Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Irulalla!
Ithu Irulalla!
Ithu Irulalla!
Ebook376 pages2 hours

Ithu Irulalla!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவருடைய பிறப்பு எவ்விதம் இருந்தாலும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இவையெல்லாம் எப்படி அடிப்படைத் தேவையோ அதே போல தரமான கல்வி, நல்ல வாழ்க்கை, சக மனிதனாய் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டியதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும் கதையே இது இருளல்ல !

நாயகி யாமினி நாயகனை ஏன் தவறாக நினைத்தாள்? நாயகன் வாசுவுக்கு என்ன பிரச்சனை?

இருவரும் இணைந்து தங்கள் வாழ்க்கையை எவ்விதம் நடத்தினார்கள்?

அவர்களின் வாழ்க்கையின் இருள் விலகியதா? என்பதைச் சொல்வதே, இது இருளல்ல

இந்த நாவல், எஸ்எம் நாவல்ஸ் தளம் நடத்திய தேடல் 2018 என்ற நாவல் போட்டிக்காக நான் எழுதியது.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580144006824
Ithu Irulalla!

Read more from Annapurani Dhandapani

Related to Ithu Irulalla!

Related ebooks

Reviews for Ithu Irulalla!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Irulalla! - Annapurani Dhandapani

    http://www.pustaka.co.in

    இது இருளல்ல!

    Ithu Irulalla!

    Author :

    அன்னபூரணி தண்டபாணி

    Annapurani Dhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    இது இருளல்ல! - எபிலாக்

    அணிந்துரை

    நவீன இலக்கியத்தில் புதுப்புது எழுத்து முறைகள் உருவாவது உண்டு. ஆனால் மொத்தத்தில் எழுத்து சுவாரஸ்யமாய் இருப்பதே அடிப்படை.

    சுலபமான நடையில் சொல்லப்படும் கதைகளுக்கு வாசகர்களின் பேரார்வம் நிச்சயம். நெருடாத கதைப்போக்கு, உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள், அவர்களின் நறுக்கான பேச்சு எல்லாம் சேர பூரணந்தான்.

    அன்னபூரணி கதை சொல்வதிலும் பூரணப்பட்டிருக்கிறார்.

    அழுத்தமான, சுலபத்தில் யூகிக்க முடியாத கதை முடிச்சு, நாயகன் வாசுவை சுற்றிய மர்மப் பூச்சு வாசகர்களை புத்தகத்தை மூடாமல் முடிக்க வைத்து விடுகிறது. அநாதரவானாலும் தெளிவும் துணிவுமான நாயகி யாமினி.

    மூத்த தலைமுறையான கிருஷ்ணா - பவதாரிணியும் உயர்ந்த பாத்திர படைப்புகள். சிக்கலான பாஸ்கர் மாமா இறுதியில் குமுறித் தீர்க்கும் ருக்மணி. நாம் வாழ்வில் எங்கேனும் சந்தித்திருக்க கூடியவர்களே, ஆனாலும் கதாசிரியை அத்தனை நுட்பமாய் அவர்களை வடிவமைத்தது அழகு. வாசுதேவனுக்கு பெயர் சூட்டப்படும் காட்சி நெகிழ்வானது.

    எங்க வீட்டு ஆண்களுக்கு பெண்களை மதிக்கத் தெரியாது… நாமெல்லாம் இவாளை பொருத்த வரைக்கும் கைல வெச்சி விளையாடுற பொம்மைகள்! இவா சந்தோஷமா இருக்கறப்ப, பொம்மையை அலங்காரம் பண்ணி பார்ப்பா. கோபம் வரச்சே… காட்டறது மொத்தமும் அந்த பொம்மை மேல தான். நிதானமாய் வாசிப்பவரின் மனதை கலக்கும் வரிகள்.

    2018 எழுதிய நாவல்… காலம் கடந்து நிற்கும் அமைப்பில் இருக்கிறது.

