Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Pookkalin Theevu
Nee Pookkalin Theevu
Nee Pookkalin Theevu
Ebook249 pages3 hours

Nee Pookkalin Theevu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுடைய இருபத்தைந்தாவது நாவலான ‘நீ பூக்களின் தீவு’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தக் கதையின் நாயகி அக்ஷயா தொல்பொருள் ஆராய்ச்சிக்காக ஷில்லாங்கிற்குச் செல்கிறாள்.

அங்கே பனி பொழிவதால் அவளும் அவள் குழுவைச் சேர்ந்த ஒருவரும் ஒரு குகையில் தஞ்சமடைகிறார்கள். அங்கே அவள் நாயகன் விஷாலைச் சந்திக்கிறாள். அவனைப் பங்களாதேஷைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரி என்று நினைத்துக் கொண்டாள் அக்ஷயா.

அவனின் உண்மையான முகம் தெரிந்தவுடன் அவளுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த, இனிமையான முடிவு கொண்ட இந்த நாவல் உங்கள் மனதில் கண்டிப்பாக இடம் பெறும் என்று நம்புகிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580140906950
Nee Pookkalin Theevu

Read more from Lakshmi Sudha

Related to Nee Pookkalin Theevu

Related ebooks

Reviews for Nee Pookkalin Theevu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Pookkalin Theevu - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ பூக்களின் தீவு

    Nee Pookkalin Theevu

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    என்னுரை

    எழுதும் பொழுது என் மனதில் தோன்றும் புதுமையான உணர்வை என்னால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. யாரோ ஒரு கவிஞன் சொன்னதைப் படிக்கும் பொழுது என் மனதில் ஒரு பெரிய தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் எழுதத் தொடங்கும் பொழுது புரிந்தது. அந்தப் பயணம் எவ்வளவு இனிமையானது என்று.

    ஆங்கிலக் கட்டுரைகளை மட்டுமே எழுதி வந்த எனக்கு நீண்ட நாட்களாகவே தமிழில் எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. கூடவே ஒரு சந்தேகம். நம்மால் முடியுமா என்று? பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் நான் படித்த தமிழ்ப் புத்தகங்கள் என்னை எழுதச் சொல்லித் தூண்டின.

    என் முதல் நாவல் ‘சோலை மலரொளியோ’ உருவானது அப்படித்தான். இப்பொழுது என்னுடைய இருபத்து ஐந்தாவது நாவல் உங்கள் கைகளில் தவழ்கிறது. வாரம் முழுவதும் கணினியோடு அலுவலகத்தில் வேலையில் மூழ்கும் நான் வார இறுதி நாட்கள் மட்டும் எனக்கே எனக்கு என்று பிடிவாதமாகப் பேப்பரும் பேனாவுமாக எழுத உட்கார்ந்து விடுகிறேன்.

    இந்த அழகான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு என் நன்றி.

    என் நாவல்களைப் படித்து ஆதரவு தரும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

    லட்சுமி சுதா

    முன்னுரை

    என்னுடைய இருபத்தைந்தாவது நாவலான ‘நீ பூக்களின் தீவு’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    இந்தக் கதையின் நாயகி அக்ஷயா தொல்பொருள் ஆராய்ச்சிக்காக ஷில்லாங்கிற்குச் செல்கிறாள்.

    அங்கே பனி பொழிவதால் அவளும் அவள் குழுவைச் சேர்ந்த ஒருவரும் ஒரு குகையில் தஞ்சமடைகிறார்கள்.

    அங்கே அவள் நாயகன் விஷாலைச் சந்திக்கிறாள். அவனைப் பங்களாதேஷைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரி என்று நினைத்துக் கொண்டாள் அக்ஷயா.

    அவனின் உண்மையான முகம் தெரிந்தவுடன் அவளுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த, இனிமையான முடிவு கொண்ட இந்த நாவல் உங்கள் மனதில் கண்டிப்பாக இடம் பெறும் என்று நம்புகிறேன்.

