Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayam Bhoomiyil...
Aagayam Bhoomiyil...
Aagayam Bhoomiyil...
Ebook237 pages1 hour

Aagayam Bhoomiyil...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

என்னுடைய இந்த நாவலான 'ஆகாயம் பூமியில்!' மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். இந்த கதையின் நாயகி மிதுலா ஒரு நடன குழுவின் இயக்குனர். பரதநாட்டியத்தின் மேல் ரொம்ப ஈடுபாடு கொண்ட அழகான நளினமான பெண்.
நாயகன் கேசவ் வித்தியாசமான முரண்பாடான கருத்துக்களை கொண்டவன்.பணம் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்து அவன் ஆழ்மனதில் பதிந்து உள்ளது.
மிதுலா அவனுக்கு சவாலாக இருக்கிறாள். இருவரும் இணைவார்களா? படித்துப் பாருங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906580
Aagayam Bhoomiyil...

Read more from Lakshmi Sudha

Related to Aagayam Bhoomiyil...

Related ebooks

Reviews for Aagayam Bhoomiyil...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayam Bhoomiyil... - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    ஆகாயம் பூமியில்….

    Aagayam Bhoomiyil….

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    முன்னுரை

    என்னுடைய இந்த நாவலான ‘ஆகாயம் பூமியில்!' மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். இந்தக் கதையின் நாயகி மிதுலா ஒரு நடனக் குழுவின் இயக்குனர். பரதநாட்டியத்தின் மேல் ரொம்ப ஈடுபாடு கொண்ட அழகான நளினமான பெண்.

    நாயகன் கேசவ் வித்தியாசமான முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவன். பணம் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்து அவன் ஆழ்மனதில் பதிந்து உள்ளது.

    மிதுலா அவனுக்குச் சவாலாக இருக்கிறாள். இருவரும் இணைவார்களா? படித்துப் பாருங்கள். கருத்துக்களைச் சொல்லுங்கள்.

    விமர்சனங்களை நிறைய வாசகிகள் கைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

    உங்கள் விமர்சனம் என் எழுத்து மெருகேற உதவி செய்கின்றது.

    பிரியமுடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    அத்தியாயம் 1

    வெள்ளைப்

    பூக்களாக

    மழைத்

    தூறல்

    ……………..

    பூமியில்

    சங்கமம்

    நதியோரம்

    முன் இரவில்

    …………

    நான்

    உனக்காகக்

    காத்து

    இருக்கிறேன்,

    பதட்டமாக!

    ………………….

    வருவாயா

    நீ…?

    சென்னையில் உள்ள தி. நகரில் அமைந்திருந்த அந்தப் பிரபலமான நகைக்கடையில் வழக்கம் போல் கூட்டம் அலை மோதியது.

    மிது... என்ன கூட்டம் பார் இந்தக் கடையில். லக்ஷ்மி கடாட்சம் பொங்கி வழியறது, என்றாள் கீதா.

    அம்மா... சீக்கிரமா எதையோ ஒன்றைத் தேர்ந்தெடுங்க. இந்த மாதிரி நகைக் கடையே எனக்குப் பிடிக்காது. அநாவசியமா இதில செலவு செய்யறதுக்குப் பதிலா உருப்படியா வேறு ஏதாவது வழியில் முதலீடு செய்யலாம்.

    ஆமாம்டி, சொல்லுவ... எப்படி இருந்தாலும் உன்னைக் கல்யாணம் செய்து கொடுக்கும் பொழுது இதெல்லாம் தேவைப்படும். மொத்தமா அப்ப வாங்கறது எல்லாம் ஆகாத காரியம். அதோட அக்ஷயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால் நிறையத் தங்கம் சேருமாம். அதான் இன்னிக்கு ஒரு கிராமாவது வாங்கலாம்னு வந்தேன்.

    அம்மா... அம்மா! உன் புராணத்தை ஆரம்பிச்சிட்டியா! அந்த மாதிரி நடமாடும் நகைக்கடை மாதிரி நகையை மாட்டினாத்தான் எனக்குக் கல்யாணம் நடக்கும் என்றால்... அந்த மாதிரிக் கல்யாணம் எனக்குத் தேவையே இல்லை.

    அதோடு, அக்ஷயத்ருதியை எல்லாம் நகைக் கடையினர் வேண்டும் என்றே செய்யும் வியாபாரத் தந்திரம். முன்பெல்லாம் இதெல்லாம் கிடையாது.