    இது இருளல்ல! வாசித்ததும் வாசகர்கள் அன்னபூரணியின் மற்ற பதினோரு நாவல்களைத் தேடிப் படிக்க எடுப்பது நிச்சயம்.

    வாழ்த்துகளுடன்,

    காஞ்சனா ஜெயதிலகர்.

    வாழ்த்துரை

    என்னுடைய அன்பிற்குரிய எழுத்துலகத் தோழி திருமதி. அன்னபூரணி தண்டபாணி அவர்களின் கதைகளில் எப்போதும் ஒரு நேர்மையும், நேர்த்தியும் இருக்கும். அந்த இரண்டு சிறந்த பண்புகளும் இந்தக் கதையிலும் சிறப்பாக மிளிர்கின்றன.

    நான் அநேகமாக இவருடைய அனைத்துக் கதைகளையும் படித்திருக்கிறேன். முதலில் பிழையில்லாத தமிழ், நமது மனங்களை மகிழ்விக்கிறது. அடுத்ததாக நேர்மறையான அலைகளை மனதில் எழுப்ப வல்ல எழுத்து. அதையும் அடுத்து இவர் சொல்ல வருகின்ற சமூகக் கருத்துகளை நச்சென்று சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி விடும் கலை இவருக்கு நன்றாக

    வருகிறது.

    இந்தக் கதையிலும் இரண்டு பாவப்பட்ட ஜென்மங்கள் விதியின் விளையாட்டால் ஒன்றாக இணைகின்றன. குழந்தைப் பருவத்தில் இருந்து உறவினர்கள், அக்கம்பக்கக் குடும்பத்தினரின் வெறுப்பையும், கடுஞ்சொற்களையும் கேட்டே வளர்கின்ற நாயகன் வாசு என்ற வாசுதேவன், அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து போராட்டங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் யாமினி இருவரும் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள். யாமினியின் தவறான புரிதலால் யாமினியை மணக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறான் வாசு. இவர்களுடைய திருமணத்தில் தான் கதை தொடங்குகிறது.

    தனது தவறை உணர்ந்து வருந்தும் யாமினி, வாசுவைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறாள். வாசுவின் பிறப்பில் உள்ள மர்மம் என்ன, யாமினி தனக்குத் தீங்கிழைத்தவனை அடையாளம் கண்டு கொள்கிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    கிருஷ்ணாவும், பவதாரிணியும் அருமையான பெற்றோர். அதேபோலப் பாசத்தைப் பொழியும் தங்கை ஐஸ்வர்யா, மற்றும் மாமன் மகள் சௌந்தர்யாவும் கதையில் கலகலப்பைக் கூட்டுகிறார்கள்.

    பாஸ்கர் மாமா, வாசுவின் மீது ஏன் வெறுப்பை உமிழ்கிறார், வாசுவும் ஏன் அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறான் என்பதற்கும் கதையில் நிறைய ஸஸ்பென்ஸ்களை வைத்திருக்கிறார் ஆசிரியர். ஒரு குடும்பக் கதையைத் தனது எழுத்துத் திறனால் விறுவிறுப்பாக மாற்றி நல்ல திருப்பங்களுடன் ஒரு நல்ல அறுசுவை விருந்தாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.

    கற்பு என்பதன் பொருள் என்ன? என்று விளக்கியதைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அதேபோல ருக்மணி மாமியின் கதாபாத்திரத்தின் வழியாக இன்றைய இல்லத்தரசிகளின் உள்ளக் குமுறல்களையும், ஆதங்கத்தையும், ஆண்களின் ஆதிக்க மனப்பான்மை பற்றியும் எடுத்துக் கூறிய விதம் சிறப்பு.

    ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நினைத்தால் சமூகத்திற்கு எவ்வளவோ நன்மைகளையும் செய்ய முடியும் என்பதை வாசு, மற்றும் அவனுடைய உங்கள் குரல் சேனல் மூலமாக எடுத்துக் காட்டியதும் நன்றாக இருக்கிறது.

