Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkal Paadum Boopalam...
Pookkal Paadum Boopalam...
Pookkal Paadum Boopalam...
Ebook198 pages1 hour

Pookkal Paadum Boopalam...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு லீடிங் லா கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்க்கிறாள் தேஜஸ்வினி. அவள் முதல் கேஸ் எதிர்பாராத விதமாக அவளுக்கு பாதகமாக முடிகிறது. கம்பெனி பார்ட்னர் சித்தார்த் இதை எப்படி கையாளுகிறான். இருவருக்கும் இடையில் நடக்கும் வாதங்கள் எப்படி இனிமையான ராகமாக மாறியது?

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580140910827
Pookkal Paadum Boopalam...

Read more from Lakshmi Sudha

Related to Pookkal Paadum Boopalam...

Related ebooks

Reviews for Pookkal Paadum Boopalam...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkal Paadum Boopalam... - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூக்கள் பாடும் பூபாளம்...

    Pookkal Paadum Boopalam...

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 1

    என் கண்கள்

    கூட்டத்தில்

    உன்னை

    தேடுகின்றன

    எங்கே

    நீ...

    பல

    வருடங்களுக்கு

    பின்பு

    முதல் முறையாக

    உன்னை

    சந்திக்க

    போகிறேன்...

    தேர்வுக்கு

    தயாராகும்

    மாணவன்

    போல்

    இருக்கிறேன்

    நான்...

    எங்கே நீ

    வருவாய் தானே

    காத்திருக்கிறேன்...

    அதிகாலையில் பெயர் தெரியாத பறவைகள் சத்தம் எழுப்பின. அலாரமே

    வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த பறவைகள் என்னை தினம் தினம் எழுப்பி விடுகின்றன.

    என்று மனதிற்குள் நினைத்தபடியே ஜன்னல் வழியாக தெரிந்த மாமரத்தை பார்த்தாள் தேஜஸ்வினி.

    நான்கு அணில்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு மரக்கிளையில் ஓடி

    விளையாடிக் கொண்டிருந்தன.

    தேன் குருவிகள் கீச்சு கீச்சு என்று கத்தியபடி குறுக்கே பறந்து கொண்டு இருந்தன.

    குயில் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் அழகாக பாட்டு பாடி கொண்டிருந்தது.

    இந்த குயில் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக பாடிக் கொண்டிருக்கிறது.

    எந்த யோசனையும் இந்த குயிலுக்கு இருக்காது.

    யோசனையில் இருந்தவளை கலைத்தது கைபேசியின் அழைப்பு.

    ஹாய் கீது குட் மார்னிங் என்றாள் தேஜஸ்வினி.

    "குட் மார்னிங் தேஜு. ஹவ் ஆர் யூ

    ஏ டு இசட்... கம்பெனியில் சேரப் போகிறாயா தேஜு.

    சூப்பர் கம்பெனி அது. புதிதாக நிறைய ஆப்ஷன்ஸ் குறிப்பாக வயதானவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    வேலை நிச்சயமாக இன்ட்ரஸ்டிங்காக இருக்கும்"

    "தேங்க்யூ கீது. காலேஜ் கேம்பஸ் வழியாக இந்த வேலை கிடைத்தது.

    இந்த கம்பெனியில் ஆஃபரும் நன்றாக இருந்தது.

    அதனால் நான் வேறு எந்த கம்பெனிக்கும் அப்ளை செய்யவில்லை."

    "சரியான முடிவு தான் எடுத்திருக்கிறாய் தேஜு.

    இந்த கம்பெனியில் நிறைய விஷயங்கள் நீ கற்றுக் கொள்ளலாம்.

    அதற்குப் பின்பு ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து வேறு எங்காவது ஜாயின் செய்யலாம்.

    முதலில் வேலையை நன்றாக கற்றுக்கொள்.

    இந்தத் துறையில் அது ரொம்ப முக்கியம்.

