Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Chinna Pennin Snegam
Antha Chinna Pennin Snegam
Antha Chinna Pennin Snegam
Ebook166 pages1 hour

Antha Chinna Pennin Snegam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

வாசிப்பது என்பது வாழ்க்கையை ஜீரணிப்பது என்று சொல்லக் கேள்வி.
இதிலுள்ள சிறுகதைகள், வெவ்வேறு சின்ன சம்பவங்கள் என்னுள் கிளறி எழுப்பிய கற்பனைகள்.
"அய்ஸ்வர்யா ராய்,அருந்ததி ராய், இருவரையும் அங்கீகரிக்கலாம் இரண்டு அழகிராய்!
ஒன்று - தோல் வனப்பு
ஒன்று - நூல் வனப்பு
முன்னதை - மூப்பு தின்னும்
பின்னது- மூப்பைத் தின்னும்”
இது வாலிப கவிஞர் வாலியின் வரிகள்!
வேடிக்கிய போலத் தோன்றினாலும் வாஸ்தவம்தானே?
வாசிப்பு, வாழ்வை அர்த்தப்படுத்தி,
நம் புரிதலை ஆழப்படுத்தி,
நம் ரசனையை அதிகப்படுத்தும் ஒரு அற்புதம் இவற்றை நான் ரசித்து எழுதியதைப் போல, ருசித்து வாசிப்பீர்கள் என நம்பிகிறேன்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580109906566
Antha Chinna Pennin Snegam

Read more from Kanchana Jeyathilagar

Related to Antha Chinna Pennin Snegam

Related ebooks

Reviews for Antha Chinna Pennin Snegam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Chinna Pennin Snegam - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    அந்தச் சின்னப் பெண்ணின் சிநேகம்

    Antha Chinna Pennin Snegam

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அந்தச் சின்னப் பெண்ணின் சிநேகம்

    அற்புத ஆயுதம்

    அக்கரைக் கைமணம்!

    அதே காசு

    அதுதான் பாயின்ட்

    ஆவது பெண்ணாலே

    ஆதரவு

    ஆம்பிளைக் கிரீடம்

    இது ஒரு அபூர்வ ரகம்

    இளமை மணம்

    ஒன்று இரண்டு

    ஓடும் பறவைகள்

    கண்ணாடி

    கலங்கல்

    கல்யாணமாங் கல்யாணம்

    கடைசி குளிர்

    பிணக்கு எதுவரை?

    நீ பாதி நான் பாதி

    சகோதரிகள் ஒருமித்து...

    பூர்த்தியான தேடல்

    பட்டு மனசு

    கிறிஸ்துமஸ் தாத்தாவான தாத்தா

    அந்தச் சின்னப் பெண்ணின் சிநேகம்

    பிடரி முழுக்க வியர்வை வழிய அவன் சட்டைக் காலரைப் பின்னாகத் தள்ளிவிட்டான். பாலியஸ்டர் துணி, அந்தஸ்திற்கு துணை போனாலும், மாசி வெயிலுக்குத் தோதுப்படவில்லை.

    கண்கள் சோர்ந்து கிடந்தாலும் சுற்றிலும் தேடிச் சுற்றின. வத்தலக்குண்டு ஊர் பெரியதில்லையென்றாலும், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம் என்று போக, ஊர் பஸ் நிலையத்தில் கூட்டம் ஜகஜகத்தது.

    ஏழு வருடங்களுக்கு முன் அவன் இங்கு வருகையில் இப்படியில்லை. அது மார்கழி மாதம். குளிரில் கொடைக்கானல் செல்வோர் அதிகமில்லை; மதுரையில் திருமணக் காலமுமில்லை.

    அத்தை, பாட்டியின் வசவுகளில் மனம் வெறுத்து பஸ் ஏறியவன், இவ்வூர் வந்து இறங்கிய போது கையில் பைசா இல்லை!

