Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavil En Vaasalil!
Vanavil En Vaasalil!
Vanavil En Vaasalil!
Ebook232 pages2 hours

Vanavil En Vaasalil!

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

பிரபலமான வி.கேர். நிறுவனம், அதில் பணிபுரியும் பெண் ரோஷினி மிக திறமையானவள். அந்நிறுவனத்தின் தூண் என்றே கூறலாம். நிறுவனத்தின் பொறுப்புகள் மானவ் எனும் நபரின் வசம் வருகிறது. ஒருவன் நிறுவனரகசியங்களை மற்றொறு நிறுவனத்திடம் விற்றுவிடுகிறான். இதனால் ரோஷினி மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறாள். யார் அவன், அவனால் ரோஷினி அனுபவிக்கும் இடையூறுகள் யாவை? இறுதியில் ரோஷினி என்ன ஆனாள்? கதையின் ரகசியங்கள் என்ன என்பதை வாசித்துத் தெரிந்துகொள்வோம் வானவில் என் வாசலில்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580140906963
Vanavil En Vaasalil!

Read more from Lakshmi Sudha

Related to Vanavil En Vaasalil!

Related ebooks

Reviews for Vanavil En Vaasalil!

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavil En Vaasalil! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    வானவில் என் வாசலில்!

    Vanavil En Vaasalil!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    "உன்னாலே!

    எல்லாம்

    உன்னாலே!

    நான்

    புதிதாகப்

    பிறந்தது

    போல்

    உணர்கிறேன்!

    என்

    கோபம்

    என்

    வெட்கம்

    என்

    அறியாமை

    என்

    அகந்தை

    எல்லாம்

    போனது

    உன்னாலே!

    .......

    எல்லாம் உன்னாலே!"

    இதுதான் உன்னுடைய யோசனையா? பெண்களின் ஒப்பனைப் பொருள் பற்றி உனக்கு எந்த அனுபவமும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது! என்று கோபமாக ஒலித்தது, சங்கீதாவின் குரல்.

    மேடம்! இது பிங்க் நிற உதட்டுச் சாயம். இந்த லிப்ஸ்டிக் பெண்களுக்குப் பிடிக்கும்! என்றான் பிரகாஷ் நிதானமாக.

    இது பிங்க் நிறமா? முட்டாள். இது மண் நிறத்தில் இருக்கிறது. அதைத் தூக்கி வெளியே போட்டு விட்டு நீயும் வெளியே போ! என்று சீறினாள் சங்கீதா.

    சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்த ரூமிலிருந்து வெளியே வந்தாள் ரோஷினி. ‘வி கேர்’ அழகுப் பொருட்கள் விற்கும் கம்பெனியின் பப்ளிசிடி மேனேஜர் அவள்.

    மேடமின் கோபத்தைத் தணிக்க வேண்டும். இல்லா விட்டால், பாவம்! பிரஷர் ஏறிவிடும் என்று நினைத்தபடியே சங்கீதாவை நெருங்கினாள், ரோஷினி.

    மேடம்... நீங்க! என்று தொடங்கியவளை முடிக்க விடாமல் குறுக்கிட்டாள் சங்கீதா.

    என்ன... என்னைச் சமாதானப்படுத்த வந்தியா? என்றாள் சங்கீதா. அவளே தொடர்ந்தாள்.

    வெல்! நான் என் மனதை மாற்றிக் கொள்ள மாட்டேன். அந்த முட்டாள் செய்வதெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    பத்து வருடங்கள் முன்பே நான் அவனை வெளியேற்றி இருக்க வேண்டும். தப்பு செய்துவிட்டேன்! என்றாள் சங்கீதா.

    நீங்கள் தப்பு செய்யவில்லை. நீங்கள் மாதம் ஒருமுறையாவது அவனைத் திட்டி, ‘வெளியே போ!’ என்று சொல்கிறீர்கள். உங்களின் கோபம் இங்கே ரொம்பப் பிரசித்தம் மேடம்.

    கரெக்டா மாதம் ஒரு முறை நீங்கள் இப்படி பிரகாஷிடம் நடந்து கொள்கிறீர்கள். பிரகாஷ் இல்லாட்டி தினேஷ். தினேஷ் இல்லாட்டி மகேஷ்...ன்னு இந்த வட்டம் பெரிசா போயிட்டே இருக்கே! என்ன செய்யலாம்? என்றாள் ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்தபடி ரோஷினி.

    ஏய்! நீ என்னைக் கிண்டல் செய்யறியா? பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். வயதானவள் என்று தெரிந்தும் என்னை நீ அவமானப்படுத்துகிறாயே! என்றாள் சங்கீதா.

    மேடம்! நீங்கள் வயதானவர்கள் என்று நீங்கள் சொன்னால் தான் தெரியும். உங்களைப் பார்த்தால் தெரியவில்லை. நீங்கள் அறுபது வயது என்று சொன்னால் தான் தெரியும்.

