Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanmathiye Vaa!
Vaanmathiye Vaa!
Vaanmathiye Vaa!
Ebook216 pages1 hour

Vaanmathiye Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வான்மதியே வா! இந்தக் கதையின் நாயகி நந்தனா. மும்பையில் இண்ட்ரியர் டிஸைனில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கும், ஒரு சுதந்திரப் பறவை.

தாய், தந்தை தவிர மற்ற உறவுகள் ஏதும் இல்லை. அதற்கு காரணம் என்ன? "நான், உன் அத்தை மகன் சஞ்சய்" என்று திடுரென ஒருவன் அவள் வாழ்க்கையில் பிரவேசிக்கிறான்.

நந்தனாவின் பாஸ், மைக்கேல் அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறான். நந்தனா அடுத்து என்ன செய்யப் போகிறாள்... நீங்களே படித்து தெரிந்து கொள்ளலாம்....!

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906515
Vaanmathiye Vaa!

Read more from Lakshmi Sudha

Related to Vaanmathiye Vaa!

Related ebooks

Reviews for Vaanmathiye Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanmathiye Vaa! - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வான்மதியே வா!

    Vaanmathiye Vaa!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    வாங்க... பேசலாம்.

    ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. வழக்கம் போல் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிக சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இது ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகிறது.

    இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்?

    இவ்வளவு திறமையுள்ள மாணவிகள் பின்னர் அந்தத் திறமைகளை உபயோகப்படுத்துகிறார்களா?

    சிலருக்கு வாய்ப்புகள் கிட்டாது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் விட்டிருப்பார்கள். மனதில் ஏதேனும் ஒரு பயம் காரணமாக இருக்கலாம்.

    ‘Opportunity seldom knocks your door twice.’

    ஒரு காலகட்டத்தில் சே... வந்த வாய்ப்பை அப்பொழுது தவற விட்டுவிட்டோமே என்று நிறையப் பெண்கள் குறைபட்டுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.

    நானும் ஒரு வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். நானூற்றி ஐம்பத்தைந்து என்பது குட் ஸ்கோர்.

    ப்ளஸ் ஒன்னில் Pure Science Group எடுக்க வேண்டும்... என்பது என் ஆசை. என் பள்ளித் தலைமை ஆசிரியையும் அதை ஊக்குவித்தார்.

    ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் நிச்சயமாக மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று நிறைய நலம் விரும்பிகள் சொன்னார்கள்.

    ஆனால் என் மனதில் பயம். May be my confidence was low. Pure Science group எடுத்து விட்டு, பின்பு நன்றாக மார்க் எடுக்காவிட்டால் என்ன ஆகும்? என்ற பயம் என் மனதை ஆட்டுவித்தது.

    அதனால் ஃபர்ஸ்ட் குரூப் எடுத்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸில் பின்பு இன்ஜினியரிங் பட்டம் பெற்றேன்.

    ஆனால் இன்னும் மனதின் மூலையில் நான் டாக்டராகவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது என்பது உண்மை.

    ஆனால் இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் பெரும்பாலும் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அழகாகத் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

    எந்தக் காலேஜ் சேருவது? என்ன குரூப் எடுப்பது? மேற்படிப்பு எங்கே படிப்பது? எங்கே வேலைக்குச் சேர்வது... என்பதை எல்லாம் சரியாக முடிவு செய்கிறார்கள்.

    அதனால் பெற்றோர்கள் பெருமைப்பட்டாலும் கொஞ்சம் பயப்படவும் செய்கிறார்கள்.

    ஒரு சின்ன விஷயம்... பெற்றோர்களுக்கு...

    உங்கள் தனிப்பட்ட கருத்தை குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள்.

    If they know to manage failure then they are Successful in life.

    நட்புடன்,

    லட்சுமி சுதா.

    1

    முதல்

    முதலாக

    உன்னை

    நான்

    பார்த்த

    பொழுது

    ......நீ

    அணிந்து

    இருந்த

    நீல சல்வார்

    தான்

    காரணமா?

    ......

    எனக்கு

    நீலவானும்

    நீலக்

    கடலும்

    பிடித்துப்

    போனதற்கு?

    மும்பை நகரம், எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும். ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழும் சக்தி படைத்தது மும்பை.

    தீவிரவாதச் சக்திகளை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளது, பலமுறை,

    அது மட்டும் இல்லை... வெள்ளம், பேய்மழை இவற்றை வருடா வருடம் சந்தித்தாலும் எதுவுமே நடக்காதது போல மீண்டும் இயங்கும் மும்பை.

    ஜூகு கடற்கரை மும்பையில் பிரசித்தமான ஒன்று. பணக்காரர்கள், திரை உலக நட்சத்திரங்கள் நிறையப் பேர் அங்கு கடற்கரை அருகே பங்களாவில் வசித்து வந்தனர்.

    கடற்கரை அருகே அலைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டபடியே நின்று கொண்டிருந்தாள் நந்தனா.

    கண்கள் மட்டுமே அலைகளின் மேல் பதிந்திருந்தன. மனம் அலைகளையும், கடற்கரை காற்றையும் ரசிக்கவில்லை.

