Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanamenum Veedhiyiley...!
Vaanamenum Veedhiyiley...!
Vaanamenum Veedhiyiley...!
Ebook173 pages1 hour

Vaanamenum Veedhiyiley...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆர்த்தி விக்ரம் இருவரும் திருமணமான தம்பதி ஆனால் ஆர்த்தியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருந்ததா? அவள் கணவன் இறந்தவுடன் அவள் எங்கு செல்கிறாள்? இடையில் ஆகாஷ் என்பவனாள் அவள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580140906971
Vaanamenum Veedhiyiley...!

Read more from Lakshmi Sudha

Related to Vaanamenum Veedhiyiley...!

Related ebooks

Reviews for Vaanamenum Veedhiyiley...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanamenum Veedhiyiley...! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    வானமெனும் வீதியிலே...!

    Vaanamenum Veedhiyiley...!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    வாங்க... பேசலாம்.

    இந்தக் கதையை முடிக்கும்பொழுது முக்கிய தலைப்புச் செய்தி - உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை திரு. விஸ்வநாதன் ஆனந்த் இழந்து விட்டார் என்பதே!

    இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதை நினைக்கத் தூண்டுகிறது இந்தத் தோல்வி.

    பணம், பட்டம், பதவி, வீடு, சொந்தபந்தம் எதுவுமே நிலை இல்லை. ஆனால் அதை அடைவதற்கு மனிதன் எவ்வளவு தவிக்கிறான், துடிக்கிறான்!

    ஒன்றை அடைந்தவுடன், மனம் அமைதி அடைந்து விடுகிறதா? இல்லையே! அடுத்ததை நோக்கித் தாவுகிறதே!

    சைக்கிளில் போகிறவன் ஸ்கூட்டரில் போக ஆசைப்படுகிறான். ஸ்கூட்டரில் போகிறவன் காரில் போக ஆசைப்படுகிறான். ஆசைக்கு அளவே இல்லை.

    ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’ என்றார் கௌதம புத்தர். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் சத்குரு.

    ‘உடலுக்கு அழிவுண்டு; ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்கிறது இந்து மதம். இறந்த உடலுக்கும் உயிர் இருக்கிறது என்று நினைத்து அதை ‘மம்மி’ வடிவில் பத்திரப்படுத்திப் பாதுகாத்தனர் எகிப்தியர்.

    இவ்வுலகில் மனதர்களாகப் பிறந்த நம் அனைவருக்கும் மற்ற உயிர்களைப் பாதுகாக்கும் கடமை இருக்கிறது.

    அதனால் மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமல் நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்யலாமே!

    பணத்தால் மட்டுமே உதவ முடியும் என்பது தவறு. விடுமுறை நாட்களில் அருகில் உள்ள ஏழைக் குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று அந்தக் குழந்தைகளுக்குப் படிக்கக் கற்றுத்தரலாம்.

    வயதானவர்களைக் காப்பகத்திற்குச் சென்று பார்த்து வரலாம். உங்கள் மனமும் அமைதி பெறும்.

    அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

    இதைச் செய்ய முயற்சி செய்யலாமே! என் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாசகர்களுக்கு என் நன்றி.

    இந்த நாவலைப் பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    சிறகுகள்

    முளைத்துப்

    பறவை

    போல்

    வானில்

    பறக்கிறேன்

    நான்!

    ……

    உன்னாலே!

    என்

    வாழ்க்கையின்

    உயிர்

    மூச்சு

    நீ

    சகியே!

    ……

    நீ

    இன்றி

    நான்

    இல்லை...

    அது

    தெரியாதா

    உனக்கு?

    ஆர்த்திக்கு விமானப் பயணம் புதிது இல்லை. அலுவலக நிமித்தமாய் அடிக்கடி விமானம் வழியாக அவள் பயணிப்பது வழக்கம். அப்பொழுது எல்லாம் மனதில் உற்சாகம் இருக்கும்.

    புதிய சூழல், புதிய அஸைன்மெண்ட், புதிய மனிதர்கள் இவை எல்லாமே ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். ஆனால் இந்தப் பயணம் அப்படி இல்லை.