    பத்து வருடங்களுக்கு முன்பு அக்ஷயத்ருதியை அன்று நகைக் கடைகளில் இவ்வளவு கூட்டம் கிடையாது. புனிதமான அந்த நாள் அன்று மக்கள் பிறருக்குத் தான தர்மம் செய்வது வழக்கம். நீயே இதை என்னிடம் நிறைய முறை சொல்லியிருக்க, அப்படி இருக்கும் பொழுது அந்தத் தப்பை இப்ப நீயே செய்யறது நல்லதா?

    என்னடி செய்யறது? காலத்திற்குத் தகுந்தாற் போல் நாம நம்மளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கு. உன்னைக் கரை சேர்க்கணுமே!

    அம்மா... நான் என்ன இப்பக் கடலில் தத்தளித்துக் கொண்டா இருக்கிறேன்... என்னைக் கரை சேர்க்கணும் அப்படிங்கற!

    உன்னோட வாயாடி என்னாலே ஜெயிக்க முடியாது. வா, வந்த வேலையைக் கவனிப்போம்... அதோ, அந்தக் கடைசி ஷெல்பில் தெரியுதே ஒரு தோடு... அதைக் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க.

    இதுதானே மேடம், பாருங்க, என்றபடியே கடை ஊழியர் ஒரு வெல்வெட் பெட்டியை அவர்கள் முன் வைத்தார்.

    அழகழகான தங்கத் தோடுகள் அதில் மின்னின. சில தோடுகளில் வெள்ளை, சிவப்பு, பச்சைக் கற்கள் ஒளிர்ந்தன.

    மிது.... உனக்கு இது நன்னா இருக்கும்டி, எடுத்துக்கோ! என்றபடியே ஒரு தோடை பத்திரமாகப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்தாள் கீதா.

    அம்மா.... எனக்கு வாங்கறதுக்கு நான் வரலை. எனக்கு இதை எல்லாம் பார்த்தாலே எரிச்சலா வருது.

    கொலை, கொள்ளை, வரதட்சிணைக் கொடுமை எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மஞ்சள் நிறத் தங்கம். எனக்கு வேண்டாம். நான் வீட்டுக்குப் போறேன். நீ வேணும்னா வாங்கிட்டு வா, என்றபடியே நகர முயன்றாள்.

    ஏய் மிது... நில்லுடி. சரி, நான் எனக்கு வாங்கிக்கறேன்... போதுமா? நீ உன் இஷ்டப்படி குறத்திகிட்ட கலர் கலரா உனக்குப் பிடிச்ச மாதிரி கம்மல், மாலை, வளையல் எல்லாம் வாங்கிப் போட்டுக்கோ. நான் இந்த வயசான காலத்தில் தங்கத்திலேயே எல்லாவற்றையும் மாட்டிண்டு அலையறேன்.

    அம்மா... உனக்கொண்ணும் ரொம்ப வயசான மாதிரித் தெரியலை. யூ ஆர் ஸ்வீட்... என்று அம்மாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள் மிதுலா.

    ஏய்... என்னடி... இது! ஆத்திலேதான் இப்படி எல்லாம் அச்சு பிச்சுத் தனம் செய்வ. இங்க வந்தும் செய்யறியே, நன்னாவாயிருக்கு!

    ம்.... ஆத்திலே, குளத்திலே, தரையிலே எல்லா இடத்திலேயும்... நான் இப்படித்தான் இருப்பேன், என்று வெறுப்பேற்றினாள் அவள்.

    கடைக்காரர் இவர்களின் உரையாடலைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமப்பட்டார்.

    வைர மாலை ஒன்றைக் கையில் வைத்திருந்த கேசவ், விழிகள் அகல அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

    கோதுமை நிறத்தில், கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரத்தில், நீல நிறச் சுடிதாரில், பதுமை போல் அழகாக இருக்கிறாளே! ரொம்ப ஒப்பனை ஏதும் இல்லை. உடைக்கு ஏற்ற அணிகலன்கள் அவள் அழகுக்கு அழகு சேர்த்தன. ஆனால் ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை, அதில்,

    அதுதான் அவளுடைய அம்மா சொன்னார்களே.... குறத்தியிடம் வாங்கி அணிவதுதான் பிடிக்கும் போல என நினைத்துத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் அவன்.

    சரி, இந்தத் தோடிற்கு எவ்வளவு விலை ஆகும்? பார்த்துச் சொல்லுங்கோ, என்றாள் கீதா.

