Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyalil Oru Vennila
Vidiyalil Oru Vennila
Vidiyalil Oru Vennila
Ebook489 pages4 hours

Vidiyalil Oru Vennila

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்பின் முகமூடி அணிந்து சகோதரர்களை அடிமையாக்கி, ஆட்டுவிக்கும் ஒருத்தியை தனது உண்மையான நேசத்தால் தோலுறிக்கிறாள் நாயகி. எது உண்மையான விடியலென்று தெரியாமல் இருட்டில் முடங்கிக் கிடந்தவனின் கை பிடித்து வழி நடத்தி அவன் வாழ்வில் வெண்ணிலவாய் வெளிச்சத்தைப் பொழிகிறாள். அண்ணியின் கைக்குள் கைப்பாவையாய் இருந்தவனை எப்படி தெளிய வைத்து வாழ்வை செம்மையாக்குகிறாள் என்பதே கதை.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580134408237
Vidiyalil Oru Vennila

Read more from Latha Baiju

Related to Vidiyalil Oru Vennila

Related ebooks

Reviews for Vidiyalil Oru Vennila

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyalil Oru Vennila - Latha Baiju

    https://www.pustaka.co.in

    விடியலில் ஒரு வெண்ணிலா

    Vidiyalil Oru Vennila

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-karunakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் – 32

    அத்தியாயம் – 33

    அத்தியாயம் – 34

    அத்தியாயம் – 1

    வெற்று வெள்ளைக்

    காகிதம் நான்... அதில்

    உன்னை வரைந்து

    வண்ணமாக்கிய

    வண்ணத்தூரிகை நீ...

    பாரதி, என்ன இருந்தாலும் நீ கவிதாவை எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சது தப்புதான்... தோழியைக் கடிந்து கொண்டே காலியாய் இருந்த மேஜையின் முன்னிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் வான்மதி. மதியம் முடிந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரமாதலால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்த பாரதியின் முகத்தில் இன்னும் கோபத்தின் சிவப்பு மிச்சமிருந்தது. கண்களும், உதடும் லேசாய் சிவந்து கிடந்தன.

    என்ன, நான் செய்ததுல என்ன தப்புன்னு சொல்லற... பாவம்..! காலுக்கு முடியாத பொண்ணு நடக்கும்போது தவறி விழப் போகவும், ஒரு பாலன்சுக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த கவிதாவைப் பிடிச்சிருக்கா... அதுல அவ கைல உள்ள மொபைல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சு, அதுக்குப் போயி அந்த சின்னப் பொண்ணை அப்படி அறையலாமா...? இப்போதும் கோபமாய் வெளிவந்தது பாரதியின் வார்த்தைகள். ஆவேசமாய் பேசியதில் லேசாய் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

    நீ சொல்லுறது சரிதான், கவிதா செய்தது சரின்னு நான் சொல்ல வரலை, மொபைல் உடைஞ்சு போன கோபத்துல ஆத்திரப்பட்டு அந்த ஊனமான பொண்ணை அடிச்சுட்டா... அதுக்காக நம்ம பிரண்டுன்னு கூடப் பார்க்காம கவிதாவை நீ எல்லார் முன்னாடியும் அறையலாமா...? இப்போதும் வான்மதி கவிதாவுக்கு சப்போர்ட் செய்து பேச மேலும் கோபம் ஏறியது பாரதிக்கு.

    ஏய், என்ன சும்மா ஊனம், ஊனம்னு பேசிட்டு இருக்க, நிஜத்துல ஊனம் அந்த சின்னப் பொண்ணுக்கு இல்ல... கை, கால் எல்லாம் சரியா இருக்கிற சிலருக்கு தான் மனசு ஊனமா இருக்கு... உடம்புல இருக்கிற ஊனம் தப்பில்லை, மனசு ஊனமாப் போறது தான் தப்பு... அவங்களும் மனுஷங்கதான்னு நினைக்காம கிண்டல் பண்ணுறது, ஏளனமாப் பார்த்து சிரிக்கிறது, மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிறது இதெல்லாம் தான் மிகப் பெரிய ஊனம்... படபடவென்று பொரிந்தவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியாமல் வான்மதி திகைத்து நின்றாள்.

    கோபத்தை அடக்க முடியாமல் பாரதி கை விரல்களை திறந்து மூடிக் கொண்டிருக்க வான்மதி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

    சட்டென்று அருகே நிழலாடவும் நிமிர்ந்த பாரதி, ரெண்டு காபி... என சொல்லப் போனவள் அங்கே யாரோ ஒருவன் தலை கலைந்து, விலை உயர்ந்த கசங்கிய சட்டையோடு நிற்கவும், என்னவென்பது போல் பார்த்தாள்.

    அளவான உயரமும், அழகான முகமுமாய் நின்றவனின் கண்கள் மதுவருந்தியதால் சிவந்திருந்தது.

    ஹலோ, எக்ஸ்யூஸ் மீ... என்றவன் வாயிலிருந்து குழறலான வார்த்தைகளோடு வெளிப்பட்ட மதுவின் வாடை இருவரையும் முகம் சுளிக்கச் செய்ய அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சியடைய செய்தது.

