Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadal Serum Vinmeengal
Kadal Serum Vinmeengal
Kadal Serum Vinmeengal
Ebook152 pages1 hour

Kadal Serum Vinmeengal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

இன்று வாழ்க்கையே பெரிய ஓட்ட பந்தய மைதானமாக மாறிவிட்டது. கேரட்டைத் துரத்தும் குதிரை ஓட்டத்தில் நமக்கு எது தேவை, எது பிடித்தம், எதில் விருப்பம் என்பதைக் கூட அறிந்துணர முடியா அவசரத்தோடு அனைவரும் விரைகிறோம். வெற்றி எது தோல்வி எது என்ற பதட்டங்களுக்கு இடையே அப்பரபரப்பிலேயே பலருடைய வாழ்க்கை கரைந்து காணாமல் போய்விடுகிறது. இக்கதையில் மட்டுமல்ல, திரையிலும் மின்னும் நட்சத்திரமாக மிளிரும் தியாவும் இவ்வேக விதிக்கு விலக்கல்ல. தன் மனதில் உள்ள அழுத்தங்களுக்கும் அச்சங்களுக்கும் இடையே அலைபாய்பவள் திட்டமிடா பயணமொன்றில் கலகலப்பான இளைஞனான தருணைச் சந்திக்கிறாள். அச்சந்திப்பிற்குப் பின்னால் வானில் உறையும் விண்மீனின் பயணம் தடைபட்டதா அல்லது திசை மாறியதா என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையே ‘கடல் சேரும் விண்மீன்கள்’.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580133108236
Kadal Serum Vinmeengal

Read more from Hema Jay

Related to Kadal Serum Vinmeengal

Related ebooks

Reviews for Kadal Serum Vinmeengal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadal Serum Vinmeengal - Hema Jay

    https://www.pustaka.co.in

    கடல் சேரும் விண்மீன்கள்

    Kadal Serum Vinmeengal

    Author:

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hema-jay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அன்புள்ள வாசகர்களுக்கு,

    வணக்கம்!

    இன்று வாழ்க்கையே பெரிய ஓட்ட பந்தய மைதானமாக மாறிவிட்டது. கேரட்டைத் துரத்தும் குதிரை ஓட்டத்தில் நமக்கு எது தேவை, எது பிடித்தம், எதில் விருப்பம் என்பதைக் கூட அறிந்துணர முடியா அவசரத்தோடு அனைவரும் விரைகிறோம். வெற்றி எது தோல்வி எது என்ற பதட்டங்களுக்கு இடையே அப்பரபரப்பிலேயே பலருடைய வாழ்க்கை கரைந்து காணாமல் போய்விடுகிறது. இக்கதையில் மட்டுமல்ல, திரையிலும் மின்னும் நட்சத்திரமாக மிளிரும் தியாவும் இவ்வேக விதிக்கு விலக்கல்ல. தன் மனதில் உள்ள அழுத்தங்களுக்கும் அச்சங்களுக்கும் இடையே அலைபாய்பவள் திட்டமிடா பயணமொன்றில் கலகலப்பான இளைஞனான தருணைச் சந்திக்கிறாள். அச்சந்திப்பிற்குப் பின்னால் வானில் உறையும் விண்மீனின் பயணம் தடைபட்டதா அல்லது திசை மாறியதா என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையே ‘கடல் சேரும் விண்மீன்கள்’.

    இந்நாவலை வாசித்து உங்கள் மேலான எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். அமேசான் தளத்திலும் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம். உங்களது தொடர் ஆதரவுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் பல!

    அன்புடன்,

    ஹேமா ஜெய்

    1

    மனதின் இசைவுக்கேற்ப விரல்கள் குழைய, தியாவின் கையிலிருந்த தூரிகை எதிரிலிருந்த கேன்வாஸின் திசையெங்கும் பரவியது. அவள் கண்களும் இதயமும் வண்ணங்களில் லயித்திருக்க, உள்ளத்தில் பீறிட்ட கற்பனையின் வேகத்தில் அதன்போக்கில் நிறக்கலவைகள் சேர்ந்தன, குழைந்தன, இழைந்தன.

    வெண்திடலாய்த் தெரிந்த அந்த ஓவியச்சட்டம் சிறிது பொழுதிலேயே ஆரஞ்சும் சிவப்புமாகப் பற்றியெரியும் தீக்காட்டைப் பிரதிபலித்தது. சுற்றிலும் சுடர் விட்ட நெருப்பு ஜுவாலைகளுக்கு இடையே தீயை கண்களால் பருகியபடி ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

    மார்பில் இருந்து முழங்கால் வரை வழிந்த சிவப்பு ஆடை கைகளை மூடாமல் அவளது இளம் தோள்களின் வனப்பை பறைசாற்ற, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டைப் பார்த்த விழிகள் எரியும் பிழம்புகளின் ஒளியை நிதானமாய் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

    அந்நயனங்களில் கொஞ்சமும் பயமோ, அதிர்ச்சியோ, சூழ்ந்திருக்கும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவசரமோ ஆவேசமோ இல்லை. பதிலாக அவை நெருப்புக்கான இணையான ஜொலிப்பை, பரவசத்தை, இனம் பிரிக்க முடியாத ஓர் உள்ளுணர்வை வழிய விட,  சற்று தள்ளி நின்று கேன்வாசை உற்று நோக்கிய தியா, ஏதோ குறையும் உணர்வுடன் நிறங்கள் குழைக்கும் பேலட்டை எடுத்தாள்.

