Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathukkul Irunthukol…
Idhayathukkul Irunthukol…
Idhayathukkul Irunthukol…
Ebook142 pages1 hour

Idhayathukkul Irunthukol…

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580109904388
Idhayathukkul Irunthukol…

Read more from Kanchana Jeyathilagar

Related to Idhayathukkul Irunthukol…

Related ebooks

Reviews for Idhayathukkul Irunthukol…

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathukkul Irunthukol… - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    இதயத்துக்குள் இருந்துக்கொள்...

    Idhayathukkul Irunthukol…

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அத்தனை வேகமாய், நேரமாய் நடந்தும் அவளுக்கு வியர்க்கவில்லை.

    உள்ளே பாரம் அழுத்தும் சமயங்களில் இப்படித்தான் வீட்டை விட்டு வெளியே வந்து... வேறென்ன செய்வது - நடப்பாள்.

    ஆண்கள் ஏதேனும் ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவதைப் போன்ற வாய்ப்பு பெரும்பாலும் பெண்களுக்கு கிடையாது.

    மூச்சு வாங்க, பாதை ஓரமிருந்த பாறை ஒன்றில் சாய்ந்தவள், சுற்றிலும் பார்த்தாள். நிஜமாகவே ஈ, காக்கா பறக்காத பிரதேசம் இது ஆனால் நிறைய குளிர் இருந்தது.

    ஈட்டியாய் அது தன்னைத் துளைக்க, நவ்யா சிலிர்த்தாள்.

    சுற்றிலும் முதிர்ந்த மரங்கள், வயது தெரியாத செழுமையுடன் நின்றிருந்தன. அவற்றின் ஊடே படர்ந்த பனியை விட்டு உயர்ந்த அவள் கண்கள், தொலைவிலிருந்த மலைகளை வருடி, அவற்றின் முகடுகளின் மினுமினுப்பில் லயித்தன.

    'வெள்ளிப் பனி மலை' லட்சக்கணக்கில் செலவழித்து நார்வே வரும் வெப்ப நாட்டு சுற்றுலாப் பயணிகள், துளியூண்டாய் தெரியும் இந்தப் பனிக்கே பரவசப்படுவார்கள்!

    'ஹா... ஆஸம்!' என்று படம் பிடிப்பதை இவள் வெறித்துப் பார்த்தபடி நிற்பாள்.

    இதைவிட அற்புதமான இயற்கை அழகுகள் கூட இப்போது இவளை சிலிர்க்க வைப்பதில்லை.

    இது ஆகஸ்ட் மாதம். இன்னும் குளிர் கொத்திப் பிடுங்கவில்லை. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தயவுண்டு. ஆனாலும் நார்வே மக்கள், வெளியே கிளம்பினால் அவர்கள் கை தன்னிச்சையாய் ஒரு கார்டிகனை உருவிக் கொள்ளும், குளிர் காலங்களில் கெட்டியானதும், மற்ற மாதங்களில் மெல்லியதுமாய்.

    வந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏன் தனக்கது பழகவில்லை?

    காலணி போடும்போதே, ஒரு சால்வையை எடுத்து வந்திருந்தால், அதற்குள் பொதிந்து கதகதப்பு கண்டிருக்கலாம்.

    இனி குளிர் கூடும். மெல்லிய இந்த குர்தி அதைத் தாங்காது. பெருமூச்சுடன் எழுந்தவள், வீடு நோக்கி திரும்ப நடந்தாள்.

    நடை சற்று தளர்ந்தது போலவே மனமும் சலித்தது. ஆனால் வேறெங்கு போவது?

    தனக்கு வேறு போக்கிடம் ஏது?

    கால் ஓய நடந்த பின்பும், மனதின் வெப்பம், வேகம் தணியவில்லை. இப்படி தனதல்லாத தேசத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு, இறந்து போன தன் தாயை கோபத்துடன் நினைத்தாள்.