    யு லுக் லைக் தர்டி ஃபைவ்! என்றாள் ரோஷினி.

    சங்கீதா ரோஷினியை உற்றுப் பார்த்தாள். இந்தப் பெண்ணிடம் ஏனோ எனக்குக் கோபம் வர மறுக்கிறது. என்ன காரணம்?

    இவளின் குழந்தைத்தனமான முகமா? நன்றாக வேலை பார்க்கும் திறனா? இவளின் அழகான புன்னகையா? ஏதோ ஒன்று இருக்கிறது இவளிடம் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள் சங்கீதா.

    என்ன மேடம்! பழச்சாறு ஏதாவது வேண்டுமா? எடுத்து வரட்டா...! என்றாள் ரோஷினி அக்கறையாக.

    உன் பேச்சே என்னை கூல் ஆக்கிவிட்டது. அது வேறு எதுக்கு? சரி, அந்த முட்டாள் பிரகாஷிடம் ஃபோன் செய்து சொல்லிவிடு.

    அவன் இங்கேயே வேலை பார்க்கலாம் என்று உடனே சொல்லி விடு! என்றாள் சங்கீதா.

    சரி... இதோ சொல்லிடறேன்! என்று சொல்லி விட்டு இண்டர்காம் மூலம் அவனைத் தொடர்பு கொண்டாள் ரோஷினி. விஷயத்தை அவனிடம் தெரிவித்தாள்.

    மறுமுனையில் பிரகாஷ் ஏதோ சொல்ல, சிரிப்பை அடக்கிக் கொண்டு ஃபோன் இணைப்பைத் துண்டித்தாள்

    பிரகாஷ் என்ன சொன்னான்? இப்படிச் சிரிப்பை அடக்கறே! என்றாள் சங்கீதா.

    மேடம், இந்த மாதம் நீங்கள் ஒரு நாள் தள்ளி அவனை வெளியேறச் சொன்னீர்களாம். போன மாதம் நீங்கள் வெளியேறச் சொன்ன தேதிக்கும் இந்த மாதம் வெளியேறச் சொன்ன தேதிக்கும் ஒரு நாள் வித்தியாசம் இருக்கிறதாம்.

    அடுத்த மாதம் அதைக் கவனித்து அதற்கு ஏற்றபடி அவனைத் திட்டுவீர்களாம் என்று பிரகாஷ் சொன்னான்! என்றாள் ரோஷினி சிரிப்பை அடக்கியபடி.

    ம்... ம்... அவனும் உன்னைப் போல் மட்டு மரியாதை இல்லாமல் இருக்கிறான். என்ன செய்வது, என்னால் முன்போல் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை! என்றாள் சங்கீதா.

    மேடம்! ராபின் சொன்ன அந்த விளம்பரப் பிரச்சாரம் பற்றி என்ன நினைக்கிறீங்க? அதைச் செயல்படுத்தலாமா? என்றாள் பேச்சை மாற்றும் விதமாக ரோஷினி. மேடமைச் சுயபச்சாதாபத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள்.

    எந்த ராபின்? என்று கண்மூடி யோசித்தாள் சங்கீதா. அவளுக்கு நினைவு வரவில்லை.

    மேடம்! ராபின் தான் நம்ம கம்பெனியின் சீஃப் பிரமோட்டிங் ஆஃபிஸர். அவர் இங்கே சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகிறது. கன்ஸல்டண்டாக இங்கே இருக்கிறார்.

    இதற்கு முன் ‘க்ளோ ஆல்வேஸ்’ கம்பெனியில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கே வேலை பிடிக்காததால் இங்கே கன்ஸல்டண்டாகச் சேர்ந்தார். ஞாபகம் வருதா? என்றாள் ரோஷினி.

    ஆங்... இப்ப நினைவுக்கு வருது. ஆனால் அந்தப் பிரச்சாரத்தின் முதலீடு ரொம்ப அதிகம். நம்முடைய பொருட்களைப் பற்றி உலகளவில் எல்லாப் பெண்களுக்கும் தெரியும்.

    அதனால் நமக்கு விளம்பரம் தேவையில்லை. இப்பொழுது நமக்குத் தேவைப்படுவது புதிய அழகுப் பொருட்கள். புதுமையான அழகு சாதனப் பொருட்களை நாம் வெளியிட்டு ரொம்ப நாளாகி விட்டது! என்றாள் சங்கீதா ஆதங்கத்துடன்.

    ம்... ம்... பேபி ஸ்கின் என்ற புதிய அழகுப் பொருட்களை நாம் போன மாதம்தானே மேடம் அறிமுகப்படுத்தினோம். அது வயதான பெண்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது.