    ம்... இருங்க மாமி... ஒரு நிமிஷம். நான் பார்த்துச் சொல்றேன், என்ற கடை ஊழியர் கால்குலேட்டரைக் கையில் எடுத்துக் கொண்டு கணக்குப் போடத் தொடங்கினார்.

    சேதாரம், கூலி எல்லாம் சேர்த்து ஆறாயிரத்துத் தொள்ளாயிரம் ஆறது மாமி.

    கொஞ்சம் குறைச்சிக்கப்படாதா!

    மாமி.... உங்களுக்கோசரம் குறைச்சுத்தான் போட்டிருக்கேன். இந்தாங்க, இதுதான் இன்வாய்ஸ்... என்று ஒரு பேப்பரை நீட்டினார்.

    அதை மிதுலா வாங்கிக் கொண்டாள்.

    என்ன இது... பில் அப்படின்னு எதுவுமே இதில் குறிப்பிடலையே... வெறும் இன்வாய்ஸ் அப்படின்னு மட்டும் போட்டிருக்கீங்க...!

    மேடம்... நாங்க பில் கொடுத்தா உங்களுக்குத்தான் நஷ்டம்.

    என்ன நஷ்டம்?

    ம்... வரி கட்ட வேண்டி இருக்கும். அது உங்களுக்கு நஷ்டம்தானே! கூட எழுநூறு ரூபாய் கிட்ட நீங்க கொடுக்க வேண்டி இருக்கும்.

    பரவாயில்லை... நாங்க அதைக் கொடுக்கறோம். நீங்க பில்லைக் கொடுங்க.

    ஏன் மேடம் அநாவசியமாப் பணத்தை வேஸ்ட் செய்யறீங்க...?

    மிதுலாவிற்குக் கோபம் ஒரு அலை போல் உடல் முழுவதும் பரவியது.

    மிஸ்டர்... நீங்க செய்யறது தப்பு. அரசாங்கத்திற்குப் போக வேண்டிய வரிப் பணத்தைப் போக விடாமல் தடுக்கறீங்க. அதில் உங்களுக்கும் லாபம் இருக்கிறது. அதை மறைத்து எங்கள் மேல் அக்கறை இருப்பது போல் நடிக்காதீர்கள். வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப அக்கறையா சலுகைகள் கொடுப்பது போல் ஏமாற்றாதீர்கள், என்றாள் சற்றே உரத்த குரலில்.

    மேடம்... ஏன் பிரச்சினை செய்யறீங்க. உங்களுக்கு இஷ்டம்னா வாங்குங்க.... இல்ல, வாங்காதீங்க. எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஏதோ கோடிக்கணக்கில் வைரம் வாங்குவது போல் நினைப்பு... என்று முணுமுணுத்தான்.

    ஏன் பொய் சொல்றீங்க? நீங்கள் ஒரு பொருளை விற்றீர்கள் என்பதற்கு ஆதாரமே பில்தான். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்காமல் அதற்குப் பதில் இந்த இன்வாய்ஸைத் தரீங்க. ஸோ... நீங்க இதை விற்றதாகக் கணக்குக் காட்ட வேண்டாம்.

    அதற்கான வரியை நீங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டாம். வாடிக்கையாளரும் வரி கட்ட வேண்டாம், நீங்களும் வரி கட்ட வேண்டாம். மொத்தத்தில் அரசாங்கம்தான் நஷ்டப்படுகிறது. இது ரொம்பத் தப்பு. நான் இதை எங்கே சொல்ல வேண்டுமோ அங்கே சொல்லிக் கொள்கிறேன்.

    மேடம்... நீங்க... வருமான வரித் துறையைச் சேர்ந்தவங்களா? அவன் குரலில் பதட்டம் தெரிந்தது.

    இல்லை... ஆனால் இந்த முறைகேட்டைப் பற்றி எங்கே சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். அம்மா... வா... போகலாம். இந்தக் கடையில் நகை வாங்க வேண்டாம், என்று சொல்லியபடியே அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக இழுத்துச் சென்றாள் மிதுலா.

    அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தான் கேசவ். கோபத்தில் சிவந்த முகம், துடிக்கும் உதடு, படபடத்த கண்கள் என எல்லாவற்றையுமே அவன் விழிகள் படம் எடுத்தன.

    ‘ம்... சரியான கறார் அழகிதான். இந்தக் காலத்தில் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை வறுத்தெடுக்கும் ஆட்கள் மத்தியில் ரொம்ப வித்தியாசமான பெண்தான்.