    அப்போது நவ்யாவிற்கு இருப்பதே வயது.

    அம்மா எடுத்தது தவறான முடிவு என்று தெரிந்தாலும், அதைத் தீவிரமாய் தடுக்கவோ, அதற்கு மாற்று சொல்லவோ தெளிவில்லாத, பருவம். அம்மாவின் அழுகைக்குப் பணிய வேண்டியிருந்தது.

    அப்பா இறந்ததை, தாங்கள் கிளம்புவதற்கான பிரதான காரணத்தாய் சொன்னார்கள் அம்மா.

    துணையை இழந்த பெண்கள் எல்லாம் வேறு நாடுகளுக்கா ஓடிப் போனார்கள்?

    அதுவரை பிரஸ்தாபிக்காத உறவைப் பற்றி அம்மா பிறகு அடிக்கடி பேசினார். 'தாஸ் அண்ணா, எனக்கு ரெண்டு விட்ட உறவுதான். ஆனா 15, 16 வயசு வரை நாங்க எல்லாம் இடையங்குடின்ற சிறு ஊரில சேர்ந்தே வளர்ந்தோம். அது கிராமத்தான்னாலும் எவ்வளவு நறுவிசான அமைப்புரை? ஐரிஷ் மிஷனரி பார்த்து பார்த்து செய்தது - எல்லாம் நூல் பிடிச்சாப் போலிருக்கும். கோயில் மணி கேட்டபடிதான் எழுந்துக்குவோம், சுத்தமான தெருவுல விளையாடி, அருமையான் ஸ்கூல்லில் படிச்சோம். தினம் நுங்கு, பதனி, கடல் மீனுன்னு சத்தான ஆகாரம்... கவலையே கிடையாது.'

    'சின்ன வயசில வேற கவலைங்கம்மா. ஹோம் வொர்க் செய்யாதது, பரீட்சை, சிநேகிதர்களின் இடையே சலசலப்புன்னு...'

    'அதெல்லாம் வாழ்வின் செல்ல மிரட்டல்டா, நவ்யா. பிறகு வாழ்க்கை நம்மைத் தூக்கிப் போட்டு பந்தாடிடுதே?'

    'அதுக்காக அந்த தாஸ் அண்ணாவை நம்பி, அவர் கூப்பிடற வெளிநாட்டுக்குப் போறதாம்மா? நார்வே அது எங்க இருக்குன்னு கூட உனக்குத் தெரியாதே.'

    அண்ணா அங்க செயலாய் இருக்கார்னு தெரியுமே, பிறகென்ன?

    அப்ப இந்த... நம்ப வீடு?

    வாடகைக்கு விட்டுரலாம். சேது சித்தப்பாட்ட அந்தப் பொறுப்பைத் தந்துடலாம். இதைத் தவிர நமக்கு வேறு சொத்து, வசதி ஏதுமில்லையே நவ்யா?

    அது உண்மைதான்.

    சேமிப்பு அத்தனையும் அப்பாவின் சிறுநீரக சிகிச்சையில் கரைந்திருந்தது. அப்படி கரைத்தும் அவரை மீட்க முடியவில்லை. அப்பா எவ்வளவு சம்பாதித்தார் என்பது கூட அம்மாக்குத் தெரியாது. வியாதி வந்த போதுதான் சேமிப்பு பற்றிக்கூட தெரிய வந்தது. வீட்டை நடத்தினது கூட அப்பாதான்.

    அப்படி பொத்தி வைக்கப்பட்ட அம்மா, தான் வேலைக்குப் போக வேண்டும் என்றதுமே மிரண்டிருந்தாள்.

    15 வருடங்கள் குடும்பத்தைக் கூட திட்டமிட்டு நிர்வகிக்காத தான், ஒரு அலுவலகத்தில் பொருந்தி உழைக்க முடியுமா?

