Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookolam Podavaa...
Pookolam Podavaa...
Pookolam Podavaa...
Ebook268 pages4 hours

Pookolam Podavaa...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல வருடங்களாக அன்புக்காக தோள்சாய தேடும் தாரணியின் முதல் சந்திப்பு விக்னேஷ்க்கு எங்கு கிடைத்தது? தாரணியை கண்ட பிறகு விக்னேஷ் வாழ்க்கை எவ்வாறு மாறியது? எப்போது அறிவாள் தாரணி தனது அண்ணாவும் அண்ணியும் சுயநலவாதி என்பதை? ஏன் தாரணிக்கு திருமணம் செய்யவிடாமல் இருவரும் தடுக்கிறார்கள் அதனால் என்ன பயன்? பின்பு விக்னேஷ் தாரணியை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்ததா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580133810108
Pookolam Podavaa...

Read more from Muthulakshmi Raghavan

Related to Pookolam Podavaa...

Related ebooks

Reviews for Pookolam Podavaa...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookolam Podavaa... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூக்கோலம் போடவா...

    Pookolam Podavaa...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 1

    கோவையிலே குடியிருக்கும் கோமகளே தாயே...!

    பாவையிவள் பாரம் குறைத்த நாமகளும் நீயே...!

    வெயிலும் இல்லாத குளிரும் இல்லாத கோவை நகரத்தின் இதமான சீதோஷ்ண நிலை. மருதமலைக்குச் செல்லும் வழியில் அமைந்த கோவை வேளாண்மைக் கல்லூரி. மரங்களடர்ந்த காம்பவுண்டிற்குள் பூங்காவின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்ததைப் போன்று அமைந்த கல்லூரியின் கட்டிடம் இருபுறமும் மரங்கள் நிழல் கொடுக்க மேயின் ரோட்டிலிருந்து கல்லூரிக்குள் செல்லும் நீண்ட சிமெண்ட் கல்லூரிப் பாதை. இருபுறமும் மரநிழலில் அமைக்கப்ட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகள். அதில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வண்ணமலர்களைப் போல பல வண்ணங்களில் உடையணிந்த கல்லூரியின் மாணவ.மாணவிகள்... இது எதுவுமே தாரிணியின் மனதில் பதியவில்லை.

    தன் போக்கில் யோசித்துக் கொண்டே சென்றவளை யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். மேனகா வந்து கொண்டிருந்தாள்.

    என்ன தாரிணி கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் போய் கொண்டிருக்கிறாயே... அப்படியென்ன யோசனை?

    பெரிதாய்... புதிதாய்... எதுவுமில்லை வழக்கமான யோசனைதான்.

    வழக்கமானதென்றால்... சாயந்திரம் யாராவது பெண் பார்க்க வருகிறார்களா? மேனகா பட்டென்று கேட்டாள்.

    ‘இவள் எப்படி இவ்வளவு கரெக்டாக கண்டுபிடிக்கிறாள்?’ தாரிணி உதடு கடித்தபடி ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தாள்.

    உன் வீட்டாருக்கு வேறு வேலையே இல்லையா? யார் பெண் கேட்டு வந்தாலும் உன்னைக் கல்யாணம் செய்து கொடுக்கும் உத்தேசமே அவர்களுக்கு இல்லை. அப்புறம் எதற்கு வாராவாரம் இந்தக் கண் துடைப்பு பெண் பார்க்கும் படலம்? எல்லாம் வெறும் நாடகம்...

    இந்த உலகமே ஒரு நாடக மேடைதானே மேனகா. நாமெல்லோரும் நடிகர்கள்தானே. அது என் வீட்டாருக்கு மட்டும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. நாம்தான் மறந்து விட்டோம்.

    அது சரி. ஆனாலும் இப்பேர்பட்ட நடிகர்களை நான் பார்த்ததே இல்லை. அப்பப்பா... என்ன நடிப்பு... என்ன நடிப்பு.

    மேனகா சொல்வது உண்மையென்றாலும் சொல்வது தன் வீட்டை என்பதால் தாரிணி மனம் குன்றினாள்.