    உங்கள் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அன்புடன்

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    நீயும்

    நானும்

    மணிக் கணக்காகப்

    பேசினோம்!

    நீயும்

    நானும்

    குறுஞ்செய்திகளைக்

    கைபேசியில்

    மாறி

    மாறிப்

    பரிமாறிக் கொண்டோம்!

    நீயும்

    நானும்

    அப்படி

    என்ன

    பேசினோம்?

    என்ன

    செய்தி

    அனுப்பினோம்?

    மனதிற்குத்

    தெரியும், அது

    பொக்கிஷம்

    என்று!

    அந்தக் குகையின் வாசலில் பனி படர்ந்திருந்தது. குகைக்கு வெளியே உள்ள நிலப்பரப்பு எல்லாமே பனியால் மூழ்கியிருக்கும் என்று அக்ஷயா நினைத்துக் கொண்டாள்.

    தான் அணிந்திருந்த கோட்டை நன்றாக உடலை ஒட்டி இழுத்துக் கொண்டாள்.

    குகையின் உள்ளே இம்ரான் காய்ந்த சருகுகளைக் கொண்டும், குச்சிகளைக் கொண்டும் தீ மூட்டி இருந்தார்.

    பனியின் முன்பு அந்தத் தீ எடுபடவில்லை. குளிரில் இன்னும் எவ்வளவு நாட்கள் குகையில் இருக்க வேண்டும் என்று நினைத்த பொழுது அவளை அறியாமல் பயத்தால் உடல் சிலிர்த்தது. தன் முன்னே பைப் பிடித்துக் கொண்டிருந்த முதியவரைப் பார்க்கும் பொழுது அவளுக்குப் பாவமாக இருந்தது.

    இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கே பனி நீடிக்கும்? என்றாள் மெல்லிய குரலில் அக்ஷயா.

    அவர் நிதானமாகப் பைப்பை வாயினுள் இழுத்தார். பின்பு அவளைப் பார்த்தார்.

    யாருக்குத் தெரியும்? மே பி எ ஃபியூ ஹவர்ஸ் ஆர் மே பி எ வீக்!

    எ… என்னது, வீக்கா? ஒரு வாரம்வரை இந்தக் குகையினுள் எப்படி இருக்க முடியும்? என்றாள் பதட்டமாக.

    அவர் ஏதும் சொல்லாமல் மீண்டும் பைப்பைப் பிடிப்பதில் மும்முரமானார்.

    குகையின் பின்பு இருந்த உணவுப் பொருட்களைக் கொண்ட சாக்கின்மீது அவள் பார்வை படர்ந்தது. அந்தக் குகையில் கட்டப்பட்டிருந்த கழுதைகள் மேலும் அவள் பார்வை படிந்தது.

    நம்மைத் தேடி செர்ச்-பார்ட்டி ஏதாவது வருமா?

    இம்ரான் ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தார்.

    "பனி ரொம்ப அதிகமாக இருக்கிறது. மிருகங்களால் பாறைகளைப் பார்க்க முடியாது. பாறையில் மோதிக் கீழே விழுந்துவிடும்.

    ஸோ நம்மைத் தேடி யாராவது வருவது சந்தேகம்தான் பெண்ணே!"

    ம்… ஹெலிகாப்டர் ஏதேனும் அனுப்ப மாட்டார்களா? என்றாள் ஆர்வமாக அவள்.

    அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. குகைக்கு வெளியே வானத்தில் அவர் பார்வை பதிந்தது. அக்ஷயாவும் வானத்தைப் பார்த்தாள்.

    கருமையாக அடர்த்தியான மேகங்கள் வானில் மிதந்து கொண்டிருந்தன. பின்னால் இருந்த குன்றுகளை மறைத்துக் கொண்டு இருந்தன மேகக் கூட்டங்கள்.

    இங்கேயே இருப்பதுதான் புத்திசாலித்தனம்! என்றார் இம்ரான்.