    கண்களின் ஆழத்தை இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுடைய கற்பனை யுவதியின் விழிகள் இன்னும் கூடத் தீட்சண்யமானவை. ஒளி பொருந்தியவை.

    லேசான கருப்பு நிறத்தை இமைகளுக்கு அடியில் மெல்லிய கோடாகத் தீட்டி சில நகாசு வேலைகள் செய்தவள் மீண்டும் தள்ளி நின்று பார்க்க, இப்போது திருப்தியாக இருந்தது. எனினும் ஏதாவது குறையுள்ளதா என்ற படைப்பாளிக்கே உரிய சந்தேகமும் எங்காவது ஒரே ஒரு துளி மாற்றுக்குறைவாகத் தென்படுகிறதோ என்ற அவதானிப்புமாக அவள் கண்கள் மீண்டும் மீண்டும் அந்த ஓவியத்தை அலசி பார்க்கத் தவறவில்லை.

    இல்லை. எல்லாம் சரியாகவே இருந்தன.

    தீக்குள் நின்றபடி அதன் வெம்மையை, கடுமையை, சுழலும் நெருப்பு நாக்குகளை மெளனமாக ரசித்து அனுபவித்து நிற்கிற இளம்பெண்! ஒவ்வொரு பெண்ணின் உள்ளும் எரிந்து கொண்டிருக்கும் சக்தி ரூபமான நெருப்பை, அவளுடைய அந்தரங்க தனிமையை, ஏக்கத்தை, யுகம் யுகமாக அடக்கி வைத்திருக்கும் குரோதத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி, தீப்பிழம்பே பெண்ணாக உருவம் கொண்டு நிற்பதாய்!

    என்னம்மா பண்ணிட்டுருக்க, இன்னும் கிளம்பாம? அவள் மோனநிலையைக் கலைக்கிற மாதிரி ஜானு வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

    அம்மா... இந்த போட்ரேட் பார்த்தியா? நல்லா இருக்கா? இப்ப தான் முடிச்சேன்...

    பெண்ணவளின் அடிமனதில் உறைந்திருக்கும் உக்கிரத்தை, தகிப்பை அச்சு அசலாகப் பிரதியெடுத்த திருப்தியுடன் தன் படைப்பைத் தானே ரசித்துப் பார்த்த தியா அம்மாவிடம் திரும்பி ஆர்வமாகக் கேட்க, ஜானு இடுப்பில் கைவைத்தபடி கேன்வாசையும், இன்னும் கிளம்பாமல் நலுங்கிய உடையுடன் நிற்கும் மகளையும் மாறி மாறி பார்த்தாள்.

    சரியா போச்சு. தூக்கத்தைக் கெடுத்துட்டு இந்த வேலை தான் பார்த்தியா நீ? என்ற ஜானு பட்டுப்புடவையும் கழுத்து கொள்ளாத நகைகளுமாகக் கனத்த சரீரத்துடன் வளைய வரும் சீரியல் அம்மாக்களைப் போல கிளிஷேவாக இல்லாமல் சிக்கென்ற சல்வாரும் ஸ்ட்ரைடனிங் செய்த கூந்தலுமாக இருந்தாள். தியாவுக்கு அக்கா போன்று தோற்றமளித்தவளின் கண்களில் மகள் மீதான கோபமும் அதிருப்தியும் தெரிந்தன.

    தூக்கம் கிடக்குதும்மா... தினமும் தான் தூங்குறோம்... என்ற தியா ஜானுவின் பின்பக்கமாகச் சென்று நின்று அவள் தோள் பற்றி லேசாகத் தொங்கினாள்.

    ‘கனலி’ன்னு பேர் வைக்கலாம்னு இருக்கேன், நல்லா இருக்கும்ல... ப்ளீஸ் ஏதாவது சொல்லேன்... பார்த்துட்டே நிக்குறியே...

    பல மணி நேர உழைப்புக்கான அங்கீகாரத்தை வேண்டி, அவள் படைத்துள்ள கலையம்சத்திற்கான ரசனையை எதிர்பார்த்து அவள் குரல் தழைந்து குழைந்து அம்மாவைக் கொஞ்சியது.