    லாயர் பீல்டில் கான்டக்ட்ஸ் நெட்வொர்க்கிங் ரொம்ப முக்கியம்.

    இங்கே நீ சேர்ந்தால் அதெல்லாம் நிச்சயம் நன்றாக கிடைக்கும்.

    ரத்தீஷும் இங்கே சேர்கிறானா? "

    "ஆமாம் அவனுக்கும் இங்கே ஆஃபர் கிடைத்து இருக்கிறது.

    அவனும் நிச்சயமாக இங்கே தான் சேர்வான்."

    "தட் இஸ் குட். நீயும் அவனும் சிறு வயது சைல்டுவுட் பிரண்ட்ஸ்.

    அவன் கூட இருப்பது உனக்கு நல்ல ஆதரவாக இருக்கும் புதிய இடம் என்று பயம் இருக்காது."

    "ஒருவகையில் நீ சொல்வது சரிதான்.

    ஆனால் நான் என்னுடைய சொந்த முயற்சியில் எனக்கென ஒரு அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

    ரதீஷ் அதற்கு ஒரு சவாலாக இருப்பான்.

    ஸ்கூலில் ஆரம்பித்து காலேஜ் வரை ஒன்றாக நல்ல பிரண்ட்ஸாக இருக்கிறோம். அவன் இல்லாமல் நான் மட்டும் தனியாக எப்படி என்னை ப்ரொஜெக்ட் செய்யப் போகிறேன்.

    அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது... நான் போகும் இடத்துக்கு எல்லாம் இந்த ரத்தீஷும் என்னை பாலோ செய்கிறான்... வோடபோன் அட்வர்டைஸ்மென்ட்டில் வரும் அந்த நாய் குட்டி போல்..."

    என்றாள் சிரித்தபடியே தேஜஸ்வனி.

    ரதீஷ் காதில் இது விழுந்தது என்றால் அவ்வளவுதான்

    என்றாள் கீதா.

    "எனக்கு என்ன பயம்

    ரதீஷ் முன்னாடியே இதை நான் சொல்வேன் "என்றாள் பதிலுக்கு தேஜஸ்வனி.

    ஓகே நாளைக்கா வேலையில் ஜாயின் செய்யப் போகிறாய்

    "ஆமாம் நாளைக்கு தான். நல்ல காலம் ரத்தீஷ்

    என்னோடு ஜாயின் செய்யவில்லை அவன் குடும்பத்துடன் மலேசியா சென்று இருக்கிறான்.

    வருவதற்கு ஒரு வாரம் ஆகும்.

    அதுவரை அவன் தொல்லை இன்று நான் நிம்மதியாக இருக்கலாம்" என்றாள் தேஜஸ்வினி.

    ஆமாம் இப்படி தான் சொல்வாய் அப்புறம் நாளைக்கு போர் அடிக்குது என்று சொல்வாய் என்றாள் கீதா.

    நெவர் நெவர்என்றாள் தேஜஸ்வினி.

    பார்க்கலாம் பார்க்கலாம். சரி இன்னைக்கு என்ன பிளான் உனக்கு

    "பெருசாக ஒன்றும் இல்லை.

    ட்ரெஸ்ஸஸ் எல்லாம் துவைப்பதற்கு இருக்கிறது. துவைத்து அயன் பண்ணி ரெடி செய்து விட்டால் ஒரு வாரத்திற்கு அதை வைத்துக் கொண்டு மேனேஜ் செய்யலாம்"

    "ஓகே ஹாப்பி டிரஸ் வாஷ் அண்ட் கிளீன் டே.

    அப்புறம் உன்னுடைய கம்பெனி ஒன்வே இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நீ இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து.

    டெய்லி நாற்பது கிலோ மீட்டர் எப்படி டிராவல் செய்யப் போகிறாய்.

    பேசாமல் அங்கேயே தங்குவதற்கு ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா என்று பார்."

