Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoongatha Vizhigal Irandu
Thoongatha Vizhigal Irandu
Thoongatha Vizhigal Irandu
Ebook197 pages1 hour

Thoongatha Vizhigal Irandu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில நேரம், நம் மனதில் குழப்பங்கள் நிலவும். என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம். அதற்கு அழகான தீர்வு இந்தக் கதை.

ஒரு முறை புத்தர், தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அவருக்குத் தொண்டை வறண்டு போகிறது.

தன் சீடர் ஒருவரை அருகில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்கிறார். அந்தச் சீடரும் குளத்தை நோக்கிச் செல்கிறார்.

அப்பொழுது ஒரு மாட்டு வண்டி குளத்தின் வழியாகப் போக... தண்ணீர் கலங்கிச் சேறும் தண்ணீரும் கலந்து விடுகிறது.

இந்தக் கலங்கிய தண்ணீரை நான் எப்படிக் குருவிற்குத் தருவேன் என்று குழம்பிய சீடர் புத்தரிடம் அதைச் சொல்கிறார்.

புத்தர் அமைதியாக இருந்தார். பின்பு அரை மணி நேரம் கழித்து, அந்தச் சீடரை மீண்டும் குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீரை ஒரு குடுவையில் சேகரித்து, அதைப் புத்தரிடம் அவர் கொடுத்தார்.

“பார்... தண்ணீர் சுத்தமாக உள்ளது. மண் அடியில் உள்ளது. சேறு தானாகவே தெளிந்து, குடுவையின் அடியில் போய் விட்டது.”

“மனமும் அதைப் போலத்தான். குழப்பத்தில் இருந்தால், சில நேரம் கழித்துத் தானாகவே சரியாகி விடும்.”

“எந்த முயற்சியும் அதற்குத் தேவையில்லை. மனம் தானாகவே சரியாகி விடும்!” என்றார் புத்தர்.

உண்மை! நம் மனதின் அமைதி, நம் கையில்தான் உள்ளது.

என் நாவல்களைப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தரும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி.

அன்புடன்,

லட்சுமி சுதா.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140906516
Thoongatha Vizhigal Irandu

Read more from Lakshmi Sudha

Related to Thoongatha Vizhigal Irandu

Related ebooks

Reviews for Thoongatha Vizhigal Irandu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoongatha Vizhigal Irandu - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தூங்காத விழிகள் இரண்டு

    Thoongatha Vizhigal Irandu

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாங்க, பேசலாம்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாங்க, பேசலாம்!

    வணக்கம். இந்தக் கதையை எழுதி முடிக்கும் பொழுது வாட்ஸ்-அப்பில் வந்த ஒரு அழகான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    சில நேரம், நம் மனதில் குழப்பங்கள் நிலவும். என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம். அதற்கு அழகான தீர்வு இந்தக் கதை.

    ஒருமுறை புத்தர், தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அவருக்குத் தொண்டை வறண்டு போகிறது.

    தன் சீடர் ஒருவரை அருகில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்கிறார். அந்தச் சீடரும் குளத்தை நோக்கிச் செல்கிறார்.

    அப்பொழுது ஒரு மாட்டு வண்டி குளத்தின் வழியாகப் போக... தண்ணீர் கலங்கிச் சேறும் தண்ணீரும் கலந்து விடுகிறது.

    இந்தக் கலங்கிய தண்ணீரை நான் எப்படிக் குருவிற்குத் தருவேன் என்று குழம்பிய சீடர் புத்தரிடம் அதைச் சொல்கிறார்.

    புத்தர் அமைதியாக இருந்தார். பின்பு அரைமணி நேரம் கழித்து, அந்தச் சீடரை மீண்டும் குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.

    தண்ணீரை ஒரு குடுவையில் சேகரித்து, அதைப் புத்தரிடம் அவர் கொடுத்தார்.

    பார்... தண்ணீர் சுத்தமாக உள்ளது. மண் அடியில் உள்ளது. சேறு தானாகவே தெளிந்து, குடுவையின் அடியில் போய் விட்டது.

