Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennamo Yetho…
Ennamo Yetho…
Ennamo Yetho…
Ebook164 pages1 hour

Ennamo Yetho…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் பிஸினெஸை ஆஷிஷ் திறம்பட நடத்தி கொண்டு இருந்தான். மொசைக்கில் அழகான டிஸைன்ஸ் படைக்கும் சாம்பவியை அவன் சந்திக்கிறான். ஆனால் அவனோ அவனுடைய பிஸினெஸ் ப்ரபோசலை ஆர்வமின்றி ஏற்கிறான். அவனை சந்திப்பதை தவிர்க்கிறான். என்ன காரணம் அதற்கு? அவளுக்கு இவன் மீது மட்டும் வெறுப்பா? இல்லை ஆண்களை வெறுக்கும் பெண்ணா சாம்பவி? படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906600
Ennamo Yetho…

Read more from Lakshmi Sudha

Related to Ennamo Yetho…

Related ebooks

Reviews for Ennamo Yetho…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennamo Yetho… - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    என்னமோ ஏதோ...

    Ennamo Yetho…

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    வாங்க... பேசலாம்.

    ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் ஜே.கே. புத்தகம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.

    வாழ்க்கையில் ஒன்றிப்போதல், புரிதல் பற்றி அழகான தத்துவங்கள். உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    நாம் பலரைச் சார்ந்து இருக்கிறோம்.

    பேப்பர் போடுபவர், பால் போடுபவர், காய்கறி விற்பனை செய்பவர்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    மனிதன் தீவு இல்லை. நாம் எல்லாவற்றுக்கும் எல்லாரையும் ஒரே மாதிரி சார்ந்து வாழ்வதில்லை.

    பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள சார்புத் தன்மை வேறு.

    கணவன், மனைவி, குழந்தையிடம் உள்ள உறவு வேறு.

    தனியாக இருந்தால் இது கிடைக்காது.

    தனிமையாக இருப்பது சிலருக்கு இனிமை. சிலருக்குக் கொடுமை.

    சார்ந்து இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் நமக்குத் தேவையானதைத் தராவிட்டால் ஏமாற்றம், கோபம், துக்கம், வெறுப்பு எல்லாமே ஏற்படுகிறது.

    நம் சந்தோஷம் நம் கையில் மட்டுமே இருந்தால், வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

    என் நாவலைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி.

    தொடர்ந்து விமர்சனங்களை அனுப்புங்கள்.

    மகிழ்வேன்.

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    ***

    1

    உன்னையும்

    என்னையும்

    மீண்டும்

    சேர்த்து

    வைத்த

    அந்த

    அழகான

    நாளுக்கு

    நன்றி!

    ...

    மறுபடியும்

    என்னைப்

    பிரிந்து

    சென்று

    விடுவாயா?

    இதயத்தின்

    கதறல்

    உனக்குக்

    கேட்கிறதா?

    அந்தப் பத்து மாடிக் கட்டிடத்தை ‘ஸ்கை ஹை’யை நிமிர்ந்து பார்த்தாள் சாம்பவி. அவளை அறியாமல் பெருமூச்சு ஒன்று புறப்பட்டது.

    வேறு வழியில்லை. இவ்வளவு டைல்ஸை வைத்துக்கொண்டு, படிக்கட்டில் ஏற முடியாது. லிஃப்ட்டைத்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

    இந்தப் பயம் என்னை விட்டுப் போகவே போகாதா?

    ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் என் பயம் போகவில்லை என்று நினைத்தபடியே லிஃப்டினுள் நுழைந்தாள்.

    லிஃப்ட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்தத் தனிமை அவளுக்கு நிம்மதியை அளித்தது.

    ஆனால் அந்த நிம்மதிக்கு ஆயுள் சில நிமிடங்கள்தான். லிஃப்ட் மூடும் நேரத்தில் கதவின் இடையே கையை வைத்த அந்த ஆண்மகனைப் பயத்துடன் பார்த்தாள் சாம்பவி.