    இறந்து போன அம்மாவின் முகமே அவள் கண் முன்னே நிழலாடியது. கண்களை மூடிப் பழைய நினைவுகளை மறக்க முயன்றாள் அவள்.

    ஆனால் மீண்டும் அதே நினைவுகள் அவளைத் தாக்க சுயபச்சாதாபத்தால் அவள் கண்கள் கலங்கின. கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டன.

    கண்களைத் துடைத்தபடியே திரும்பி கார் நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடக்கத் தொடங்கினாள் அவள்.

    யாரோ தன்னையே பார்ப்பது போல் உள்ளுணர்வு சொல்ல சட்டென தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

    அங்கே நீல நிற டி.ஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்த ஒருவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை அவள் கவனித்தாள்.

    கண்டுகொள்ளாமல் நடக்க முயன்றாள். ஆனால் அவன் பார்வையில் இருந்த வெறுப்பும், கோபமும், அலட்சியமும் அவள் மனதில் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

    அவன் தன்னை நோக்கி முன்னேறுவதை அவள் உணர்ந்தாள். இதயத் துடிப்பு அதிகரித்து அவள் பதட்டத்தை மேலும் கூட்டியது.

    என்ன வேண்டும் உனக்கு? சமாளித்துக் கொண்டு ஹிந்தியில் கேட்டாள் நந்தனா.

    அவன் கண்கள் அவளை ஊடுருவின.

    ம்... அதற்கு முன்னால் நான் யார் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? என்றான் அவன்.

    எனக்கு அது அவசியம் இல்லை.

    அவன் முகம் இறுகியது. கண்கள் இடுங்கின.

    அவன் கோபமாக இருக்கிறான் என்பதை அவன் உடலின் எல்லா செல்களும் பறைசாற்றின.

    ஸாரி... நான் எப்பொழுதும் இந்த மாதிரி ரூடாகப் பேச மாட்டேன். நீங்கள் சட்டெனக் குறுக்கிட்டவுடன் எனக்குக் கோபம் வந்துவிட்டது! என்றாள்.

    குறுக்கிட்டேனா... நானா...? குட் ஜோக். உன்னை ரொம்ப நேரமாக நான் கவனித்துக் கொண்டிருந்தேன் நந்தனா.

    நீ கவலையில் மூழ்கியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் உன் தனிமையில் தலையிடாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன்.

    நீ... நீங்கள் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?

    நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன். உன்னை நம் பாட்டியிடம் அழைத்துப் போவதற்கு...

    அவள் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது.

    நீங்கள்... என்று இழுத்தாள்.

    நான் சஞ்சய். உன்னுடைய அம்மாவின் அண்ணன் மகன்! என்றான் அழுத்தமாக.

    ஸாரி... அம்மாவுக்கு அண்ணனே கிடையாது.

    ம்... அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. ஆனால் என் அப்பாவை உன் அம்மா அண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.

    சந்தேகமாக இருந்தால் சந்திரா பாட்டியிடம் பேசுகிறாயா?

    நான் யாரிடமும் பேசத் தயாராக இல்லை... என்றபடியே நடந்தாள்.

    நான் கஷ்டப்பட்டு வேலை எல்லாம் விட்டுவிட்டு உனக்காகத்தான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன்.

    நீ இப்படிப் பேசுகிறாயே... இது சரியில்லை... என்றபடியே வழியை மறைத்தான்.

    நீங்கள் வந்ததற்கு நான் பொறுப்பாக முடியாது! என்று கத்தினாள்.

    ஓ.கே... உன்னைத் தேடிக் கொண்டு நான் வந்திருக்கிறேன். அட்லீஸ்ட் ஒரு பேச்சுக்காவது வீட்டுக்கு வா என்று அழைக்க மாட்டாயா?

    அவன் கேட்ட விதம் அவள் மனதை இளக்கியது.

    ஸாரி... வீட்டுக்கு வாங்க.

    ம்... அத்தையும் மாமாவும் இருந்த வீட்டைப் பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது.

    அம்மா இறந்த பின்பு நான் அங்கே போவதில்லை. வீட்டை விற்று விடலாம் என யோசிக்கிறேன்.

    ஓ... வீடு எங்கே இருக்கிறது? பக்கத்திலா...?

    ம்... ஆமாம். வாருங்கள்... காரை அங்கே நிறுத்தி வைத்திருக்கிறேன்.

    சரி, வீட்டை விற்றுவிட்டு நீ எங்கே தங்கப் போகிறாய்?

    நான் ஜூகுவில் எனக்கென ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்.

    பட்... அது ரொம்ப காஸ்ட்லியாக இருக்குமே... இந்த இடமே ரொம்ப விலை அதிகமானதாச்சே!

    உன்னால் எப்படி அதை வாங்க முடிந்தது? யாராவது பரிசாக உனக்கு வீட்டைக் கொடுத்தார்களா?

    "நான் இன்டீரியர் டெகரேட்டராக வேலை பார்க்கிறேன். என்னுடைய சுயசம்பாத்தியம், பாங்க் லோன் மூலமாக நான் வாங்கினேன்.