    உடம்புல இருக்கிற ஊனம் பெருசில்லை, மனசுலதான் ஊனம் இருக்கக் கூடாதுன்னு பேசினியே, ஐ லைக் இட்... நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா... முதன்முதலாய் காணும் யாரோ ஒருவன் சட்டென்று அப்படிக் கேட்கவும் பாரதி திகைத்துப் போய் அதிர்ச்சியுடன் நிற்க, அதற்குள் வேறு ஒருவன் வேகமாய் அவர்களிடம் வந்தான்.

    டேய் ரிஷி, நான் வரதுக்குள்ள இங்க என்ன பண்ணிட்டிருக்க... ச..சாரி மேடம், என் பிரண்டுதான்... கொஞ்சம் டிரிங்க்ஸ் பண்ணிருக்கான், அவன் பேசினதை தப்பா எடுத்துக்காதிங்க... சொல்லிக் கொண்டே அவனை இழுத்துக் கொண்டு நகர கையை உதறினான் ரிஷி.

    விடுடா, என்னால யார் தயவும் இல்லாம நடக்க முடியும்... என்றவன் ஒரு காலை கொஞ்சம் சாய்த்து விந்திக் கொண்டே நடந்தான். பார்க்க அழகனாய் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தவனின் ஒரு கால் மட்டும் சிறிது வளர்ச்சி குறைந்து போயிருந்தது.

    பெருசா ஊனம்னு லெக்சர் கொடுக்க வந்துட்டா, வாய் கிழிய எல்லாராலும்தான் இப்படிப் பேச முடியும்... ஆனா தன் வாழ்க்கைன்னு வரும்போதுதான் இந்த ஊனம் எல்லாம் பெருசா தெரியும், இதெல்லாம் ஊரை ஏமாத்தப் போடுற வேஷம்... குழறலாய் சொல்லியபடி நண்பனின் தோளில் கையிட்டுக் கொண்டே தள்ளாடியபடி வெளியே நடந்தவனை கண்ணை எடுக்காமல் பார்த்திருந்தாள் பாரதிப்பிரியா. பார்க்க அழகாய் கம்பீரமாய் இருந்தவன் நடக்கும்போது ஒரு காலை இழுத்து நடக்கவும் தான் அவன் பேசியதன் காரணம் அவளுக்குப் புரிய திகைப்புடன் பார்த்து நின்றாள்.

    நடப்பதை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வான்மதி தான் முதலில் அந்த நிகழ்விலிருந்து மீண்டாள்.

    பாரதி... என்னடி நடக்குது இங்கே, யாருடி அவன்...? உனக்கு அவனைத் தெரியுமா....? படபடவென்று கேட்ட தோழியிடம் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தவள், இல்லை.. என்பது போல் தலையாட்டினாள்.

    முன்னப் பின்னத் தெரியாத ஒரு பொண்ணுகிட்ட அவன் வந்து கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேக்கறான்... நீ என்னடான்னா கோபப்படாம, பதில் சொல்லாம திகைச்சுப் போயி நிக்கற... நீ ஏன் அமைதியா இருக்க...?

    தெரியலை மதி... ஆனா அவர் அப்படி என்கிட்ட பேசினதை விட காலை விந்தி விந்தி நடந்து போகறதைப் பார்க்க தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாருக்கு... என்றவளை அதிசயமாய் பார்த்தாள் வான்மதி.

    என்னடி சொல்லற, ஊனம் இருக்கவங்களைப் பார்த்து கிண்டல் பண்ணக் கூடாதுன்னு சொன்னா, சட்டுன்னு அவன் வந்து கல்யாணம் பண்ணிக்க கேப்பானா...? என்னமோ போ, இங்க வந்ததுல இருந்து ஒண்ணுமே சரியில்லை... சொன்னவள் எழுந்து கொள்ள பாரதி முறைத்தாள்.

    என்ன எழுந்துட்ட, காபி வேண்டாமா...?

    ப்ச்... குடிக்கிற மூடே போயிருச்சு, வா... கிளம்பலாம்... எனவும் மறுக்காமல் பாரதியும் கிளம்ப இருவரும் வெளியே வந்தனர். பாரதியின் மனதில் ரிஷி சொன்ன வார்த்தைகளும் அவன் காலை விந்தி நடந்து போனதும் மட்டுமே நிறைந்து இருக்க அமைதியாய் நடந்தாள்.

    என்ன பாரதி, நீ இன்னும் அவன் சொன்னதையே நினைச்சுட்டு இருக்கியா...?

    இருந்தாலும் அவருக்கு ரொம்ப தைரியம்ல... இத்தனை பேரு முன்னாடி தெரியாத ஒரு பொண்ணுகிட்ட இப்படிக் கேட்க எவ்ளோ துணிச்சல் இருக்கணும்... என்றவளை விநோதமாய் பார்த்த வான்மதி,

    ஆஹா, உனக்கு என்னமோ ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்... அவன் தண்ணி போட்டுட்டு குருட்டு தைரியத்துல வந்து அப்படிக் கேட்கவும் எனக்கு எவ்ளோ பதட்டம் ஆகிருச்சு தெரியுமா...? எல்லாரும் நம்மளையே வேற பார்த்தாங்க... இண்டர்வியூக்கு வந்த இடத்துல நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம், நாம கிளம்புவோம்...

