Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Orey Murai Un Darisanam...!
Orey Murai Un Darisanam...!
Orey Murai Un Darisanam...!
Ebook139 pages1 hour

Orey Murai Un Darisanam...!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

தன் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியூருக்கு வேலைக்குப் போகும் கதாநாயகி அங்கே கதாநாயகனை சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் ஏற்படும் காதல் ஊடல், கூடல் தான் கதையின் கரு. இது முழுக்க முழுக்க காதல் கதை.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580129504934
Orey Murai Un Darisanam...!

Read more from Daisy Maran

Related to Orey Murai Un Darisanam...!

Related ebooks

Reviews for Orey Murai Un Darisanam...!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Orey Murai Un Darisanam...! - Daisy Maran

    http://www.pustaka.co.in

    ஒரே முறை உன் தரிசனம்...!

    Orey Murai Un Darisanam…!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்த வீடு ஒரு பழங்காலத்தில் கட்டப்பட்ட வீடு. ஆளுயர பூமி தோண்டி ஓடகற்கள் நிரப்பி, எழுப்பப்பட்ட வீடு. கட்டி கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகப்போகிறது. கை அளவைவிட ஒரு வெரக்கடி நீளம் அதிகமுள்ள அளவில் இருக்கும் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்து, சுண்ணாம்பில் கடுக்காய் பால், முட்டைகள் ஊற்றிக் கலந்த சாந்தில் சுவர்கள் பூசப்பட்டிருக்கும். இப்போது எந்த செங்கல் சூளையிலும் இந்த மாதிரியான செங்கற்கள் சுடுவது கிடையாது. வாசலின் குழாங்கற்கள் அளவில் கருங்கல்லை நிரப்பி பரந்த கருங்கல் படிகள் அமைத்திருந்தார்கள்.

    ஒரு புறம் பெரிய திண்ணையும், மறுபுறம் நீளவாக்கில் சின்னத்திண்ணையும் வைத்து மரத்தூண்களில் அண்டக் கொடுத்த ஒட்டுத் தாழ்வாரம் இருக்கும்.

    முக்கோண வடிவ கண்களைப் போல இருபுறமும் எண்ணெய் வடியும் மாடாக்குழிகள் விழித்துப்பார்க்கும். உள்ளே போனால் கையகல பட்டாசாலையில் மூன்றடுக்கு அலமாரியும், தலைத் தூக்கி பார்த்தால் உத்திரத்தை தேக்கு மரக்கட்டைகள் வரிசையாக தாங்கிப் பிடித்திருக்கும். படிகள் இடிந்து பாசிகள் படர்ந்த மொட்டை மாடியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சின்னச் சின்ன செடிகளின் கீழ் சாமி எறும்புகளும், அணில் குஞ்சுகளும் இளைப்பாறி கொண்டிருக்கும். நீளமான முற்றமும் அதற்கு பக்கத்திலேயே ஒரு அறையும், அதற்கு கொஞ்சம் தள்ளி சமையல் அறையும் கனகச்சிதமாக கட்டப்பட்டிருக்கும். பின்புறம் இரும்பு வளையங்கள் மாட்டிய காடியுடன் கூடிய மாட்டுக் கொட்டம் இருக்கும். வாசலின் பக்கத்திலேயே தென்னந்தட்டியைக் கதவாக வைத்திருக்கும் சந்து இருக்கிறது. இதன் வழியாகவும் வீட்டிற்குள் போய் விடலாம். வருடத்திற்கு ஒருமுறை வெள்ளைச் சுண்ணாம்பு அடித்து எப்போதும் சாணி மொழுகிய தரையோடு வாசமடிக்கும் அந்த வீட்டிற்கு அந்த கால பர்மா தேக்குக்கதவு மட்டும்தான் பலமாய் நின்றிருந்தது.

    அவந்திகா பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த பூர்வீக வீட்டில்தான். இவள் குடும்பத்துக்கு என்று இருந்தது இந்த ஓட்டு வீடும், ஊருக்கு ஒதுக்குப்புறமான தென்னந்தோப்புந்தான். இவள் அப்பாக்கூட பொறந்த பொறப்பு ஒரே ஒரு அத்தை மட்டும்தான். அத்தை வரும்போதெல்லாம் வண்டி வண்டியாய் பிரச்சனைகளை சுமந்துக்கொண்டுதான் வருவாள். போகும்போது, அந்த தென்னந்தோப்பையாவது என் பேருக்கு எழுதிவை அண்ணா. என் ஊட்டுக்காரருக்கு அந்த தொப்புமேல ஒரு கண்ணுன்ணா. என்பாள்.

    தாத்தா சேர்த்து வைத்துவிட்டுப் போன காணியிலும், வெளியாட்களின் வயல்களிலும் உழவு மாடுகள் ஓட்டி கழனி வேலைகள் எல்லாம் செய்து வெயில் மழைன்னு பாராமா அங்கே கிடந்து எப்படியோ அவந்திக்காவை நர்ஸ்க்கு படிக்கவைத்துவிட்டார் பரமசிவம். மகள் தோரணையான உடைகள் அணிந்து பேருந்தில் கல்லூரிக்கு போய் வரும் அழகை எல்லோரும் பேசும் போது எங்களுக்கு பூரிப்பாக இருக்கு என்பார். அந்த ஊரிலே நல்லா படிச்சி பள்ளிக்கூடத்திலேயே நல்ல மார்க் வாங்கின பெண் இவள் மட்டும்தான். படித்த கர்வத்தோடும், மண்டக் கனத்தோடும் யாரிடமும் நடந்து கொண்டது கிடையாது. அந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் அவள் ஆளே மாறிபோனாள்.