    கோர்த்துப் பிரியும் நினைவுகளை சீராக்கி அசைபோட ஓரிடம் தேவையாயிருக்க - அவன் கண்ணில்பட்ட ஹோட்டலினுள் நுழைந்து ஒரு தயிர் வடைக்குச் சொன்னான்.

    அப்போது 20 வயதிருக்குமா...? சரியாக மீசை கூட அடர்ந்திருக்கவில்லை.

    'எலக்ட்ரிக்கு வேலை படிக்கியா மூதி? நாலு நாளா தோட்டங் காயுறது கண்ணுல படலை? வயரும் பல்புமா பொழுதக் கழிக்காங். ஆயி அப்பன் உசிரை உருவினவன், ஏங் உசிளையும் முழுங்கப்போதியாவில?'

    காலையிலிருந்து அவன் தொண்டைக்கு ஒருவாய் ‘வெந்நித் தண்ணி' காட்டாத கிழவி, சேலை நெகிழ்ந்தது கூட உணராது, இவன் முன்னுச்சி மயிரைப் பற்றிக் குலுக்கி, கன்னத்தில் இடித்தாள்.

    பல், உதட்டைக் கீற உப்பாய்க் கரித்தது. எலக்ட்ரிக் ஷாப்பில் உடன் வேலை பழக அமர்ந்திருந்த விடலைகள், நமுட்டாய்ச் சிரித்தது ரோஷத்தைக் கிளற, தான் கழற்றி கொக்கியில் மாட்டியிருந்த சட்டையைக்கூட எடுக்கத் தோன்றாது, அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பி விட்டான்.

    ‘உசரை எல்லாம் முழுங்குனவனே, சோறு முழுங்க வீட்டுக்குத்தான வருவ?' கூவிய கிழவி ‘தடதட'வென பின்னால் முடியவிழ ஓடி வந்தாள்.

    தண்ணீரில்லாத் தோட்டத்தில் அவன் எங்கேயிருந்து நிலம் குளிரப் பாய்ச்ச? தோள் வலிக்க முந்தாநாள் கூட சுமந்து ஊற்றினான். வீங்கிய உதடுகளை நக்கியவன், மிஞ்சிய வெறுப்பில் பஸ் ஏறி விட்டான்.

    'போ... நாசமா போ...' - கிழவி ஆச்சரியத்தில் கத்திக் கொண்டே பஸ் பின்னாக மறைந்தாள். அவள் அடியும் வசவும் சலித்துப் போனது அவனுக்கு. வேட்டியின் கீழிருந்த அரை டிராயரிலிருந்த மூன்று ரூபாயில் சீட்டும் எடுத்து விட்டான்.

    இதெல்லாம் ஏழு வருடங்களுக்கு முன்.

    இங்கு வந்திறங்கிய போது மழையின் அறிகுறியாய்க் குளிர்ந்த காற்றடித்தது. காலி வயிறும், புது ஊரும் அவனைப் பயமுறுத்தின

    'கையில் நாலு காசிருந்தா தெம்பா இருக்கும்.' என்று எண்ணியவன் ஒரு ஓரமாய் அமர்ந்தான். பலர் நடந்த பிளாட்பாரத் தரை, நொறுநொறுத்தது. அங்கே வெற்றுடம்பை, சாய்க்க முடியவில்லை. மன அதிர்ச்சியும் ஆயாசமும் கண்ணைச் சுழற்றின. குறுகி சிறு தூக்கம் போட்டவன், பொழுது இருட்டவும் எழுந்தான். செய்வதறியாது அங்குமிங்குமாய் நடந்தான். மீந்திருந்த 20 காசில் என்ன வாங்க? பசி அகோரமாய் முழுச் சாப்பாடு கேட்டது.

    கடைகளைப் பூட்ட ஆரம்பித்தனர். பசி, கால்களை வலுவிழக்கச் செய்தது.

    'இப்பவே இப்படிப் பிறாண்டி அசத்துதே! நாளைக்கு...? நாலு நாட்களில் குப்பைத் தொட்டியின் அருகில் தான்.' விலா எலும்பெல்லாம் வரியிட பிணமாகிக் கிடப்பது போன்ற கற்பனையில் அவன் உடல் மேலும் சில்லிட்டது.