    நண்பர்கள் விஷயத்தில் வாசு கொடுத்து வைத்தவன் என்பதை ஆகாஷ், ஷிவானி, ஸ்டீஃபன் போன்ற நண்பர்கள் மூலமாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

    கல்வியில் சிறந்தவன் தான் மேன்மை அடைவான் என்ற கருத்து எப்போதும் சரியாக இருப்பதில்லை என்று காட்டியிருக்கிறார். வெறும் மதிப்பெண்கள் நமது இலக்கை உயரத்தில் கொண்டு சேர்ப்பதில்லை. மனம் நன்றாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பத்மினியின் கதாபாத்திரம் கண்ணீரை வரவழைக்கிறது.

    மொத்தத்தில் அருமையான நிறைவான கதை. இதைப் போன்று நிறைய நல்ல கதைகளைத் தொடர்ந்து படைத்து, எழுத்துலகிற்கு நற்றொண்டு ஆற்ற ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்.

    வாழ்த்துகளுடன்

    புவனா சந்திரசேகரன்.

    வாழ்த்துரை

    அருமையான கதை. அழகான நடை. கதைக்குள்ளே எத்தனை முடிச்சுகள். அத்தனை முடிச்சுகளையும் சிறப்பாக அவிழ்த்திருக்கிறார், ஆசிரியர். எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

    ஆரம்பமே எனக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு இளம்பெண் தன்னை ஒருவன் கெடுத்துவிட்டான் என்று கூறுகிறாள். அதைக் கேட்ட அவன் தந்தை, அவனை அவள் கழுத்தில் தாலிக் கட்டும்படிக் கூறுகிறார். தன் மகன் தவறு செய்யவில்லை என்று உண்மையை தந்தை அறிந்திருந்திருந்தும், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏதற்காக அந்த முடிவை அவர் எடுத்தார்? அதுவும் அவர் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி! மகனோ ஒரு செய்தி தொலைக்காட்சியின் நிருபர்!

    ஆனால், அந்த மர்ம முடிச்சைக் கடைசி வரை நகர்த்தியிருப்பது, ஆசிரியரின் சாமர்த்தியத்தைப் பறை சாற்றுகிறது.

    கதாநாயகன் வாசுதேவன், கதாநாயகி யாமினி. அவள் அதிகம் படிக்கவில்லை என்றாலும், அவளுடைய அறிவு கூர்மையையும் அன்பான உள்ளத்தையும், மற்றவரைப் புரிந்துகொள்ளும் விதமும், மற்றவரின் மனம் நோகாதவாறு நடந்துகொள்ளும் குணமும் சிறப்பு. மனைவியைக் குறித்த வாசுவின் உயர்ந்த எண்ணங்களும், அதை அவன் வெளிப்படுத்தும் விதமும் அழகு.

    கிருஷ்ணராஜ், பவதாரணி இரண்டு கதாபாத்திரங்களின் படைப்பும் அருமை.

    ஆகாஷ், ஷிவானி இருவரும் நட்புக்கு இலக்கணம். எந்த இடத்திலும் நண்பனை விட்டுக் கொடுக்காமல், அவனைத் தாங்குகின்ற பாங்கு சிறப்பு.

    ஆசிரியர், சமுகத்தில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமையையும், அதனால் அவதியுறும் குடும்பங்களையும், பெண்களின் நிலையையும், அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

    பாஸ்கர் மாமா, ருக்மணி மாமி, சௌமியா, ஐஸ்வர்யா என கதையில வரும் அனைத்துப் பாத்திரங்களும தங்கள் பங்கினைப் பாங்குடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

    சமூகத்தில் கீழ்த்தரமான செயல் புரிபவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, கதாநாயகன் மற்றும் அவனின் நண்பனான ஸ்டீஃபனுக்கும் பாராட்டுக்கள்.

    அழகான, மர்மங்கள் நிறைந்த ஒரு குடும்பக் கதையை படிப்பதற்கு வாய்ப்பளித்த சக எழுத்தாளரும், அருமைச் சகோதரியுமான அன்னபூரணி தண்டபாணி அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    வாழ்த்துகளுடன்,

    ஜெயக்குமார் சுந்தரம்

    M.Sc., B.Ed., B.C.S., ICWA (Inter).

