Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoorangal Nagarkindrana
Thoorangal Nagarkindrana
Thoorangal Nagarkindrana
Ebook146 pages1 hour

Thoorangal Nagarkindrana

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மனிதர்கள் ஓரோர் சந்திப்பிலும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டுகிறார்கள். நமக்கு அது பிடித்த பக்கமாக இருந்தால் நெருங்கி செல்வதும், பிடிக்காததெனில் தள்ளி நிற்பதுமாக ஒவ்வொரு உறவிலும் நட்பிலும் தூரங்கள் நகர்ந்தபடியே உள்ளன. இக்கதையிலும் அவ்விதமே!

வாழ்க்கையை ஒரு ஒழுங்குடன் கவிதையாய் லயித்து வாழ வேண்டும் என்ற கனவுகளுள்ள லயாவுக்கும், வரையறுத்தச் செயல்திட்டமாக வாழ்வை அணுகுவதில் சற்றும் உடன்பாடில்லாத வெற்றிக்கும் இடையேயும் இத்தூரங்கள் நகர்கின்றன. ஒருவரையொருவர் இன்னுமின்னும் அறிய நேரும்போது அவை நெருங்கிச் செல்கின்றனவா இல்லை விலகி நகர்கின்றனவா என்று இந்நாவலை வாசித்து அறியுங்கள். கண்மணி இதழில் ‘மணமகனைத் தேடி’ என்ற பெயரில் பிரசுரமான நாவல் இது.

இப்பேரிடர் காலத்திலும் தன்னலமற்று அயராமல் பணி செய்து மனிதத்தின் மேன்மையை உணர்த்துகிற மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இப்படைப்பை சமர்ப்பிக்கிறேன். இவர்களின் பிரதிபிம்பமே இக்கதையின் நாயகன்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580133108505
Thoorangal Nagarkindrana

Read more from Hema Jay

Related to Thoorangal Nagarkindrana

Related ebooks

Reviews for Thoorangal Nagarkindrana

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoorangal Nagarkindrana - Hema Jay

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தூரங்கள் நகர்கின்றன

    Thoorangal Nagarkindrana

    Author:

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அன்புள்ள வாசகர்களுக்கு,

    வணக்கம்!

    மனிதர்கள் ஓரோர் சந்திப்பிலும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டுகிறார்கள். நமக்கு அது பிடித்த பக்கமாக இருந்தால் நெருங்கி செல்வதும், பிடிக்காததெனில் தள்ளி நிற்பதுமாக ஒவ்வொரு உறவிலும் நட்பிலும் தூரங்கள் நகர்ந்தபடியே உள்ளன. இக்கதையிலும் அவ்விதமே!

    வாழ்க்கையை ஒரு ஒழுங்குடன் கவிதையாய் லயித்து வாழ வேண்டும் என்ற கனவுகளுள்ள லயாவுக்கும், வரையறுத்தச் செயல்திட்டமாக வாழ்வை அணுகுவதில் சற்றும் உடன்பாடில்லாத வெற்றிக்கும் இடையேயும் இத்தூரங்கள் நகர்கின்றன. ஒருவரையொருவர் இன்னுமின்னும் அறிய நேரும்போது அவை நெருங்கிச் செல்கின்றனவா இல்லை விலகி நகர்கின்றனவா என்று இந்நாவலை வாசித்து அறியுங்கள். கண்மணி இதழில் ‘மணமகனைத் தேடி’ என்ற பெயரில் பிரசுரமான நாவல் இது.

    இப்பேரிடர் காலத்திலும் தன்னலமற்று அயராமல் பணி செய்து மனிதத்தின் மேன்மையை உணர்த்துகிற மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இப்படைப்பை சமர்ப்பிக்கிறேன். இவர்களின் பிரதிபிம்பமே இக்கதையின் நாயகன்.

    நாவலை வாசித்து உங்கள் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அமேசான் தளத்திலும் பதிவு செய்யலாம். உங்களது தொடர் ஆதரவுக்கு எனது நன்றிகள் பல!

    அன்புடன்,

    ஹேமா ஜெய்

    1

    கருநீல பட்டு குர்தாவின் மேல் ஆரஞ்சு வண்ண துப்பட்டாவை விசிறிய லயா கண்ணாடி முன்னால் நின்று இடதும் வலதுமாகத் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

    ‘ரொம்ப அதிகமா ஒன்னும் இல்லையே...? நான் ஏதோ எதிர்பார்ப்புல வந்த மாதிரி இருந்துட கூடாது...’ முகத்தில் அளவாய் ஒற்றியிருந்த காம்பாக்ட் பவுடரை விரல் நுனியால் மெலிதாகத் துடைத்து திருப்தியுடன் அவள் விலகவும், மேசையில் வீற்றிருந்த கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அவள் நினைத்த மாதிரியே அம்மா தான்.