    நீங்கள் நினைப்பது போல் யாரும் எனக்குப் பரிசாக வீட்டை எழுதிக் கொடுக்கவில்லை..." என்று படபடத்தாள் நந்தனா.

    ஏனோ அவன் தன்னை அலட்சியப்படுத்தியது போல் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. காரை வேகமாகச் செலுத்தினாள்.

    காரை மெதுவாக ஜெண்டிலாக ஓட்டு. கியரை ஏன் இப்படி வெடுக்கென மாற்றுகிறாய்?

    அவள் கோபம் மேலும் அதிகரித்தது.

    ‘இவன் என்ன வந்ததிலிருந்து என்னை அதிகாரம் செய்து கொண்டே இருக்கிறான்...’ என்று நினைத்தபடியே, வீட்டின் அருகே காரை நிறுத்தினாள்.

    இதுதான் வீடு! என்றபடியே காரிலிருந்து இறங்கினாள்.

    அவனும் காரிலிருந்து இறங்கினான்.

    நீ சீக்கிரமாக இந்த வீட்டை விற்க ஏற்பாடு செய். அப்புறம் உன் வீட்டில் இருக்கும் துணி... அண்ட் உனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக மும்பையிலிருந்து கிளம்பு.

    ஏன்? - அவள் குரலில் கோபம் கொப்பளித்தது.

    ஏனென்றால் எனக்குச் சென்னையில் நிறைய வேலைகள் உள்ளன. உன்னை அழைத்துக் கொண்டு போவதற்காக நான் எல்லா வேலையையும் பாதியில் அப்படியே விட்டுவிட்டு வந்தேன்.

    இங்கே இதற்குமேல் நேரத்தை வீணடிக்க என்னால் முடியாது! என்று வெடித்தான்.

    நான் உங்களை வரச் சொல்லவில்லை. நீங்களாக வந்து விட்டு, என் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.

    குட் பை. உங்கள் பாட்டியிடம் எனக்குச் சொந்தம் யாரும் இல்லை என்று சொல்லுங்கள்... என்றபடியே காரை நோக்கி விரைந்தாள்.

    சட்டென காரைக் கிளப்பினாள்.

    சஞ்சய்... வீட்டின் அருகே நின்று கொண்டிருப்பதை அவள் விழிகள் கார் கண்ணாடி மூலம் கவனித்தன.

    ஆனால் கண்டுகொள்ளாமல் காரை ஓட்டினாள்.

    சே! இன்று ஏன் இவனைச் சந்தித்தேன்? கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் என்னவெல்லாம் பேசுகிறான்... இவன் நேரத்தை வீணடித்தது நான்... என்பது போல் அல்லவா திமிராகப் பேசுகிறான்.

    அம்மாவே இல்லை என்று ஆகிவிட்டது. அப்புறம்... வேறு யார் வந்து என்ன பயன் என்று நினைத்தபடியே காரைச் செலுத்தினாள்.

    வீட்டை அடைந்த பின்பும் ஏனோ அவனின் முகம் மனதை ஆக்கிரமித்தது.

    எனக்கு இந்த மாதிரி திமிர் பிடித்த ஒருவன் உறவினனாக வந்து வாய்த்திருக்கிறானே...!

    கடுகடுவென ஒரு முகம், சிரிக்கப் பணம் கேட்பான் போல... ஆள் நன்றாக வளர்ந்து இருக்கிறான். நெடு மரம் போல... என நினைத்தபடியே கட்டிலில் படுத்தாள்.

    தூக்கம் அவளை ஆட்கொண்டது.

    அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்தாள் நந்தனா.

    அம்மா இறந்த பின்பு, லீவ் முடிந்து அலுவலகத்தில் அவளின் முதல் நாள்.

    வீட்டில் தனிமையில் இருப்பதற்குப் பதில் ஆபீஸ் சூழல் எவ்வளவோ மேல் என்று முடிவு செய்துதான் அவள் அலுவலகத்திற்கு வந்தாள்.

    ஆபீஸ் வேலை, பழகிய முகம்... இதெல்லாம் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவள் திட்டவட்டமாக நம்பினாள்.

    ஹாய் நந்தனா! நீ இல்லாமல் ஆபீஸ் போர். குட்... இன்றாவது வந்தியே... என்று அவளைப் புன்னகையுடன் வரவேற்றாள் சந்தியா.

    ம்... வீட்டிலேயே இருந்தால் அம்மாவின் நினைவு மீண்டும் மீண்டும் வருகிறது சந்தியா. நெருப்புக் கோழி போல் சோகத்தில் தலையைப் புதைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை... என்று சொல்லும் பொழுதே அவள் கண்கள் கலங்கின.

    ம்.... புரிகிறது! என்றபடியே அவள் தோளில் கை பதித்து ஆறுதல் சொன்னாள் சந்தியா.

    ஹலோ... நந்தனா! வா... நான் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். வா... என் அறைக்குப் போகலாம்.

    "சந்தியா... ஸாரி. நீ

    Enjoying the preview?
    Page 1 of 1