித்யாவதி சலிச்சுக்குறாங்க. காவலுக்கு அங்க வச்சிருக்கற நாய்க்கு பேதி தரப் போனேன் - வீட்டு வேலைக்கு சரியா ஆளு கிடைக்கறதில்லைன்னாங்க குறையாய்.'

    'அப்ப பெரிய வீட்டை பெருக்கித் துடைக்கத்தான் நான் போகணும் போல?'

    'எந்த வேலையும் மட்டமில்ல தாயி..' - சற்று கண்டிப்புடன் பேத்தியைத் திருத்தினார் பெரியவர்.

    'அது சரி. நமக்கது மட்டமில்லை. ஆனா அவங்க தங்களோட சொந்த வீட்டைப் பெருக்கி பராமரிக்க ஏன் யோசிக்கணும்?'

    'அதைத்தான் சொல்றேன். பேராசையின் விளைவு, நம்ப வீட்டையே நாம காபந்து பண்ண முடியாதளவு அல்லாட்டமாயிடுது.'

    'சுடர் பவனம்' என்ற பித்தளை பலகையிட்ட அம்மாளிகையைக் காண்பவர்கள் லேசில் கண்களை மீட்க முடியாது. சற்று மேடான பகுதியில் சுற்றிலும் அடர்ந்த மரங்களூடே வெளேரெனத் தெரியும் அதன் வனப்பு அப்படி.

    முன்பு... அதாவது 14 ஆண்டுகளுக்கு முன்பு வீடு இத்தனை பிரம்மாண்டமில்லை. மேட்டுப் பகுதியை விலைபேசி வாங்கியவர்கள், அதன் உச்சியிலிருந்த சில மரங்களை வெட்டித் தள்ளி, அஸ்திவாரமிட்டு விறுவிறு வென கட்டிடத்தை எழுப்பிய போதே ஊரார் 'மொறு மொறு'வென கதைகளை மென்றனர்.

    'எந்த இடத்துல வீட்டக் கட்டுறாங்க பார்.'

    'நானுங் கேள்விப்பட்டேங்க்கா - இது ஏதோ ஜமீனு அந்தப்புரமால்ல இருந்துச்சாம்?'

    'நீ ஒன்னு. அந்தப்புரமெல்லாம் வேற இடத்துல. அங்க அடைப்பட்ட ரம்பைகள்ல எவளேனும் வேத்தாள் முகம் பார்த்துட்டா அவளை இங்கென சமாதியாக்கிடு வாரு ஜமீனு. அவளுகளைப் புதைச்ச இடத்துல நட்ட மரங்கதான் இப்படி தழைச்சு நிக்குதாம்.'

    'பின்ன மனுஷ ரத்தத்தை உறிஞ்சி வளர்றதுன்னா லேசா? அப்படி தழைச்சதுகளை வெட்டிட்டு கட்டின வீடு... விளங்குமா?'

    'ஏதோ பூஜை பண்ணி, பரிகாரமான பிறவுதான் அஸ்திவாரம் போட்டாங்களாம்.'

    ***

    'அது போக பணமிருக்கே ஆத்தா - அதைக் கொட்டினா காத்தென்ன கருப்பென்ன?'

    இப்படி பேசி ஒரிரு ஆண்டுகளில் அடங்கிய ஊராரின் வாயை மறுபடி கிளறியது 'சுடர்' வீட்டின் தோட்டக்காரரின் அலறல் –

    'ஐயோ... எலும்புக் கூடு... தோண்டிய இடமெல்லாம் எலும்புக...' போலிஸாரும் வந்து தோட்டத்தில் குழுமி விட, அப்போது எட்டு வயதாயிருந்த சந்திரலேகாவிற்குத் தாளவில்லை. தினம் வெவ்வேறாய் கிளை பரப்பிய திகில் கதைகள் அவளது ஆவலைப் பெருக்கின. பெரிய வீட்டின் மர்மம் தெரியாவிட்டால் அவளது காய்ந்த மண்டை வெடித்தே விடும் போலாகி விட, அன்று ஓரளவு வேலி இன்னும் முழுக்க வளைக்காத சோப்புக்கார வீட்டை நோக்கி நடந்தாள்...

    பெளர்ணமியின் ஒளி கழுவிவிட்டிருந்த ஒடுங்கிய சந்தில் தயங்கி நடந்தவளை, குடிசை வாசலில் கயிற்று கட்டிலிட்டு முடங்கியிருந்த ஆயா கேட்டதும் கூட இன்னும் நினைவிருக்கிறது.

    'எங்க புள்ள கிளம்பிட்ட, இந்நேரமா?'

    'ம்ம்.. வந்து...'

    எதிர் வீட்டுத் திண்ணையில் கிடந்த உரலை, தெரு நாய் ஒன்று நக்கிக் கொண்டிருக்க, கிடைத்தது அந்த பொய்!

    'வந்து... மிட்டாயி வாங்கப் போறேன்.'

    'நிலா வெளிச்சத்த நாயி சப்பறது போல உனக்கும் இனிப்பு கேக்குதாக்கும்? போ போ.'

