Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhage Aaryuire!
Azhage Aaryuire!
Azhage Aaryuire!
Ebook245 pages2 hours

Azhage Aaryuire!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580109904403
Azhage Aaryuire!

Read more from Kanchana Jeyathilagar

Related to Azhage Aaryuire!

Related ebooks

Reviews for Azhage Aaryuire!

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhage Aaryuire! - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அழகே ஆருயிரே!

    Azhage Aaryuire!

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    பசுவின் மடி பீய்ச்சியடிக்கும் பாலைப்போல, இளங்காலைக் கதிரவன் ஒளியைப் பூமியில் பொழிய ஆரம்பித்திருந்தது. வெம்மை மிகாத பால் ஒளி.

    நெடிய ரப்பர் மரங்களின் ஊடாய் வெளிச்சம் வழிந்த அழகை ரசித்திருந்தாள் ப்ரீத்தி. எட்டடி உயரக் கிழக்கு ஜன்னலின் திரைச் சீலைகளைப் பிரித்ததும் தினம் தினம் அவள் அனுபவிக்கும் அழகுதான் இது.

    ஆனாலும் சலிக்கவில்லை.

    விடியற் காலைப்பொழுது எல்லா நாடுகளிலும் மனதிற்கு இதமாய் இன்பமாய் இருக்கும் போலும். முக்கியமாய் மரங்கள் அடர்ந்த பண்ணைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த ரம்யத்தைக் கண்டுகளிக்கப் பொழுதும் வாய்க்கிறது.

    இந்தியாவில் இப்படிப் பொழுது புலர மேலும் இரண்டு மணி நேரமாகும்… இவளிருப்பது மலேஷியாவில்!

    இங்கு செழித்து ஓங்கியுள்ள ரப்பர் எஸ்டேட்டில் சில மாதங்கள் பணி புரியக்கிடைத்த சந்தர்ப்பத்தை இவளது அண்ணன் ஆர்வமாய் ஒத்துக்கொண்டதில் முதலில் ப்ரீத்திக்கும் அண்ணி விமலிக்கும் அத்தனை ஆனந்தமில்லை.

    ஆனால் இந்த அரைவருட அனுபவம் தனக்கு மிக உபயோகமாய் இருக்கும் என்பது அண்ணன் விவேக்கின் கருத்து.

    ‘அயல் நாட்டின் விவசாய முறைகளும் தெரியும் என்றால் என் சம்பளம் இரட்டிப்பாகும், விமி!’ என்று அண்ணன் கொஞ்சலாய்க் கெஞ்ச, அண்ணியின் விழிகளும் இருமடங்காய் விரிந்தன.

    அயல் மண்ணிற்கு வந்து ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. வீட்டிலேயே அடைந்து கிடப்பவர்களுக்கு மண்ணும் விண்ணும் ஒன்றுதான் என்று பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டாள் ப்ரீத்தி.

    ‘ஸலாமத் டடாங்’ என்ற அறிவிப்புப் பலகைகளை விமான நிலையத்திலிருந்து வழியெல்லாம் கண்டவளுக்கு அதன் அர்த்தத்தை அறிய ஆவலுண்டாயிற்று.

    காரோட்டியிடம் பேச்சுக்கொடுத்தாள்.

    நல்வரவு என்று பொருளம்மா. உல்லாசப் பயணிகள் கொண்டுவந்து இறைக்கும் காசில் செழிக்கும் சிறு நாடல்லவா? அதுதான் இப்படி விழுந்து விழுந்து கவனிக்கறாங்க.

    மலேயாவில் முப்பது வருடங்களாய்த் தங்கிவிட்ட அந்த இந்தியர் புன்னகையுடன் விளக்கினார்.

    அப்படீன்னா ரசிக்கும்படியாய்ப் பல இடங்கள் இருக்குமில்லையா?

    பின்னே? தொன்மையான கடற்கரை நகரம் - பினாங் - அங்கே மன்னரின் அரண்மனை, அருங்காட்சியகம் எல்லாமுண்டு.

    பயணக் களைப்பில் இரண்டு வயது ரவி அத்தையின் மடியில் சுருண்டு உறங்க, அவனுக்குச் சற்றே மூத்த ரேணு புது தேசத்தை ஆராய்ந்தபடி வந்தாள்.

    இங்கு கடை கண்ணி ஏராளமாமே! இது அண்ணியின் விசாரணை.