    அவள் கால்கள் பின்னோக்கி நகர்ந்தன. லிஃப்ட்டின் சுவர் முதுகை இடிக்க... இதற்கு மேல் நகர முடியாது என்று அவளுக்குப் புரிந்தது.

    ‘சாம்பவி... கூலாக இரு. பயப்படாதே. அவன் லிஃப்ட்டில் பயணிக்கும் ஒரு ஆள். தட்ஸ் ஆல். அநாவசியமாக, உன்னைக் குழப்பிக் கொள்ளாதே...’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

    ஆனால் அவள் இதயத் துடிப்பு பந்தயக் குதிரை போல் வேகம் எடுத்தது.

    அந்த ஆண்மகன் எட்டாம் எண்ணை அழுத்த லிஃப்ட் புறப்பட்டது.

    கையில் வைத்திருந்த டைல்ஸினைப் பத்திரமாகக் கெட்டியாகப் பிடித்தபடி நின்றாள் சாம்பவி.

    அதுவரை தெரியாத கனம், அப்பொழுது ஏனோ பெரிய சுமையாகத் தெரிந்தது, அவளுக்கு. லிஃப்ட் எட்டாம் மாடியை அடைந்தது.

    ‘இதுதான் கடைசி மாடி. இறங்கு சாம்பவி...’ என்று அவள் மனம் குரல் கொடுக்க... சட்டென இறங்க கதவை நோக்கி நகர்ந்தாள் சாம்பவி.

    அவள் இறங்குவதற்கு வாட்டமாக... கதவைப் பிடித்துக்கொண்டு நின்றான் அவன்.

    அவள் லிஃப்ட்டை விட்டு வெளியே வந்து, படிக்கட்டை நோக்கி நடந்தாள்.

    ரொம்ப கனமா இருக்கே... நான் வேண்டுமானால் உதவி செய்யட்டுமா? என்று கேட்டபடியே டைல்ஸ் டப்பாவை அவள் கையிலிருந்து எடுக்க அவன் முயற்சி செய்ய... பதறிய சாம்பவி திரும்பி... ‘வேண்டாம்!’ என்பது போல் தலை அசைக்க முயல... படிக்கட்டில் அவள் கால் பிசகி, பேலன்ஸ் தவறி, படிக்கட்டில் டைல்ஸுடன் கீழே விழுந்தாள்,

    டைல்ஸ், பாக்ஸில் இருந்து சிதறிக் கீழே விழ... சப்தம் அந்த இடம் முழுவதும் பரவியது. அவள் கைமுட்டி படிக்கட்டில் ஒட்டியிருந்த இரும்பு கிரில் மேல் ஏடாகூடமாக உராய்ந்ததால் வலியால் துடித்தாள் சாம்பவி.

    அயாம் ஸாரி... என்று பதறியபடியே கீழே முழங்காலிட்டு உட்கார்ந்தான் அவன்.

    ஒரு அந்நியன் முன்பு, இப்படி எழுந்து இருக்கக்கூட முடியாமல் உட்கார்ந்திருக்கிறேனே... என்று தன்னையே கடிந்துகொண்டாள் அவள்.

    ஸாரி... நான் உன்னைப் பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்யவில்லை... என்று குனிந்து பேசியவன், வலிக்கிறதா? என்றவனின் பார்வை இன்னொரு கையால் கைமுட்டியை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் பாய்ந்தது.

    ஒன் செகண்ட். நான் பார்க்கிறேன்! என்றபடியே அவள் கைமுட்டியை நோக்கி கையை நீட்டினான் அவன்.

    வேண்டாம்... எனக்கு ஒன்றும் இல்லை! என்றாள், அவள் பட்டென.

    பட்... உன் கை அடிபட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    இல்லை... என்றபடியே அவள் எழுந்திருக்க முயன்றாள்.

    "எழுந்திருக்காதே... நான் இந்த டைல்ஸ் எல்லாம் அடுக்கி ஓரமாக வைக்கிறேன்.

