Uyir Kaadhalil Or Kavithai!
4/5
()
About this ebook
Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.
She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.
Read more from Uma Balakumar
Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Verena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thodatha Nilavu! Rating: 3 out of 5 stars3/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsManam Vizhithathu Mella! Rating: 4 out of 5 stars4/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVaram Tharum Vasanthame! Rating: 5 out of 5 stars5/5En Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Un Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsMounam Kalaindha Devathai! Rating: 2 out of 5 stars2/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Unnai Ponnena Kanda Pozhuthile! Rating: 4 out of 5 stars4/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsImaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Engum Nirai Porsudare Rating: 0 out of 5 stars0 ratingsNesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratingsNee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsInba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsNinaithu Marukuthadi Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Maruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Theendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5
Related to Uyir Kaadhalil Or Kavithai!
Related ebooks
Unnudane Naan Rating: 4 out of 5 stars4/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Kaadhalenbathu Yaathenil Rating: 5 out of 5 stars5/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Malarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ninaithu Marukuthadi Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsTheendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5En Nenjam Un Thanjam... Rating: 3 out of 5 stars3/5Engeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Azhagey Vaa! Arugil Vaa!! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsAmuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsMan Kudhiraigal Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uyir Kaadhalil Or Kavithai!
1 rating0 reviews
Book preview
Uyir Kaadhalil Or Kavithai! - Uma Balakumar
http://www.pustaka.co.in
உயிர்க் காதலில் ஓர் கவிதை!
Uyir Kaadhalil Or Kavithai!
Author:
உமா பாலகுமார்
Uma Balakumar
For more books
http://www.pustaka.co.in/home/author/uma-balakumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
சமர்ப்பணம்
என்னைப் பாசத்துடன் வளர்த்த... என்னுடைய தாய்வழித் தாத்தா திரு. ஜனகரத்தினம் அவர்களுக்கு...!
தாத்தா... மறக்க முடியவில்லை!
வெளிப்பார்வைக்கு முட்பலாவாய் தெரிந்த உங்களுக்குள்... கற்கண்டுச் சுளையாய் என் மேல் பதுங்கியிருந்த... அந்த இனிய பாசம்!
என்னை சைக்கிளில் சுமந்து சென்று, ஆசை ஆசையாய் வாங்கித் தந்த... இன்றும் என் ஆழ்மனதிலும், நாவிலும் மறக்க முடியாத இனிமையுடன் உலரா நினைவாய் ஒட்டியிருக்கும்... எனக்குப் பிடித்த கோதுமை அல்வா!
மஞ்சள் காமாலையின் வீர்யம், வீச்சாய் என்னைத் தகர்த்து, நான் பலவீனமாய் ஒடுங்கியிருக்க... ஒரு தாயுமானவனாய் நீங்கள் என்னைப் பேணிய... என்றும் மனதிற்குள் நீங்காது ஒளிர்ந்திருக்கும்... என் பத்தாவது வயது!
எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அதை வெளிக்காட்டாது கெளரவம் காத்தல்... உங்களிடமிருந்து நான் படித்த... கல்வெட்டாய் மனதில் செதுக்கிய, ஒரு உன்னதப் பாடம்!
நீங்கள் இறந்து விடுவீர்களோவென்ற பயத்தில்... உங்களுக்காக மட்டுமே... என் வாழ்க்கையில் நான் முதன் முதலில் சிந்திய... கடலளவு கண்ணீர்!
உங்களின் இறப்பு... எனக்குள் அறிமுகப்படுத்திய... முதல் கவிதைத் துளி!
உங்களுடைய ஞாபகங்கள் எனக்குள் ஆழ்கடலாய் புதைந்திருந்தாலும், ஒவ்வொரு முறை மூழ்கும்போதும்... ஒரு வித சிலிர்ப்பையும், கண்ணீரையுமே இன்றும் அறிமுகப்படுத்துகின்றன.