    என் வாழ்க்கையில் எப்பவுமே வித்தியாசமான நிகழ்ச்சிகள் நிறைய நடந்து கொண்டு இருக்கின்றன.

    விக்ரமைச் சந்தித்ததும் அப்படித்தானே!

    விக்ரம் இப்பொழுது இல்லை. இந்த உலகில் இல்லை. அந்த நினைப்பு, அவளுள் மீண்டும் துக்க அலையைக் கிளப்பியது.

    கண்களிலிருந்து அனிச்சையாகத் தண்ணீர் கிளம்பியது. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு சிக்கல்கள், போராட்டங்கள்?

    அமைதி இல்லாத மனதோடு எப்பவுமே நீ போராட வேண்டும் என்று இறைவனால் சபிக்கப்பட்டவளா நான்?

    போன ஜென்மத்தில் நிறையப் பாவங்கள் செய்திருப்பேனோ?

    விதிப்பலன், கர்மப்பயன் என்றெல்லாம் சொல்லுவார்களே, அதெல்லாம் உண்மைதானா?

    நான் போன ஜென்மத்தில் என்னவாகப் பிறந்து இருப்பேன்?

    சே! இந்த ஆராய்ச்சி இப்பொழுது எதற்கு?

    இந்த ஜென்மத்தில் இதுவரை அனுபவித்த துன்பங்கள் போதும். கடவுளே! எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று வேண்டவே வேண்டாம். போதும்! உன்னை யாசிக்கிறேன்! கண்ணுக்குத் தெரியாத பரம்பொருளே...! என்று கண்மூடி மனதிற்குள் யாசித்தபடி இருந்தாள் அவள்.

    மேடம்... ஸ்நாக்ஸ்... என்று ஏர்-ஹோஸ்டஸின் அழைப்பு அவளை உலகிற்கு அழைத்து வந்தது.

    ம்... வேண்டாம்! என்றாள் மெல்லிய குரலில் ஆர்த்தி.

    ஏர்-ஹோஸ்டாக இருந்த அந்த இளைஞனின் பெயர் விவேக் என்று அவன் சட்டையில் அணிந்து இருந்த பேட்ஜ் சொல்லியது.

    அவன் கண்களில் அப்பட்டமான பரிதாபம் வெளிப்பட்டது.

    மேடம்... ஆர் யூ ஓகே... என்றவனின் குரலில் பரிவு வெளிப்பட்டது.

    ம்... என்றாள் கண்களைத் துடைத்தபடியே அவள்.

    டேக் கேர் மேம்... என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் அவன்.

    ட்ராலி சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆர்த்தி மீண்டும் கடவுளை யாசிக்கத் தொடங்கினாள்.

    விக்ரம் இறந்தது முதல் அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி, சட்டிஸ்கர் பகுதியில் உள்ள லெப்டினென்ட்டிடம் இருந்து வந்த கடிதம்.

    ‘உங்கள் கணவருடன் கார் விபத்தில் இறந்த நபரைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்... உடனே வருக!’

    என்று இருந்த கடித வரிகள், அவள் மனக் கண்ணில் விரிந்தது.

    விக்ரமிடம் நிறைய ரகசியங்கள் புதைந்து இருந்தனவோ? நான்தான் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேனோ?

    விக்ரம் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே நடந்து கொண்டான்! அதனால் இது அவனது இயல்பு என்று நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது தப்பாகி விட்டது போல்.

    சென்னை வரும்பொழுது, அவன் பெரும்பாலும் மடிக்கணினியில் ஏதாவது மும்முரமாக வேலை செய்து கொண்டு இருப்பான்.

    சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆர்த்தி அவ்வப்பொழுது ‘சப்ளை’ செய்யும் காபி, டிபன், ஸ்நாக்ஸ் எல்லாவற்றையும் இயந்திர கதியில் சாப்பிடுவான்.

    ஓ...! அவன் சாப்பிடுவதில் மட்டுமா இயந்திரத் தனமாக இருந்தான்? எல்லாவற்றிலும்தான்!

    ஒருவேளை எல்லா ஆண்களும் அப்படித்தானா என்று அவள் அடிக்கடி யோசித்தது உண்டு.

    உயிர்ப்பு இல்லாத வாழ்க்கை... சக்கரம் போல் ஓடிக்கொண்டு இருந்தது.