    இது ஒரு வகையான டார்ச்சர் தாரிணி. அலங்காரம் பண்ணி கண்டவங்க எதிரில் ஷோ கேஸ் பொம்மை போல் நிறுத்தி... அவங்க பிடிக்கலைன்னு சொன்னால் சந்தோசப்பட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னால் வேண்டுமென்றே ஆயிரம் பிரச்னைகள் பண்ணி குறை கண்டு பிடித்து கல்யாணத்தை நிறுத்தி... என்ன கொடுமை இது தாரிணி? இதற்கு கல்யாணம் பேசாமலேயே இருந்து விடலாமே... மேனகா பொருமினாள். சிவந்த நிறத்துடன் அழகான தோற்றத்துடனிருந்தாள். மடிப்புக் கலையாத சேலையை பாந்தமாய் உடுத்திக் கூந்தலை கொண்டையிட்டிருந்தாள்.

    கல்யாணம் பேசாமல் இருந்தால் சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் கேள்வி கேட்பார்களே... அதிலிருந்து தப்பிக்கத்தான் இந்த நாடகம் கசப்புடன் சிரித்த தாரிணி மாநிறத்தில் உயரமாய் ஒடிசலாய் மிக அழகாய் இருந்தாள்.

    வட்ட முகத்திற்கு சோபை அளித்தன அவளது பெரிய கருவிழிகள். சிவந்த நிறமுடைய மேனகாவை விட பார்வைக்கு வசீகரமாய் இருந்தாள் தாரிணி. ஆரஞ்சு நிற காட்டன் புடவையை மடிப்புக் கலையாமல் உடுத்தியிருந்தாள். மேனகாவைப் போலவே இவளும் கூந்தலை கொண்டையிட்டிருந்தாள்.

    மேனகாவின் கைப்பையிலிருந்து செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசினாள் அவள்.

    ம்ம்... வந்திடறேங்க... ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்.

    போனை அணைத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டவள் தாரிணியைப் பார்த்துப் பெருமையுடன் புன்னகைத்துக் கொண்டாள்.

    அவர்தான்... குழந்தைகளைக் கூட்டி வந்திட் டாராம்... என்னைத் தேடுதுகளாம். அதான் போன். அப்பப்பா... ஐந்து நிமிடம் லேட்டாகக் கூடாதே. உடனே வான்னு போன் மேல் போன் போட்டு விடுவார்.

    தாரிணி மௌனமாய் நடந்தாள். மேனகா தாரிணியின் வயது தான். ஆறு வருடங்களுக்கு முன்பே அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது. ஐந்து வயதில் யு.கே.ஜி. படிக்கும் பையனும் மூன்று வயதில் பிரி.கே.ஜி படிக்கும் பெண்ணும் இருக்கிறார்கள். கணவர் பாரெஸ்ட் ஆபிஸில் வேலை பார்ப்பவர்.

    பேசிக் கொண்டே கௌலி பிரவுன் ரோட்டில் நடந்தார்கள். ஜி.சி.டி ஹவுஸிங் யூனிட்டில் உள்ள குவார்ட்டர்ஸிற்கு போகும் பாதையில் திரும்பிய மேனகா,

    வீட்டுக்கு வந்திட்டுப் போயேன் என்று அழைத்தாள்.

    இன்னொரு நாள் வருகிறேன் என்றவாறு குவார்ட் டர்ஸிற்கு போகும் பாதையில் திரும்பி மேனகாவுடன் இணைந்து நடந்தாள் தாரிணி.

    இந்தக் குவார்ட்டர்ஸில் ஒரு வீட்டில் குடியிருக்கும் என் வீட்டிற்கு வர மாட்டாய். ஆனால் இங்கே கோவில் கொண்டிருக்கும் விஷ்ணு துர்க்கையை மட்டும் பார்க்காமல் இருக்க மாட்டாய்... மேனகா புன்சிரிப்புடன் கையாட்டி விட்டு அவள் போர்ஷன் இருந்த மாடிப்படியில் ஏறிச் சென்றுவிட அந்தக் குவார்ட்டர்ஸின் கடைசியில் அமைந்திருந்த ‘விஷ்ணு துர்க்கையம்மன்’ கோவிலுக்குள் நுழைந்தாள் தாரிணி.

    அம்மனுக்கு அலங்காரம் பண்ணி முடித்துவிட்டு நின்று கொண்டிருந்த பாலன் குருக்கள்.

    வாங்கம்மா... இன்றைக்கு சீக்கிரம் வேலை முடிந்து விட்டதா? என்று வரவேற்பாய் கூறினார்.

    ஆமாங்கய்யா... அம்பாளை தரிசனம் பண்ணிவிட்டு சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் சோர்வாய் பதில் கூறினாள் தாரிணி.

    என்ன விசேஷம்மா... யாரும் பெண் பார்க்க வருகிறார்களா? பழகிய பாசத்தில் வினவினார் குருக்கள்.

