Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Enthan Vennilavu
Nee Enthan Vennilavu
Nee Enthan Vennilavu
Ebook256 pages2 hours

Nee Enthan Vennilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதோ உங்கள் பெண் பெரிய மாமா... அவள் உங்களிடமே இருக்கட்டும்... ஆனால் என் பொண்டாட்டியாக... உங்கள் அனுமதியில்லாமல் இவள் இந்த வீட்டுப் படியைத் தாண்டமாட்டாள்... அதே சமயம் வேறொருவனுக்குக் கல்யாணம் பேசினால் உயிரோடும் இருக்க மாட்டாள்... என்னால் அவளைச் சாகவிட முடியாது... எனக்கு வேறு வழி தெரியவில்லை மாமா... நீங்கள் மனம் மாறினால் நீங்களே இவளை அழைத்து வந்து என்னிடம் ஒப்படையுங்கள்... உங்கள் மனம் மாறாவிட்டாலும் பரவாயில்லை... நாங்கள் சேர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை... எங்கள் மனம் ஒன்றாக இருக்கிறது அதுபோதும்... இவ்வாறு அர்ஜூன் ஐஸ்வர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு கூறக் காரணம் என்ன? வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateSep 19, 2023
ISBN6580133810104
Nee Enthan Vennilavu

Read more from Muthulakshmi Raghavan

Related to Nee Enthan Vennilavu

Related ebooks

Reviews for Nee Enthan Vennilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Enthan Vennilavu - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ எந்தன் வெண்ணிலவு

    Nee Enthan Vennilavu

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயில் நின்றதும்... அவசரமாய் இறங்க வேண்டிய ஜனங்கள் ஒருபுறம் இறங்கினார்கள்... ஏறவேண்டிய ஜனங்கள் ஒரு பக்கம் ஏறினார்கள்... கொத்தாக ரயிலில் இருந்து உதிர்ந்த மக்கள் வெள்ளத்தில் தானும் ஓர் ஆளாக இறங்கிய ஐஸ்வர்யா அந்த மக்கள் வெள்ளத்தில் நீச்சலடித்து ஜங்ஷனை விட்டு வெளியே வந்தாள்... மாலை மயங்கி இருள் பரவ ஆரம்பித்திருந்தது...

    ‘இன்னும் அப்பாவைக் காணோமே...’ நகம் கடித்தபடி ஜங்கஷனின் வாசலில் நின்றவளை... நின்று கொண்டிருந்த டாக்ஸி டிரைவர்கள் பார்த்துத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்... அவர்கள் மேல் தவறில்லை... அந்திவானின் ஒளி மங்கிய அந்த இருள் வேளையில் பளீரிட ஆரம்பித்த நியான் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் அவள் தேவதை போல் தெரிந்தாள்... ஐந்தரை அடிக்குக் குறையாத உயரம்... அளவான உடல்வாகு... சிவந்த நிறம்... அழகிய நீளவடிவக் கண்கள் என்று அம்சமாக அவள் இருந்தாள்... அவளது அழகுக்கு அழகு சேர்த்தது கருஞ்சிவப்புக் கலரில் ஆங்காங்கே மணிகள் பதிக்கப் பட்டு எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட சுடிதார்...

    டாக்ஸி டிரைவர்களில் ஒருவன் அவளை அணுகினான்...

    எங்கே போகணுங்க...

    இல்லை... எனக்குக் கார் வரும்...

    ஐஸ்வர்யா பட்டுக் கத்தரித்தாற்போல் பதில் சொல்லி விட்டுத் தனது பைகளை தூக்கிக் கொண்டு மீண்டும் ஜங்ஷனுக்குள் சென்றாள்... உள்ளே இருந்த சிமெண்ட் பென்ச் ஒன்றில் பைகளை வைத்து தானும் அமர்ந்து கொண்டாள்... தன் பையிலிருந்த செல்போனை எடுத்து உயிர்ப்பித்து தந்தையின் நம்பர்களை அழுத்தினாள்...

    எங்கேயிருக்கிறாய் ஐஸ்வர்யா... ஜனார்த்தனத்தின் குரல் கேட்டது...

    மயிலாடுதுறை ஜங்சனில் அப்பா... ஐஸ்வர்யா கவலையுடன் பதில் அளித்தாள்...

    மகளின் குரலில் இருந்த கவலையை உணர்ந்து கொண்ட ஜனார்த்தனம்...

    என்னடா... நீ வந்து நேரமாகி விட்டதா...? என்று விசாரித்தார்...