உங்கள் உயிருக்கு விலையாக, அன்று என்னிடம் ஒன்றுமேயில்லை.. இன்றே இறந்து விடலாமென்ற விரக்தி உணர்வைத் தவிர!
ஆனால், இன்று கேட்டிருந்தால் தந்திருப்பேன்... ஏகலைவனாய் என் எழுத்தை!
அன்று... எழுத்துலகில் நான் முதன் முதலில் பாதம் பதித்த இனிய வைகறைப் பொழுதில்... என்னுடன் கைகோர்க்க நீங்கள் இல்லாதது... பெரும் வெற்றிடம்!
இன்று... என் எழுத்தினால், நான் உங்களுக்கு செலுத்துகின்ற அஞ்சலியாய், இந்தப் புத்தகம்... உங்கள் பாதங்களுக்கு... என் சமர்ப்பணம்!
- உமா பாலகுமார்
உயிர்க் காதலில் ஓர் கவிதை!
1
சூரியன், இருளைத் தோற்கடித்த கம்பீரத்துடன் உதயமாகி, பூமியில் தன் கதிர்களை மென்மையாகப் படர விட்டுக் கொண்டிருந்தான்.
தோட்டத்தில், மீண்டும் கிளைகளிடம் சேரும் பாக்கியத்தை இழந்து, தரையில் சிதறிக் கிடந்தன, பவளமல்லிப் பூக்கள்!
மெலிதாய் ஒளிரும் நட்சத்திரங்கள்... ‘கீச் கீச்’ என்று கத்தியபடி தாவி ஓடும் அணில்... சாலையில் போக்குவரத்து ஆரம்பித்து விட்டதை நாசிக்கு அறிவிக்கும், மெல்லிய பெட்ரோல் வாசனை... வீதியை வண்ண மயமாக்கி, வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து சலசலத்த படி செல்லும் கல்லூரிப் பெண்கள்...!
அந்தக் காலை நேர அவசர யுகத்தை ஜன்னல் வழியே சுவாரசியத்துடன் கவனித்தபடி, இளம் கத்திரிப் பூ நிறச் சுரிதாரில் தயாராகிக் கொண்டிருந்தாள் ப்ரீத்திகா.
தான் இன்று பேட்டி எடுக்க வேண்டிய ஒரு தன்னம்பிக்கை பெண்மணியைப் பற்றி எண்ணியபடியே கிளம்பிக் கொண்டிருந்தவளை, அவளுடைய ரூம்மேட் சுகன்யாவின் குரல் கலைத்தது.
ஜர்னலிஸ்ட் மேடம்! இன்னிக்கு யாரைப் பேட்டி எடுக்கப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? ஒரு நாள் என்னைப் பேட்டி எடுக்க மாட்டீங்களா?
கிண்டலாகக் கேட்டாள்.
ம்... அடுத்த தடவை எங்க எடிட்டர், யாராவது ‘சாட்டர் பாக்ஸை’ பேட்டி எடுத்துட்டு வான்னு சொன்னா... அப்ப வரேன்... இந்த ‘நான் ஸ்டாப்’ சுகன்யா கிட்டே… ஓகேயா?
ப்ரீத்திகாவின் குரலில் குறும்பு கசிந்தது.
ஏய்... என்னோட முதல் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை?
சுகன்யா செல்லக் கோபத்துடன் கேட்டாள்.
ம்... ஒரு சாதனைப் பெண்மணியைப் பேட்டி எடுக்கப் போறேன்... வளர்ச்சியில்லாத வலது கை... அதுலயும் ரெண்டே விரல்கள்... அந்த அற்புதப் பெண்மணி சாதிச்சிருக்கிற ‘ஐ. ஏ. எஸ்.’ங்கிற பெரிய லட்சியம்... இதைப் பத்தித் தான் எழுதப் போறேன்... தமிழ்நாட்டுல தேர்ச்சி பெற்ற அஞ்சு பேரிலே அவங்களும் ஒருத்தர்... ஹாட்ஸ் ஆஃப் டு ஹர்! நினைச்சா ரொம்ப பிரமிப்பா இருக்கு...