    சொன்னவள் சற்றுத் தள்ளி நின்ற ஆட்டோவுக்கு கை காட்ட அது அருகே வந்து நிற்கவும் பாரதியின் கையைப் பிடித்து ஆட்டோவில் ஏற அமர்ந்தனர்.

    இருவரும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். இளையராஜாவை ஒலிக்க விட்டு இருக்கையை விட்டுக் காணாமல் போயிருந்த பஸ் டிரைவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாய் 4.30 காட்டியபோது இருக்கைக்கு வர பேருந்து புறப்பட்டது.

    "நீதானே என் பொன் வசந்தம்...

    புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்..."

    SPB யின் குரல் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்க பாட்டை ரசிக்கத் தொடங்கிய பாரதியின் கையில் சுரண்டினாள் வான்மதி.

    கவிதா இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பான்னு நினைக்கறேன், நீ அவளுக்கு ஒரு போன் பண்ணி சாரி சொல்லேன், பாரதி... வான்மதி சொல்ல தோழியை முறைத்தாள்.

    நான் எதுக்கு சொல்லணும், தப்புப் பண்ணது அவ... வேணும்னா அவ கால் பண்ணட்டும்... சொல்லிவிட்டு கண்ணை மூடி பாட்டை ரசிக்கத் தொடங்கிய தோழியை ஒரு இயலாமையுடன் பார்த்துவிட்டு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் வான்மதி.

    பாரதிப் பிரியாவின் மனம் பாட்டை உள்வாங்க மெல்லிய கை விரல்கள் கம்பியில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தை பேருந்து எட்டிப் பிடிக்கத் தொடங்க வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது.

    மதி, எழுந்திரு... பஸ் ஸ்டாண்ட் வந்திருச்சு... தனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த தோழியை எழுப்பிய பாரதி பாகை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானாள். தலையை ஒதுக்கிக் கொண்டு வான்மதியும் எழுந்தாள்.

    சில நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினர்.

    அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி இருபது நிமிடப் பயணத்தில் அவர்களின் வீடு இருந்த தெருவுக்குள் வண்டி நுழைந்தது. ஒரு காம்பவுண்டு வீட்டு முன்பு ஆட்டோ நிற்க இருவரும் இறங்க வான்மதி பணத்தைக் கொடுத்தாள்.

    பாரதி, உள்ள வாடி... ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்... வான்மதி அழைக்க கைகடிகாரத்தைப் பார்த்தவள்,

    ம்ம்... சரி, லேசா தலை வலிக்குது, இனி வீட்டுல காபி கிடைக்காது... அம்மாவோட ஸ்பெஷல் காபியைக் குடிச்சிட்டே போறேன்... அப்பதான் தெம்பா திட்டு வாங்க முடியும்... சொன்னபடி அவளுடன் நடந்தாள்.

    ஹாலில் காலை நீட்டி அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் வான்மதியின் அன்னை கௌசல்யா.

    இவர்களைக் கண்டதும் புன்னகைத்து, வாங்கடி, டைம் ஆச்சே, உங்களைக் காணமேன்னு பார்த்தேன்... என்றார்.

    ம்ம்... கிளம்ப கொஞ்சம் லேட்டாகிருச்சு, அப்பா எங்கே மா... என்றாள் வான்மதி.

    கடைக்குப் போயி பழம் வாங்கிட்டு வரேன்னு போனார், இப்ப வந்திருவார்... நீ உக்காரு பாரதி, ரெண்டு பேரும் காபி குடிக்கறீங்களா...?

    ம்ம்... உங்க காபி வேண்டாம்னு சொல்ல யாருக்காச்சும் மனசு வருமாம்மா, அதுக்குதான் வந்தேன்... என்றவள் சோபாவில் அமர கௌசல்யா புன்னகையுடன் எழுந்தார்.

    உன் அக்கா சக்தி கொஞ்சம் முன்னாடி தான் நீ போன் பண்ணியான்னு இங்க வந்து கேட்டுட்டுப் போனா... உன் அத்தை கச்சேரியை ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறேன்...

    ம்ம்... பாவம் அக்கா, அந்த அரக்கியை ச்சே, அத்தையை எப்படி சமாளிக்கிறாளோ...

    ஹாஹா, அதெல்லாம் சக்தி சமாளிச்சுப்பா... நீங்க இண்டர்வியூ எப்படிப் பண்ணீங்க...? அடுக்களையில் இருந்தே அவர் கேட்க,

    எங்கேம்மா, வழக்கம் போல ஊத்திகிச்சு... மேனேஜ்மென்ட் முன்னமே ஆளுங்களை செலக்ட் பண்ணி வச்சுட்டு தான் இண்டர்வியூ ஆபர் பண்ணுறாங்க... இந்த வேலையும் கோவிந்தா தான்... என்றாள் சலிப்புடன்.

    சரி, உங்களுக்குன்னு எழுதினது வேற யாருக்கும் கிடைக்கப் போறதில்லை, கவலைப்படாத... இந்தா, காபியைக் குடி... சூடான பில்டர் காபியில் ஆவி பறக்க டம்ளரை நீட்டினார்.

    அதை நுகர்ந்தவள், வாவ்... என்ன ஒரு ஸ்மெல், உங்க காபிக்கு நான் அடிமை மா... என்றாள், கண்ணை மூடி நாசிக்குள் காபியின் மணத்தை உள்ளிழுத்துக் கொண்டு.