    என்னம்மா கிளம்பிட்டியா...?

    அவர் குரலிலிருந்த பதட்டம் புன்னகையைத் தர, கிளம்பிட்டே இருக்கேன்மா... முறுவலுடன் வாலட்டை கைப்பையில் திணித்தாள்.

    சொன்ன நேரத்துக்குப் போயிடு. அதுதான் மரியாதையா இருக்கும். உன்னை இப்படித் தனியா அனுப்புறது என்னமோ மாதிரி இருக்கு. உனக்கு டென்சனா இருக்காடி...?

    எதுக்கு டென்ஷன்...? அதெல்லாம் ஒன்னும் இல்லயே... என்றாள் அவள் கூலாக.

    ஒரு பேச்சுக்காவது வெட்கப்பட்டுத் தொலையேன் லூஸு... பின்னாலிருந்து வருண் கத்துவது கேட்டது.

    காதுக்குள்ள வந்து கத்தாதடா... கிளம்பிட்டாளான்னு அப்பா போன் பண்ணிட்டே இருக்காரு.... ஏன்டி நான் சொன்ன மாதிரி புடவை தானே கட்டியிருக்க...? அம்மாவுக்கு அவள் கவலை.

    இல்லம்மா... சுடிதார் தான்...

    ஏம்மா...? சரி, எப்பவும் போல பேன்ட் சட்டைல போய் நிக்காம போனியே... அதுவரைக்கும் சந்தோஷம்... ஜாக்கிரதையா கிளம்பு, எங்ககிட்ட பேசற மாதிரி படபடன்னு இல்லாம நிதானமா ஒழுங்கா பேசு...

    கவலையேபடாதம்மா... கால் விரல்ல குழி பறிச்சு போர்வெல் போட்டுடுறேன்...

    கொழுப்புடி உனக்கு... இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு துளி கூட பயமே இல்லாம போச்சு என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து அம்மா திட்டத் தொடங்குவதற்குள் நீ தான்மா பேசி பேசி அவளை லேட்டாக்குற... வருண் அலைபேசியைப் பிடுங்கி இருந்தான்.

    பாவம், யார் பெத்த பிள்ளையோ...? நம்ம வீட்டுப் பிடாரியை ஒரு அப்பாவி தலைல கட்ட குடும்பமே திட்டம் போடுது... அவன் நக்கலடிக்க, டேய் ரொம்பப் பேசாத... என் அழகுக்கும் அறிவுக்கும் நான் பார்க்க வேண்டிய ஆளே வேற... கொஞ்சம் அல்ல, நிறையவே பிகு காட்டினாள் லயா.

    பாருடா... ஏன் வேணும்னா ரயான் கூஸ்மேன், ஜேக் எஃப்ரன் இந்த மாதிரி வர சொல்லலாமா?

    ம்ஹும்... இரண்டு பேரும் வேணாம். கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் போதும்...

    என்னது போதுமா...? லொள்ளுடி உனக்கு... வருண் சிரித்தான். இரண்டு வயது வித்தியாசத்தில் ‘டி’ எல்லாம் சகஜமாகவே வரும் அவனுக்கு.

    ஹாலிவுட்டுக்கு அப்புறம் சொல்லி அனுப்பலாம்... இப்போதைக்கு மிஸ்டர் வெற்றிவேலை மீட் பண்ணு

    மீட் தானே? பண்றேன்... பண்றேன்... என்ற லயா, வெ..ற்...றி..வே..ல்... இழுத்திழுத்து எழுத்தெழுத்தாக உச்சரித்துக் காண்பித்தாள்.

    ஏன்டா தம்பி... பேரே ஒரு மாதிரி கர்நாடகமா இல்ல?

    ஆமா, இவ பேரு ஆன்ஜெலினா ஜோலி... போவியா...

    இல்ல.... என்று ஆரம்பித்தவளை அக்கா.... தடுத்து நிறுத்தினான் வருண். அக்கா என்றாலே ஏதோ தீவிரமாகப் பேச போகிறான் என்று அர்த்தம்.

    பேரா குடும்பம் நடத்த போகுது? சும்மா பில்டப் கொடுக்காம நல்ல பிள்ளையா பேசிட்டு வா... யாரு கண்டா இன்னிக்கு பார்க்க போறவரு தான் என்னோட மாம்ஸா இருக்கலாம்...

    நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்குதாம்... நானே அப்பாம்மா பண்ற நச்சு தாங்காம கிளம்பறேன்… நீ போனை வை. அங்க அம்மாவுக்கு பிபி எகிறிட்டு இருக்கும்...