    ‘ஒரு வேல கிடைக்காதயா போயிறும்?' என்ற தைரியம் நின்றது சொற்ப நேரமே.

    'படுக்கக்கூட இடமில்லாத...?' சுற்றி வந்த அவன் பசித்த கண்கள், பருத்த குப்பைத் தொட்டியின் மீது நின்றன. ஊரிலா? இருட்டு அடர்த்தியாயிருக்க, நினைப்பு தயக்கமாய்த் தலை நீட்டியது.

    'சே... எச்சிலையா?'

    'வயத்துக்குப் போட காசில்லை. விடிஞ்ச பெறவு பொறுக்க ஏலுமா?' நெருங்கியவன், தன் நிலைமையை முழுவதுமாக உணர, அழ ஆரம்பித்தான்.

    தோளை யாரோ தட்டினார்கள்.

    விதிர்த்துத் திரும்பினான்.

    துன்னத் தேடினியா? அவள் கேட்டாள்.

    பசி, அவன் கண்ணில் தெரிந்திருக்க வேண்டும். குறுகிக் குனிந்தான்.

    கண்கள் மேலும் கலங்கிச் சொரிந்தன.

    வா - கூடையை இடுப்பிலிருத்தியவள், முன்னாக நடந்தாள்.

    'இந்தச் சிறுபெண்ணைத் தொடர்ந்தா...? - எங்கே?' கேட்கத் தோன்றாமல் அவன் தொடர, பஸ் ஸ்டாண்டின் பின்வாசல் வழியே வெளியேறி ஒரு சந்தில் நுழைந்தனர்.

    மழை வலுத்தது. காய்ந்த தரையில் துளிகள் விழுந்து மறைந்து பின் சற்றே சகதியானது. கழிவு நாற்றம் தூக்கலானது.

    அவள் ஒரு திண்டின் மேலேறி நின்று இங்ஙனதான் என்று குரல் கொடுத்தாள்.

    இரண்டு கடைகளின் நடுவே மேடை போலிருந்த திண்டு - என்றோ அதில் வழவழப்பாய் பூசியிருந்த சிமிண்டு இன்னும் சிறிது ஒட்டிக் கொண்டிருந்தது.

    இருபக்க தகரக் கூரை நீண்டிருந்ததில் மழைநீர் படாது காய்ந்திருந்த தரை அவனுக்குத் தெம்பு தந்தது. தன் மேலேயிருந்த மழைநீரை சிலும்பி உதறி, கால்களைத் தேய்த்தவன், திண்டில் ஏறினான்.

    கூடையை ஓரமாக வைத்து நெடுக நடந்தவள், ஒரு ஜன்னலருகே குனிந்து யாருக்கோ குரல் கொடுத்தாள். நீட்டப்பட்ட துணி மூட்டையுடன் வந்தவள்,

    என்னோடது தேங். இங்கன கொடுத்து வச்சிருப்பேன்.

    அவன் பதிலுக்குச் சிரிக்க முயன்றான். சிரமமாய் இருந்தது.

    கிழிந்த வாழை இலை ஒன்றால் திண்டைப் பெருக்கினாள். கூடையிலிருந்து வாழைப் பழங்களை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு, பேப்பரில் பொதிந்த பொட்டலத்தைப் பிரித்து நடுவாய் வைத்தாள்.

    வெளியே பல்லாங்குழியாய் மழைத்துளி, துள்ளித் துள்ளித் தெறித்ததைப் பார்த்தபடி நின்றிருந்தவனை,

    உக்காந்து துன்னு அதட்டினாள்.

    நாலு இட்லியும் சாம்பாரும் தெரிய, அவன் வாயில் நீர் சுரந்தது.

    ஒனக்கு?

    இதாங். எனக்கு ஒண்ணு. உனக்கு மூணு. பழம் இருக்குதுல்ல?

    மழைநீரில் கை கழுவி, இவனுக்கு மூன்றை ஒதுக்கி வைத்தவள், சாப்பிட ஆரம்பித்தாள்.