    அவந்திகாவின் அத்தை கணவருக்கும் அப்பா பரமசிவத்துக்கும் பல ஆண்டுகள் சொத்து தகராறு இருந்தது. அது ஒரு நாள் அதிகமாகி கைகலப்பில் கொண்டு வந்து விட்டுவிட்டது. ஊரே ஒன்றுக்கூடி அவர்களை விலக்கும் சூழ்நிலை உருவானது. அப்போது அவந்திகா கல்லூரியில் நர்ஸிங் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

    ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து பண்ணி வீட்டையாவது அல்லது தென்னந்தோப்பையாவது உன் தங்கச்சி பெயரில் எழுதிக் கொடுத்து விடு என்று தீர்ப்பு சொன்னார்கள். பரமசிவத்துக்கு அதில் விருப்பமில்லை. "கல்யாணம் கட்டிக் கொடுக்கும்போது அம்பத்தி ஒரு சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்து கட்டி கொடுத்தாச்சு அப்ப இருந்த விலைக்கு இந்த வீட்டையும் தோப்பையும் வித்தாக்கூட அவ்வளவு காசு தேறாது. அந்த அளவுக்கு நகை நட்டு போட்டாச்சு.

    திரும்பவும் வந்து சொத்து சொத்துன்னு நிக்கிறாங்க. ஒத்த புள்ள வச்சுக்கிற அவங்களுக்கும் இவ்வளவு ஆசை இருந்தா நான் மூனும் பொட்ட வச்சு இருக்கேன் நான் எங்க போய் நிப்பேன்? அப்படின்னு பரமசிவம் சொல்ல சொத்து எதுவும் வேணாம் பேசாம அவர் மூத்த பொண்ணை என் மவனுக்கு கட்டிக்கொடுக்க சொல்லுங்க. என்று சுப்புரமணி சொல்ல, அந்த குடிகாரனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கிறதா? அது நான் செத்தா தான் நடக்கும். என்று பரமசிவம் சொல்ல. அப்ப நீ உயிரோட இருக்கிறத விட ஒரேடியா போய் சேர்ந்துடு." என்று அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து பரமசிவத்தின் தலையில் அடித்தார் சுப்புரமணி. அடுத்த நிமிடம் ரத்த கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

    ஊர் ஜனங்கள் சுப்புரமணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள். பரமசிவத்தை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போன இடத்தில் உயிர் போயி ஒரு மணி நேரமாகுதுன்னு சொல்லிட்டாங்க. கண்ணுக்கெதிரில் அப்பாவை அடிச்சு கொன்ன மாமனை கொலை பண்ணனுன்னு தோணிச்சி அவந்திக்காவுக்கு. அத்தை வந்து கால்ல விழுந்து புரண்டு அழுதாள். மன்னிச்சுடுங்க மதனி எங்க அண்ணன் சாவுக்கு நானே காரணமாயிட்டேன்னு வாயிலையும் வயித்திலேய்யும் அடிச்சிக்கிட்டு அழுதவளை பார்க்கும்போது பாவமா இருக்கவே மன்னிச்சி விடவேண்டிய சூழ்நிலை. அத்தையிடத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல. ஆனா அவளை பார்க்கும் போது கோபம் கோபமா வந்துச்சு அவந்திகா

    மாமா ஜெயிலுக்கு போனாரு அப்பாவோட இறுதி காரியம் எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு பதினாறாம் நாள் துக்கத்தன்னைக்கு மாமாவோட பையன் சங்கர் வந்து நின்னான்.

    எங்க அப்பா செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்லை. உங்க பொண்ணை கட்டிக்கும் அளவுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனா பிராயசித்தம் தேடனுன்னு ஆசைபடுறேன். உங்க குடும்பத்துக்கு தலைப்பிள்ளையாக இருந்து ஆம்பளைக்கு ஆம்பளையா நான் எல்லா வேலையும் செய்கிறேன். என்று சொன்னான். அதை அம்மா நம்பி அவனுக்கு சோறு போட்டு பாசம் காட்டினார்கள்.

    ஆனா பிறவிக்குணத்தை யாராலும் மாத்த முடியாதுன்னு சொல்லுவாங்க, அவன் புத்தியை அவன் காமிச்சிட்டான். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டான். பெரியவள் கிடைக்கலேன்னா என்ன? சின்னவள் இருக்கிறாளே! என்று தங்கை பவித்திராவை கரைக்ட் பண்ணி அவளை கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டான். அப்பா செத்த துக்கத்தோட இந்த துக்கம் அதிகமாயிடிச்சி. முத்தவ இருக்கும்போது இவ இப்படி பண்ணிட்டாளேன்னு அம்மா பத்துநாள் படுத்த படுக்கையா கிடந்தாள். அப்புறம் பொழப்பை பார்க்கணுமே மீதி உள்ள ரெண்டையும் கரை சேர்க்கணுமே என்று எழுந்து நடமாட தொடங்கினாள்.

    போனதுங்க அப்படியே போயிருந்தாலாவது பரவாயில்லை ரெண்டு மாசம் கழிச்சி திரும்பிவந்து நிக்கவும், அம்மா கத்தி ஊரை கூட்டிவிட்டாள். அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்கள் அம்மாவை சமாதானப்படுத்தவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டார்கள்.

    இந்த ரெண்டு மாசத்துல யாரு கிட்டேயோ கடன் வாங்கிட்டதாகவும் எனக்கு அம்பதாயிரம் பணம் வேணும்முன்னு ஒத்த கால்ல நின்னான் சங்கர்.

    Enjoying the preview?
    Page 1 of 1