    ஆல் தி பெஸ்ட்டி அக்கா... மறக்காம மாஸ்க் எடுத்துட்டுப் போ...

    நல்லவேளைடா சொன்ன, மறந்தே போயிட்டேன்.... அவனிடம் விடைபெற்று கதவை பூட்டிய லயா படிகளில் இறங்கி காரை எடுத்தாள்.

    பல நாட்களாக எடுக்காமல் இருந்த வண்டி லேசாக உறுமி பயம் காட்டிவிட்டு, மக்கர் பண்ணாதடா தங்கம் என்ற இவளுடைய கெஞ்சல் கலந்த கொஞ்சலில் மனம் கனிந்து ஒருவழியாகக் கிளம்பியது.

    வெறிச்சென்றிருந்த குறுகிய சாலையைக் கடந்து பிரதான வளைவுக்குள் நுழைந்து வேகமெடுத்தாள் லயா. போக்குவரத்து இல்லாததால் பத்தே நிமிடங்களில் பைபாஸ் ரோட்டைப் பிடிக்க முடிந்தது.

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தென்கானல் மாவட்டத்தின் நகரப்புற பகுதி அது. சுற்றிலும் அழகான மலை தொடர்களும் இயற்கை வனங்களும் வளங்களும் நிரம்பிய பிரதேசம்.

    தொலைதூர சாம்பல் மேகங்களின் ஊடே கண்ணுக்கு விருந்தளித்த பனியோஹலா மலைமுகடுகள் லயாவின் பார்வையில் இருந்து மெல்ல மறைய, தென்கானல் டவுன் என்று ஆங்கிலத்திலும் ஒடிய மொழியிலும் எழுதியிருந்த வழிகாட்டி கற்கள் வேகமாகப் பின்னோக்கிக் கடந்தன.

    கருத்த பாம்பாக வளைந்து நெளிந்து ஓடிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்துகள், ஒரு சில கனரக வாகனங்கள், கார்கள் தவிர்த்துப் பெரிதாக நெரிசல் இல்லை. சர்வீஸ் ரோடுகள் பிரியும் இடங்களில் மட்டும் கொஞ்சமாய் ஜனநடமாட்டம் தெரிய, டூ-வீலர்களில், அரிதாகத் தென்பட்ட மாட்டு வண்டிகளில், சின்ன யானை வண்டிகளின் பின்பக்கத்தில் ஏறி விரையும் ஆட்களை அவள் கண் நிறையப் பார்த்துக் கொண்டாள்.

    வெகு நாட்கள் மனிதர்களையே பார்க்காமல் இருந்த விழிகள் இருபுறமும் சுழன்று சுழன்று மனித சஞ்சாரத்தை, சக உயிர்களின் இருப்பை, மாறிப் போயிருக்கும் இயல்புகளை ஆவலாக உள்வாங்கிக் கொண்டன.

    கிருமி தொற்றின் ஆரம்பப் பதட்டங்களும் முடக்கங்களும் அரசின் கட்டுப்பாடு தளர்வுகளுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ‘வேற வழியில்ல, ஒன்னா சேர்ந்து வாழ்வோம் வா...’ என்று மனித குலம் கிருமியுடனே வாழ பழகத் தொடங்கி விட்ட காலகட்டம் இது.

    உழைத்தால் தானே உணவு என்று எளியவர்கள் இந்த வாழும் தத்துவத்தைச் சீக்கிரமே கற்று, முடக்கங்களில் இருந்து விரைந்து எழுந்து கொள்ள, நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு மக்களும் இந்த ‘நியூ நார்மல்’ வாழ்க்கையை மெல்ல மெல்ல அனுசரிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.

    என்ன ஒன்று, சாலையில் விரைந்தவர்களில் பாதிக்குப் பாதிப் பேர் முகக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தவர்களும் காதுகளுக்குத் தொட்டிலாக்கி இருந்தார்களே தவிர...

    அரசாங்கமும் மருத்துவர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டே இருந்தும் என்ன பயன்...? டாக்டர்கள் நர்ஸ்களின் பாடு தான் திண்டாட்டம்... இரவு பகல் உறக்கமின்றி, தங்கள் பாதுகாப்பை புறந்தள்ளி...

    எங்கெங்கோ அலைந்து திரிந்த மனவோட்டம் இந்த எண்ணக்கோர்வையில் இன்றைய நடப்பிற்கு வந்தது.

    "பையன் டாக்டர்... ஒடிசால தான் பிராக்டிஸ் பண்றான்,

    Enjoying the preview?
    Page 1 of 1