    தோழியிலிருந்து குருக்கள் வரை தன் கதை எப்படி அத்துபடியாகி இருக்கிறது என்று மனம் நொந்த தாரிணி சங்கடத்துடன்,

    ஆமாம் குருக்களே... என்று கூறினாள்.

    இதற்கு ஏம்மா சோர்ந்து போய் பதில் சொல்றீங்க... அன்றைக்கு தள்ளிப் போனால் இன்றைக்குமா தள்ளிப் போகும்? அம்மன் மேலே பாரத்தைப் போடுங்கம்மா... நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கும் ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்த அந்த மனிதநேயம் கொண்ட அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனையைத் தொடங்கினார்.

    கண் மூடித் துர்க்காதேவியை வேண்டிக் கொண்டவளின் விழியோரம் நீர் கசிந்தது.

    ‘தாயே... என் குறை தீர்க்காமல் வேடிக்கை பார்க்காதே. வழிகாட்டு...’

    வழிகாட்ட அம்மன் இருக்கிறாள். நிம்மதியாய் வீட்டுக்குப் போங்கோ... குருக்களின் குரலில் கண் விழித்தவள் தீபாராதனையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

    சன்னதியை வலம் வந்து விட்டு நவக்கிரகங்களை வணங்கி வலம் வந்து கன்னத்தில் போட்டுக் கொண்டவள் கோவில் பிரகாரத்தில் ஒரு நிமிடம் அமர்ந்து எழுந்தாள்.

    கிளம்பிட்டிங்களாம்மா... குருக்கள் வினவ.

    ஆமாங்கய்யா... என்றபடி விடை பெற்றுக் கொண்டாள் தாரிணி.

    வழக்கம்போல வேன் தானா?

    ஆமாம்.

    நீண்ட பின்னலாட கம்பீரமாய் சென்று கொண்டிருந்த தாரிணியைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிலுக்கு வந்திருந்த பெண்களில் ஒருத்தி.

    தெரிந்த பெண்ணா குருக்களே... என்று வினவினாள்.

    தினமும் வருகிறதால் தெரிந்த பெண்...

    ஓஹோ... இந்தக் குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் பெண்ணா?

    இல்லைம்மா... கோவை வேளாண்மைக் கல்லூரியில் லெக்சரரா வேலை பார்க்கிறவங்க.

    பெரிய படிப்பு படித்து விட்டு பெரிய வேலை பார்க்கிற பெண் போல இல்லையே... எவ்வளவு அடக்கமா இருக்குது.

    அதனால்தான் அம்பாளைத் தேடி வருகிறாங்க. அலட்டல் இல்லாதவங்கதானே அம்மனின் பக்தை ஆக முடியும்?

    கண்ணுக்கு லட்சணமா இருக்குதே... இது மனசில் என்ன குறை?

    வேறு என்ன? கல்யாணம் தள்ளிப் போகுது. அந்தக் குறைதான்.

    இது என்னய்யா... ஊரில் இல்லாத அதிசயமாய் இருக்கு. பார்க்க மூக்கும் முழியுமாய் அழகாய் இருக்குது. பதவிசா... பக்தியான பொண்ணா இருக்குது. பெரிய படிப்புப் படிச்சு... கை நிறைய சம்பாதிக்கும் பெரிய வேலை பார்க்குது. இதுக்கா கல்யாணம் தள்ளிப் போகுது?

    இவங்களுக்குத் தான் தள்ளிப் போகுது.

    இதுகிட்ட குறை கண்டவன் வேறு எந்தப் பெண்ணைக் கட்டுவான்?

    குறை இவங்ககிட்ட இல்லம்மா... இவங்க கை நிறைய சம்பாதிக்கிறாங்களே. அதுதான் குறை.

    சம்பாதிக்கிறது ஒரு குறையா?

    ஆமாம்மா... அது இல்லாமலிருந்தால் இவங்களோட அக்காளுக்கும், தங்கைக்கும் கல்யாணம் ஆனது போல இவங்களுக்கும் ஆகியிருக்கும்.

    என்னய்யா இது அநியாயமா இருக்கு. இதோட தங்கைக்கு கல்யாணம் ஆகிடுச்சா. கேட்கவே கொடுமையா இருக்கே...

    கொடுமைதான்... அதிகமா சம்பாதித்துக் கொடுக்கிற பெண்ணைக் கைநழுவ விட அண்ணன்காரனுக்கு விருப்பமில்லை.

    பெத்தவங்க பேசாமலா இருக்கிறாங்க?