    என்னுரை

    என் முந்தைய கதைகளுக்கு நீங்கள் கொடுத்த பேராதரவுக்கு மிக்க நன்றி! அந்த அன்பு கொடுத்த தைரியத்தில் என் அடுத்த கதையுடன் வந்துள்ளேன்!

    இது இருளல்ல! என்ற இந்தக் கதை, SM Novels இணைய தளம் நடத்திய தேடல் 2018 என்ற நாவல் போட்டிக்காக நான் எழுதியது!

    இந்தக் கதையை புத்தகமாக வெளியிடும் புஸ்தகா இணைய நூலக செயலியின் நிறுவனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கதையைப் பற்றி…

    இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவருடைய பிறப்பு எவ்விதம் இருந்தாலும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இவையெல்லாம் எப்படி அடிப்படை தேவையோ அதே போல தரமான கல்வி, நல்ல வாழ்க்கை, சக மனிதனாய் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டியதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும் கதையே இது இருளல்ல!

    நாயகி யாமினி நாயகனை ஏன் தவறாக நினைத்தாள்?  நாயகன் வாசுவுக்கு என்ன பிரச்சனை? அவர்களின் வாழ்க்கையின் இருள் விலகியதா  என்பதை சொல்வதே இது இருளல்ல! வாசகர்களாகிய உங்களின் ஊக்கமளிக்கும் வாரத்தைகளே எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எனர்ஜி பூஸ்ட்டர்கள்.

    குறைகள் இருந்தால் மின்னஞ்சலில் சொல்லுங்க! நிறைகள் இருக்குன்னு நீங்க நெனச்சா உங்க நண்பர்களிடத்தில் சொல்லி இந்தக் கதையைப் படிக்கச் சொல்லுங்க!

    என்றும் அன்புடன்,

    உங்கள் அன்பு சகோதரி,

    அன்னபூரணி தண்டபாணி.

    comments2purani@gmail.com

    1

    அந்த பிள்ளையார் கோவிலில் ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் உட்பட எண்ணி பத்து பேர் இருந்தால் அதிசயம்! இருந்த அந்த பத்து பேரும் இறுகிய முகத்துடன் இருந்தனர். யாருக்கும் இந்த நிகழ்வில் இன்பமில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

    ஆனாலும் அந்தத் திருமணம் எந்தத் தடங்கலுமின்றி நடந்து முடிந்தது! மணமகன் வாசுதேவன் மணமகள் யாமினியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். யாரோ மாலையைக் கொடுத்தார்கள். அதை வாங்கி அவள் கழுத்தில் போட்டான். அவளும் யாரோ தந்த மாலையை அவன் கழுத்தில் போட்டாள். அவள் உச்சி வகிட்டில் குங்குமம் இடச் சொன்னார்கள். அவனும் குங்குமம் இட்டான். இருவரும் ஒன்றாக இறைவன் சந்நிதியில் விழுந்து வணங்கினார்கள். இந்த நிகழ்வுகளை ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தத் திருமணம் இனிமையில்லாமலே முடிந்தது.

    யாமினியை அழைத்துக் கொண்டு தன் பெற்றோர் பின்னே ஊமையாய் நடந்தான் வாசு. யாமினியின் உள்ளம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

    ‘நீ என்ன கல்யாணம் பண்ணிகிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சா? இனிமேதான்டா இருக்கு ஒனக்கு! நான் உன்ன பண்ணப் போற டார்ச்சர்ல… நீ… வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிக்கணும்டா! என் வாழ்க்கைய அழிச்ச ஒன்னோட வாழ்க்கைய அழிக்கறதுதான் இனி என் வாழ்க்கையோட லட்சியமே! பழிக்குப் பழி! ஒன்ன அவமானப்படுத்தறது ஒண்ணுதான் இனிமே என் வேல!’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டாள்.