    தோலின் சுருக்கங்களைப் போக்கும். முகத்தின் தளர்ச்சியை நீக்கிப் புதிய ஸ்கின் போல் காட்சியளிப்பதற்கு அந்த அழகுப் பொருட்கள் எல்லாமே உபயோகமாகுமே!

    அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உண்மையைச் சொன்னால் நம்ம ஃபேக்டரி உற்பத்தி போதவில்லை. அவ்வளவு டிமாண்ட் அதற்கு! என்றாள் ரோஷினி.

    ரோஷினி! பழைய அழகு சாதனத்திற்கு நாம் புதிய பெயர் வைத்து அதை ரிலீஸ் செய்தோம். மற்றப்படி அதில் புதுமை ஏதும் இல்லை.

    அது உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் கஸ்டமர்களுக்குத் தெரியாது. ஆராய்ச்சியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பிரிவு இருக்கிறது நம் கம்பெனியில்.

    "ஆனால் என்ன பிரயோஜனம்! அந்த கெமிஸ்ட்கள் என்ன செய்கிறார்கள் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஒரு நல்ல புதிய அழகு சாதனம் வெளியிட வேண்டும்!’’ என்றாள் சோர்வான குரலில் சங்கீதா.

    சரி மேடம்! நான் ராபினுடன் இதுபற்றிப் பேசுகிறேன். நீங்கள் ஓய்வு எடுங்கள்! என்றாள் ரோஷினி ஆறுதல் கூறும் தொனியில்.

    ஓ.கே. நீ இன்னிக்கு என்னுடன் டின்னர் சாப்பிட வர்றியா, ரோஷினி? என்றாள் சங்கீதா.

    மேடம்! நான் இன்றைக்கு... என்று தட்டுத் தடுமாறினாள் ரோஷினி.

    ம்... ம்... புரிகிறது. இன்னிக்கு உனக்கு முக்கிய வேலை இருக்கும் போல் தெரிகிறது. ராபினுடன் புரோக்ராம் ஏதேனும் புக் செய்திருக்கிறாயா? என்றாள் சங்கீதா.

    ஆமாம் மேடம்! என்றாள் மெல்லிய குரலில் ரோஷினி.

    ஓ.கே. உங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் நந்தி மாதிரி நிற்க விரும்பலை. யூ கேரி ஆன்! என்றாள் சங்கீதா.

    சங்கீதாவைப் பார்க்க ரோஷினிக்குப் பாவமாக இருந்தது. என்ன பணம், புகழ் இருந்து என்ன பயன்? தனிமையான நேரத்தில், வயதான காலத்தில் அன்பாகப் பேச, ஆதரவாகப் பேசச் சொந்தம் என்று யாரும் இல்லையே!

    மேடம் திருமணம் வேண்டாம் என்று மறுத்தது, தப்பான முடிவோ? இளம் வயதில் அழகாக இருந்திருப்பார்கள். கண்டிப்பாக மனது வைத்திருந்தால் திருமணம் நடந்திருக்கும்.

    ஆனால் அவர்கள் தொழிலே வாழ்க்கை என்று மும்முரமாக இருந்து விட்டார்கள். வி கேர் நிறுவனத்திற்காகத் தன் உழைப்பு, நேரம் என எல்லாமே செலவு செய்து விட்டார்கள்.

    தொழிலில் இப்பொழுது ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டார்கள் என நினைத்துப் பெருமூச்சு விட்டாள் ரோஷினி.

    இப்பொழுது எல்லாம் மேடம் எல்லாவற்றுக்கும் ரொம்ப கோபப்படுவது போல் தோன்றியது அவளுக்கு. இங்கே வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    அப்பொழுது பார்த்ததற்கு மேடம் ரொம்பவே தளர்ந்து போய்விட்டார். உடலில் வேறு எக்கச்சக்க உபாதைகள். ஹை பி.பி., சர்க்கரை, கால் மூட்டுத் தேய்மானம், கொழுப்பு சதவீதம் அதிகம்... என அடுக்கிக் கொண்டே போகலாம்.

    உடல் சரியில்லாததால்தான் இந்த மாதிரி எப்பவும் சிடுசிடு என்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை ஆனால் மேடமால் இந்தத் தொழிலை விட்டு விட்டு இருக்க முடியாது.

    மேடமின் தங்கையின் மகன் வெளிநாட்டில் இருக்கிறான். பெயர் மானவ். துபாயில் வி கேர் நிறுவனத்தைத் திறம்பட நடத்தி வருகிறான்.

    அவனிடம் வேண்டுமானால் மேடம் பொறுப்பை ஒப்படைக்கலாம். அவனைப் பற்றிப் பேசும் பொழுது ஏனோ மேடம் ரொம்ப உணர்ச்சி வசப்படுவதுபோல் தோன்றும் ரோஷினிக்கு.