    மனமும் அதைப் போலத்தான். குழப்பத்தில் இருந்தால், சில நேரம் கழித்துத் தானாகவே சரியாகிவிடும்.

    எந்த முயற்சியும் அதற்குத் தேவையில்லை. மனம் தானாகவே சரியாகிவிடும்! என்றார் புத்தர்.

    உண்மை! நம் மனதின் அமைதி, நம் கையில்தான் உள்ளது.

    என் நாவல்களைப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தரும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி.

    விமர்சனங்களுக்கு...

    lakshmisudha2010@yahoo.com

    அன்புடன்,

    லட்சுமி சுதா.

    1

    அலைகள்

    என்

    கால்களை

    வந்து

    செல்லமாகத்

    தீண்டிச்

    செல்கின்றன!

    உன்

    நினைவு

    என்

    மனதில்

    சுகமாகப்

    பரவுகிறது!

    சில

    நேரம்

    ஆர்ப்பரித்துப்

    பொங்குகிறது,

    உன்

    நினைவு!

    எங்கே

    நீ

    பெண்ணே?

    வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.

    மழை இப்பொழுது வருமா என்ன?

    இந்தக் கத்திரி வெயிலில் மழை வந்தால் அது அதிசயம்தான்.

    ஆனால் இப்பொழுது எல்லாமே இயற்கைக்குப் புறம்பாகத் தானே இருக்கிறது. என் வாழ்க்கை போல என்று மனதிற்குள் நினைத்தபடியே சப்பாத்தி, சப்ஜியை லஞ்ச் பாக்ஸில் வைத்து மூடினாள் ஸ்வாதி.

    சுவர்க் கடிகாரம் மணி எட்டு என்று குயில் போல் கூவி உறுதிப்படுத்தியது. இதோ இன்றோடு இந்த வீட்டைக் காலி செய்யப் போகிறேன்.

    இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்கு ஆதாரம் என் வாழ்க்கையே! நினைக்கும் பொழுதே சுய பச்சாதாபத்தால் கண்கள் கலங்கின அவளுக்கு.

    இன்று அலுவலகத்தில் எனக்குக் கடைசி நாள். நேற்றே எல்லா ஃபார்மாலிடீஸும் முடிந்து விட்டதால் இன்று பெரிதாக ஏதும் இல்லை.

    ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் கணக்கு வழக்குகளைப் பார்த்து விட்டு, அவளுக்குண்டான ஊதியத்தைக் காசோலையாக வழங்குவார்கள்.

    நாளை இரவு நான் சிம்லாவில் இருப்பேன்.

    சிம்லாவில் வேலை கிடைத்ததற்குக் காரணமே ரஞ்சித் தான். நான் ஆபத்தில் இருக்கும் பொழுதெல்லாம் கரம் கொடுத்துத் தூக்கி விடுபவன் ரஞ்சித்தான்.

    ‘உனக்கு ரஞ்சித் என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக... கோவிந்தன் என்றோ, கிருஷ்ணன் என்றோ பெயர் வைத்திருக்கலாம் ரஞ்சித்! உனக்கு அதுதான் ரொம்பப் பொருத்தம்!’ என்று அவனைச் சீண்டியது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

    ‘ஆமாம். அப்படி வைத்திருந்தால் எனக்கும் வசதிதான். எனக்கும் நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்திருப்பார்கள்!’ என்று அவன் சொன்னதை நினைத்து அவள் உதடுகளில் புன்னகை பரவியது.

    சென்னையில் அவள் வேலை பார்க்கும் கம்பெனியின் நிதி நிலைமை சரியில்லை என்று ஆறு மாதங்களுக்கு முன்பே ரஞ்சித் அவளை எச்சரிக்கை செய்தான்.

    அவள்தான் அதைப் பெரிதுபடுத்தாமல் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டாள்.

    பத்து நாட்களாகக் கம்பெனியில் ஆட்குறைப்பு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

    கத்தி யார் மேல் விழப் போகிறதோ என்று ஒவ்வொருவரும் பயந்தபடியே இருந்தனர்.

    கத்தி அவள் தலைக்கும் வந்துவிட்டது.