    அக்ஷயாவின் முகத்தில் அவர் விழிகள் கூர்மையாகப் படிந்தன.

    டோண்ட் ஒர்ரி அக்ஷயா! இந்தக் குகைக்கு நாம் சரியான நேரத்தில் வந்தோம். இந்தக் குகை நம் கண்ணில் பட்டதே பெரிய விஷயம். எல்லாம் அல்லாவின் கருணை.

    இம்ரானைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு வயது எப்படியும் அறுபது இருக்கும்.

    ஆனால் எதற்கும் கலங்காமல், மன உறுதியை இழக்காமல் அவர் இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    ‘நான் மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் அவள்.

    சரி… நாம் இங்கேயே காத்திருக்கலாம்! என்றாள் தீர்மானமான குரலில்.

    ‘இங்கே மேகாலயாவிற்கு வந்தது தவறா? ஆனால் வந்தது நல்லதிற்குத்தானே! தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய படிப்பில் பட்டம் பெற்ற பின்பு, சும்மா சென்னையில் பல்லாவரத்திலும், மகாபலிபுரத்திலும் எவ்வளவு நாள் ஆராய்ச்சி செய்வது?

    இந்தியாவிலேயே நிறைய இடத்தில் ஆர்க்கியாலஜிஸ்டிற்கு வேலை உள்ளது. ஆனால் இங்கே பனியும் மழையும் அதிகம் என்பதால் இங்கே வருவதற்கு எல்லாரும் தயங்குகிறார்கள்.

    சென்னையில் இருந்தால் காலேஜில் ஆர்க்கியாலஜி பற்றிப் பாடங்கள் எடுக்கலாம். ஆனால் நேரில் இந்த மாதிரி முக்கிய தொன்மையான இடங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காது.

    அதோடு இங்கே வருவதால் இன்சென்டிவ் என்ற பெயரில் கணிசமான பணமும் கிடைக்கும்.

    ஃபீல்ட் டெக்னீஷியனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு நான் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.

    அதனால் இதில் நன்றாகச் செயல்பட்டால்தான் மற்றதிற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

    அதனால் இதில் ஒழுங்காக, திறமையாகச் செயல்பட வேண்டும்’ என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டாள். இந்தப் பனி வராமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

    ஷில்லாங்கில் இன்னும் பார்க்க வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளன.

    அதற்குள் பனி பொழிய ஆரம்பித்துவிட்டதே எனச் சங்கடப்பட்டாள் அவள்.

    இரவுச் சாப்பாடு வேண்டாம் என முடிவு செய்தாள். உங்களுக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் தயார் செய்யவா?

    வேண்டாம் பெண்ணே! நீ சாப்பிடு.

    எனக்குப் பசியில்லை.

    எனக்கு வயதாகிவிட்டது. பசியில்லை. உனக்கு என்ன வந்தது? ஏன் சாப்பிட மாட்டேங்கிறாய்?

    ம்… இல்லை… ஒன்றும் இல்லை.

    உணவு பின்பு தேவைப்படும் என்று யோசிக்கிறாயா? அதற்காகச் சாப்பிடாமல் மிச்சம் பிடிக்கிறாயா?

    அப்படி எல்லாம் இல்லை. ஏனோ மனசு சரியில்லை.

    யூ ஆர் யங். நீ இன்னும் இந்தத் துறையில் நிறையச் சாதிக்க வேண்டியுள்ளது. மனதைத் தளர விடாதே. ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் படு. பார்க்கலாம்… பனி நாளை குறைகிறதா என்று…!

    சரி… நீங்கள் என்னைவிடப் பெரியவர். உங்கள் அனுபவம் என் வயதாக இருக்கும். ஐ ஒபே யூ!

    ரொட்டித் துண்டு ஒன்றைச் சாப்பிட்டாள் அக்ஷயா.

    கழுதைகள் இரண்டும் அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தன.