    மலேஷியா வாங்குபவர்களின் சொர்க்கம்! இதன் தலைநகரான கே.எல்., அதாவது கோலாலம்பூரில், தங்க முக்கோணம்னு ஒரு பகுதி உண்டு. அதில் பிரமாண்டமான ஏழு மால்கள் உண்டு - அதன் கடைகளில் கிடைக்காத பொருள் இல்லை.

    விலை எல்லாம் எப்படி? - இது அண்ணனின் சற்று அஞ்சிய கேள்வி. செலவிற்கு அஞ்சுபவர்கள் இங்கு வர்றதில்லையே சார். இங்குள்ள நாணயங்களை ரிங்கெட்ஸ்னு அழைப்போம் - ஒரு ரிங்கெட் நம்மூரின் பத்து ரூபாய்க்குச் சமம்.

    ஓஹோ? ஒரு சாப்பாடு என்ன விலையிருக்கும்?

    லிட்டில் இன்டியா பகுதியில் சாதம், கடலைக் குழம்பு, வறுத்த கோழித்துண்டு பச்சடியோடு ஒரு தட்டு… ம்ம்… ஐந்து ரிங்கெட்ஸ்.

    ஐம்பது ரூபாய்ன்னா… தேவலை… அப்படி யொன்றும் அதிகமில்லை.

    அண்ணன் ஆசுவாசப்பட்டான்.

    கே.எல். கோபுரங்களைப் பார்க்கக் கொடுத்துவச்சிருக்கணும். நகரம் முழுவதுமே விளக்குகளின் சிமிட்டலில் ஜ்வலிக்கும்னாலும் 440 மீட்டர் உயரமுள்ள அந்த இரட்டைக் கோபுரங்கள் வானை முட்டியபடி ஜொலிக்கும் பாருங்க - கண்கொள்ளாக்காட்சி. அதும் நிமிடத்திற்கு மூன்று நிறங்களில் அவை மாறிமாறி ஒளிர்வதைக் காணச் சலிக்காது.

    மோனோ - ரயில் பற்றியும் கேள்விப்பட்டிருக்கேன்.

    ஜனத்தொகை அதிகமாக, வெறும் சாலைப் போக்குவரத்து கட்டி வராதுன்னு அரசாங்கம் உருவாக்கியது இந்தப் பறக்கும் ரயில்.

    ரயிலுக்கு றெக்கை இருக்குமா?

    சின்ன ரேணு ஆவலாய் வினவினாள்.

    இல்லை பாப்பா - உயரத்துல பாதை போட்டு, தண்டவாளமும் இட்டிருப்பாங்க. அந்த ஒற்றைப் பிடிப்பில் ரயில்கள் வேகமாய்ப் போவும் - அதிலிருந்து பார்க்க மொத்த நகரமும் படமாட்டம் தெரியும்!

    ப்ரீத்திக்கு இதயம் படபடத்தது. இத்தனையையும் கண்டுகளிக்கப் போகிறோம் என்ற இன்பப் பதட்டம்...

    ஆனால் கடந்த மாதங்களில் அவளுக்குக் காணக்கொடுத்து வைத்ததென்னவோ விஸ்தாரமான ரப்பர் தோட்டத்தையும் வீட்டு வேலைகளையும்தான்!

    ‘சின்னவனுக்குச் சளி பிடிக்கும் போலிருக்கு, ப்ரீத்திம்மா. ரெண்டு தரம் தும்மினான். ஆக, அவன் உன்னோடவே இருக்கட்டுமே. நாங்க கே.எல். போயிட்டு இருட்டறதுக்குள் திரும்பிடறோம்!’

    என்று முதலில் கேட்டுக்கொண்ட அண்ணி, பிறகு நொண்டிச் சமாதானங்கள்கூட இல்லாமல், ஊர்சுற்றக் கிளம்பிவிட்டாள்!

    அண்ணன் முகம் சுண்டினாலும், மனைவியின் பேச்சை மீறிப் பேசினால் விளைவுகள் மிகமோசமாய் முடியும் என்பது அவன் அனுபவம்.

    அவரவருக்கு உள்ளது கிடைத்தே தீரும்.

    இந்த இன்பங்கள் தனக்கானதல்ல போலும் என்ற யதார்த்தத்துடன் தன்னைத் தேற்றிக்கொள்வாள், இளையவள்.

