Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanjam Eppothadi Kanmani!
Thanjam Eppothadi Kanmani!
Thanjam Eppothadi Kanmani!
Ebook177 pages1 hour

Thanjam Eppothadi Kanmani!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பத்திரிக்கைத் துறையில் பணியாற்றும் பொறுப்பான பெண் ரஞ்சனா.

அந்த பத்திரிக்கையின் புதிய நிர்வாகி விக்காஸ்.அந்த பத்திரிக்கையின் நிர்வாகியாக வருவதற்கு முன்பே இருவருக்கும் ஒரு பேட்டியின் மூலம் முன்னாடியே அறிமுகம் ஏற்படுகிறது.

அந்த முன்னறிமுகம் சரியாக அமையாத காரணத்தினால் இருவருக்கும் இடையே மீண்டும் மீண்டும் மனஸ்தாபங்கள் ஏற்படுகிறது.அதே பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ரஞ்சனாவின் தோழி நிஷாவினால் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது.அதுவே இவர்கள் இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை இக்கதையில் காண்போம்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580140906974
Thanjam Eppothadi Kanmani!

Read more from Lakshmi Sudha

Related to Thanjam Eppothadi Kanmani!

Related ebooks

Reviews for Thanjam Eppothadi Kanmani!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanjam Eppothadi Kanmani! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    தஞ்சம் எப்போதடி கண்மணி!

    Thanjam Eppothadi Kanmani!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    என்

    கனவுகளுக்கும்

    நிஜத்திற்கும்

    இடைவெளி

    அதிகம்தான்!

    ....

    அதை

    நிரப்புவதற்கு

    உன்னால்தான்

    முடியும்!

    எங்கே

    இருக்கிறாய்

    நீ?

    இந்தப்

    பரந்த

    வெளியில்

    எங்கே

    இருக்கிறாய் நீ?

    அந்தப் பத்திரிகை ஆபீஸ் முற்றிலும் மாறி இருந்தது. ‘இரண்டு நாள் நான் விடுமுறையில் இருந்தேன். அதற்குள் இவ்வளவு மாற்றங்களா? மாற்றம் தான் வாழ்க்கையை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது!’ என்று எங்கோ படித்தது ரஞ்சனாவின் மனதில் அலை மோதியது.

    குட் மார்னிங் ரேகா...

    குட் மார்னிங் ரஞ்சனா. நீ இல்லாமல் ஆபீஸ் போர் அடித்து விட்டது டியர். இனிமேல் உனக்கு லீவ் கொடுக்கக் கூடாது என்று நான் பாஸிடம் சொல்லப் போகிறேன்.

    ம்... அது ரொம்பக் கஷ்டம் ரேகா.

    ஏன்... இனிமேல் நமக்குப் புது பாஸ். அதை மறந்து விட்டாயா? எனக்கு நீதான் போன் செய்து சொன்னாய்.

    யெஸ் ரஞ்சனா... புது பாஸ்... விகாஸ், டைனமைட் மாதிரி இருக்கார். எப்ப யார் மேலே வெடிப்பார்னு பிரெடிக்ட் செய்து சொல்ல முடியலை. பட், ஹி இஸ் அட்ராக்டிவ்! என்று குறும்பாகக் கண் சிமிட்டினாள்.

    மை காட்! நீ திருந்தவே மாட்டியா? சரி, நான் என் சீட்டிற்குப் போறேன். இங்கு இருந்தால் நீ தொண தொணன்னு பேசிட்டே இருப்பே... என்று சொல்லிவிட்டு, வேகமாக அங்கு இருந்து நகர்ந்தாள் ரஞ்சனா.

    லிஃப்ட்டை நோக்கி நடந்தவளின் மனதில் பல யோசனைகள் ஓடின. ‘நியூ வுமன் இன் யூ’ மேகசினில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. முதலில் ஃப்ரீலேன்ஸராகப் பணிபுரிந்த எனக்கு, எடிட்டோரியலில் எப்படி வேலை செய்வது, மேகசின் லே-அவுட் எப்படி இருக்க வேண்டும், எந்தப் பகுதிகள் எந்தெந்தப் பக்கத்தில் இடம் பெற வேண்டும் என்பது போன்ற நுட்பமான வேலைகளைச் சொல்லிக் கொடுத்தது மேகசினின் நிர்வாகி மைக்கேல் சார்தான்.

    ‘இந்தத் துறையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ‘கற்றது மைண் அளவு; கல்லாதது உலகளவு! என்று புரிய வைத்தது அவர்தான். இந்த மேகசினுடன் எனக்கு ஒரு ‘எமோஷனல் பாண்ட்’ இருப்பதற்குக் காரணம், மைக்கேல் சார்தான். இப்பொழுது மேகசினை விகாஸ் வாங்கி இருக்கிறார். இது நல்ல விஷயமாக எனக்குத் தோன்றவில்லை.