    இதோ இன்று தனக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஆபத்பாந்தவனாக ரஞ்சித் தனக்கு வேறு இடத்தில் உடனே வேலை ஏற்பாடு செய்ததை நினைத்து அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது.

    அதுவும் அவன் கஸின் கம்பெனியிலேயே அவளுக்கு செகரட்டரி வேலைக்கு அவன் ஏற்பாடு செய்திருந்தது அவனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    ‘தேங்க்ஸ் ரஞ்சித்!’ என்று மனதிற்குள் அவனுக்கு நன்றி செலுத்தியவள், கதவைப் பூட்டிவிட்டு பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

    சிம்லாவிற்குச் செல்வது இது முதல் தடவை.

    இப்பொழுது அங்கே குளிர் அதிகமாக இருக்கும் என்று ரஞ்சித் சொன்னது நினைவுக்கு வந்தது.

    சென்னையில் குளிர் ஒரு நாளும் இருக்காது என்பதால் அவளிடம் குளிர்கால உடைகள் என்று ஏதும் பிரத்யேகமாக இல்லை.

    ‘ம்... ம்... தேவைப்பட்டால் அங்கே போய் ஸ்வெட்டர், கம்பளி, குல்லா வாங்கிக் கொள்ளலாம்,’ என்று முடிவு செய்தாள்.

    இனி சிம்லாவில்தான் என் வாழ்க்கை கழியப்போகிறது என்று நினைத்தபடியே அலுவலகத்தினுள் நுழைந்தாள் ஸ்வாதி.

    ‘மலைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் சிம்லா! கம்பீரமான பனி படர்ந்த மலைகள்.

    எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளங்கள் போல் பசுமையான மரங்களும் செடிகளும் அணிவகுத்து இருக்கும் இடம்.

    உங்கள் அணிவகுப்பை நான் ஊடுருவிப் பார்ப்பேனே என்பது போல் ஆங்காங்கே வளைந்து நெளிந்து ஓடும் ஓடைகள்.

    இயற்கை அன்னையின் கருணைப் பார்வையால் எல்லா இடங்களிலும் செழுமை!

    ‘இந்த மாதிரி ஒரு இடத்தில்தான் ஸ்வாதி நீ வேலை பார்க்கப் போற!’ என்று தன் மொபைலில் உள்ள சிம்லா பற்றிய ஒரு இணையதளத் தகவலை அவளிடம் காட்டினாள் சாந்தி.

    ம்... பார்க்க அழகா இருக்கு. ஆனால் போய்ப் பார்த்தால் தான் தெரியும் சாந்தி... ஊர் எப்படி என்று!

    உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாகவே அமையும், ஸ்வாதி. உனக்கு உடனடியாக வேலை கிடைத்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம்.

    ஐ’ம் ஹாப்பி ஸ்வாதி. பத்திரமாகப் போ. ஏதேனும் வேண்டும் என்றால் எனக்கு ஃபோன் செய். புரிந்ததா...?

    சரி சாந்தி...! என்றபடியே அக்கௌண்ட்ஸ் செக்ஷன் நோக்கி நடந்தாள் அவள்.

    எல்லா ரெஜிஸ்டரிலும் கையெழுத்துப் போட்டு விட்டுத் தெரிந்தவர்களிடம் எல்லாம் விடை பெற்று விட்டு... வீடு திரும்பும் பொழுது மனம் கனத்தது.

    ‘இனி இந்த ஆஃபீஸிற்கும் எனக்குமான தொடர்பு முடிந்து விட்டது. இனிமேல் நான் வேறு ஒரு இடத்திற்குப் போய் அங்கே பணி ஆற்ற வேண்டும்.

    என் வாழ்க்கையில் வீசிய புயல்களுக்கு, இந்த மாற்றம் ஒன்றும் இல்லை. பழசை என்னால் மறக்கவே முடியாதா...?

    அந்த நினைவுகள், கசப்பான அனுபவங்கள்.

    கடவுளே! உன்னை மன்றாடிக் கேட்கிறேன். எனக்கு மறக்கும் சக்தியைக் கொடு. நான் எல்லாவற்றையும் மறக்க விரும்புகின்றேன். ப்ளீஸ்! எனக்கு உதவி புரி...!’ என்று மனதிற்குள் வேண்டியபடியே வீட்டின் கதவைத் திறந்தாள்.