    அவன் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது தனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று மேடம் தன்னிடம் அடிக்கடி புலம்பியது அவள் நினைவுக்கு வந்தது.

    ‘முப்பது வயதாகிவிட்டது மானவ்க்கு. அவன் திருமணம் செய்து, அவன் குழந்தைகளைக் கொஞ்சும் வரை நான் உயிரோடு இருப்பேன்!’ என்று ஏதேதோ புலம்பியபடி இருப்பார் சங்கீதா.

    ‘அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்றாள் ரோஷினி ஒரு நாள்.

    நான் இன்னும் சரியான பெண்ணைச் சந்திக்கவில்லை. என் குழந்தைகளுக்கு வேண்டிய அன்பைத் தரும் தகுதி இதுவரை நான் சந்தித்த எந்தப் பெண்ணிடமும் இல்லை என்று சொல்கிறான், ரோஷினி.

    எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவன் பழகும் பெண்கள் எல்லாம் மாடல் அழகிகள், அப்புறம் சினிமா நடிகைகள். ம்... ம்... அவர்களிடம் என்ன தகுதி இருக்கும்?

    அப்புறம் இன்னும் ஒரு விஷயம் சொன்னான் அவன். என்ன தெரியுமா? என்றாள் சங்கீதா ரகசியம் பேசும் தொனியில்.

    என்ன மேடம்... சொல்லுங்க! என்றாள் ரோஷினி புன்னகையோடு.

    மானவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் அவன் சொன்னதைக் கேட்டு நடப்பவளாக இருக்க வேண்டுமாம். மிக்கி மௌஸ் போல் ஒரு எலிதான் அதற்குச் சரிப்படும் என்று அவனே சொன்னான்! என்று கடகடவெனச் சிரித்தார் சங்கீதா.

    அந்த சம்பாஷணையை எப்பொழுது நினைத்தாலும் ரோஷினிக்குக் கோபம் ஜிவ்வென்று உடல் முழுவதும் பரவும். அந்த மானவ் மேல் எரிச்சல் வரும்.

    பெண்கள் எல்லாம் கீ கொடுத்த பொம்மைகள் போல் நடக்க வேண்டும் என்று நினைக்கும், ஆண் ஆதிக்கக் கூட்டத்தைச் சேர்ந்தவன் போல இந்த மானவ் என்று நினைத்துக் கொதித்துப் போவாள் ரோஷினி.

    ஆனால் மானவ் தொழிலில் ரொம்ப ஸ்மார்ட். துபாய்க் கிளை எப்பவும் நல்ல லாபத்தை ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொடுக்கும்.

    மானவ் என்னைப் போன்றவன். சாதிக்கப் பிறந்தவன். அதனால் தான் அவன் அவ்வளவு அழகாக லாபம் ஈட்டுகிறான். நல்ல காலம், அவன் என் தங்கையைப் போல் இல்லை.

    அவள் ரொம்ப சாது. தலையாட்டிப் பொம்மை! என்று சங்கீதா சொன்னது அவள் நினைவுக்கு வந்தது.

    ம்... ம்... அதனால் தான் சாதுவான மனைவி தனக்கு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் போல. பெரியம்மா போல் டாமினேட்டிங் குணம் நிறைந்த பெண் தனக்குச் சரி வராது என்று நினைக்கிறான் போல... என்று ரோஷினி நினைப்பதுண்டு.

    மேடம் பொறுப்பை எல்லாம் மானவ்விடம் ஒப்படைத்து விட்டால் என்ன ஆகும்? என்று நினைக்கும் பொழுதே ஏனோ ஒரு அச்சம் அவள் வயிற்றில் பந்து போல் உருண்டது.

    வேறு வேலை தேட வேண்டியதுதான். இந்த மாதிரி திமிர் பிடித்த ஆட்களிடம் வேலை செய்வது ரொம்ப கஷ்டம்.

    அதுவும் பெண்களை அலங்காரப் பொம்மைகளாக நினைப்பவனுடன் வேலை செய்வது ரொம்பக் கஷ்டம். அது என்னால் முடியாது என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் ரோஷினி.

    ஆனால் வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, ரோஷினி உட்பட.

    2

    "இந்த

    உலகில்

    நான்

    பிறந்தது

    ஏன்

    என்று

    பலமுறை

    யோசித்து

    இருக்கிறேன்!

    உன்னைப்

    பார்க்கும் வரை!

    உன்னைப்

    பார்த்த

    அந்த

    முதல்

    நொடியில்

    புரிந்து விட்டது!

    என்

    தேடலுக்கு

    விடை

    கிடைத்து

    விட்டது!

    உன்னாலே!

    எல்லாம்

    உன்னாலே!"

    "ரோஷினி! ராபின் இஸ் வெயிட்டிங் டு ஸீ

    Enjoying the preview?
    Page 1 of 1