    அனைவரும் வாசுவின் வீட்டுக்கு வந்தனர். சம்பிரதாயத்துக்காக வாசுவின் அம்மா ஆரத்தி சுற்றினார். ஆரத்தி சுற்றி யாமினியை உள்ளே அழைத்து வருமாறு பணித்துவிட்டு அவனுடைய அப்பா உள்ளே போய்விட்டார்.

    யாமினிக்கு கடுப்பாக இருந்தது.

    ‘ம்க்கும்! இதுக்கொண்ணும் கொறச்சலில்ல!’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    கணவன் சொல்படி ஆரத்தி சுற்றி மருமகளை உள்ளே வருமாறு கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள் வாசுவின் அம்மா!

    வாசு, யாமினியை உள்ளே போகச் சொன்னான். அவள் அவனை முறைத்துவிட்டு உள்ளே போனாள்.

    வாசு தன்னுடைய அறைக்கு வந்தான். கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி வெறுப்பாக வீசினான். தான் அணிந்திருந்த வேட்டி சட்டையை அவிழ்த்து கடாசிவிட்டு செல்ஃபிலிருந்து வேறு ஆடையை உருவியெடுத்து அணிந்தான். எங்கோ போவதற்காக கிளம்பி வெளியில் வந்தான்.

    யாமினி கழுத்தில் அவன் அணிவித்த மாலையைக் கூட கழற்றாமல் ஹாலிலேயே நின்றிருந்தாள்.

    ஏன் இங்க நிக்கற?

    ம்! வேண்டுதல்! என்றாள் நக்கலாக.

    சாரி! இந்த பக்கம் இருக்கு நம்ம ரூம்! வா! என்று அழைக்க,

    நம்ம ரூம்? ஓ! நம்ம ரூம்! என்று ஏளனமாகக் கேட்டுவிட்டு அதே நக்கலுடன் பதிலையும் தானே கூறிவிட்டு அவனுடன் நடந்தாள். வாசுவுக்கு ஒரு புறம் கோபமாகவும் மறுபுறம் அவமானமாகவும் இருந்தது. ‘நான் ஏன் இப்ப நம்ம ரூம்னு சொன்னேன்! அறிவேயில்ல எனக்கு!’ என்று மனதுக்குள் தன்னையே திட்டிக் கொண்டான்.

    ‘சே! ஒரே நாள்ல என் வாழ்க்கையே மாறிடிச்சு!’ என்று நினைத்துக் கொண்டான்.

    அறையைக் காட்டியதோடு தன் வேலை முடிந்ததாக நினைத்து அவன் நகர, அவள் விரல் சொடுக்கி அவனை அழைத்தாள். அவனுக்கு கோபமாக வந்தாலும் அவளிடம் காட்ட முடியாததால் ஒன்றும் பேசாமல் அவள் முகம் பார்த்தான்.

    எனக்கு பசிக்கிது! எதாவது சாப்பிட எடுத்துகிட்டு வா! என்றாள் அலட்சியமாக.

    அம்மாகிட்ட கேட்டா… என்று அவன் ஆரம்பிக்க,

    ஒங்கம்மா கிட்டல்லாம் போய் என்னால பிச்சயெடுக்க முடியாது! போ! நீயே போய் எனக்கும் சேத்து பிச்சயெடுத்துகிட்டு வா! என்று கூறிவிட்டு, கழுத்திலிருந்த மாலையை கழற்றி எறிந்தாள்.

    அவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் ஒன்றும் செய்யாமல் அறையை விட்டு வெளியேறினான்.

    சமையலறையில் அவனுடைய அம்மா மௌனமாய் நின்றிருந்தாள். அவள் கண்கள் கசிந்தபடியே இருந்தது. அம்மா தன்னிடம் பேச மாட்டாள் என்று நன்கறிந்திருந்தாலும், அவன் அழைத்தான்.

    ம்மா!

    பதிலில்லை!