    ஒரு வேளை மத்திய அரசாங்கத்தில் வேலை பார்க்கிறாளோ! ம்... இருக்கலாம்! மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாம், அரசாங்கத்தைச் சார்ந்த எல்லாத் துறையினர் மீதும் ஒரு இனம் புரியாத பரிவு இருக்கும்.

    அதோடு அரசாங்கத்தின் மேல் பற்று, நன்றி உணர்வு எல்லாமே இருக்கும். இவளும் அப்படிப்பட்டவளாக இருக்கலாம். மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு இலாகாவில் வேலை பார்ப்பவளாக இருக்கும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் அவன்.

    டார்லிங்... என்ன யோசனை? என்று அவன் தோளைச் செல்லமாக உலுக்கினாள் தாரிணி.

    ம்... சொன்னால் நீ கோபித்துக் கொள்வாய்.

    சொல்லுங்கள் டியர்... நான் கோபித்துக் கொள்ள மாட்டேன்.

    ம்... நகைக் கடையை விட்டுக் கோபமாகக் கொஞ்ச நேரம் முன் கிளம்பிப் போனாளே... அந்தப் பெண்ணைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ரொம்ப அழகாக இருக்கிறாள். அவள் கோபமாகப் பேசுவதுகூட இனிமையாக இருக்கிறது. அவளுடன் பழக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது! என்று குறும்பாகக் கண்ணடித்தான்.

    டார்லிங்... அவள் ஏதோ மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் போலத் தெரிகிறது. உன் ஆட்டம் எல்லாம் அவளிடம் செல்லுபடி ஆகாது. என் போன்ற பணக்காரப் பெண்கள்தான் உனக்குச் சரி வரும். உன் பணத்திற்கும் அந்தஸ்திற்கும் மேன்லினெஸிற்கும் ஏற்றவள் நான்தான்! என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் தாரிணி.

    சரி... வா டியர் போகலாம், என்று அவள் இடையில் கை வைத்து அணைத்தபடி சென்றான் அவன்.

    வெளியே இருள் கசிந்து கொண்டிருந்தது. வானில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டு இருந்தன. அதிரடி அழகியை நினைத்தபடியே காரைச் செலுத்தினான் கேசவ்.

    அத்தியாயம் 2

    மிதமான

    வெயில்

    ……………….

    லேசான

    மழை

    …………….

    கொஞ்சும்

    தென்றல்

    …………..

    தவழும்

    நிலா

    ………………..

    வண்ணக்

    குழம்பு

    வானவில்

    ……………………….

    எதுவும்

    ரசிக்கவில்லை!

    ………………….

    சகியே!

    சிநேகிதியே!

    நீ இல்லாமல்!

    மயிலாப்பூரில் குழந்தைகளுக்காக நடன விழா ஒன்றை மிதுலா ஏற்பாடு செய்து இருந்தாள். திருக் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அவள் ஸ்டேஜ் ஷோ ஒன்றுக்கு கோரியோகிராபி (நடன இயக்கம்) செய்திருந்தாள்.

    ஐந்து வயது முதல் பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஒரு பரத நாட்டிய ப்ரோக்ராமிற்கு ஏற்பாடு செய்து இருந்தாள்.

    அவள் முறைப்படி நடனம் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்ததால், நடனம் அவளுக்கு உயிர்மூச்சு. ஆனால் அதை வியாபார நோக்கத்துடன் மட்டுமே சொல்லிக் கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை.

    அதனால் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பின்பு ரொம்ப வசதியில்லாத குழந்தைகள் எனத் தேர்ந்தெடுத்துத்தான் நடனம் சொல்லிக் கொடுத்தாள்.

    அவள் வீட்டின் மொட்டை மாடியில் முதலில் சிறிய அளவில் வகுப்புகள் எடுத்து வந்தாள். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே எடுக்கக் கஷ்டமாக இருந்தது.

    அதோடு மழை நாட்களில் வகுப்புகளைக் கேன்சல் செய்ய வேண்டி இருந்தது. அதனால் அவள் நடனம் சொல்லிக் கொடுப்பதற்கு வேறு ஒரு இடத்தைத் தேடிக் கொண்டு இருந்தாள்.

    அப்பொழுது மயிலாப்பூரில் ஒரு திருமண மண்டபக்

    Enjoying the preview?
    Page 1 of 1