    கூடையில் சுருண்டு கிடந்த கனகாம்பரத்தைப் பார்த்தவன்,

    பூ யாவாரமா? கேட்டான்.

    ம். அவள் மேலே பேசாது சாப்பிட, அவனும் குனிந்தான் சாப்பிட. கைவிரல்கள் நடுங்கின. வறண்ட இட்லி சாம்பார், அமிர்தமாய் சுவைத்தது. வயிறு நிறையாவிடினும் உயிர் மீண்டது.

    இருவரும் கைகளை மழைநீரிலேயே கழுவிக் கொள்ள, இலை எடுத்துச் சுத்தப்படுத்தினாள். கைகுவித்து, நீர் சேர்த்து பிடரி, முகம் எனத் தேய்த்துக் கழுவிக் கொண்டாள்.

    சில்லுனு இருக்குது, பழம் சாப்பிடறியா?

    தோல் கருத்த வாழைப் பழங்களை நீட்ட, ஆளுக்கு இரண்டை விழுங்கினர். மெல்லுவதற்குள் அது வழுக்கி உள்ளே இறங்கியது. அத்தனைக் கனிந்த பழம்!

    பொட்டிக் கடையில விக்க முடியாததை அடிக்கோசரம் எனக்குக் கொடுத்திடுவாரு நாடாரு அண்ணாச்சி.

    ம்

    நானு ஞாயிறுதோறும் அவரு கடை மாதா படத்துக்கு ஒண்ணர முழப் பூவத் தந்துருவேனில்ல?

    பெருமையாகப் புன்னகைத்தாள்.

    உள்ளாற நவுரு. வாடையாயிருக்கு

    இப்போது தெருவிளக்கு மங்கலாய் அவர்கள் முகத்தில் பட்டது. அவளை நிமிர்ந்து பார்த்தான். முகம் கழுவியபின் புதிதாய்ப் பளிச்சிட்டாள்.

    'பதினஞ்சு வயசிருக்கும்' கணித்தான்.

    பூப்போட்ட பாவாடையும், ஆண்கள் போடும் சிலாக் சட்டையுமாக இருந்தாள். முடி செம்பட்டையாய் இருந்தாலும், கண்கள் நல்ல கருப்பில் மின்னின. மெலிந்த கைகளின் சிவப்புக் கண்ணாடி வளையல்கள் அவ்வப்போது சிணுங்கியது இனிமையாயிருந்தது.

    மௌனம் சங்கடமாயிருக்க,

    பூ நாளக்கு வித்துப் போடுமா? கேட்டான்.

    ம்... கனகாவரந்தான்

    நல்ல யாவாரமா?

    நீ வூட்டுல சொல்லிக்காம வந்துட்டியாக்கும்? அவள் சாய்ந்து சாவதானமாய்க் கேட்க, அவன் முகம் இறுகியது.

    ம்

    வசதியா... இல்ல கஷ்டந்தானா?

    ஏதோ ரெண்டு வேள கூழு, சோறு உண்டு

    எல்லாரும் மாதிரிதான். நானு இங்கன வந்து மூணு வாரந்தாங் ஆவுது

    லேசாய் வாய் திறந்து அவளைப் பார்த்தான்.

    இதுக்கு முன்ன?

    இதே பூ யாவாரந்தான். ஆயி அப்பன் கிடையாது. சின்னாத்தா வூடுதாங். அந்த ஊருல நல்ல சேல்ஸ்சு. எங்கையில துட்டுப் புழக்கம் சாஸ்தி. பஸ்சு ஏசண்டு ஒருத்தன் சிநேகம்... ம்ப்ச்... நம்பி ஏமாந்தாச்சு போ... அவனும் அவஞ்சிரிப்பும்...

    முணங்கிய அவள் முகம், வெறுப்பில் சற்று முற்றித் தெரிந்தது.

    அவன் பேச்சைத் தொடரத்

    Enjoying the preview?
    Page 1 of 1