    விகாஸிற்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஞாபகம் இல்லாவிட்டால் நல்லதுதான்.

    ஐந்தாவது தளத்தினில் லிஃப்ட் நிற்க, இறங்கினாள் ரஞ்சனா. அலுவலகம் உள்ளே நுழைந்தவள் திடுக்கிட்டாள்.

    ‘அட...! இது என்ன மாற்றம்? இது என்னுடைய அலுவலகமா? இங்கே இருந்த தடுப்புகள் எங்கே? எந்தத் தடுப்புச் சுவரும் இல்லாமல் எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான் விகாஸின் குறிக்கோள் போல. அதனால்தான் இப்படித் தடாலடியாகப் பணி இடத்தை மாற்றி விட்டான்போல...’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அவள்.

    ஹாய் ரஞ்சனா! என்ன இப்படி முழிக்கிற... திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல... என்றாள் புன்னகைத்தபடியே நிஷா.

    ம்... என்ன நிஷா இது... ஒரே அதிரடியாக மாறி இருக்கிறது நம்ம ஆபீஸ்...?

    யெஸ்... எல்லாமே விகாஸின் வடிவமைப்புதான். ரொம்ப நன்றாக இருக்கிறதுதானே! வெரி அட்ராக்டிவ் லைக் ஹிம்! என்று குறும்பாகக் கண் அடித்தாள் நிஷா.

    ‘சே! இந்தப் பெண்களுக்கு வெட்கம் என்பதே கிடையாது போல...’ என்று மனதிற்குள் குமைந்தாள். ரேகா ஒரு பக்கம், நிஷா ஒரு பக்கம் விகாஸைப் பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார்களே என்ற எரிச்சல் அவளுள் பரவியது.

    என்ன ரஞ்சனா... பதிலே சொல்லாமல் நிற்கிறே? அப்படி என்ன யோசனை?

    ம்... நத்திங். பழைய அமைப்பே எனக்குப் பிடித்து இருந்தது. ஐ டோன்ட் நோ. ஏன் இப்படி அவசர அவசரமாக மாற்றினாரோ தெரியவில்லை.

    ம்... அவர் யாருடைய கருத்தையும் கேட்கவில்லை. அவராகவே இந்த வடிவமைப்பை மாற்றினார். இப்படி ஃப்ளாட்டாக இருந்தால், ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும் என்பது அவருடைய கணிப்பு.

    ஓ...! அப்படியா? சரி, அவர் எங்கே உட்காரப் போகிறார்? இதே ஹாலிலா? எந்த இடத்தில் உட்காரப் போகிறார்? எனக்கென்னவோ இந்த அமைப்பு துளி கூடப் பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லை... பத்திரிகை ஆபீஸ் சந்தைக் கடை போல் இருக்கப் போகிறது. ஆள் ஆளுக்குப் பேசிக்கொண்டு இருந்தால், வேலை பார்க்கிறவர்கள் எப்படி வேலை பார்க்க முடியும்? சுத்தப் பைத்தியக்காரத் தனமான எண்ணமாக இருக்கிறதே! என்று படபடத்தாள் ரஞ்சனா.

    கூல்... கூல்... விகாஸின் ஐடியா எப்பொழுதுமே ரொம்பப் பிராக்டிகலாக இருக்கும். அதோடு ‘தி மிரர்’ மேகசினின் லே-அவுட் இந்த மாதிரிதான் இருக்கிறது. அந்த மேகசினின் நிர்வாகி அவர்தான். அது உனக்குத் தெரியும்தானே!

    ஒரு இடத்தில் எது நன்றாக இருக்கிறதோ, அதை இன்னொரு இடத்தில் காப்பி அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. திஸ் ஐடியா இஸ் டெரிஃபிக்...! என்றாள் நிஷா.

    நோ கமெண்ட்ஸ்... என்றாள், தோளைக் குலுக்கியபடி அவள்.

    சரி... நாங்கள் எல்லோரும் பாஸைப் பார்த்து விட்டோம். நீ எப்போ பார்க்கப் போகிறாய்?

    ம்... நானாகப் போய் அவரைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். அதனால், அவராக எப்போ என்னைச் சந்திக்க விருப்பப் படுகிறாரோ, அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்.

    ஹலோ... ரஞ்சனா... விகாஸ் உன்னை இன்றே சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிறார், என்றபடியே புன்னகைத்தாள் திவ்யா.

