Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Ebook97 pages38 minutes

Enna Solla Pogiraai

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

அசாமில் உள்ள தன் தாத்தாவின் பள்ளிக்கூடத்தில் வேறுவழியின்றி டீச்சராக சேருகிறான் நிஷாந்த்.

அதற்கு முன்னால் அங்கு பணியாற்றிய ஒரு டீச்சரின் டயரி அவன் கையில் கிடைக்கிறது. அந்த டைரியில் இருந்த சுவாரசியமான விஷயங்கள் அவனை அவள் பால் ஈர்க்கிறது. ஆனால் அவளின் திருமண பத்திரிகை அவனுக்கு கிடைக்கிறது.

அவளுடைய திருமணத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீருக்கு செல்கிறான் நிஷாந்த். அங்கு பல சுவாரஸ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. நிஷாந்த் உடன் சேர்ந்து நீங்களும் காஷ்மீருக்கு பயணிக்கலாம்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580140907914
Enna Solla Pogiraai

Read more from Lakshmi Sudha

Related to Enna Solla Pogiraai

Related ebooks

Reviews for Enna Solla Pogiraai

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Solla Pogiraai - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    என்ன சொல்லப் போகிறாய்

    Enna Solla Pogiraai

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நான் ஒரு

    பறவையை

    போல்

    நீல வானில்

    சிறகடித்து பறக்கிறேன்

    எனக்கு

    தெரிந்த ஒரே

    மொழி

    விடுதலை !

    எந்த சுமையும்

    இல்லை...

    எந்த பயமும்

    இல்லை...

    நான் ஒரு

    சுதந்திர பறவை!

    ‘இந்த நாள் இனிமையான நாள்’ .

    இட் இஸ் ஏ லவ்லி டே 'என்று அலெக்சா ரோபோவின் குரல் திரும்ப திரும்ப கேட்க நிஷாந்த் வேறுவழியின்றி கண்களைத் திறந்தான்.

    ரோபோவின் அலாரத்தை நிறுத்தினான்.

    இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவேண்டுமே என்று உடல் கெஞ்சியது. அனால் மூளை போதும் போதும் எழுந்திரு என அவனுக்கு கட்டளையிட்டது.

    படுக்கையில் இருந்து எழுந்தவன் , சோம்பல் முறித்தான். பல் துலக்கிவிட்டு டீவீயை ஆன் செய்தான்.

    கிட்சனில் இஞ்சியையும், ஏலக்காயையும் தட்டி மிக்ஸியில் போட்டவன் பாலை காய்ச்சி , தேனீர் போடத் தொடங்கினான்.

    அடுத்த தடவை ஊருக்கு போகும் பொழுது மறக்காமல் ஏலக்காய் நிறைய வாங்க வேண்டும்.

    இந்த ஊர் ஏலக்காயில் வாசனையே இல்லை , என நினைத்தபடியே தேநீரை பருகினான்.

    ஸ்டாக் மார்க்கெட்டில் அன்றைய பங்குகளின் ஏற்ற இறக்கத்தை டீவீயில் பார்த்து கொண்டு இருந்தவனை திசை திருப்பியது செல்போன் ஒலி.

    செல்போன் திரையில் தாத்தாவின் படம் தெரிந்தவுடன் மனம் குஷியானது.

    ஹலோ தாத்தா..... குட்மோர்னிங் !

    நிஷாந்த் குட்மோர்னிங் ! எப்படி இருக்க?

    நல்ல இருக்கேன் தாத்தா..... நீங்க எப்படி இருக்கீங்க?

    நல்ல இருக்கேண்டா. ஒரு விஷயம் சொல்ல தன் கூப்பிட்டேன்.

    என்ன தாத்தா.....?

    "நம்ம ஸ்கூல் விஷயம் தான் நிஷாந்த்.

    இங்கே கிளாஸ் எடுத்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடிச்சாம்.

    அதனால அவங்க ரிஸைன் செஞ்சிட்டாங்க.

    இது நடந்து ரெண்டு வாரமாகுது. எனக்கு இப்போ தான் நியூஸ் தெரிஞ்சிது."

    ஓ மை காட்....! மறுபடியும் புது டீச்சர் தேடணுமா?

    "ஆமாம் நிஷாந்த். அசாம்னாலே இங்க வர எல்லாரும் யோசிக்கறாங்க.

    அதுவும் துருக் ங்கறது சின்ன கிராமம்.

    ஐம்பது குடும்பம்தான் அங்க இருக்கு.

    பசங்களும் பதினஞ்சிலிருந்து இருபது பேர் தான் இருப்பாங்க. பெரிய பள்ளிக்கூடம் இல்லை.

    இங்க வந்து எதுக்கு டீச்சர் மாட்டிக்னும் அப்படினு யோசிக்கறாங்க."

    "ஆமாம் தாத்தா.

    அப்பா கட்டிய ஸ்கூல் கிராமத்து ஜனங்களுக்கு உபயோகமா இருக்கும் அப்படின்னு நினைச்சு நல்ல எண்ணத்தில் அவர் இப்படி செஞ்சார்.

    ஆனால் இந்த ஸ்கூலுக்கு ஏனோ ஒரு டீச்சர் பெர்மனெண்ட்டாக செட் ஆகா மாட்டேங்கறாங்க."

    "இப்ப எல்லாரும் பணம் அதிகமா கிடைக்கற தொழிலை தானே விரும்பறாங்க? என்ன செய்யறது...

    டீச்சர் வேலையில் ரொம்ப குறைந்த பேரே ஆத்மார்தமா பசங்களுக்கு சொல்லி கொடுக்கறாங்க.

    இந்த டீச்சரம்மா ரொம்ப நல்லா சொல்லி கொடுத்தாங்க போல. அதுக்குள்ள கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. நம்ம சுயநலத்தோட இருக்க முடியாது நிஷாந்த் "

    என்றார் தாத்தா.

    "யெஸ்..... கரெக்ட் தான்.

    இன்னும் இரண்டு மாதத்தில் எக்ஸாம் தொடங்கிடுமே.

    அதுக்குள்ள நல்ல டீச்சர்

    கிடைக்கணுமே "

    "ம்ம்... அதுக்கு தான் தம்பி.

    நான் ஒரு யோசனை வெச்சுருக்கேன்.

    ஆனால் நீ"....... என்று இழுத்தார் தாத்தா.

    "என்ன தாத்தா...... சொல்லுங்க.

    ஏன் கிட்ட என்ன தயக்கம்" என்றான் நிஷாந்த்.

    ம்ம்...... நல்ல டீச்சர் கிடைக்கற வரைக்கும் நீயே இங்க இருக்குற பசங்களுக்கு பாடம் எடுத்த என்ன

    தாத்தா......! அலறினான் நிஷாந்த்.

    "ம்ம்........எனக்கு தெரியும்.

    டீச்சர் தொழிலில் உனக்கு துளி கூட இன்ட்ரெஸ்ட் இல்லை.

    உன் தாத்தா மாதிரி உன் அப்பா மாதிரி நீ இல்லை அப்படிங்கறது எனக்கு தெரியும்.

    அதனால தானே நீ

    Enjoying the preview?
    Page 1 of 1