    "ஆமாம் நானும் அதை யோசித்துப் பார்த்து விட்டேன்.

    அங்கிருக்கும் அட்மின் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர்களிடமும் விசாரித்து பார்த்து விட்டேன்.

    தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது போல.

    ஆனால் சீனியர் மெம்பர்ஸ்க்கு தான் அது கிடைக்குமாம்.

    நாம் கடை நிலை ஊழியர்... அதனால அதற்கு வாய்ப்பு இல்லை.

    அதோடு அங்கே பெரிதாக லேடீஸ் ஹாஸ்டல் ஏதுமில்லை.

    சோ என்ன செய்வது என்று ஜாயின் செய்த பின்பு தான் யோசிக்க வேண்டும்."

    என்றாள் தேஜஸ்வினி.

    ஓ ஓகே புரிகிறது வேறு யாராவது இருந்தால் அவர்களுடன் ரூமை ஷேர் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்.

    ஆமாம் நாளைக்கு முதல் வேலையாக அதைப் பற்றி கேட்க வேண்டும் என்றாள் தேஜஸ்வினி.

    "ஓகே ஆல் த பெஸ்ட். இப்பொழுது இங்கே ராத்திரி ஏழரை மணி.

    இனிமேல் தான் தயார் செய்ய வேண்டும் டின்னர்.

    சோ பை பை."

    பை பை அமெரிக்கா கீத்துஎன்றாள் தேஜஸ்வினி.

    "இந்தியா வந்தவுடன் உன்னை அடித்தால் தான் சரி வருவாய்.

    எத்தனை தடவை சொல்வது அப்படி கூப்பிடாதே என்று"என்றாள் கீதா.

    சிரித்தபடியே whatsapp இணைப்பை கட் செய்தாள் தேஜஸ்வினி.

    அத்தியாயம் 2

    நல்ல காலம்

    எல் ஐ சி யில்

    நான்

    இன்ஷூரன்ஸ்

    எடுத்திருக்கிறேன்...

    உன்னை

    பார்த்த

    பின்பு...

    என்

    உயிர்

    என்னிடம் இல்லை...

    ஆர்கன்

    டொனேஷன்

    மீது

    பெரிதாக

    ஈடுபாடு

    எனக்கு

    இல்லை ஆனால்

    உன்னை பார்த்த

    பின்பு எப்படி

    என்

    இதயம்

    தானாக

    என்னிடமிருந்து

    உன்னைச்

    சேர்ந்தது

    ஏடு இசட் கம்பெனியில் அன்று தேஜஸ்வினிக்கு முதல் நாள்.

    கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல் இருந்தது அவளுக்கு.

    ஒரு பத்து பேரிடம் அவள் தன்னை பற்றி இன்ட்ரடியூஸ் செய்திருப்பாள்.

    சலிக்காமல் ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்து சிரித்து உதடும் வாயும் வலித்தது தான் மிச்சம்.

    என்ன வேலை அவள் பார்க்க வேண்டும் என்பது சரியாக புரியவில்லை. யாரைக் கேட்டாலும் ஒரே பதில் தான் வந்தது. கம்பெனியின் பார்ட்னர் வரவேண்டும். அவர் வந்தால் வேலைகள் எல்லாம் அவர் வழியாக வரும் என்று எல்லோரும் அதே பல்லவியை மாற்றி மாற்றி பாடினார்கள்.

    அவர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் அதற்கும் சரியான பதில் இல்லை இந்த வாரத்தில் ஒரு நாள் அவரை எதிர்பார்க்கலாம் என்று ரேண்டமாக பதில் வந்தது.

    காலையில் 5:00 மணிக்கு எழுந்து இரண்டு பஸ் மாறி வந்ததால் தூக்கம் அவள் கண்ணை அவ்வப்பொழுது மறைத்தது.