    ஹாய் திவ்யா... நீ எப்படி இருக்கிறாய்? நீதான் நியூ பாஸின் செகரட்டரியா?

    யெஸ்... யெஸ்... மைக்கேல் சாருக்கும் நான்தான் செகரட்டரி. விகாஸிற்கும் நான்தான் செகரட்டரி. என்னை யாராலும் அசைத்துக் கொள்ள முடியாது, என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள் திவ்யா.

    ஆமாம்... ஆமாம்... உன்னை யாராலும் அசைக்க முடியாதுதான். அது எப்படி திவ்யா... இவ்வளவு குண்டாக இருந்தாலும் கவலைப்படாமல் ‘லேஸ் சிப்ஸை’த் தினமும் வெளுத்துக் கட்டுகிறாய்? என்று அவளைச் சீண்டினாள் நிஷா.

    ஹா... ஹா... நான் அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். விதவிதமாக, டேஸ்ட்டாகச் சாப்பிட வேண்டும். நன்றாகத் தினுசு தினுசாக டிரெஸ் செய்து கொள்ள வேண்டும். ஜஸ்ட் என்ஜாய் லைஃப். அதுதான் என் பாலிஸி, என்றாள் அசராமல் திவ்யா.

    ‘மை காட்! கணினியில் உட்கார்ந்து, ஈமெயில் செக் செய்யக்கூட முடியாது போல இருக்கிறதே. இப்படி எல்லோரும் பேசுவது காதில் விழுந்து தொலைக்கிறதே!’ என்று மனதிற்குள் புலம்பியபடியே கணினியை முறைத்தாள் ரஞ்சனா.

    ரஞ்சனா! நீ விகாஸை எப்போது சந்திக்க வேண்டும் என்று கேட்கவில்லையே! உனக்கு அவரைச் சந்திப்பதில் இன்ட்ரெஸ்ட் இல்லையா? ஹி இஸ் எ நைஸ் மேன்! என்றாள் திவ்யா.

    ‘ம்... திவ்யாவும் விகாஸ் புராணம் பாட ஆரம்பித்து விட்டாள்...’ என்று அலுத்துக் கொண்டாள் தனக்குள்ளே ரஞ்சனா.

    என்ன ரஞ்சனா... உனக்கு விகாஸைச் சந்திக்க ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன். நான் பாஸிடம் அப்படியே சொல்லி விடவா?

    நோ... நோ... அப்படி எல்லாம் இல்லை திவ்யா. நான் விடுமுறை முடிந்து இன்றுதான் வந்து இருக்கிறேன். அதனால் ஈமெயில்களை செக் செய்வதில் கவனமாக இருந்தேன். மற்றப்படி அவரைச் சந்திக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்லை.

    ஓ... சாரி! நீ லீவில் இருந்ததை நான் மறந்து விட்டேன். நோ ப்ராப்ளம். இன்று ஏழு மணிக்கு உனக்கு விகாஸ் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிறார்.

    ஓ... அப்படியா? அவர் ஐ.எஸ்.டி. டைமில் வேலை பார்ப்பதில்லை போல. ஈ.எஸ்.டி. டைம் ஸோனில்தான் வேலை செய்வார் போல. ஆபீஸ் டைம் ஆறு மணி வரைதான். அதற்குப் பின்பு ஒரு மணி நேரம் கழித்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிறார். அதுதான் ஏன் என்று புரியவில்லை! என்றவள் முகம் கோபத்தால் சிவந்தது.

    ம்... ஒரு வேளை நீ அவரைப் பற்றி முன்பு எழுதிய விஷயம் எல்லாம் அவருக்கு ஞாபகம் வந்து விட்டது போல. அதனால்தான்... உன்னைப் பழி வாங்கத்தான் இப்படிச் செய்கிறாரோ என்னவோ... என்றாள், திவ்யா மெல்லிய குரலில், அவளுக்கு மட்டுமே கேட்கும் தொனியில்.

    ‘அவள் சொல்வது உண்மையாக இருக்குமோ...’ என்று ரஞ்சனாவின் மனம் படபடத்தது. ‘சே! அப்படி எல்லாம் இருக்காது. அவர் காலண்டரில் இடம் இருந்து இருக்காது. அதனால்தான் ஏழு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிறார்...’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள் ரஞ்சனா.

    2

    ஒரு

    அழகான

    மாலைப்

    பொழுது!

    ....

    கதிரவன்

    வானவீதியில்

    உலா

    வந்து

    கொண்டு

    இருந்தான்!

    ....

    மலர்கள்

    வாடிப்

    போய்ப்

    பூமியைத்

    தேடித்

    தஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1