    இனிப்பு வாங்கவெல்லாம் அவள் கையில் காசில்லை. ஆனால் ஒரு இனிப்பான அனுபவத்தை நோக்கிப் போகிறோம் என்பதும் சந்திரலேகாவிற்குத் தெரியத்தானில்லை.

    எட்டு வயதில், எப்படித் துணிந்து எலும்புகள் புதையுண்ட ஓரிடம் நோக்கி நடந்தோம் என்பது அவளுக்கு இன்றுமே புதிர்தான்.

    அன்று, 'சுடர் சோப்' தயாரித்து விற்ற குடும்பத்தினரின் வீட்டைச் சுற்றி எட்டடி உயரச் சுவரோ, காவலுக்கு நாய்களும், அதன் குரைப்பில் கண் விழித்து அதட்டும் காவலாட்களோ இல்லை.

    ஆக சுலபமாய் மேடேறி, பள்ளம் பறிக்கப்பட்ட இடத்தை நெருங்கி விட்டாள். சுற்றிலும் மரங்கள் இல்லாமலில்லை.

    அவையெல்லாம் இளம் பெண்களின் உயிரை, உடம்பை உறிஞ்சி வளர்ந்தவையா…? விழி விரிய பார்த்த சிறுமியை அம்மரங்களின் நிழல்கள் மிக அச்சுறுத்தின. அவற்றின் அடர்த்தி நிலவொளியை நிலத்தில் சொட்டாது பிடித்து வைத்துக் கொள்ள, இவள் நடை இருளில் தடுமாறியது.

    மக்கிய வீச்சம் ஒன்ற் எழும்பி மூக்கைக் குடைய முகத்தைப் பொத் தியவள், அடக்க முடியாமல் வீறிட்டாள்.

    ஒரு சரிவில் பதிந்த பாதம், வழுக்கி அவளை ஒரு குழிக்குள் வீழ்த்தியிருந்தது!

    நாற்றத்தை, இருள், பயத்தை மீறி ஒரு குரங்கு குட்டி போல மேலேற முயன்றவளால் - அது முடியவில்லை.

    சில நிமிடங்களில் மேட்டில் பல ஜோடிக் கால்கள் வந்து விட்டன. குழியின் ஒரமாய் ஒண்டியவளின் முகத்தை டார்ச்சின் ஒளி தடவியது.

    யாரோ சின்னப் பொண்ணுய்யா...

    'இது லைன் வீட்டுக் குட்டில்லா?'

    ஒருவன் விழுந்து கிடந்தவளை இனங்கான, இவள் எரிச்சலாகி கத்தினாள்–

    'நா ஒன்னுங் குட்டி இல்ல - சந்திரலேகா.'

    'அம்புட்டு ரோஷமா எகிறுறவ இங்க ஏன் இந்நேரம் வந்த?'

    'ஷ்... சின்னப் பொண்ணை மேல தூக்கி விடாம இதென்ன விசாரணை, மணி?' தனக்காய் பரிந்து பேசிய குரலையும், நீண்ட கையையும் மறக்கவே முடியாது.

    ரோஜா நிற நகங்களுடனான ஒரு ஆணின் கை இவளதைக் கேட்டு வாங்கி, உயர்த்தியது!

    மேலேறியவளுக்கு, தனக்கு உதவியவனைப் பார்த்ததும் படபடத்தது –

    'இவரா... கம்பெனியின் மூத்தவரு விஜயனா இத்தனை இதமாய் தனக்கு உதவியது?'

    கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவளின் மேலே அப்பிய மணலை, சிறு கற்களை, மற்றுமொரு பஞ்சு கை தட்டி விட்டு நீவ, சந்திரலேகா மறுபக்கமாய் திரும்பினாள் -

    'நான் சூர்ய ரேகா' மென்மையாய் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் அச்சிறுமி.

    இருவரின் கண்களும் தொட்டுக் கொள்ள, உதடுகள் முறுவலித்த அந்த நொடி... வாழ்நாளுக்கும் மறக்காது.

    2

    பெருந்தனக்காரர்களின் ஸ்பரிசம் கூட விசேஷந்தானோ?

    வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட விஜயன் பற்றித் தூக்கியெடுத்த அவளது வலதுகை 'ஜிவ்வென்றிருந்தது.

    தாத்தா திட்டினார்.

    'அதென்ன ஊரடங்கின பிறவு எங்கிட்ட மூச்சு விடாத வெளிய மேயப் போறது? தெரியும்... ஊரு முழுக்க எலும்புக் கூடு, பேயினு புரளி புரண்டதும் உனக்குத் தாங்கல - அப்படி பரபரத்தா என்னையத் துணைக்குக் கூப்பிட்டிருக்கணும் சந்திரலேகா. உன்னைய வீடு கொண்டு விட்ட அந்த மணிப்பயல் எவ்வளவு எள்ளலாச் சொன்னாங் கேட்டியா?-

    'பேத்திய ஒழுங்கா வள, வைத்தி'ன்னுட்டு போறான். இப்படியாப்பட்ட பேச்சு வரக்கூடாதுல்ல?'

    ஆனால் பேத்தியின் கண்ணும் கருத்தும் அவள் கைகளிலேயேதான்...

    Enjoying the preview?
    Page 1 of 1