    ஆமாம் அப்பா... தேவையில்லாமல் டாக்ஸி டிரைவர் வந்து விசாரிக்கிறான்...

    அவர்கள் சவாரிக்கு ஆள் பிடிக்க கேள்வி கேட்பார்கள்... இது சகஜம்தான் பயப்படாதே... கொஞ்ச நேரத்தில் குணா வந்து விடுவான்... நீ ஜங்சனுக்குள்ளேயே உட்கார்ந்திரு... என்னம்மா...

    ஏன் அப்பா... ஏன் இன்னும் நீங்கள் வரவில்லை...?

    "நான் பொழுது போவதற்கு முன்னாடியே கிளம்பி விட்டேன்ம்மா... பாரு... நம்ம வயல்காட்டைத் தாண்டி வரும்போது பாதையிலே முள்மேல் கார் ஏறி... டயர்

    பஞ்சராகி விட்டது... நடுக்காட்டில் மாட்டிக் கொண்டு விட்டேன்... ஸ்டெப்னி டயரும் இல்லை... உதவிக்கு ஆளும் இல்லை... உன் அண்ணன் குணசேகரனுக்கு போன் பண்ணியிருக்கிறேன்... அவன் கும்பகோணத்தில் உரம் வாங்கிக் கொண்டு இருக்கிறானாம்... வீட்டில் இறக்கிப் போட்டுவிட்டு என் புல்லட்டில் போய் தங்கச்சியைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து விடுகிறேன் சித்தப்பான்னு சொன்னான்... அவன் வரும் வரைக்கும் ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்திலேயே பத்திரமாய் உட்கார்ந்திரு..."

    ஜனார்த்தனம் போனை வைத்து விட்டார்... ஐஸ்வர்யா கலவரமானாள்... அண்ணன் வந்துதான் அழைத்துக் கொண்டு போக வேண்டுமா... அவளுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது...

    ‘பேசாமல் இந்த மயிலாடுதுறை காலேஜிலேயே சேர்ந்திருக்கலாம்... சென்னையில் போய் படி... ஹாஸ்டலில் இருந்து படிப்பது தான் பெண்களுக்கு நல்லது... மயிலாடு துறை காலேஜ் என்றால் நீ தினமும் காரிலோ... இல்லை பஸ்ஸிலோ போய் வரணும் என்பாய்... அது சரி வராதுன்னு இந்தப் பெரியப்பா மீசையை முறுக்கிக் கொண்டு

    சொல்லி விட்டார்... இப்போது படிப்பை முடித்து விட்டு வந்து அநாதை போல் ஜங்சனில் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது... பெண்கள் இருட்டிய பின்னால் இப்படி ஜங்சனில் உட்காருவது மட்டும் நல்லதா...’

    ஐஸ்வர்யா அலுப்புடன் நினைத்துக் கொண்டாள்... அவளுக்குத் தெரியும்... அவளை மயிலாடுதுறையில் படிக்க விடாமல் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைத்தது எதற்கு என்று...

    அந்த நினைவில் அவள் கீழ் உதட்டை தன் அரிசிப் பற்களால் கடித்துக் கொண்டாள்... என்னதான் துணியைச் சுற்றி ஒளித்து வைத்தாலும் மல்லிகையின் மணம்

    அதன் இருப்பைக் காட்டிக் கொடுத்து விடாதா...? கண் காணாத தொலைவில் ஹாஸ்டல் சிறையில் தங்க வைத்துப் படிக்க வைத்தாலும்... அவள் செமஸ்டர் லீவுக்கும்...

    மற்ற பண்டிகைகளுக்கும்... குடும்ப விழாக்களுக்கும்... திருவிழாக்களுக்கும் வந்து தானே போக வேண்டும்... அப்போது... அவளை யார் பார்க்கக் கூடாது என்று ஜனார்த் தனமும்... அவருடைய அண்ணன் சுதர்சனமும் ஒளித்து வைக்கிறார்களோ... அவனது கண்களில் அவள் பட்டுத்தானே ஆக வேண்டும்...?

    ஐஸ்வர்யா சிமெண்ட் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கால்களை மாற்றி... மாற்றி ஆட்டிய வண்ணம்... அவன் கண்களில் அவள் பட்ட தருணங்களை நினைவிற்குக் கொண்டு வந்தாள்...