    பெற்றோரை இழந்து தமையன் தயவில் வாழும் தான், இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஏங்கக்கூடாது என் புரிந்த பக்குவம்!

    நினைவுகளை விட்டு நிகழ்காலத்திற்கு இறங்கியவள், காலைக் கடன்களை முடித்து, சிறு பிரார்த்தனைக்குப் பின், ஆவி பறக்கும் தேநீரோடு வீட்டின் முன்பிருந்த தோட்டத்தில் இறங்கினாள். எட்டு மணிக்கு வீட்டு வேலைகளில் உதவும் சீன்சூ வருவாள். வயது என்னவென்றே கணிக்கமுடியாத அம்மெல்லிய உடம்புக்காரி பம்பரமாய் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு மதியம் திரும்பிவிடுவாள் - அது வரையிலும், அதன் பின்பும்கூட ப்ரீத்தியின் வேலைகள் நீளும் - இதுமட்டுமே இவளுக்கான நேரம். பிறகு நேரம் வழக்கம்போல - புகைபோல - மாயமாகிப் போனது.

    ***

    மதியம் கஞ்சியிட்டு உலர்த்திய தன் உடைகளை உதறி அழுந்த மடிக்க ஆரம்பித்தாள் ப்ரீத்தி. இஸ்திரி பெட்டி நல்ல சூட்டில் துணியின் சுருக்கங்களை விழுங்கக் காத்திருந்தது.

    புடவையைப் பரத்திப் பெட்டியைக் கையிலெடுத்ததும் அழைப்பு வந்தது –

    ப்ரீத்தி - இங்க வா.

    உடனே இஸ்திரிப் பெட்டியின் மின்தொடர்பைத் துண்டித்தவளிடமிருந்து ஒரு பெருமூச்சும் இழுபட்டது.

    இனி இத்தனையையும் தேய்த்தாற் போலத்தான் என்ற சலிப்பு.

    ப்ரீத்தி - ஓடி வா… சீக்கிரம்.

    ஓடியேதான் போனாள் -

    என்ன, அண்ணி?

    வந்து பார், உன் செல்லத்தை. வழக்கம்போலச் சாப்பிட அழிம்பு பண்றா.

    இடது கையில் தட்டும் மற்றதில் சிறு வெள்ளிக் கரண்டியுமாய் நின்ற விமலி குறைப்பட்டாள்.

    ரேணு உதடுகளை அடமாய் மூடியிருக்க, அவள் தாயின் முகத்தில் கோபச் சிவப்பு ஏறியபடி இருந்தது.

    இது அடிக்கடி நடக்கும் நாடகந்தான். அத்தை ப்ரீத்தி பரிமாறி வைத்தாலே சச்சரவின்றிச் சாப்பிட்டுப்போகும் ரேணு, தன் தாயிடம் மட்டும் இல்லாத அழிம்புகளை நடத்துவாள்.

    என்ன… என்னண்ணி?

    வா - நீ முதல்ல இந்தப் பீர்க்கங்காயைச் சாப்பிடு.

    வெள்ளிக் கரண்டியில் இருந்தாலும், அந்த வழுவழு காயைக் கண்டதும் இவளுள் சிறு சுழிப்பு.

    ஆனாலும் எதையும் வெளிக்காட்டவில்லை.

    வேண்டாண்ணி… எனக்கு இது… இது அதிகம் பிடிக்காது.

    ஆங்… அப்படிச் சொல்லு. இதே பிகுவைத்தான் ரேணுவும் பண்றா.

    அவளுக்கும் அந்தக் காய் பிடிக்கலைன்னா… விரட்டிரலாமேண்ணி.

    ஏன் விடணும்? எல்லா வகைக் காய்கறியும் உடம்புக்கு நல்லதுன்னு நாமதான் சொல்லிப் புரியவைக்கணும் - சகல ருசிக்கும் பழக்கியாகணும். எனக்கும் இவ அப்பாவுக்கும் பிடிச்ச காயை இவமட்டும் ஏன் ஒதுக்கணும்?

    ஒவ்வொருவரின் ரசனையும் வெவ்வேறில்லையா, அண்ணி? கீரை அத்தனை பிடிக்கலைன்னாலும் ரேணு சேர்த்துக்கறாளே - உடம்புக்கு நல்லதுன்னு… பழகிக் கிட்டாள்… போதாதா?