    அடடா... சில டைல்ஸ் எல்லாம் உடைந்து போய் விட்டதே! ஸாரி... என்னால்தான் இதெல்லாம் நடந்தது. நான் வேண்டுமானால் அதற்கான தொகையை உனக்குத் தருகிறேன்.

    இ... இல்லை வேண்டாம். எப்படியும் நான் அவற்றை எல்லாம் உடைக்கத்தான் போகிறேன்.

    ஓ... ஸ்ட்ரெஸ் ரிலீஃப்பா? என்றவனின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.

    இல்லை... இதெல்லாம் மொஸைக் செய்வதற்கு நான் எடுத்துக்கொண்டு வரும்பொழுதே அவற்றில் பல உடைந்திருந்தன.

    ஓ... மொஸைக்கா...? இதைப் பொழுதுபோக்கிற்காகச் செய்கிறாயா? இல்லை... இது உன் முழு நேரத் தொழிலா?

    அவள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.

    ம்... எனக்கு உன் பெயர் தெரியுமா? என்றவனின் விழிகள் சுவாரசியமாக அவள் முகம் மேல் பதிந்தது.

    அவள் ‘தெரியாது...’ என்பது போல் தலை அசைத்தாள்.

    அவள் தன் பெயரைச் சொல்லத் தயங்குகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

    ம்... கை வலி எப்படி இருக்கிறது?

    ம்... வலி பரவாயில்லை! என்றபடியே தன் கைப்பையைத் தோளில் மாட்ட முயன்றாள்.

    ஆனால் கை வலி மீண்டும் அதிகரிக்க... தன்னை அறியாமல் ஸ்... ஸ்... என்று ஒலி எழுப்பினாள் சாம்பவி.

    காட்... ஃபிராக்சர் ஏதேனும் ஆகியிருக்குமா?

    இல்லை... கையில் எரிச்சல் இருக்கிறது. அவ்வளவுதான்.

    ஓ... சரி. இதை நான் எடுத்துக்கொண்டு வருகிறேன்... என்றபடியே டைல்ஸை எல்லாம் அந்த அட்டைப் பெட்டியில் அடுக்கி... அதைச் சுமந்து கொண்டு தயாராக இருந்தான் அவன்.

    அவள் முன்னே நடக்க... பின்தொடர்ந்தான் அவன்.

    எட்டாவது மாடியை ஒட்டி உள்ளே இருந்த ஒரு அறையைக் காட்டி.

    ஓ... சரி! என்றபடியே அதைக் கீழே வைத்தான் அவன்.

    தேங்க்ஸ்... என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் அவள்.

    அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆஷிஷ்.

    ‘ம்... நல்ல அழகிதான்.’ லிஃப்ட்டில் ஏறியவுடன் அவள் முகத்தில் தோன்றிய மாற்றத்தை அவன் மனம் நினைவுபடுத்திப் பார்த்தது.

    அவள் விழிகளில் தோன்றிய உணர்வு என்ன? பயமா? திகைப்பா?

    என்னைக் கண்டவுடன் அவள் ஏன் பதறினாள்?

    நல்ல உயரம். மெல்லிய உடல். பாவம்! ஆள் யாரும் இல்லை போல உதவி செய்வதற்கு. அதனால்தான் டைல்ஸ் எல்லாவற்றையும் அவளே சுமந்து கொண்டு வந்தாள் போல.

    அது மட்டும் இல்லை... என் பார்வையை வேகமாகத் தவிர்த்து, லிஃப்ட் ஸ்கிரீனில் பார்வையைப் பதித்தாள்.

    சே! பாவம்... நான் கையைத் தொட்டதினால்தான் பதறிப் போய் அவள் பேலன்ஸ் தவறிக் கீழே விழுந்து விட்டாள்.

    அவளின் வெளிறிய முகம், மீண்டும் அவன் கண்ணில்

    Enjoying the preview?
    Page 1 of 1