வியப்புடன் பாராட்டினாள் ப்ரீத்திகா!
ஆமாம் ப்ரீத்தி கேள்விப்பட்டேன்!... எனக்கும் அவங்களை நேரிலே பார்த்து வாழ்த்துச் சொல்லணும் போலருக்கு!
ம்... அவங்களைப் பத்தி நினைக்கும்போது இன்னும் உத்வேகமா இருக்கு! கார்கில் போரிலேயும் காஷ்மீர் கலவரத்துலயும் துணிச்சலா ரிப்போர்ட்டிங் பண்ணின பர்கா தத் மாதிரி ஆகணும்னு மனசுல ஒரு உறுதி வருது. பெண்களாலே செய்ய முடியாதுன்னு நினைக்கிற கடினமான எல்லாப் பொறுப்புகளுக்குமே, இப்ப பெண்கள் வந்துட்டாங்க... நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது! சரி... டைம் ஆயிடுச்சி! நான் வரேன்...
கிளம்பினாள் ப்ரீத்திகா.
அந்த சாதனைப் பெண்மணியைப் பேட்டி எடுத்தபோது, உள்ளம் நெகிழ்ந்து போனது.
அவருடைய பெற்றோரின் ஒத்துழைப்பும், அவரின் தன்னம்பிக்கையும் பெரும் வியப்பையும் மரியாதையையும், மனதிற்குள் தந்தன.
நம்ம லட்சியப் பாதை எவ்வளவு கரடு முரடா இருந்தாலும் அடையப் போற இலக்கை மட்டுமே குறி வைச்சு முன்னேறினா அந்த இலக்கை கண்டிப்பா அடைஞ்சிடலாம்... நம்பிக்கைக்கு சக்தி அதிகம்... நாம் எதுவாக நினைக்கிறோமோ கட்டாயம் அதுவாகவே ஆவோம்
என்று அவர் கூறிய மந்திர வார்த்தைகள், மெய் சிலிர்க்க வைப்பதாய்!
***
ஒரு தன்னம்பிக்கை தேவதையை தரிசித்த திருப்தியுடன் பேட்டி முடிந்து திரும்பி வரும்போது, அவளுடைய செல் ஒலிக்க ஆரம்பித்தது.
ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தால், அவருடைய மாமா வீட்டிலிருந்துதான் அழைத்திருந்தார்கள்.
ஹலோ... நான்தான் மாமி பேசறேன் ப்ரீத்தி... எனக்கு பயமா இருக்கு... நீ உடனே கிளம்பி வர முடியுமா?
பதட்டத்துடன் கேட்டார் அவளுடைய மாமாவின் மனைவி கௌசல்யா.
மாமி! என்னாச்சு? மாமா கூட ஊரிலே இல்லையே... ஏதாவது ப்ரச்னையா?
ஆமாண்டி! ஷீலாவை நம்ம பக்கத்து நர்ஸிங் ஹோமிலே சேத்திருக்கேன்... நீ நேரில் வாயேன்! விபரம் சொல்றேன்...
மேலே பேச முடியாமல் உடைந்து போய் அழ ஆரம்பித்தார் அவர்.
"சரி... நான் உடனே வரேன் மாமி... வசந்த் நர்ஸிங் ஹோம் தானே?’ என்று கேட்டுவிட்டு அவசரமாகக் கிளம்பினாள்.
அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது... ஷீலா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விபரம்!
அவளைக் கண்டதுமே அழ ஆரம்பித்த கெளசல்யா, விசும்பல்களுக்கிடையில் மெதுவாக விபரம் கூறினார்.