    பெத்தவங்க போய் சேர்ந்துட்டாங்க... அதனால்தான் பெற்றவளாய் இந்தக் கொற்றவையை நினைத்து தினமும் வந்துவிட்டுப் போகிறாங்க... அந்தப் பெண்.

    பாலன் குருக்கள் விளக்கமளித்தார். கோவிலைத் தன் உயிராய் நினைத்து வாழ்பவர். அங்கு வரும் பக்தர்கள் எல்லாம் அவர் சுற்றத்தார். ஒவ்வொருவரின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் மனித நேய மிக்கவர்.

    சரி... நீங்கள் வந்த வேலையைப் பாருங்கோ. அர்ச்சனை யார் பெயருக்கு? பையன் பெயருக்கா... வேலையில் ஜாயின் பண்ணி விட்டாரா?

    அம்மனுடைய அருள்... வேலையில் ஜாயின் பண்ணிட்டான். இவள் யாரு? கேட்டால் கேட்ட வரம் தரும் துர்கா தேவியாச்சே.

    தாரிணியை மறந்த குருக்கள் இன்னொரு பெண்மணி வீட்டுச் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டு அர்ச்சனையை ஆரம்பித்தார்.

    தாரிணி மெயின் ரோட்டிற்கு வந்தாள். மனம் பட படக்க சாலையைப் பார்த்தாள். வேன் வருவது தெரிந்தது. மெயின் ரோட்டிலிருந்து குவார்ட்டர்ஸ் செல்லும் பாதையில் திரும்பிய வேனுக்குள் இருந்த சிறுவர், சிறுமிகள் இவளைக் கண்டதும் சந்தோசமாய் கை அசைத்தனர்.

    குட் ஈவினிங் அக்கா...

    பதிலுக்கு கையாட்டிச் சிரித்த தாரிணி காத்திருந்தாள். சிறுவர், சிறுமிகளை இறக்கி விட்டுக் காலியாக திரும்பி வந்த வேன் அவளருகில் வந்ததும் நின்றது.

    ஏறி அமர்ந்தாள். வேன் புறப்பட்டது. டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விக்னேஷைப் பார்த்தாள்.

    வழக்கம் போல் மௌனமாய் காரோட்டிக் கொண்டிருந்தான் அவன். முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் பாறை போல் இறுகியிருந்தது. கருப்பான... ஆனால் மிக... மிகக் களையான முகம். ஜந்தடி உயரமுள்ள தாரிணியை குள்ளமாக்கும் ஆறடி உயரம். அகன்ற தோள்கள். நீண்ட கால் கைகள்.

    இன்றைக்கு எங்க வீட்டில் விசேஷம்... அவன் எதையாவது பேசுவானா என்று எதிர்பார்த்து இன்றும் ஏமாந்து போன தாரிணி தானாய் பேச்சை ஆரம்பித்தாள்.

    ஓஹோ... அவன் ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்தான்.

    ‘என்னவென்று கேளேன்...’ ஏங்கியது அவள் மனம்.

    அவன் வாயைத் திறக்காமல் சாலையில் கவனமாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

    ‘கேட்க மாட்டாயே... மௌனமாய் இருந்து என்னைக் கொல்வாயே...’ பொறுக்க மாட்டாமல் புலம்பியது அவள் மனம்.

    கார் சாலை வளைவில் திரும்பி பேரூர் செல்லும் மார்க்கத்தில் விரைந்தது.

    ‘இனியும் தாமதித்தால் வீடு வந்து விடும். இவன் என்றுதான் வாய் திறந்து பேசினான்? இன்று வாய் திறந்து பேச?’

    என்ன விசேஷம்னு நீங்க கேட்கலையே?

    அவன் ‘எதற்குக் கேட்க வேண்டும்?’ என்பது போல் பட்டும் படாமலும் ஓர் பார்வை பார்த்துவிட்டு மௌன மாகவே தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் வேனை ஓட்டிக் கொண்டிருந்தான்.

    என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்...?

    அப்படியா...

    அவன் அவள் வீட்டின் முன் வேனை நிறுத்தினான்.

    ‘இறங்கிக் கொள்கிறாயா?’ என்பது போல் திரும்பி வேறு பார்த்தான். தாரிணி திரும்ப வீட்டு வாசலைப் பார்த்தாள். யாருமில்லை.

    நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே... தயங்கிக் கேட்டாள்.

    எதைப் பற்றி...? அவன் புருவம் உயர்த்தினான்.

    என்னைப் பெண் பார்க்க வருவதைப் பற்றி...