    என்கிட்ட நீங்க பேச மாட்டீங்கன்னு தெரியும்மா! ஆனா இப்ப நா வந்தது, அவளுக்கு பசிக்கிதாம்! நீங்க எனக்குதான் சோறு போடமாட்டேன்னு சொல்லிட்டீங்க! அவளுக்காவது போடுவீங்களா மாட்டீங்களான்னு கேக்கதான்மா வந்தேன்! என்றான் உடைந்த குரலில்.

    இந்த வீட்ல நானோ எம்புருஷனோ யாரையும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லல! நா சோறு போட மாட்டேன்னுதான் சொன்னேனே தவிர உங்களயெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லல! சமைச்சி வெச்சிட்டேன்! யாருக்கு வேணுமோ எடுத்து போட்டு சாப்பிட்டுகங்க! என்று எங்கோ பார்த்து கூறிவிட்டு அவனைத் தாண்டிக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே சென்றுவிட்டாள் அம்மா!

    அவன் மனம் வேதனையடைந்தது. எதுவும் செய்யமுடியாத தன்னுடைய நிலை கண்டு தன்னையே வெறுத்தான் அவன். ஒருவித கையாலாகாத்தனத்துடன் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு ஒரு பாட்டிலில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு போனான்.

    அவள் அவனுடைய அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவன் அருகிலிருந்த மேஜையின் மேல் தட்டையும் பாட்டிலையும் வைத்துவிட்டு நகர,

    என்ன இது? என்றாள் அதிகாரமாய்.

    ஏன்? பாத்தா தெரியல! சாப்பாடு! நீதானே பசிக்கிதுன்னு கேட்ட? என்றான்.

    நான் கேட்டேன்! ஆனா என்னமோ நாய்க்கு வெக்கற மாதிரி எங்கியோ வெச்சிட்டு நீ பாட்டுக்கு போற! என்றாள். அவனுக்கு கோபம் வந்துவிட்டது!

    ஏய்! என்று கத்தினான்.

    ஓ! கோவம் வருதோ! என்ன அடிக்கணும்னு தோணுதோ? என் கழுத்த நெறிக்கணும்னு கூட தோணுமே! என்றாள் ஏளனமாக!

    சே! என்று வெறுப்பாகக் கூறிவிட்டு வெளியே போக முயன்றான்.

    ஏய்! ஒழுங்கா அத எடுத்து என் கைல குடுத்துட்டுப் போ! என்று கத்தினாள்.

    ‘கிராதகி!’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டே தட்டை எடுத்து அவளுடைய கையில் கொடுத்துவிட்டு கோபமாக வெளியேறினான்.

    அவள் கனல் கக்கும் பார்வையால் அவன் போவதையே பார்த்திருந்தாள். அவன் போனபின் அவன் கொடுத்த சாப்பாட்டை வெறுப்பாகப் பார்த்தாள்.

    ‘சாப்பாடு! இது ஒண்ணுதான் கொறச்சல்!’ என்று அதை வீசியெறிய முற்பட்டாள். ‘ஏன்? இவனுக்காக நான் ஏன் சாப்பிடாம இருக்கணும்! சாப்பிடுவேன்! இவன் காசிலயே சாப்ட்டுட்டு தெம்பாகி இவனயே பழி வாங்குவேன்!’ என்று மனதில் கறுவிக்கொண்டாள்.

    தட்டை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து சமையலறை எங்கே என்று பார்த்தாள். சமையலறையுடன் ஒட்டிய சாப்பாட்டு அறையிலிருந்த மேஜையில் சென்று அமர்ந்தாள். தனக்குத் தேவையானதை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து சென்று கைகழுவிக் கொண்டு அவனுடைய அறையில் வந்து அவன் மெத்தை மீது படுத்தாள். தன்னுடைய வாழ்க்கை ஒரே நாளில் இப்படி தலைகீழாய் மாறிவிட்டதே என்று நினைத்தபடி அவனை எப்படி பழி வாங்குவது என்று யோசனை செய்யத் தொடங்கினாள்.