பெரிய பணக்காரப் பையனாம்... யாரோ ஒருத்தனை இவ விரும்பி இருக்கா! அவனும் காதலிக்கிற மாதிரிப் பழகிட்டு திடீர்னு இவளைக் கல்யாணம் பண்ணிக்க மறுத்திட்டானாம். அதனால் இந்தப் பாவிப் பொண்ணு இப்படி ஒரு முடிவெடுத்திருக்கா...
அவர் முடித்த உடனே ப்ரீத்தியின் மனம் பதறிப் போனது. பதைப்புடன் வேகமாக ஷீலாவிடம் சென்றாள்.
ஸ்டமக் வாஷ்
செய்யப்பட்டு ஓய்ந்து போய் படுத்திருந்தாள் அவள்.
ஆதரவாக அவள் தலையைக் கோதியவள், ஷீலா... ஏன்டி இப்படி ஒரு மடத்தனமான முடிவெடுத்தே?
தவிப்புடன் கேட்டாள்.
ஒரு விம்மலுடன் திரும்பி தலையணையில் முகம் புதைத்தவள், சமாதானமாக வெகு நேரமாகியது.
பிறகு, திக்கித் திணறி அவள் கூறிய கதை, பெரும் வேதனையைத் தந்தது.
நான்.... ஒருத்தரை... ஆறு மாசமா விரும்பறேன் ப்ரீத்தி... அவர் பெரிய பணக்காரர்! அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டாரு..!
வேதனையுடன் கூறினாள்.
அவரும் உன்னை விரும்பினாரா?
ப்ரீத்தி கேட்டபோது, தயக்கத்துடன் தலை குனிந்தபடி தலையசைத்துவிட்டு உடனே விசும்ப ஆரம்பித்தாள் அவள்.
ஷீலாவின் விழிகளிலிருந்து வெள்ளமாய் வழிந்த கண்ணீரை, அவள் பரிவுடன் துடைத்து விட்டாள்.
"அழாதே ஷீலு... நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடணும்... எனக்கு பெரிய வருத்தம் என்ன தெரியுமா? எப்பவுமே காலேஜுல நடக்கிற விஷயமெல்லாம் என்கிட்ட மறைக்காம ஷேர் பண்ணிப்பே! இவ்வளவு முக்கியமான விஷயத்தை எப்படிடி மறைச்சே! காதல் வந்தா எல்லாமே கண்ணை விட்டு மறைஞ்சிடுமா?
மனசு கட்டுப்பாடு இல்லாம எதை வேண்டுமானாலும் கேட்கும். அலை பாயும்!
ஆனா அதை அடக்கக்கூடிய மாபெரும் சக்தி உன்னிடம் மட்டும்தான் இருக்கிறது. உன் புத்தியின் சக்தியை முதலில் அறிந்து கொள்!
இது பரமஹம்ச யோகானந்தரோட பொன் மொழி! உன்னை... உன் உணர்வுகளை முதல்லே அடக்கப் பழகிக்கோ!... ப்ளீஸ்...
அதைக் கேட்ட ஷீலா மிரண்டு விழித்தாள். என்னால முடியலைடி... உன்னை மாதிரி போல்டா, ஸ்போர்டிவ்வா என்னால இருக்க முடியாது...
ஒரு பெருமூச்சுடன் முடித்தாள்.
யாருடி அந்தப் பெரிய மனுஷன்? அதுதான், இந்தப் பணக்கார ஆளுங்களை எல்லாம் நம்பவே கூடாதுன்றது...! உனக்கு ஏன்டி இப்படி புத்தி போச்சு... அவரு கிட்டே நான் வேணாப் பேசவா!
ஆதங்கத்துடன் கேட்டாள்.
உடனே பதறிப் போய் எழுந்து அமர்ந்தாள் ஷீலா. வேணாம் ப்ரீத்தி!... எல்லாமே முடிஞ்சு போச்சு... அதை மறுபடி கிளற வேண்டாம்... விட்டுடுடி!
கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீருடன் இறைஞ்சினாள்.
ப்ரீத்திக்கு, தாங்க முடியாத கோபமும் வெறுப்பும் வந்தன.
‘உன் அலட்சியத்தாலும், புறக்கணிப்பாலும் ஒரு பெண் எப்படி உருக்குலைந்து போயிருக்கிறாள் பார்’ என்று, அந்தப் பணக்காரனின் சட்டையைப் பிடித்து உலுக்கி முகத்திலறைந்தாற்போல் கேட்க வேண்டும் போல்!
பிறகு ஷீலாவிடம் இது பற்றி அவள் ஒன்றுமே பேசவில்லை. மாமியிடம் விடைபெற்று அலுவலகத்திற்குச் சென்றாள்.
தான் எடுத்த பேட்டியையும், போட்டோவையும் எடிட்டரிடம் கொடுத்தபோதுதான், ஷீலாவைக் காதலித்தவன் யாரென்றே கேட்காமல், தான் வந்து விட்டது நினைவு வந்தது.
இன்றிரவு, அவளைப் பார்க்கச் செல்லும்போது, கட்டாயம் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
2
அன்று, பத்திரிகை அலுவலகத்தில் வேலைகள் இயல்பாக நடந்தன.
மாலையானதும், மருத்துவமனைக்கு ஷீலாவைப் பார்க்கச் சென்றபோது அவள் இயல்பாகி இருந்தாள்.
ராமலிங்கம் மாமா, ஊரிலிருந்து வந்திருந்தார். கவலையுடன் மெளனமாக அமர்ந்திருந்தவரின் முகம், பெரும் வேதனையிலிருக்க, ப்ரீத்திக்கு அதைப் பார்க்கத் தாங்கவில்லை.
மெதுவாக, தணிந்த குரலில் ஷீலாவிடம் விசாரித்தாள்.
ஷீலா!... உன்னோட அந்த ஹீரோ... சாரி... சாரி... அந்த வில்லன் பேரு என்னடி?
ம்... ஆகாஷ்... ஜே. பி. குரூப் ஆஃப் கம்பெனிஸ்ஸோட சேர்மன்!
மென்று முழுங்கியபடி கூறினாள் அவள்.
ப்ரீத்தியின் புருவங்கள் உயர்ந்து விண்ணைத் தொட்டன!
தி ஃபேமஸ் ஜே.பி. குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஆகாஷா? அவர் பெரிய பிக் ஷாட்டாச்சேடி... நீ எப்படி அவரை மீட் பண்ணினே?
யோசனையுடன் வினவினாள்.
என் ஃப்ரெண்டோட பர்த் டே பார்ட்டிக்கு அவர் வந்திருந்தப்போ பார்த்தேன்... அதுலதான் ஆரம்பமாச்சு... என் காதல்! வேண்டாம் ப்ரீத்தி... அதைப் பத்தி பேச வேணாம்… விட்டுடலாமே...
பெருமூச்சுடன் முடித்தாள் அவள்.
பிறகு, அவளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் விட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு வரும்போது நேரமாகி விட்டது.
அவளுடைய இளமைக் காலமும், பழைய நினைவுகளும் மனதில் கரை புரண்டு வந்தன.
ப்ரீத்திகா தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை ஒரு விபத்தில் இழந்து விட்டதால் மாமாவின் ஆதரவிலேயே வளர்ந்தவள்.
முதலில் கௌசல்யா அவளை வளர்க்க மறுத்தாலும், சம்பளமில்லாத ஒரு வேலைக்காரியாய் அவள் கிடைத்தது, அவருக்கு பெரும் வசதியாய் போனது.
ப்ரீத்தியை விட ஒரு வயதே சிறியவளான ஷீலா, ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் இருக்க, வீட்டிலுள்ள அனைத்து வேலைகளுமே ப்ரீத்தியின் தலையில்தான் விழும்.