    நான் என்ன சொல்ல வேண்டும்?

    அப்பொழுது வீட்டுக் கதவைத் திறந்து காம்பவுண் டுக்குள் வந்து நின்ற தாரிணியின் அக்கா ஜானகி.

    தாரிணி வந்திட்டாள்... என்று உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தாள்.

    வேறு வழியின் றி வேனை விட்டு இறங்கிய தாரிணி ஏக்கத்துடன் விக்னேஷப் பார்த்தவாறு வாசல் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

    ‘இவள் என்ன சொல்ல விழைகிறாள்...?’

    புரியாமல் தோள் குலுக்கிய விக்னேஷ் வண்டியை எதிர் வீட்டினுள் செலுத்தி நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். வாசல் கேட்டைப் பூட்டி விட்டு மாடிப்படி நோக்கி நடந்தான்.

    என்னப்பா விக்னேஷ். வந்து விட்டாயா? கீழ்வீட்டு அபிராமியம்மாள் வினவினாள். அறுபது வயது இருக்கும்.

    வந்து விட்டேன்ம்மா...

    எதிர் வீட்டில் என்ன விசேஷம்? தலை நரைத்திருந்த அபிராமி கேட்டாள்.

    எனக்கு எப்படித் தெரியும்? அவன் வியப்பாய் வினவினான்.

    அந்தப் பெண் தாரிணியை நீதானே nலைக்கு கூட்டிப் போய் விட்டுக் கொண்டு வந்து வீட்டில் விடுகிறாய்... அவள் தூண்டில் போட்டாள்.

    அதற்காக... அவர்கள் வீட்டு விஷயம் எனக்குத் தெரிந்திருக்கணும்னு அவசியமில்லை. வேனுக்கு மாத வாடகை தருகிறாங்க... என் வண்டியில் வருகிறாங்க... அவ்வளவுதான்... பட்டுக் கத்தரித்தான் விக்னேஷ்.

    மடமடவென்று இரண்டிரண்டு படிகளாய் அவன் தாவி ஏறிவிட அபிராமியம்மாள் மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டு அவனை ஆராய்ந்தாள்.

    ‘அவ்வளவுதானா...?’ நம்பாதவளாய் வீட்டினுள் சென்றாள்.

    அத்தியாயம் 2

    திருமகளும் நீயே! திவ்யத் திருத்தாயே...!

    திசைதேடும் என் வாழ்வில் துணைக்கு வந்திடுவாயே...

    மாடியில் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனான் விக்னேஷ். நீண்ட ஹால்... அதன் ஒரு பக்கம் இரண்டு அறைகள். மறுபக்கம் ஒரு கோடியில் சமையலறை... மறுகோடியில் பூஜையறை... நடுவில் டைனிங் ஹால்

    ஹாலின் ஒரு பக்கமிருந்த இரு அறைகளில் ஒன்றைத் திறந்தான் அட்டாச்சுடு பாத்ரூமோடு இருந்த அறையில் கட்டில் மெத்தை, தலையணை பெட்சீட் களோடு இருந்தது. அறையின் ஜன்னலோரமாய் டேபிள், சேர் சுவரில் பதிக்கப்பட்டிருந்த அலமாரி. அட்டாச்சுடு பாத்ரூம். கட்டிலின் மேல் அலங்கோலமாய் கிடந்த கைலியை எடுத்துக் கட்டிக் கொண்டவன் பேன்ட் சர்ட்டை சுவரிலிருந்த ஹேங்கரில் மாட்டி விட்டு பாத்ரூமுக்குள் புகுந்தான். குளித்து வெளியே வந்தபோது காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்தான். குமரன் உள்ளே வந்தான்.

    என்னடா சீக்கிரம் வந்துட்டே?

    நைட் சவாரிக்குப் போகணும்.

    எங்கே...?

    பெங்களூர்.

    உன் பாடு தேவலைடா... இந்தியாவிலிருக்கிற எல்லா ஊர்களையும் பார்த்துவிட்டு அதற்குப் பணம் வேறு வாங்கி சம்பாதிக்கிறே... ம்ம்...

    குமரன் ஹாலின் ஒரு பக்கமாயிருந்த மற்றொரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போனான். விக்னேஷின் அறையிலிருந்ததைப் போலவே கட்டில் டேபிள், சேர், சுவர் அலமாரி, அட்டாச்சுடு பாத்ரூம்... எக்ஸெட்ரா... எக்ஸெட்ராவுடன் அந்த அறையும் இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1