    அதற்குள் உடை மாற்றி வந்த வான்மதி, ஏண்டி, உன் வீட்டுலயும் பில்டர் காபி போடலாம்ல... அதென்ன, உலகத்துல கிடைக்காத அவ்ளோ பெரிய அதிசயமா... கேட்டுக் கொண்டே அன்னை நீட்டிய காபியை வாங்கிக் கொண்டு தோழியின் அருகே அமர்ந்தாள்.

    ஹூக்கும்... அத்தை எங்களுக்கு காபிங்கற பேருல கழனித் தண்ணியைக் கொடுக்கிறதே பெருசு... இதுல பில்டர் காபிக்கு எங்கே போக... சொல்லிக் கொண்டே டம்ப்ளரில் இருந்த இறுதிச் சொட்டு காபி வரை உறிஞ்சியவள் அடுக்களைக்கு சென்று கழுவி வைத்துவிட்டு வந்தாள்.

    கௌசி அம்மாவோட காபியைக் குடிச்சதும் எட்டிப் பார்த்த தலைவலி கூட ஓடிப் போயிருச்சு, தேங்க்ஸ்மா... என்றவள்,

    சரிடி, நான் கிளம்பட்டுமா...? என்றாள் தோழியிடம்.

    இரு பாரதி... சப்பாத்தி சாப்பிட்டுப் போகலாம்... கௌசல்யா சொல்ல வேகமாய் தலையாட்டி மறுத்தாள்.

    அச்சோ, அதெல்லாம் வேணாம் மா, ஆல்ரெடி என்னைக் காணோம்னு அக்கா திட்டு வாங்கிட்டு இருப்பா... காபிக்கு மட்டும் தான் நான் அடிமை, சப்பாத்தி எல்லாம் என்னை அசைக்க முடியாது... சிரிப்புடன் சொன்னவளை நோக்கிப் புன்னகைத்தவர், சரிம்மா... கிளம்பு, டைம் ஆச்சு... என்றார்.

    அவளை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வான்மதி உள்ளே செல்ல அதே தெருவின் இறுதியில் இருந்த வீட்டை நோக்கி வேகமாய் எட்டெடுத்து வைத்தாள் பாரதி.

    முன்னிலேயே தங்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த சக்திபிரியா, அவளைக் கண்டதும் நிம்மதியுடன் மலர்ந்தாள்.

    பாரதி... உன்னைக் காணோம்னு தவிச்சிட்டிருந்தேன்...

    ஏன்க்கா, அத்தை ரொம்ப சத்தம் போடுதா...?

    ப்ச்... அதுக்காக இல்லடி, இருட்டிடுச்சு... இன்னும் உன்னைக் காணலேன்னா மனசு தவிக்காதா...? அத்தையை சமாளிச்சாலும் அடிக்கடி நீ வந்துட்டியான்னு கேக்கற அம்மாவை என்னால சமாளிக்க முடியலை...

    ம்ம்... எனக்கு வேலை கிடைச்சதும் முதல்ல உனக்கு ஒரு மொபைல் வாங்கிக் கொடுக்கணும்...

    எனக்கு எதுக்குடி..? மொபைல் எல்லாம்... வர்றதுக்கு லேட் ஆனா லான்ட்லைன்க்கு ஒரு போன் பண்ணி சொல்ல வேண்டியது தான...

    போன் பண்ணா அத்தை தான் எடுக்கும்... எடுத்து ஆயிரத்தெட்டு குத்தம் சொல்லிட்டு போனை உன்கிட்ட கொடுக்காது, அதுக்கு எதுக்கு போன் பண்ணனும்... சொன்னவளின் பார்வை வீட்டுக்குள் அத்தையைத் தேடியது.

    பேச்சு சத்தம் கேட்டு ரூமிலிருந்து வெளியே வந்த அத்தை அஷ்டலட்சுமியின் முகம் பாரதியைக் கண்டதும் அஷ்டகோணலாய் மாறியது.

    வாடி, வயசுப்புள்ளயா லட்சணமா நேரம் காலத்தோட வீட்டுக்கு வரியா... விடியக்காலை இன்டர்வியூன்னு சென்னைக்கு கிளம்பிப் போனவ, இருட்டின பிறகு வீட்டுக்கு வர்ற... பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க...? குரலை உயர்த்த அமைதியாய் பார்த்தாள் பாரதி.

    அத்த... இப்ப நான் லேட்டா வந்தது உங்களுக்குப் பிரச்சனையா...? இல்ல பார்க்கிறவங்க நினைக்கறது பிரச்சனையா...? யாரு நினைக்கிறாங்கன்னு சொல்லுங்க, நான் வேணும்னா விளக்கம் கொடுத்துட்டு வரேன்... என்றதும் அஷ்டலட்சுமி கடுப்புடன் அவளைப் பார்க்க சக்தி தங்கையின் கையில் சுரண்டி, சும்மா இருடி... கெஞ்சினாள்.

