Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penvizhai
Penvizhai
Penvizhai
Ebook51 pages21 minutes

Penvizhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் மனதின் அகச்சீற்றம், விரக்தி, ஈரம் என்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மூன்று சிறுகதைகளின் சிறு தொகுப்பு இது. ‘பெண்விழை’ சிறுகதை பறம்பு தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. ‘அனலாத்தி’ தென்றல் இதழிலும் ‘ஊற்று’ தினமணி கதிரிலும் வெளியானவை.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580133109033
Penvizhai

Read more from Hema Jay

Related to Penvizhai

Related ebooks

Reviews for Penvizhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penvizhai - Hema Jay

    http://www.pustaka.co.in

    பெண்விழை

    சிறுகதைகள்

    Penvizhai

    Sirukadhaigal

    Author :

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hema-jay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பெண்விழை

    அனலாத்தி

    ஊற்று

    முன்னுரை

    பெண் மனதின் அகச்சீற்றம், விரக்தி, ஈரம் என்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மூன்று சிறுகதைகளின் சிறு தொகுப்பு இது. ‘பெண்விழை’ சிறுகதை பறம்பு தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. ‘அனலாத்தி’ தென்றல் இதழிலும் ‘ஊற்று’ தினமணி கதிரிலும் வெளியானவை.

    பெண்விழை

    அந்த அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த சக்தியின் முகம் அலுவலகரீதியான கலந்தாய்வுகளுக்கு ஏற்ற அமெரிக்கையான புன்னகையுடன் இருந்தாலும் அவள் விழிகள் தன்னெதிரே அமர்ந்திருப்பவளைக் கூர்மையாக அளக்கத் தவறவில்லை.

    இருபது பேர் உட்கார முடிகிற கான்பரன்ஸ் மேசையின் அடுத்த முனையில் சக்திக்கு நேரெதிரே அமர்ந்திருந்த அந்தப் பெண் தன் நாற்காலியின் ஓரமாய் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். இந்த அறைக்குள்ளே வருவதற்கு முன்பு அழுதிருக்க வேண்டும். மூக்கு சிவந்து கண்களின் ஓரங்களில் இன்னும் ஈரத்தின் எச்சம் மிச்சமிருந்தது. அந்த அறையில் குழுமியிருந்தவர்களைப் பார்க்க சங்கடப்பட்டவள் போல அவள் விழிகள் அங்கேயும் இங்கேயும் பார்த்து வெற்றிடங்களை வெறித்துக் கொண்டிருந்தன.

    ஒல்லியான உடல்வாகு, சற்றே கிராமத்து களை பொருந்திய முகம், முதல் தலைமுறையாக வெளியுலகம் காண வந்திருக்கும் பெண் போலத் தோன்றியவளை நிதானமாக அவதானித்துக் கொண்டிருந்த சக்தி இந்தக் கூட்டத்திற்கான சேர்-பெர்சன் தான் தான் என்பதால் சற்றே சரிந்து மேசையில் முழங்கைகள் ஊன்றி விரல்கள் கோர்த்து அமர்ந்தாள்.

    இன்றைக்கான அஜெண்டா என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வீணா விளக்கினபடி ஒவ்வொரு விஷயமாக போகலாம். முதல்ல நீங்க உங்க தரப்பை சொல்லுங்க, சரியா? என்றாள் ஆங்கிலத்தில். சக்தி அருகே அமர்ந்திருந்த வீணா மினிட்ஸ் எடுத்துக் கொள்ளத் தன் மடிக்கணினியைப் பிரித்துக் கொண்டாள். அவள் தான் இந்தக் கிளையின் ஹெச்ஆர் பொறுப்பு.

    அந்தப் பெண் நிமிர்ந்து சக்தியைப் பார்த்தாள். இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்ற கேள்வி இருந்தது அவள் பார்வையில். இதையே எத்தனை முறை எத்தனை பேரிடம் சொல்ல வேண்டும் என்ற ஆயாசமும் அயர்வும் கூட  அக்கண்களில் தெரிய, ஓகேவாம்மா? இந்த நடைமுறையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா? என்றாள் சக்தி மீண்டும் அவளிடம்.

    அவள் ‘எஸ்’ என்றோ ‘நோ’ என்றோ சொல்லாமல் மையமாகத் தலையாட்டினாள்.

    தன்னருகே அமர்ந்திருந்த சென்னை கிளையின்

    Enjoying the preview?
    Page 1 of 1