    அவளது பள்ளிப் பருவத்தில் ஓர் நாள்... தோட்டத்துக் கிணற்றில் அவள் எட்டிப் பார்த்தபோது கால் தடுக்கி உள்ளே விழுந்து விட்டாள்... அப்போது அவள் எட்டு வயது சிறுமி... நீச்சல் தெரியாது... கைகளும்... கால்களும் தத்தளிக்க நீரில் மூழ்கியபோது பதினான்கு வயதுச் சிறுவனான அவன் தண்ணீரில் குதித்தான்... அவளைப் பற்றி இழுத்து... தன் தோள் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு கரையேறினான்... விவரம் அறிந்த சுதர்சனமும் ஜனார்த்தனமும்... அவன் வீட்டிற்குப் போய் சண்டை போட்டனர்... அவனுடைய தந்தை நரசிம்மன் நிதானமாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே வந்தார்...

    இப்ப என்ன நடந்து போச்சுன்னு அண்ணனும்... தம்பியும் வந்து மாத்தி மாத்தி கத்தறீங்க... உங்க பெண்ணை சாகவிடாமல் என் மகன் காப்பாற்றியது அவ்வளவு பெரிய தவறா...?

    அண்ணனும், தம்பியும் வாயடைத்துப் போய் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள்... அடுத்த நாளே ஐஸ்வர்யாவுக்கு நீச்சல் சொல்லித் தரப்பட்டது...

    ஐஸ்வர்யாவின் பத்தாவது வயதில் அவள் ஓட்டிச் சென்ற சைக்கிளின் செயின் கழன்று கொண்டது... அவள் மாட்டிப் பார்த்தாள்... மாட்ட முடியவில்லை... அந்த வழியில் டி.வி.எஸ் ஃபிப்டியில் போன பதினாறு வயதுப் பையனான அவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சைக்கிள் செயினை மாட்டினான்... அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் டி.வி.எஸ் ஃபிப்டியில் ஏறிப் போய் விட்டான்...

    எட்டு வயதில் நடந்த சண்டை நினைவில் இருந்த தால் ஐஸ்வர்யா... மறந்தும் இதைத் தோழிகளிடம் கூடச் சொல்லவில்லை...

    அவளுடைய பதினைந்தாம் வயதில்... காவேரி ஆற்றில் அவளுடைய தோழிகளுடன் நீந்தி விளையாடிய போது... எதிர்பாராமல் சுழலில் மாட்டி விட்டாள்... கூட வந்த தோழிகள் அலறியபோது... அவன் அக்கரையிலிருந்து நீந்தி வந்து... சுழலுக்குள் சிக்கியிருந்தவளின் முடியைப் பற்றி இழுத்து கரை சேர்த்தான்... பயந்து விழித்தவளின் பார்வையை இருபத்தி ஒரு வயது இளைஞனாக அவன் எதிர்கொண்ட அக்கணம் நினைத்தாலே இனிக்கும் கணம்.

    ஆனால் அன்று வீட்டில் பெரிய பஞ்சாயத்தே நடந்து விட்டது... அவளுடைய பெரியப்பா சுதர்சனத்தின் மகன் குணசேகரனுக்கு யார் மூலமோ விசயம் தெரியவர... அவன் வீட்டில் வந்து சத்தம் போட்டான்...

    ஐஸ்வர்யா... ஏய் ஐஸ்வர்யா... இங்கே வா...

    என்னண்ணா...

    இன்றைக்கு ஆற்றில் குளிக்கப் போனாயா...?

    அவன் குற்றவாளியை விசாரிப்பது போல் அவளை விசாரிக்க ஐஸ்வர்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது... அதே நேரத்தில்... ஐஸ்வர்யாவின் அம்மா வைஷ்ணவியும்... குணசேகரனின் அம்மா கோமளவள்ளியும்... கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்... குணசேகரன் ஐஸ்வர்யாவை விசாரிப்பதைப் பார்த்துவிட்டு என்னவோ ஏதோவென்று பதறியடித்தவர்களாய்... இருவரின் அருகேயும் நெருங்கினார்கள்...

    ஏண்டா... குணா... எதுக்கு தங்கச்சியைப் போட்டு இந்த அரட்டு அரட்டுற...? சின்னப் பெண்... பயந்து விடாதா...? கோமளவள்ளி பரிவாக ஐஸ்வர்யாவை அணைத்துக் கொண்டாள்...

    ஏண்டி ஐஸ்வர்யா... அண்ணன் அரட்டும் அளவிற்கு நீ என்ன காரியம்டி பண்ணிவிட்டு வந்தே...? அதை முதலில் சொல்லு... வைஷ்ணவி குணசேகரனின் அருகே சென்று நின்று கொண்டாள்...