தன் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவளும் அனுசரித்து நடந்து கொள்வாள்.
ஆனால், அவளுடைய படிப்பிற்கு மட்டும் கௌசல்யா தடை விதிக்காமல் பார்த்துக் கொண்டார் ராமலிங்கம்.
அவளுடைய பெயரில் பெற்றோரால் போடப்பட்டிருந்த வைப்புத் தொகையின் வட்டியும், வீட்டு வாடகையும், ப்ரீத்தியின் படிப்பிற்கு மிகவும் உதவின.
மாமா வீட்டிலேயே தங்கியிருந்து, ஜர்னலிசமும் படித்து முடித்து அவள் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான், ஒரு முடிவெடுத்து ராமலிங்கத்திடம் பேசினாள்.
அவர் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், இனியும் அவர்களுக்கு பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை.
வேலைக்குச் சேர்ந்த அந்த மாதமே, ஒரு வொர்க்கிங் விமன் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டாள்.
ஷீலாதான் அவள் பிரிவில் மிகவும் ஓய்ந்து போய் வருந்தினாள். ஒரு வருடமாகப் போகிறது... ப்ரீத்தி அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து!
திருமண வயதில் பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கும்போது, அருகிலேயே தேவதை போல் ஒரு நாத்தனார் மகளும் இருப்பதை எண்ணி, கெளசல்யாவின் மனம் சஞ்சலத்துடனிருந்த நேரம் அது.
அந்த நேரத்தில் ப்ரீத்தி வீட்டை விட்டுக் கிளம்பிய போது, முதலில் வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான்!
ஷீலா ஒப்பனைகளோடு பார்த்தாலே சுமாராகத்தான் இருப்பாள்... ஆனால் ப்ரீத்தியோ எந்தவித அலங்காரமுமின்றி இருந்தாலும், எல்லோரா ஓவியம் போலிருப்பாள்.
எலுமிச்சை நிறத்தில், உயரமாக... கொடியிடையுடன், கவிதை பேசும் கண்கள் அந்த முகத்திற்கு அழகு சேர்க்க, குழியும் கன்னங்களுடன் துறுதுறுவென்று இருப்பவளைப் பார்த்தாலே கெளசல்யாவிற்கு அடி வயிற்றைக் கலக்கும்!
ஷீலாவைப் பெண் பார்க்க யாராவது வரும்போது, அவர்கள் கண்களில் ப்ரீத்தி பட்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம், அவரைப் பெரிதும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.
அதனாலேயே, உடனே அவளை லேடீஸ் ஹாஸ்டல் அனுப்ப சம்மதித்தார் அவர்.
அவ வாரக் கடைசியில் வீட்டுக்கு வரப் போறா... லோக்கல் கார்டியன் நீங்கதானே...? நாமளும் போய் அப்பப்ப பார்த்துட்டு வந்தாப் போவுது!
என்று கணவரையும் அமைதிப்படுத்தினார்.
ஷீலாவிற்குத்தான், இந்த ஏற்பாட்டில் வருத்தம்! வார, இறுதி நாட்களில், இல்லையென்றால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, ஞாயிறன்று மாமா வீட்டிற்கு ஓடி வந்து விடுவாள் அவள்.
சிறு வயதிலிருந்தே வளர்ந்த இடம் என்பதால் அந்த வீட்டிற்கு வந்ததும் ஒரு இதமும், பாதுகாப்புணர்வும், அவளை ஆக்கிரமிப்பதென்னவோ உண்மையாய்!
அத்துடன் ஷீலாவும் அவளுடைய வயதிற்கேற்ற நல்ல துணையாய் இருக்கவே, அந்த வார இறுதி நாட்களுக்காகவே, மனம் ஏங்கிக் காத்திருக்கும். மனதிற்குள் சுகமான எண்ண அலைகள் கரை புரள, மெதுவாக உறங்க ஆரம்பித்தாள் ப்ரீத்திகா.