    என்ன சொல்ல சொல்றடி? இப்படிக் கண்ணு முழிச்சா போட்டோ ஷூட் எப்படி நல்லா வரும்? கண்ணுக்குக் கீழ இருக்கிற கருவளையம் தான் எடுப்பா தெரியும்... நேத்து ராத்திரி படிச்சு படிச்சு சொல்லிதானே அனுப்பினேன். சீக்கிரம் தூங்கு, அப்ப தான் முகம் பளிச்சுன்னு இருக்கும்னு

    மனசெங்கும் ததும்பி நிறையும் உத்வேக பொங்கலில் துளி நீரை விசிறி விட்டாற்போல அம்மாவின் அதட்டல்.

    தியாவின் ஆர்வம் சள்ளென்று அடங்கியது. ஜானுவின் மேலிருந்த கையை விலக்கிக் கொண்டவள் வாட்ரோப் பக்கம் நகர்ந்தாள்.

    தூங்குன்னு சொன்னவுடனே தூங்க நான் என்ன கீ கொடுத்த பொம்மையா?

    இதெல்லாம் நல்லா பேசு இன்னும் குளிக்கக் கூட இல்ல... உன்னை வச்சு என்ன பண்றது...

    அதற்குமேல் அங்கு நின்று நொடிக்கு நொடி தடிக்கப் போகும் ஜானுவின் கண்டிப்பை உள்வாங்கவோ, அவளின் கோபத்தை இன்னும் கூட்டவோ விரும்பாத தியா, சுண்டிய முகத்துடன் குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

    வயசாச்சே தவிர அதுக்குரிய பொறுப்பு இருக்கா? இந்த நேரத்துக்கு இந்த வேலையைத் தான் செய்யணும்ன்ற டிசிப்ளின் இருக்கணும். நான் மட்டும் ஆஆன்னு பறந்து என்னாகப் போகுது? நமக்காகத் தான் அம்மா சொல்றான்னு கொஞ்சமும் கூறு இல்ல இந்தப் பொண்ணுக்கு

    தூறலாய் பொழிந்த ஷவருக்கு அடியில் நின்றபோதும் வெளியே அம்மாவின் புலம்பல் நிற்காமல் கேட்டது. ஹேர்ட்ரையரில் தலையை உலர்த்தி கேசுவலான உடையைத் தேர்ந்தெடுத்து உடுத்தி அவள் கீழே இறங்கியபோது சிட்-அவுட்டில் நித்யா காத்திருந்தாள்.

    குட் மார்னிங் தியா

    வெரி குட் மார்னிங் நித்யா, ஸாரி, லேட்டாகிடுச்சா?

    நாட் அட் ஆல், மிஸ்ராவோட பிளைட் வர்றதே ஒன்பது மணிக்குத் தான். நாம அரைமணி கழிச்சுக் கிளம்பலாம். வி வில் பி ஆன் டைம்... போய் மேக்கப் போட சரியா இருக்கும் என்ற நித்யா, ஒரு நிமிஷம்... என்றபடி யாருடனோ மொபைலில் பேச வெளியே சென்றாள்.

    நித்யா தியாவின் ப்ரோக்ராம் கோ-ஆர்டினேட்டர். இவளைப் போல இன்னும் நான்கைந்து செலிபிரிட்டிகளுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்து கொடுக்கிறாள். தியா எப்போதும் மற்ற யார் யார் என்ன ஏது என்றெதுவும் கேட்டுக் கொள்ள மாட்டாள். ஜானு தான் தன் மகளுக்கான வாய்ப்புகள் வேறெங்கும் போய்விடக்கூடாதே என்ற பதைப்புடன் நித்யாவிடம் எதையாவது தொணதொணப்பாள்.

    பார்த்து நித்யா... அம்முவுக்கு டேட் ஒத்து வரலைன்னா வேற யாரையாவது கை காட்டிடாதே. என்கிட்ட சொல்லு, நான் டேட் அட்ஜஸ்ட் செஞ்சு தரேன்... என்று நினைவுறுத்திக் கொண்டே இருப்பாள்.

    அப்படி எதுவும் நடக்காது மேடம். எனக்கு ஒவ்வொருத்தரும் முக்கியம். என்னை நம்புங்க... என்பாள் நித்யா அலட்டிக் கொள்ளாமல்.

    இப்போதும் ஜானுவுக்குக் கவலை, நித்யா போனில் பேசிய விதத்தைக் கண்டு.

    நித்யா, ஆட் ஷூட்ல அம்மு தானே மெயின் ஆர்டிஸ்ட்?

    இல்ல மேடம்... கூட ஓஎஸ்கே திவ்யாவும், அந்த மும்பை பொண்ணு மிஸ்ராவும் இருக்காங்க

    "என்ன நீ? அம்மு வரணும்னு அந்த நகைக்கடை ஓனரே கேட்டதால தான் ஜூவல்லரி கமர்சியலா இருந்தாலும் பரவால்லன்னு ஒத்துக்கிட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1