    மாலை ஐந்து மணிவாக்கில் அவன் வரும்போது அவள் அவனுடைய மெத்தையில் தூங்கியிருந்தாள். சாப்பாட்டு மேஜையில் அவள் சாப்பிட்ட எச்சைத்தட்டு அப்படியே இருந்தது. அவளைத் தவிர யாரும் சாப்பிட்டிருக்கவில்லை! அவன் சென்று அவளுடைய எச்சைத்தட்டை எடுத்து கழுவி வைத்தான். அவள் சாப்பிட்ட இடத்தில் சிந்தியிருந்த உணவுத் துணுக்குகளை எடுத்துப் போட்டுவிட்டு மேஜையை சுத்தமாகத் துடைத்தான். தன் பெற்றோரைத் தேடினான். அவர்களுடைய அறையில்தான் இருந்தனர்.

    அப்பா! சாப்பிடலையாப்பா? உங்களுக்கு சுகர் இருக்குப்பா! நேரத்துக்கு சாப்பிடலன்னா… என்று அவன் பேசும் போதே,

    செத்துப் போய்டறேன்டா! சாப்பிடாமலே செத்துடறேன்! உன்ன புள்ளையா பெத்ததுக்கு நா சாகலாம்! என்றார் அவர். அவனுடைய அம்மா வாய் பொத்தி மௌனமாக அழுதாள்.

    அப்பா! இப்பவும் சொல்றேன்! சத்யமா நா எந்த தப்பும் பண்லப்பா! என்ன நம்புங்க! யாரோ என் மேல பழி போட்டிருக்காங்க! ப்ளீஸ்! என்ன நம்புங்கப்பா! என்றான்.

    ஏன்டா! உனக்கு சூடு சொரணையே கெடையாதா? என்றார் அவர்.

    என்ன நம்பக் கூடாதுன்னே நெனச்சா நா என்ன பண்ண முடியும்! என்று கூறிவிட்டு அவன் திரும்பி நடக்க,

    நாங்க ரெண்டு பேரும் குன்னூர் போறோம்! என்றார்.

    ஏம்ப்பா? இப்ப என்ன அவசியம் குன்னூர் போக?

    இதவிட வேற என்ன நடக்கணும்? நீ உன் இஷ்டத்துக்கு இருந்துக்கோ! இனிமே எங்களால நீ பண்ற அட்டூழியத்தெல்லாம் பாக்க முடியாது!

    அப்டி என்ன அட்டூழியத்த நீங்க பாத்தீங்க? இதுநாள் வரைக்கும், எம்புள்ள உத்தமன்னு சொல்லிகிட்டு திரிஞ்சீங்க! ஒரே நாள்ல உங்க உத்தம புத்திரன் சத்ருவாய்ட்டானா?

    இத்தன நாளா நல்லாதான் இருந்தான்! ஆனா ஒரே ஒரு தப்பு பண்ணி இத்தன நாளா சேத்து வெச்சிருந்த நல்ல பேர் அத்தனையையும் அழிச்சிட்டானே! என்றார் அவர் வேதனையாக!

    அப்பா! நா எந்த தப்பும் பண்லப்பா! என்ன நம்புங்க! இப்பவும் உங்க புள்ள உத்தமன்தாம்ப்பா! என்றான் கண்களில் கண்ணீருடன்.

    அடப் போடா! சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன்னா அது உண்மையாய்டாது! எங்கள விடு! நாங்க கடசி காலத்திலயாவது நிம்மதியா இருக்கோம்! என்று கூறிவிட்டு ஏற்கனவே தயாராக வைத்திருந்த இரண்டு பெட்டிகளுடன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.

    வாசலில் கால் டேக்சி வந்து நின்றது.

    இவர்களுடைய பேச்சுக்குரலில் தூக்கம் கலைந்து எழுந்த யாமினி அவனுடைய அறை வாசலில் நின்று இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பெரியவர்கள் இருவரும் அவளிடம் ஒன்றுமே பேசாமல் வாசலில் நின்றிருந்த கால் டேக்சியில் ஏறிப் போய்விட்டனர்.