    கழுதைகளுக்காகத் தயார் செய்யப்பட்ட கஞ்சியை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கழுதைகள் முன்னே வைத்தாள் அவள்.

    கழுதைகளுக்கு நல்ல பசி போல…! கஞ்சியை ஆவலாகக் குடிக்கத் தொடங்கின.

    அங்கிருந்த தீ அணைந்துவிடக், குகையில் இருள் சூழ்ந்தது.

    கண்களை மூடிக் கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்து உறங்க முயன்றாள் அவள். உடல் சோர்ந்து இருந்ததால் குளிரையும் மீறி விரைவாகத் தூங்கி விட்டாள்.

    அவள் மீண்டும் கண்விழித்த பொழுது குகையின் உள்ளே குளிர் அதிகமாக இருந்ததால் அவள் கையும் முகமும் மரத்துப் போய் இருந்தன. தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.

    காலையில் எழுந்த பின்பு நமாஸ் படிப்பது இம்ரானின் வழக்கம். அன்றும் அவர் தொழுகை செய்து கொண்டிருந்தார்.

    அவர் தொழுகை செய்வதையே பார்த்தபடி இருந்தாள் அக்ஷயா.

    குட் மார்னிங் அக்ஷயா!

    குட் மார்னிங் இம்ரான். பனி எப்படி இருக்கு?

    நோ லக் மை கேர்ள்! பனி குறையவில்லையே! இன்னும் நிறைய நாட்கள் ஆகும் போல!

    ஓ… நம்மிடம் அவ்வளவு நாட்கள் உணவுப் பண்டங்கள் இருக்குமா என்று தெரியவில்லையே?

    ம்… அது பரவாயில்லை. நம்முடைய முதல் கவலை ஃபையர்வுட்தான். பனி நாளில் எரிபொருள் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். கிடைத்தாலும் காய்ந்திருக்காது. காய வைக்க நேரமாகிவிடும்.

    ம்… என்ன செய்வது அதற்கு?

    ஒன்றும் செய்ய முடியாது. வீ நீட் டு கீப் அவர் செல்ஃப் வார்ம்.

    அதற்கு என்ன செய்ய முடியும்?

    நாம ரெண்டு பேரும் குழந்தைகள் மாதிரி விளையாட வேண்டியதுதான். வேற வழி இல்லை.

    அவள் அதைக் கேட்டுச் சிரித்தாள்.

    என்ன விளையாட்டு?

    ம்… நீ இந்த மூலையில் நில். நான் அந்த மூலையில் நிற்கிறேன். நீ அந்த மூலையை நோக்கி ஓடி வரவேண்டும். நான் உன்னை நோக்கி வருவேன். யார் முதலில் மூலையைக் கைப்பற்றுகிறார்கள் என்று பார்க்கலாம். தொடர்ந்து இது போல் விளையாட வேண்டியதுதான். இல்லாவிட்டால் பனியில் விரைத்துவிடும் உடல்!

    வித்தியாசமான விளையாட்டுதான். ஐயாம் ரெடி!

    அடுத்த பத்து நிமிடங்கள் இருவரும் தங்களை மறந்து, பனியை மறந்து, நாளை என்ன நிகழும் என்பதை மறந்து, விளையாட்டில் மூழ்கினார்கள்.

    இம்ரான்! நான்தான் இப்ப லீடிங்கில இருக்கேன்… என்றாள் உற்சாகமாக ஓடியபடியே அக்ஷயா.

    பதில் சொல்ல வாயைத் திறந்தார் இம்ரான். ஆனால் அவர் பார்வை குகையின் வாயிலில் பதிந்தது. அவர் விழிகளில் அதிர்ச்சி தெரிந்தது.

    அவர் முகத்தில் தெரிந்த பயம் அக்ஷயாவிற்குப் புதிதாக இருக்க… சட்டெனப் பின்னே திரும்பிப் பார்த்தாள்.

    குகை வாசலில் ஒருவன் கம்பளி உடையில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் துப்பாக்கி இருந்தது.