    அந்த வீட்டில் அப்படித்தான்... அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை விட... அந்த அண்ணன் தம்பிகளை மணந்த கோமளவள்ளி வைஷ்ணவியின் ஒற்றுமை மிகவும் பலமானது...

    ஏய்யா... சுதர்சனத்திற்கும்... ஜனார்த்தனத்திற்கும் பெண்டாட்டிகள் வாய்த்ததைப் போல எல்லோருக்கும் வாய்த்து விட்டால் அண்ணன் தம்பி குடும்பச் சண்டைகள் எங்கேயிருந்து வரும்...? என்று ஊரே புகழும் அளவிற்கு அவர்களின் ஒற்றுமைக் கூட்டணி பலம் வாய்ந்தது...

    குணசேகரனுக்கு பசித்தால் வைஷ்ணவியிடம் தான் சாப்பாடு கேட்பான்... ஐஸ்வர்யா பசியால் அழுதால் கோமளவள்ளிதான் தூக்கிக் கொண்டு போய்

    சாப்பாடு கொடுப்பாள்... இருவருக்குமே குணசேகரனும்... ஐஸ்வர்யாவும் ஒன்றுதான்... அதேபோல் குணசேகரனும் கோமளவள்ளியிடம் சலுகை எடுத்துக் கொள்வதைவிட வைஷ்ணவியிடம் அதிக சலுகை எடுத்துக் கொள்வான்... ஐஸ்வர்யாதன் தேவை எதுவாக இருந்தாலும் சிபாரிசுக்கு கோமளவள்ளியைத்தான் நாடுவாள்...

    இவ்வாறு அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் பெரியவர்கள்கூட அறியாத ஒரு விஷயம் இருந்தது... அது குணசேகரனுக்கு ஐஸ்வர்யாவைக் கண்டால் ஆகாது... ஐஸ்வர்யாவிற்கோ குணசேகரனின் மேல் மலையளவு வன்மம் உண்டு...

    சின்ன வயதிலிருந்தே குணசேகரன் ஐஸ்வர்யாவைப் பற்றிப் போட்டுக் குடுப்பான்... தான் ஆண் பிள்ளை... தகப்பன்..., சிறிய தகப்பனின் குடும்ப வாரிசு என்ற ஆணவமும்... ஆணாதிக்க மனப்பான்மையும் அவனிடம் உண்டு... ஐஸ்வர்யாவிற்கோ... அவனுக்குக் கிடைக்கும் உரிமைகளும் சலுகைகளும் தனக்குக் கிடைப்பதில்லை என்று மகா வருத்தம்... ஆண்... அதிலும் முதலில் பிறந்தவன் என்ற ஒரே காரணத்தினால்... தகப்பன்... பெரிய தகப்பனைப் போலவே அவனும் தன்னை அடக்கி ஆளநினைக்கிறான் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தாள் அவள்... எனவே ஒருபோதும் அவன் வீசும் அடிமைச் சங்கிலியில் பிணைபட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள் அவள்...

    சித்தி... இவள் ஆத்தங்கரையில் குளிக்கப் போயிருக்கிறாள்... விட்டு விட்டு வேடிக்கைப் பார்த்தீர்களா...? வயதுப் பெண்கள் எங்கே போகிறார்கள்... எப்போது வருகிறார்கள்ன்னு கண்காணிக்க வேண்டாமா...?

    "டேய்... எதுக்குடா உன் சித்தியிடம் போட்டுக் கொடுக்கிறாய்...? உன் தங்கச்சி என்கிட்ட கேட்டுக்கிட்டுத் தான் ஆத்துக்குக் குளிக்கப் போனா... நீ காலையில்

    காபியை குடிச்சிட்டு வெளியே போனா... இருட்டினப்புறம் தூங்கத்தான் வீட்டுக்கு வருகிறாய்... நீ எங்கே போகிற... எப்போது வருகிறன்னு இந்த வீட்டில் யாராவது கேட்கிறோமா... உன்னைத் தண்ணீர் தெளித்து விட்டதைப் போல் ஒன்றும் அவளைத் தண்ணீர் தெளித்து விட வில்லை... அவள் சொல்லாமல் எங்கேயும் வெளியே போக மாட்டாள்... அவள் நான் வளர்த்த பெண்..."