    என்னடி வாய் நீளுது... இன்னும் வேலைக்கே போகல, அதுக்குள்ள இவ்ளோ பேசத் தொடங்கிட்ட... இதுக்கு தான் உன்னை இண்டர்வியூக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லறேன்... எங்க..? அந்த மனுஷன் கேட்டாத் தானே... தங்கச்சி பொண்ணுங்கன்னு தலை மேல தூக்கி வச்சுட்டு ஆட வேண்டியது... இத்தன நாள் சோறு போட்ட நன்றி கொஞ்சமாச்சும் இருக்கா, எப்படித் திருப்பிக் கேள்வி கேக்குது பாரு... உதட்டை சுளித்து சொன்னவர்,

    இன்னைக்கு வரட்டும் அந்த மனுஷன்... சக்தி, நீ எதுக்கு இங்க வேடிக்கை பார்த்துட்டு நிக்கற, போயி நைட்டுக்கு டிபன் செய்யற வேலையைப் பாரு... என்னமோ, உன் தங்கச்சி ஒலிம்பிக்கில ஜெயிச்சு தங்க மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவ போல வாசல்ல வரவேற்க நின்னுட்டு இருக்க... அவளையும் விரட்ட,

    இதோ போறேன் அத்தை... என்றவள் அடுக்களைக்கு நகர, அவளுடனே செல்ல முயன்ற பாரதியை நிறுத்தினார்.

    ஏய் நில்லுடி, நீ எங்க ஓடற... இண்டர்வியூக்கு போனியே என்னாச்சு... உன்னைப் பார்த்ததுமே கம்பெனிக்காரன் அடிச்சு துரத்தி இருப்பானே... தேளாய் வார்த்தைகளால் கொட்ட கடுப்புடன் நோக்கினாள் பாரதிப்பிரியா.

    அத்தை... நாங்க உங்களை என்ன பண்ணினோம், எதுக்கு எப்பவும் இப்படி எங்களை கரிச்சு கொட்டறீங்க... என் அக்கா இந்த வீட்டுல சம்பளம் இல்லாத வேலைக்காரியா எல்லா வேலையும் செய்துட்டு தானே இருக்கா... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க, எப்படியாச்சும் எனக்கு ஒரு வேலையைத் தேடிட்டு நாங்க தனியா போயிடறோம்... அப்புறம் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது...

    ஹூம்... போதும்டி, ரொம்பதான் பேசாத... இதையே தான் நீ படிச்சு முடிச்ச நாள் தொட்டு சொல்லிட்டு இருக்க.. உங்க மூணு பேரையும் இத்தன வருஷம் வீட்டுல வச்சு பார்த்துகிட்டதுக்கு எனக்கு கொடுமைக்காரி பட்டம் எல்லாம் கொடுக்காத... உன் மாமா நீங்க தனியா போக சம்மதிக்க மாட்டார்னு தானே ஆட்டம் போடற, ஏன் லேட்டானா நான் உன்னைக் கேள்வி கேட்கக் கூடாதா...? என்றார்.

    அன்போட எத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க அத்தை, பதில் கிடைக்கும்... அடிமையா நினைச்சிடாதிங்க... சொன்னவள் அன்னையைத் தேடி அறைக்கு செல்ல ஒரு கட்டிலில் கண்கள் கண்ணீரில் நிறைய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தார் தேவிகா.

    ஒரு கையும், காலும் பக்கவாதத்தில் செயல்படாமல் போக வாயும் சற்று கோணிக் கொண்டு சரியாய் பேச முடியாமல் கிடந்தார். மகளைக் கண்டதும் ஒரு கையைத் தூக்க அன்போடு அதைப் பற்றிக் கொண்டாள் பாரதி.

    அம்மா... என்னைக் காணம்னு பயந்துட்டீங்களா...? எனவும் ஆம் என்பது போல் தலையாட்டினார்.

    கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் மா, வான்மதி வீட்டுல காபி குடிச்சிட்டு வந்தேன்...

    போன காரியம் என்னாயிற்று...? சைகையில் கேட்க,

    வழக்கம் போல ஊத்திகிச்சு மா... பாரதி சொல்லவும் ஆயாசத்துடன் கண்ணை மூடிக் கொண்டார்.

    கவலைப்படாதீங்க மா... சீக்கிரமே எனக்கு வேலை கிடைச்சதும் நம்ம பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்... அவள் ஆறுதலாய் சொல்ல கண்ணைத் திறந்தவர்,

    அத்தை என்ன சொன்னாள்... என்பது போல் கையை விரித்துக் கேட்க, அலட்சியமாய் தலையைக் குலுக்கினாள் பாரதி பிரியா.

    அவங்களுக்கு அஷ்டலட்சுமின்னு பேரு வச்சதுக்குப் பதிலா அடாவடி லட்சுமின்னு பேரு வச்சிருக்கணும் மா... ரொம்ப பேசறாங்க, நீங்க அதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க, நம்ம மாமாக்கு எவ்வளவோ செய்திருக்கோம், அவர் இப்ப நமக்கு செய்யறார்... அத்தை என்னமோ பேசட்டும், மாமா நமக்கு சப்போர்ட்டா இருக்காரே அது போதும்... என்றாள்.

    அவ எதுவும் சொன்னாலும் பதில் பேசாதே... என்று தேவிகா கூற,

    அதுக்காக என்னால யாருகிட்டயும் அடிமையா இருக்க முடியாது மா... என்றவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

    ஒடுக்கப்படுகின்ற

    இடத்தில் அடங்காமல்

    இருக்கும்போது

    தன்மானம் தலைக்கனமாய்

    திரிந்து விடுகிறது...