    தன் பெற்றோர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனை அவள் விரல் சொடுக்கி அழைத்தாள். அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது! ‘பாவீ!’ எல்லாம் இவளால் வந்தது!

    ஏய்! எதுக்குடீ இப்டி ஒரு ட்ராமா போட்டு என் வாழ்க்கைல வந்த? கிராதகி! உண்மைய சொல்லுடீ! ஒரே நாள்ல எங்கப்பாம்மாவே என்னைய நம்பாம போய்ட்டாங்களேடீ! எதுக்குடீ வந்திருக்க? நா உனக்கென்ன துரோகம் செஞ்சேன்? என்று தன் இருகைகளாலும் அவளுடைய கழுத்தை நெறிப்பதைப் போல பிடித்தான்.

    அவள் கொஞ்சம் கூட அசராமல் அவனை முறைத்தாள்.

    அவளுடைய பார்வையில் என்ன கண்டானோ, அவளை விட்டுவிட்டு நகர்ந்து சென்று தன் தலையைப் பிடித்தபடி சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

    என்னடா? பெரிய உத்தமன் மாதிரி சீன் போடற! யார் வாழ்க்கைய யார் அழிச்சது? நீதான் என் வாழ்க்கைய அழிச்ச! உன்னால என் வாழ்க்கையே தொலச்சிட்டேன்! அதுக்கப்றமும் உன் பின்னாடி நாய் மாதிரி என்ன வர வெச்சவன் நீ! என்ன பேசறியா! பாவீ! என்று கத்திக் கொண்டே அவனை தாறுமாறாக அடித்தாள்.

    முதலில் அவளுடைய அடிகளை வாங்கியவன், அடுத்தடுத்து அடிகள் பலமாக விழவும், சட்டென்று அவளுடைய இரண்டு கைகளையும் அழுத்தமாகப் பிடித்து தடுத்தான்.

    என்னடீ! போனாப் போட்டும்னு பாத்தா ஓவரா நடந்துக்கற? அப்டியே வெச்சேன்னா செத்திடுவ! என்று கத்தினான்.

    இப்ப மட்டும் நா உயிரோடவா இருக்கேன்! பாவீ! நீதான் என்ன அப்பவே கொன்னுட்டியேடா! நான் செத்துப் போய் பலமணி நேரம் ஆச்சுடா! என்று கூறி அழுதாள்.

    அவன் ஒன்றும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அழுதவள் சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு அவனை திரும்பவும் வசை பாடத் தொடங்கினாள்.

    பாவீ! என்ன சாகடிச்சிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருந்துடுவியோ! விட மாட்டேன்டா! நீ கதறணும்டா! வாழவும் முடியாம சாகவும் முடியாம நீ கதறணும்! உன்ன பழி வாங்குவேண்டா! என்று அவனைப் பார்த்து கத்தினாள்.

    அவன் பேசாமல் எழுந்து வெளியே போனான். போகும் முன் அவளைப் பார்த்து,

    நா வெளிய போறேன்! நைட்டு வரமாட்டேன்! கதவ பூட்டிகிட்டு உக்காந்து என்ன பழி வாங்க ப்ளான் பண்ணு! என்று கூறிவிட்டு தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போனான்.

    அவள் அப்படியே தரையில் அமர்ந்து குலுங்கி அழுதாள்.

    வெகுநேரம் கழித்து எதோ சத்தம் கேட்டு கண்விழித்தவள் முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் இருட்டில் சிறிது நேரம் தவித்துவிட்டு பின்னரே, ‘இது வாசுவின் வீட்டு ஹால்; மாலை அவன் வெளியே சென்றபோது படுத்தது; அப்படியே தூங்கிவிட்டிருக்கிறேன்…’ என்று புரிந்து கொண்டாள்.

    ‘விளக்கு கூட போடவில்லையே! இப்போது மணி என்ன இருக்கும்? ஐயோ! அவன் நைட்டு வரமாட்டேன், வீட்டை பூட்டிக்கோ என்றானே! அதைக் கூட

    Enjoying the preview?
    Page 1 of 1