    இன்னும் வனப்பான இளமையுடன் இருந்த தனக்கு அங்கே தகாத தொந்தரவுகள் வந்தால் சமாளிப்பது எப்படி?

    கிடைக்கும் சொற் சம்பளத்தில் தன் பெண்களை முகம் வாடாமல் வைத்திருக்கக் கூடுமா? என்று நூறு பதட்டங்கள் துரத்த, அப்போதுதான் அவள் தாஸ் அண்ணாவைத் தேடியது. ஊருக்கு ஒரு கேதத்திற்காய் வந்திருந்தவரிடம் தன் பிரச்சனைகளை கொட்டிப் புலம்ப, அவர் உதவினார்.

    ஆக சில ஆண்டுகளில் அவர் பதிலுக்கு வைத்த கோரிக்கையை தங்கையினால் தட்ட முடியவில்லை.

    அப்படி அவர் தந்த அழைப்பு முறையானதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பெண்களில்லாத வீடம்மா என்னது. நீ வந்து உதவினால் நல்லது. உனக்கு உம் பொண்ணுகளுக்கு ஏற்ற வேலை இங்குண்டு. உறவுகளை பக்கத்தில் வச்சுக்கறது எனக்கும் லாபமில்லையா, வந்து பாரு என்ற ரீதியில் பேசவில்லை தாஸ் மாமா.

    உனக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க போல எனக்கு இங்கே ரெண்டு பசங்க உண்டு. படிப்பிற்கு சென்னை, டெல்லின்னு போனாலும் நார்வேஜியன் பயலுங்க போலத்தான். ஆனா எனக்கு இங்குள்ள மெழுகு பொம்மைகளை மருமகள்களாக்க மனசில்லை. குடும்பத்துக்குச் சரிவராதுல்ல? எனக்குள்ள மரியாதையைத் தந்து புருஷன்மார் சம்பாதிப்பதை இறைக்காமல் சேமிக்கும் பெண்கள் வேணும். காலா காலத்தில் பிள்ளை குட்டி பெற்று, அதுகளைக் கட்டுப்பாடாய் வளர்த்தி எடுக்கணும்... நம்மூர் சாப்பாடு, உடுப்பு, பழக்க வழக்கம்னு எத்தனை இருக்குது?

    ‘நான் சொல்ல வர்ரது புரியுதா, இந்திரா?'

    அம்மா முகத்தில் எந்தப் புரிதலையும் பார்க்காதவர் உடைத்தே பேசினார்.

    'உன் பொண்ணுகளை என் மருமகளாக்கிட்டாத் தேவலை. அங்கே அதுக ராணியாட்டம் வாழும். நீயும் அதுகளை வழிநடத்திட்டு நிம்மதியாய் இருக்கலாம். நல்ல முடிவாச் சொல்லு' என்றார்.

    சற்று விவரமான தாய் என்றால் இதற்கென்ன பதில் தந்திருக்க வேணும்?

    'பிள்ளைங்க இதுவரைப் பாராத, பழகாத பையன்களை கல்யாணம் செய்றது, இதெல்லாம் சட்டுனு முடிவெடுக்கக் கூடியதில்லையே? ஒரு தரம் பசங்க இங்க வரட்டும் அண்ணா, பொண்ணுகளின் நோக்கம் அறிஞ்சு, பார்க்கலாம்' என்றிருந்தால் சற்று மரியாதை மிஞ்சியிருக்கும்!

    ஆனால் அடித்து பிடித்து ‘பெர்கன்' வந்து இறங்கியாயிற்று.

    'என்னடாம்மா இப்படிக் குளுருது?'

    நார்வேயில் அம்மாவின் முதல் கேள்வி இதுதான்!

    'இதெல்லாம் நத்திங்... இன்னும் வரும் பாருங்க' என்றான் கூட்டிப் போக வந்திருந்த மூத்தவன், தினேஷ்!

    ஆனால் இதற்கெல்லாம் முன்பு அம்மா செய்த பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1