    அத்தியாயம் – 2

    ரிஷி... மணி பதினொன்னு முடிஞ்சுது, போதும் வாடா... வீட்டுக்குக் கிளம்பலாம்...

    அழகான விளக்குகள் அங்கங்கே ஒளிர்ந்து இருட்டை விரட்டிக் கொண்டிருக்க குடிமகன்களின் தாகம் தீர்க்க இரவு நேரத்திலும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மூன்று ஸ்டார் பாரின் மேஜை ஒன்றின் முன்பு அருகருகே அமர்ந்திருந்தனர் ரிஷியும், நண்பன் சூர்யாவும்.

    ரிஷி குழறலாய் புலம்பிக் கொண்டே கண்ணாடிக் குடுவையில் மிதந்த பொன்னிற திராவகத்தை எடுத்து குடித்துவிட்டு வைத்தான்.

    துரோகி, அவனுக்கு நான் என்னெல்லாம் பண்ணிருக்கேன்... என்னைப் பார்த்து இப்படி சொல்ல எப்படி மனசு வந்துச்சு... பணத்துக்காக தான் என்னோட பழகி இருக்கானா...?

    டேய், அவன் ஏதோ லூசுத்தனமா சொல்லிட்டான், அதுக்காக அதையே நினைச்சு புலம்பிட்டு இருக்காத... சூர்யா சமாதானம் சொல்ல ரிஷி கோபத்துடன் முறைத்தான்.

    என்னடா, நீ அந்த அர்ஜூனுக்கு சப்போர்ட்டா... அதெப்படி அவன் என்னை நொண்டிக்காலன்னு சொல்லலாம்... ஆசையா அவன் புது பைக்கை ஓட்ட எடுத்ததுக்கு என்ன பேச்சுப் பேசிட்டான்... நொண்டிக் காலை வச்சிட்டு பிரேக் போட முடியாது, புதுவண்டியைக் கீழ போட்டுடுவன்னு என்னைப் பார்த்து சொல்ல எப்படி மனசு வந்துச்சு, அதான் அடிச்சுட்டேன்... அதுக்கு என்னைத் தள்ளி விட்டுட்டான், ராஸ்க்கல்ல்... பல்லைக் கடித்தவன் மீண்டும் அந்த திராவகத்தை தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான்.

    ரிஷி, போதும் டா, அவன் ஏதோ சொல்லிட்டான்னு நீ எதுக்கு இப்படி குடிக்கிற... சூர்யா தேற்ற முயன்றான்.

    முடியலடா சூர்யா... அவனுக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட தான ஓடி வருவான்... பத்தாயிரம் வேணும் மச்சி, இருபதாயிரம் பீஸ் கட்ட வேணும்னு கேக்கும்போது எல்லாம் நண்பனா உரிமையா கேக்கறான்னு தான நினைச்சு சந்தோஷமா செய்தேன்... இப்ப அவன் வேலைக்குப் போயி புதுசா பைக் வாங்கினதும் என் நட்பு பெருசாத் தெரியலை, என் நொண்டிக்கால் தான பெருசாத் தெரியுது... அப்ப இந்தப் பணத்துக்காக தான் இவ்ளோ நாள் என்னோட பிரண்ட்ஷிப் வச்சிருந்தானா...? வேதனையுடன் சொன்னவன் மீண்டும் அந்த அமிலத்தைக் குடிக்க சூர்யா கவலையுடன் பார்த்தான்.

    டேய் ரிஷி, வீட்டுக்குக் கிளம்பலாம்டா, உன்னை விட்டுட்டு தான் நான் கிளம்பனும்... இப்படிக் குடிச்சா எப்படிடா...? சூர்யா வேதனையுடன் சொல்ல அவனை அன்போடு அணைத்துக் கொண்டான்.

    நீ என் நண்பன் டா... என் தளபதி, மம்முட்டிக்கு ரஜினி போல எனக்கு நீ உயிர் நண்பன் டா...

    ஹூக்கும், இந்த டயலாகுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, எவனாச்சும் ஒரு வார்த்தை சொல்லுறதுக்குள்ள உனக்குள்ள இப்படி சுருண்டு போகாதேன்னு எத்தனை முறை சொல்லிருக்கேன், குடிச்சுக் குடிச்சு உன்னை எதுக்குடா அழிச்சுக்கற...

    ப்ச், என்னத் தடுக்காத டா... எத்தனை பணம் இருந்து என்ன...? இந்த நொண்டிக் காலோட நடக்கும்போது ஒவ்வொருத்தரும் பாக்குற பார்வைல என் மனசு பொசுங்கிப் போயிடுது... எல்லாத்தையும் சகிச்சுக்கிற அளவுக்கு நான் அவ்ளோ நல்லவன் எல்லாம் இல்லை... குடிகாரன், குடிச்சு குடிச்சு செத்துப் போறேன் விடு...

    ரிஷி, ஏன் இப்படிப் பேசற... குடிக்கிறது சுபாவம் இல்லை, அது ஒரு பழக்கம் அவ்ளோ தான்... அது மட்டும் இல்லேன்னா உன்னைப் போல தங்கமான குணம் உள்ளவனைப் பார்க்கிறது ரொம்ப கஷ்டம்...

    டேய், சும்மா என்னை டாப் ஆக்காத... நான் ஒரு நொண்டி, எல்லாரும் ஏளனமாப் பார்க்கிற அளவுக்கு தான் என் தோற்றம் இருக்கு... என் வாழ்க்கை இப்படியே போகட்டும்...