    டி மிஷின் இருந்ததால் தப்பித்தேன் இங்கு நினைத்த பொழுது

    டீ குடிக்க முடிகிறது. இல்லாவிட்டால் டெஸ்கிலே உட்கார்ந்து தூங்கி விடுவேன் நான் என்று தனக்க தானே நினைத்துக் கொண்டாள் அவள்.

    ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போல் இருக்கிறது.

    எப்படி டெய்லி நான் இங்கே வரப் போகிறேன்?

    பேசாமல் ரத்தீஷ் கூட நானும் வேலையில் ஜாயின் செய்திருக்கலாமா?

    மலேசியாவில் இருந்து என்ன சாபத்தை உருட்டி விட்டானோ?

    இப்படி தனியாக வந்து மாட்டிக்கொண்டு பேசுவதற்கு கூட ஆள் இல்லாமல் எனக்கு நானே புலம்பி கொண்டிருக்கிறேன்... என்று நினைத்தபடியே கம்ப்யூட்டரில் கூகுளில் நாட்டு நிலவரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

    லஞ்ச் டைம் வந்தது. யாரும் அவள் இருப்பதையே ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் வேக வேகமாக கேண்டினை நோக்கி தங்களுக்குள்ளேயே பேசி சிரித்தபடியே நடந்து செல்வதை எரிச்சலுடன் பார்த்தாள் அவள்.

    ஹலோ நீங்க நியூ ஜாயினியா ஒரு பெண் குரல் கேட்க திரும்பினாள் அவள்.

    ஆமாம் எப்படி கண்டுபிடிச்சீங்க

    என்றாள் விழிகள் அகல தேஜஸ்வினி.

    "இதுக்கு பெரிய சைண்டிஸ்டா இருக்கணும்னு அவசியம் இல்ல உங்கள பார்த்தாலே தெரியுது.

    ஒரு வாரம் முன்னாடி நானும் இப்படித்தான் இருந்தேன். என்னுடைய பெயர் மாலினி."

    என்று புன்னகைத்தபடியே கை நீட்டினாள் அந்தப் பெண்.

    "ஓ நல்ல ஃபன்னியாக

    பேசுகிறீர்கள் ஐ அம் தேஜஸ்வினி "என்றபடியே கை குலுக்கினாள் அவள்.

    "ரெண்டு பேரும் காலேஜ் கேம்பஸ் வழியாகத்தான்

    ரெக்ரூட் ஆகி இருக்கிறோம்.

    அதனால் இந்த நீங்க வாங்க எல்லாம் விட்டுவிடலாம் "

    கண்டிப்பா அப்படியே பண்ணலாம் ஓகே ஓகே

    என்றாள் தேஜஸ்வினி சிரித்தபடியே.

    "பசி வயிற்றை கப கப ன்னு கிள்ளுது.

    சாப்பிட போலாமா"

    "நிச்சயமா கம்பெனி யாரும் இல்லையே லஞ்சுக்கு அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்.

    நல்ல காலம் நீ கரெக்டா வந்த மாலினி"

    "இனிமேல் சேர்ந்தே

    லன்ச்சுக்கு போகலாம். சரி உன்னோட வீடு எங்க எப்படி நீ கம்யூட்

    பண்ற ஆபீஸ்க்கு"

    "இந்த கொடுமையை ஏன் கேக்குற? சிட்டிக்கு வெளியில இந்த ஆபீஸ் இருக்கு.

    அதனால டிராவல் டைம் ரெண்டு மணி நேரம் ஆகுது இன்னிக்கு.

    முதல் நாள் என்பதால் காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சிட்டேன் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்சா இருந்தது.

    பஸ்ல தூங்கி வழிஞ்சுகிட்டு வந்தேன். இன்னமும் தூக்கம் தெளிஞ்ச பாடு இல்ல.

    இங்கே ரொம்ப பெருசா

    Enjoying the preview?
    Page 1 of 1