    அதைப் பார்த்து அதிர்ந்தாள் அவள். ஷில்லாங் பார்டரில் கொள்ளையர்கள் உண்டு என்று அவளுக்குத் தெரியும்.

    ‘இவன் கொள்ளைக்காரனா’ என்ற கேள்வி அவளை உலுக்கியது.

    2

    ஒரு நாள்

    என்னைப்

    பார்த்துப்

    புன்முறுவல்

    பூத்தாய்!

    மறுநாள்

    உன் கண்களில்

    சூரியனின்

    வெப்பம்!

    எப்படி

    உன்னாலே

    சென்னைத்

    தட்ப வெப்பம்

    போல்

    உன்னை

    அவ்வப்பொழுது

    மாற்றிக்

    கொள்ள

    முடிகிறது?

    சொல்,

    பெண்ணே!

    யார் நீ? என்றார் இம்ரான், அவனைப் பார்த்து.

    அது நான் உங்களைப் பார்த்துக் கேட்க வேண்டியது! என்றபடியே அவன் பனியைக் கோடாலியால் உடைத்தபடியே குகையினுள் முன்னேறிக் கொண்டிருந்தான்.

    ‘கடவுளே! இவன் கொள்ளைக்காரன் போலத்தான் தெரிகிறது. இவன் உயரம், முரட்டுத்தனம், திமிர்ப் பேச்சு எல்லாமே இவன் கொள்ளைக்காரன்’ என்று சொல்லாமல் சொல்கிறதே!

    ‘கூடவே துப்பாக்கி வேறு வைத்திருக்கிறானே…’ என்று நினைக்கும்பொழுதே அவள் இதயத் துடிப்பு அதிகரித்தது.

    கால்கள் வழியாகக் குளிர் உடல் முழுவதும் பரவுவதை உணர்ந்தாள். ‘ஓ… நான் ஷூ போடவில்லை. அதுதான்…’ என்று உறைத்தது அவளுக்கு அப்பொழுது.

    தன் கால் அருகே இருந்த ஷூவை எடுக்கக் குனிந்தாள் அவள்.

    ஏய்! என்ன செய்யறே நீ? என்று சொல்லியபடியே அந்தப் புதியவனின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து தோட்டா ஒன்று சீறிப் பாய்ந்தது, அவள் முதுகை நோக்கி.

    குனிந்ததால் குண்டிலிருந்து தப்பினாள் அவள். பயந்து போய்ச் சுருண்டு கீழே விழுந்தாள்.

    அவள் தலையிலிருந்த கம்பளிக் குல்லா கீழே விழ, கூந்தல் அருவி போல் முகத்தில் படர்ந்தது.

    அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துப் போல் சிதறிக் கன்னத்தில் உருண்டது.

    அந்தப் புதியவன் அவள் அருகே ஓடி வந்தான்.

    காட்! யூ ஆர் எ கேர்ள்! உன் முகம் கம்பளிக் குல்லாயில் மறைக்கப்பட்டு இருந்ததால் எனக்கு நீ பெண் என்று தெரியவில்லை. அப்புறம் நீ நகர முயன்றால்… பெண் என்றும் பார்க்காமல் உன்னைச் சுட்டுவிடுவேன்.

    கோபமும், அதிர்ச்சியும் அக்ஷயாவை ஆட்டிப்படைத்தன. கன்னத்தில் வழிந்த கண்ணீரைக்கூடத் துடைக்கத் திராணியின்றி இருந்தாள் அவள்.

    அவளை ஒன்றும் செய்யாதீர்கள். நாங்கள் இருவரும் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ். நாங்கள் இந்தியாவில் உள்ள தொன்மையான இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்யவே வந்தோம்! என்றார் இம்ரான்.

    ஓ… எங்கிருந்து வருகிறீர்கள் நீங்கள்? உங்கள் குழுவிற்குச் சர்வதேச அங்கீகாரம் உள்ளதா?

    "நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் மட்டுமே எங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1