    "அக்கா... இப்போ எதுக்கு குணாவைத் திட்டுகிறீங்க...? அவன் ஆம்பளை... அப்படித்தான் இருப்பான்... இவள் பெண் பிறவியாயிற்றே... அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டாமா...? ஆத்தங்கரைக்கு இவள் போனது எனக்குத் தெரியாது குணா... இவள்

    தான் பெரியம்மாவின் செல்லப் பெண்ணாச்சே... அவங்களிடம் கேட்டுக்கிட்டு போயிருக்கிறாள்... ஏன்ப்பா என்ன நடந்தது...?"

    அதெல்லாம் ஏடாகூடமாய் எதுவும் நடந்திருக்காது... நான் என் பெண்ணிடம் விசாரித்துக் கொள்கிறேன்... நீங்கள் இரண்டு பேரும் உள்ளே போய் கொஞ்சுங்கள்...

    அக்கா... அவள் என்னவோ செய்திருக்கிறாள்... அதனால்தான் குணா இவ்வளவு கோபப்படுகிறான்... என்னவென்று கேட்டு விடுங்கள்...

    நம் பெண்ணின் மேல் நமக்குத்தான் நம்பிக்கை இருக்க வேண்டும்... நீ அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ஆடாதே... அவனுக்கு ஐஸ்வர்யாவின் மேல் கோள் சொல்லாவிட்டால் தூக்கம் வராது... தடிமாடு...

    சும்மா அவனை மட்டும் குறை சொல்லாதீங்கக்கா... இவளுக்கு நீங்கள் அளவுக்கதிகமாய் செல்லம் கொடுக் கிறீர்கள்... அதனால்தான் இவள் அண்ணன்காரனின் சொல் பேச்சு கேட்க மாட்டேன் என்கிறாள்... அடங்காப் பிடாரி...

    நீ என் பெண்ணைத் திட்டாதே...

    நீங்க என் மகனைத் திட்டாதீங்க...

    வீட்டிற்குள் இவர்களின் சண்டை உச்சத்தை எட்டிய போது வயலுக்குப் போயிருந்த அண்ணனும், தம்பியும் வீட்டுக்குள் வந்தனர்... மனைவிமார்களின் சண்டையைக் கண்டு திகைத்துப் போயினர்...

    என்னடா ஜனா... கோமளாவும்... வைஷ்ணவியும் இப்படிச் சத்தம் போட்டுக்கிறாங்க... இவங்க சண்டை தெரு முணை வரை கேட்குதே...

    ஆமாம் அண்ணா... அண்ணிக்கும்... இவளுக்கும் என்ன தகராறு...?

    வாசலை ஒட்டி அமர்ந்து நடந்த சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் தாய் உலகநாயகி வாய் விட்டுச் சிரித்தாள்...

    டேய்... பெரியவனே... சின்னவனே... உங்க பெண்டாட்டி மார்க... அவளுக பிள்ளைகளுக்காக அடிச்சுக் கிறாளுகடா...

    என்னது பிள்ளைச் சண்டை நம்ம வீட்டுக்குள் நடக்குதா...?

    ஆமாண்டா... பிள்ளைச் சண்டைதான் நடக்குது... பெரியவ அவ பொண்ணுக்காக சண்டைக்குப் போறா... சின்னவ அவ மகனுக்காக மல்லுக்கு நிக்கிறா... சுதர்சனா... ஜனா... உங்க அப்பா போன பிறகும் என் உடம்பில் உயிர் தங்குதுன்னா அதுக்கு இந்த தங்கமான மருமகள்கள்தான் காரணமய்யா... யார் வீட்டிலாவது இப்படி மருமகள்கள் வாய்த்திருப்பாங்களா...? உலகநாயகி பெருமையுடன் கூற அதே பெருமையுடன் சுதர்சனமும்... ஜனார்த்தனமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

    2

    ஐஸ்வர்யா அப்போதுதான் வந்து நின்ற ரயிலைப் பார்த்தாள்... பரபரப்பாக இறங்கிய ஜனங்கள்... சடுதியில் மறைந்தார்கள்... மீண்டும் ஆளின்றி பிளாட்பாரம் வெறிச் சோடியது... எல்லோரையும் அழைத்துப் போக ஆள் வந்திருப்பார்கள்... அல்லது எல்லோரும் தனித்து வீட்டுக்குப் போக பழகியிருப்பார்கள் என்று நினைத்தபோது ஐஸ்வர்யாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது... அவள் ஏதோ தனித்து ஒரு கூண்டில் அடைபட்டது போல் உணர்ந்தாள்... சற்று முன் இங்கு இறங்கியவர்கள் எல்லோரும் எங்கே...? அவர்களுக்கு வீட்டுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1