    அப்படி சொல்லாதடா, உன் நல்ல மனசுக்கு கடவுள் நிச்சயம் உனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார்... ஊனம் உடம்புல இருந்தா தப்பில்லை, மனசுல வரக் கூடாது... நீ இப்போ எல்லாம் மனசளவுல ரொம்ப முடங்கிப் போயிட்ட... அதுதான் எனக்கு கவலையாருக்கு...

    சரி சரி, உபதேசம் கேக்குற மூடுல நான் இல்லை, பேச்சைக் குறை... பாட்டில் தீர்ந்திடுச்சு, இன்னொரு விஸ்கி சொல்லு...

    டேய் டைம் என்ன ஆச்சு தெரியுமா, பன்னெண்டு ஆகப் போகுது... போதும் டா, உன் அண்ணி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... சூர்யா சொல்லவும் சட்டென்று நிதானத்துக்கு வந்தான் ரிஷி.

    ம்ம்... ஆமால்ல, பாவம் அண்ணியை வெயிட் பண்ண விடக் கூடாது, ஓகே நாம கிளம்பலாம்... இந்தா, பில் செட்டில் பண்ணிடு... சொன்னவன் அவனது பர்ஸை எடுத்து சூர்யாவிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன் பில்லை செட்டில் செய்ய இருவரும் கிளம்பினர்.

    தள்ளாடியபடி வந்த ரிஷியை சூர்யா தாங்கப் போக, ஹூம்... நோ நோ, ஐ ஆம் ஸ்டடி... என்றவன் காலை சாய்த்துக் கொண்டு தடுமாறி சமாளித்து நடந்தான். இருவரும் கார் பார்க்கிங்குக்கு வர, சூர்யா ரிஷியின் சிவப்பு நிற போலோவை எடுத்து வந்தான்.

    ரிஷி அமர்ந்ததும் காரை எடுத்தவன், உன்னை வீட்டுல விட்டுட்டு காரை எடுத்துட்டுப் போறேன்... என்னோட பைக்கை நாளைக்கு வந்து எடுத்துக்கறேன்... எனவும் தலை ஆட்டியவன் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

    ரிஷியின் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்த அடுத்த நிமிடமே கதவைத் திறந்தாள் அண்ணி கங்கா.

    சாரி அண்ணி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு... உள்ளே நுழைந்த ரிஷியிடமிருந்து வீசிய மதுவின் நொடியில் முகத்தை சுளித்தவள், எதுக்கு தான் இதை இப்படி உள்ள ஏத்திக்கறியோ...? உன் அண்ணாவுக்குத் தெரியாம உன்னை எவ்ளோ நாள் தான் காப்பாத்துறது, கொஞ்சம் கம்மியாத்தான் குடியேன்... என்றவள் சூர்யா நிற்பதைக் கண்டதும்,

    சூர்யா, இவனை அப்படியே ரூமுல விட்டுட்டுப் போயிடேன், தள்ளாடி எங்காச்சும் விழுந்து வைக்கப் போறான், சத்தம் கேட்டா இவன் அண்ணன் எழுந்து வந்திருவார்...

    சரி அண்ணி... என்ற சூர்யா ரிஷியை அறைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வாசல் கதவைத் தாளிட்டு ரிஷியிடம் வந்த கங்காவிடம், அண்ணி... ரொம்பப் பசிக்குது... என்றான் ரிஷி.

    ஹூக்கும், இப்படி குடிச்சு வயித்தை நிறைக்கிறதுக்குப் பதிலா நல்லா சாப்பிட்டு நிறைக்கலாம்ல, நீ வந்ததும் கேப்பேன்னு தான் உன் ரூம்லயே சப்பாத்தியும் குருமாவும் கொண்டு வந்து வச்சுட்டேன்... சொன்னவள் ஒரு பிளேட்டில் வைத்து நீட்ட நெகிழ்வுடன் வாங்கிக் கொண்டான் ரிஷி.

    நீ என் அண்ணி இல்லை அம்மா... என்றவனின் கலைந்திருந்த தலையை மேலும் செல்லமாய் கலைத்து விட்ட கங்கா, இப்படி சொல்லியே என் வாயை அடைச்சிடு... சரி, சாப்பிட்டுப் படு... உன் அண்ணா என்னைத் தேடப் போறார், நான் போறேன்... என்றவள் அறைக்கதவை சாத்திவிட்டு மாடியிலிருந்த அவர்கள் அறைக்கு சென்றாள். மனம் நெகிழ பார்த்த ரிஷி, என் அம்மா கூட இப்படி பார்த்துப்பாங்களா தெரியல, அண்ணி எங்க வாழ்க்கைல வந்த தேவதை... என நினைத்தபடி சப்பாத்தியை சாப்பிடத் தொடங்கினான்.

    ***

    கங்கா...

    அலுவலகம் செல்லத் தயாராய் புறப்பட்டு மாடிப்படிகளில் இறங்கி வந்த ஹரி மனைவியை அழைக்க, அடுக்களையில் இருந்து எட்டிப் பார்த்தாள் கங்கா.