    இதப் பார், ப்ரீத்தி. பெரியவங்க பேச்சுக்குப் பணிய முதலில் கத்துக்கோ - உன்னைப்பார்த்துச் சின்னவ இதிலும் கெட்டிடவேணாம் - இந்தா, வாயைத் திற.

    அந்த அதட்டலில் குறுகிவிட்டாள் இளையவள். அலங்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் தன்னை மிகச் சிறு வயதினளாய்க் காட்டிக்கொள்ளத் துடிக்கும் விமலி, இதுபோன்ற சமயங்களில் மட்டும் நூற்றுக் கிழவியாக முதிர்வது கசப்பூட்டியது.

    இன்று விட்டுத் தரக்கூடாது என்ற வைராக்கியம் உள்ளே முளைவிட - வேண்டாமண்ணி - இஸ்திரிபோட துணிகள் நிறைய இருக்குது. நானே ரேணுக்குச் சாப்பாடு தந்துடவா? பணிவாகவே நழுவினாள்.

    வீண், வெட்டிப் பேச்சுக்குத்தான் வாயைத் திறப்பியா நீ? அதட்டலுடன் அக்கரண்டியின் காயை இவளில் திணிக்க விமலி முயல, ப்ரீத்தியின் வீம்பு வளர்ந்தது.

    இரு பெண்களின் முகங்களிலுமே சிவப்பு - ஒன்று அவமானத்தால் - மற்றது ஆத்திரத்தால்.

    ஓஹோ… அம்மா ருசிக்குத்தான் சாப்பிடுவீங்களோ?

    பசிக்குத்தான் உணவு. ஆனா மனுஷன் அதை ருசித்தும் சாப்பிடணும்னுதான் கடவுள் இத்தனை ரகக் காய்கனிகளைப் படைச்சிருக்கணும், அண்ணி. அவரவர் இரசனை, ருசி… அவையும் அவர் உருவாக்கியதுதானே…? அதற்கேற்ப மனுஷன் அனுபவிக்கட்டும்னு… பிறகேன் வீண் சிரமம்?

    ஆஹா… வாங்கி, நறுக்கிச் சமைச்சுப் பரிமாறினதை வாயிலிடக்கூட முடியாதா உன்னால்?

    வெறுமே நீட்டியதை விழுங்கிவிட்டு நகர்ந்திருக்கலாம். பிரச்சனை படிந்திருக்கும் - இப்போது எழும்பிக் குடுமியைப்பிடித்து உலுக்குகிறதே…

    தவிர இது வழக்கமாய் ப்ரீத்தியின் குணமுமல்ல.

    சொன்னதைச் சொன்னபடி செய்து போகிறவள்தான்.

    ஆனால் சமீபமாய் அக்குணம் தனக்குக் குழி பறிப்பதாய் அவளுக்குத்தோன்ற ஆரம்பித்திருந்தது.

    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.’

    அவை நம் எண்ணம், செயலின் விளைவே என்ற சிந்தனையின் விளைவு!

    சதா பிறரின் சித்தப்படி வாழ்வது சலித்துவிட்டது. உடை, வீடு, நேரம், உணவும் பிறரின் ரசனைப்படிதான் எனில்… வாழ்க்கை?

    ரசனையின்றிக் கைநழுவிப் போகாதா?

    இளவயதிலேயே பெற்றவர்களை இழந்தவள் ப்ரீத்தி. விவேக்கிற்குப் பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண்ணைப் பொக்கிஷமாய்க் கருதி வளர்த்தவர்கள் வியாதிக்கு ஈடுதர முடியாமல் மறைந்துபோக, பொக்கிஷம் புழுதியில் விழுந்தது.

    இவளும் எதையும் பொருட்படுத்தாமல் பிரகாசமாகவே வளைய வந்தாலும்… சமீபகாலமாய் அண்ணியின் நடவடிக்கை ஒன்று இவளைக் குழப்பியிருந்தது – ‘அது மாப்பிள்ளை தேடும் படலம்!’

    உணவு, உடை, ஆளண்டாத் தனிமையில் நாட்கள் - எல்லாம் சமாளிக்கக் கூடியவை. ஆனால் கடைசிவரை - கண்ணாய்… ஏன், உயிராய் இருக்கவேண்டிய கணவனும்கூடப் பிறரின் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றாற்போலத்தான் அமையுமென்பது அச்சுறுத்தியது.