    அக்கா... அம்மா கோவிலுக்குப் போய் இருக்காங்க. சாவியை என்கிட்ட கொடுக்கச் சொன்னாங்க... என்றாள் பக்கத்து ஃப்ளாட் கீதா.

    ம்... சரி, ஒரு ஃபைவ் மினிட்ஸில் தருகிறேன்.

    அப்புறம் அக்கா... ஊருக்குப் போன பின்பு ஃபோன் செய்யச் சொன்னாங்க... அம்மா.

    சரி கீதா.

    வீட்டினுள் சென்றவள் லக்கேஜ் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டாள்.

    ஹால் லைட்டை நிறுத்தியவள் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டைப் பூட்டினாள்.

    வெளியே நின்று கொண்டு இருந்த கீதாவிடம் சாவியை நீட்டினாள்.

    நல்லா படி கீதா... ஆல் தி பெஸ்ட்.

    தேங்க்ஸ் அக்கா...! ஆட்டோ சொல்லி இருக்கீங்களா...?

    ம்... யெஸ். இதோ ஆட்டோ வருகிறதே... பை பை... கீதா.

    பை அக்கா! என்று கை அசைத்தாள் அவள்.

    சிம்லாவை நோக்கி அவளின் பயணம் தொடங்கியது.

    டொமஸ்டிக் ஏர்போர்ட் தானே மேடம்?

    ஆமாம்...

    வீட்டைக் காலி செய்துட்டுப் போறீங்களா மேடம்?

    ஆமாம்...

    நீங்க உண்டு... உங்க வேலை உண்டுன்னு ரொம்ப அமைதியா இருப்பீங்க...

    அவள் லேசாகப் புன்னகைத்தாள்.

    பெங்களூர் போறீங்களா மேடம்...?

    இல்லை. சிம்லா... டெல்லி போய் அங்க இருந்து போகணும்.

    சரி மேடம்... அது ரொம்பக் குளிரான இடம் தானே மேடம்?

    ஆமாம்...

    ‘கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லும் என்னைப் பற்றி இந்த ஆட்டோக்காரர் என்ன நினைத்துக் கொண்டு இருப்பார்.’

    ‘பரவாயில்லை. என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது என் இயல்பு. நான் இப்படித்தான் இருப்பேன்...’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

    ஏர்போர்ட் வந்தவுடன் மனதில் ஏதோ புரியாத உணர்வுகள்.

    தன்னுடைய சீட்டில் ஃப்ளைட்டில் உட்கார்ந்த பின்பு கண்கள் கலங்கின.

    தன்னைச் சமாளித்துக் கொண்டு கண்களை மூடியபடி மனதை அமைதிப்படுத்த முயன்றாள்.

    அடுத்த ஆறு மணி நேரத்தில் டெல்லியில் இருந்தாள் அவள்.

    உறைய வைக்கும் குளிரில் பற்கள் தந்தியடிக்க, ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாள்.

    ‘ஸ்வாதி’ என்று ஒருவர் அட்டையைத் தூக்கிப் பிடித்துக் காட்டிக் கொண்டு இருந்தார்.

    அவரை நோக்கிக் கை அசைத்தாள் ஸ்வாதி.

    மேடம்...! ரஞ்சித் ஸாரோட கெஸ்ட்டா...? என்று ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் அவர் வினவினார்.

    ஆமாம்...

    வாங்க மேடம்... கார் அங்கே இருக்கு.

    ஓ.கே. என்றபடியே அவரைத் தொடர்ந்தாள் அவள்.

    கார் கதவைத் திறந்தவுடன் உள்ளே அமர்ந்து கொண்டாள்.

    அவளின் லக்கேஜை அவர் டிக்கியில் வைத்தார்.

    காரில் ஹீட்டர் இருந்ததால், குளிர் அவளுக்குத் தெரியவில்லை.

    "மேடம்! போய்ச் சேர ஐந்து மணி நேரம் ஆகும்.

    Enjoying the preview?
    Page 1 of 1