    ஹரி, நடிகர் சமுத்திரக்கனிக்கு டூப் கொடுக்கலாம் என்பது போல் நெடு நெடுவென்று உயரமாய் வளர்ந்திருந்தான். சுருள் முடியும், மாநிறமுமாய் கம்பீரமாய் இருந்தாலும் கண்களில் ஒரு கனிவு எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது.

    அடுக்களையிலிருந்து வந்த கங்கா கையிலிருந்த ஹாட் பாக்ஸை உணவு மேஜையில் வைத்துவிட்டு ஏறிட்டாள். அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் பணத்தின் செழுமையும், பியூட்டி பார்லரின் உபயமும் அழகியாக்க முயன்றதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்க மாநிறத்துக்கும் சற்று அதிகப்படியான நிறத்துடன் அழகாகவே இருந்தாள்.

    கிளம்பிட்டிங்களா... வாங்க, சாப்பிடுங்க...

    நான் கிளம்பறது இருக்கட்டும், நீ இன்னும் கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே... மார்னிங் லெவன் உனக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருந்தியே...

    ஆமாங்க, இன்னைக்கு மாதவி லீவு, அதான் நானே சமையல்ல இறங்கிட்டேன்... நம்ம ரிஷிக்கு பிடிக்குமேன்னு பனியாரமும், புதினா சட்னியும் பண்ணேன்... உங்களுக்குப் பிடிச்ச ஆனியன் ஊத்தாப்பமும் ரெடி... சொல்லிக் கொண்டே தட்டை வைத்துப் பரிமாற ஹரி புன்னகைத்தான்.

    எங்கே உன் செல்லப் பிள்ளை ரிஷி...? இன்னும் அவனுக்கு விடியலையா...?

    பாவம் சின்னப் பையன், லேட்டா தான் தூங்கினான்... நீங்க சாப்பிடுங்க... சொன்னபடி காரசட்னியை வைத்தாள்.

    எதுக்கு லேட்... ஊரைச் சுத்திட்டு நைட்டு லேட்டா வர்றானா... இரு, இன்னைக்கு அவனை நான் ஒரு புடி புடிக்கறேன்... சொன்னவன் எழப் போக தடுத்தாள் கங்கா.

    ப்ச்... விடுங்களேன், சின்னப் பையன்..! எதாச்சும் புதுப்படம் ரிலீஸ் ஆனதைப் பார்க்க நைட்ஷோ போயிருப்பான்... என்கிட்டே லேட்டாகும் அண்ணின்னு சொல்லிட்டு தான் போனான்... காலங்கார்த்தால குழந்தையை படக்குன்னு எதுவும் சொல்லிடாதீங்க... நீங்க சாப்பிடுங்க, நான் எழுப்பி விடறேன்... என்றாள் கங்கா.

    ம்ம்... நீ குடுக்கற செல்லத்துல தான் அவன் குட்டிச்சுவராப் போறான், அவனை இப்படியே விடக் கூடாது...

    ப்ச்... நாம ரெண்டு பேரும் நிக்க நேரமில்லாம எல்லா நிர்வாகத்தையும் பார்த்துக்கறோம்... சின்னப்பையன், அவனாச்சும் சுதந்திரமா எல்லாம் அனுபவிக்கட்டுமே...

    கங்கா, என் அம்மா இருந்தாக் கூட அவனை இப்படித் தாங்குவாங்களா தெரியலை... ஆபீஸையும் நிர்வாகம் பண்ணிட்டு, வீட்டையும் எவ்ளோ பொறுப்பாப் பார்த்துக்கற... உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு மா...

    இது என் குடும்பம், இதை நான் பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பா... என்றாள் கங்கா புன்னகையுடன்.

    ஆனாலும் ரிஷிக்கு நீ ஓவரா செல்லம் கொடுக்கிற... அண்ணியா இல்லாம, ஒரு அம்மாவா அவனுக்கு வேண்டிய எல்லாத்தையும் குறை இல்லாம பார்த்துக்கிற... அது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, உன்னைக் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வரும்போது ரிஷிக்கு பதிமூணு வயசு... அப்பாவும், அம்மாவும் ஆக்சிடன்ட்ல இறந்து போனதைத் தாங்கிக்க முடியாம ரொம்ப நொறுங்கிப் போயிருந்தான்... அவனுக்கு அந்த குறை தெரியக் கூடாதுன்னு தான் நான் சீக்கிரம் உன்னைக் கல்யாணம் பண்ணினேன்... அவனை சொந்தப் பிள்ளையா பார்த்துகிட்டு அந்த நம்பிக்கையை இப்ப வரைக்கும் நீ காப்பாத்திட்டு வர்ற...

    என்னங்க பேசறிங்க... ரிஷிதான் எப்பவுமே எனக்கு தலைப்பிள்ளை, அவனுக்கு அப்புறம் தான் என் வயித்துல பிறந்த ரோஷன், எனக்குப் பிள்ளை... என்றவளைக் கனிவோடு நோக்கினான் ஹரி.

    அதான் எனக்குத் தெரியுமே கங்கா, நீ சொல்லனுமா என்ன...? சரி, ரோஷன் எப்ப ஹாஸ்டல்ல இருந்து வரான்னு கேட்டியா...? பத்து வயது ரோஷன், ஊட்டி கான்வென்டில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.

    "எக்ஸாம் தொடங்கப் போகுது, லீவுல வர்றேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1