    இந்நாள்வரை வாயில்லாப் புழுவாய் நெளிந்ததால்தானே இந்நிலை என்று, தன்மேலேயே அவளுக்குக் கோபமும்கூட.

    ‘இதுதான்…’, ‘இப்படித்தான்’ என்றுதான் காலை அழுத்தி நின்றிருந்தால் ஆளாளுக்கு இப்படி தன்னைப் பந்தாடமாட்டார்களே.

    பல எளிய குடும்பத்துப் பெண்களுக்கும் கிடைக்கும் கல்லூரிப் படிப்பும்கூடத் தனக்குக் கிட்டாமல்போனது பெரிய குறை. அதில் மிகுந்த வருத்தம் என்றாலும், அதற்கான பழியையும் இவள் தானேதான் சுமக்கவேணும். தியாகம் புரிவதாய் நினைத்துச்செய்த அசட்டுத்தனம் அது.

    அண்ணன் தேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் - கை நிறைந்த சம்பளம், விஸ்தாரமான வீடு, அதிலும் கால் நோகத் தேவையில்லாதபடி வேலையாட்கள் என்றிருந்ததால், முண்டியடித்த வரன்களில் அண்ணன் தேர்ந்தெடுத்தது விமலியை. ஆனால் வந்தவளோ -

    ‘இதென்ன வனவாசம்? காலார நடந்தால் காட்டுப் பன்னியைத்தான் சந்திக்க நேருது. இதென்ன வாழ்க்கை?’ என்று முதலில் முரண்டி, பின் மற்றவசதிகளில் சற்றுச் சமாதானமானாள்.

    கிடைத்த வசதிகளில் மிகமுக்கியமானது அண்ணிக்கு ஓடி ஓடி உழைக்கக் காத்திருந்த அன்பு நாத்தனார் - ப்ரீத்தி!

    ஏற்கெனவே பண்ணைப்புர வாழ்விற்குப் பழகிய ப்ரீத்தி, தாயற்ற இக்குடும்பத்தை அன்பால் அரவணைக்க, பாசத்தால் சீராக்க வந்த சின்னத்தாயாகவே விமலியை வரவேற்றாள். அவள் பள்ளிப்படிப்பை முடித்திருந்த சமயம் அது. திருமணமான இரண்டாம் மாதமே அண்ணிக்கு மசக்கை ஆரம்பமானது. கிறுகிறுப்பும், வாந்தியுமாய்ச் சுருண்டவளைப் பாசமாய்ப் பேணினாள், இளையவள்.

    அண்ணன் கேட்கத்தான் செய்தான் -

    ‘மூணு கல்லூரிகளின் விண்ணப்பப் படிவங்களை வாங்கிவச்சோமே, ப்ரீத்தி… எல்லாவற்றையும் அனுப்பியாச்சா?’ என்று.

    ‘வேண்டாண்ணா. அண்ணியை இந்த நிலையில் விட்டுட்டு நான் எப்படிப் போறது?’

    ‘அதான் வீட்டுல வேலையாட்கள் உண்டே…’

    ‘பொறுப்பாய் யாரேனும் இருக்கணும். அண்ணியுடைய குடும்பம் மும்பையில் - தங்கை, அண்ணான்னு, பெரிய குடும்பத்தை விட்டுட்டு அவங்கம்மாவால் வரமுடியாதாம்…?’

    ‘நானும் பொறுப்பான அண்ணனாய் உன்னைப் படிக்கவைக்க வேண்டாமாடா?’

    ‘படிக்காமலா? தபால்வழிக் கல்விபற்றிக் கேள்விப்படாததுபோலப் பேசறீங்களே, அண்ணா? எனக்குப் பிடிச்சது இலக்கியம். அதற்கு நிறைய வாசிக்கணும் - இங்கேயே நிம்மதியாய் வாசிச்சுட்டு, பரீட்சை எழுதமட்டும் வேற்றூருக்குப் போனால் போதுமே!’

    ‘கல்லூரி வாழ்க்கைங்கறது ஸ்பெஷல்…?’

    ‘அண்ணிதான் இப்ப நமக்கு ஸ்பெஷல் அண்ணா! தவிர நான் பள்ளிப்படிப்பை விடுதிகளில் தங்கித்தானே படிச்சேன். இப்பவேனும் வீட்டில் இருக்கேனே!’

    ‘பள்ளி - அனுபவம் வேறம்மா - அறைக்குள்ளேயே

    Enjoying the preview?
    Page 1 of 1