    அந்த வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

    ‘விக்ரம் இறந்து விட்டான்’ என்ற செய்தி வந்தபொழுது, அவள் இடிந்து போனது உண்மைதான்.

    ஆனால், அவன் வட-கிழக்கு இந்தியாவில் பணியாற்றச் சென்ற நாள் முதலாகவே அவள் தனியாக வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டவள்தானே!

    மூன்று வருடத் திருமண வாழ்வில் அவளுக்குக் கிடைத்தது என்ன?

    வாழ்க்கை என்ன பேலன்ஸ் ஷீட்டா? லாப நஷ்டங்களைப் பட்டியல் போடுவதற்கு என்று தன்னையே கடிந்து கொண்டாள் அவள்.

    ஆனாலும் மனம் விடாமல் அதே இடத்தில் குரங்கு போல் ஆடியது. விக்ரம் அவளை அடித்தது கிடையாது. பணம் கேட்டு அவளைத் துன்புறுத்தியது கிடையாது.

    குடிக்கும் பழக்கம், அவனிடம் உண்டு. குடித்தாலும் நிதானம் தவறமாட்டான்; உளறமாட்டான்.

    அவளை எதற்கும் வற்புறுத்தியது இல்லை. அவனுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு,

    ஒரு முறை அவன் அறையில் நுழைந்த பொழுது, அவன் கப்போர்டில் இருந்த புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்தவளுக்குக் கண் கூசியது.

    ஒரு வேளை எல்லா ஆண்களுமே இப்படித்தான் இருப்பார்களோ...! என்று நினைத்தபடியே அந்தப் புத்தகத்தைப் பற்றிய நினைப்பை மனதில் இருந்து அழித்து விட்டாள் அவள்.

    ஆனால், இன்று ஏனோ எல்லாமே மனதில் பூதாகாரமாக விஸ்வரூபம் எடுக்கிறது.

    குப்பைத் தொட்டியைக் கிளறக் கிளறக் குப்பை வருவது போல் இன்று ஏனோ, மனதிலிருந்து எல்லாமே வெளிவருகிறது என்று யோசித்தபடியே இருந்தாள்.

    என்ன விஷயமாக, அவசரமாக வரும்படி ரிஜிஸ்தர் தபால் அனுப்பி இருப்பார்? அதுவும் லெப்டினென்ட் ஜெனரல் அனுப்பி இருக்கிறார் என்றால்... ஏதேனும் பெரிதாக இருக்குமோ?

    ஏனோ அடிவயிற்றில் ஒரு பயம் தோன்றி, அவள் உடல் முழுவதும் பரவியது. கை கால்கள் சட்டெனச் சில்லிட்டுப் போனது போல் உணர்ந்தாள் அவள்.

    லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்... விமானம் இப்பொழுது சத்திஸ்கரில் தரை இறங்கப் போகிறது. வெளியே உள்ள தட்பவெட்பம் பத்து டிகிரி. எங்களோடு இந்த விமானத்தில் பயணம் செய்ததற்கு ரொம்ப நன்றி!

    என்ற அறிக்கை, அவளை மெள்ள மெள்ளப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தது.

    ஓ...! ஒரு வழியாக, வந்து சேர்ந்து விட்டோம். விக்ரம் இந்த ஊரில்தானே பணிபுரிந்தான்?

    கார் விபத்தில் அவன் உடல் சின்னாபின்னமாக உருத்தெரியாத வண்ணம் அழிந்து போய்விட்டது. அவன் வேலை செய்த கம்பெனியின் மேலாளர் அவளிடம் இதுபற்றிப் பேசியபொழுது... ஆர்த்திக்கு மனம் உடைந்து போனது.

    இவ்வளவு கோரமாகவா விக்ரம் இறந்து போக வேண்டும்? என்று மனம் பதறியது.

    உடல் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை மேடம்... உங்கள் கணவரின் கார்தான் அது. அவர் அதில் ஏறிச் சென்றதை, அவர் வீட்டுக் காவலாளி ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்.

    "காரின் நம்பர் பிளேட் மட்டும் நன்றாக இருப்பதால், இது உங்கள் கணவர் கார்தான் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1