***
அந்த வாரத்தில், அவளுடைய பேட்டி அழகிய வண்ணக் கவிதையாய், பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
நாட்கள், இமைக்க நேரமின்றி சிறகு விரித்துச் சென்றன. ஆனால், மனதோரம் அந்த ஆகாஷின் மேல் ஒருவித வன்மம் மட்டும் வளர்ந்துகொண்டே போனது.
ஒரு ஞாயிறன்று, அவள் ராமலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
அப்போதுதான், ஷீலாவை அன்று மாலை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வரப் போவதாக கௌசல்யா தெரிவித்தார்.
உன் மாமா பொண்ணுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு ப்ரீத்தி! கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒரே அடம்... மாப்பிள்ளை நமக்கு தூரத்துச் சொந்தம் தான்... அமெரிக்காவுலே ஸாப்ட்வேர் இன்ஜினியரா இருக்காரு... அவங்களா விரும்பி வராங்க... அவளை புத்திசாலித்தனமா நடந்துக்கச் சொல்லு...
கலங்கிய விழிகளுடன் அவர் கூற, உடனே மனம் இளகிப் போனது ப்ரீத்திக்கு!
அவருடைய கையைப் பிடித்து ஆதரவாக அழுத்தியவள், எல்லாம் நான் பார்த்துக்கறேன் மாமி... நீங்க போங்க.
தேறுதல் கூறி அனுப்பிவிட்டு, ஷீலாவின் அறைக்குச் சென்றாள்.
படுக்கையில் படுத்தபடி விட்டத்தை வெறித்திருந்தவளைப் பார்த்தபோது, பரிதாபமாய்... அந்த முகமறியா ஆகாஷின் மீது பெரும் சீற்றம் வந்தது.
சமீபத்தில் வந்த பாடல் வரிகள்தான் அப்போது நினைவிற்கு வந்தன!
காதல்... நெருப்பின் நடனம்!
உயிரை உலுக்கி தொடரும் பயணம்!
காதல்... நீரின் சலனம்...
புயல்கள் உறங்கும் கடலின் மெளனம்!
காதலின் வித்தியாசமான ஒரு பரிணாமத்தை அப்பாடல் வரிகள் அறிமுகப்படுத்துவதுபோல்!
தலையை உலுக்கி நிமிர்ந்தவள், ஷீலு! என்னடி பண்ணிட்டிருக்கே?
பரிவுடன் கேட்டபோது, ஆர்வத்துடன் எழுந்து அமர்ந்தாள் ஷீலா.
வாடி... வந்துட்டியா? என்னவோ மனசே சரியில்லை... எதிலயோ பெரிசா தோத்துப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு! ம்...
ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினாள்.
ஏன்... என்ன தோத்துப் போயிட்டே…? இப்படி ஒரு அருமையான பொண்ணு கிடைக்க அந்த ஆகாஷக்குத் தான் குடுத்து வைக்கலை! அதை விடு... மாமி அங்கே ஒரு குட் நியூஸ் சொன்னாங்க... நீ என்னடான்னா இங்கே அழுது வடிஞ்சிட்டிருக்கே!
கேலியாக அவளையே நோக்கினாள்.
ஆமாம்... பொண்ணு பாக்க வராங்களாம். எனக்குப் பிடிக்கலை... என்னவோ ரொம்ப ரஷ் பண்ற மாதிரி இருக்கு... என் மனசு இன்னும் கல்யாணங்கற கமிட் மெண்ட்டுக்கே... ரெடியாகலைடி!
ம்... பொய் சொல்லாதே. கொஞ்ச நாள் முன்னாடி, ரெடியாயிருந்த மாதிரி ஒரு ஞாபகம்! ஷீலு! காதல்ங்கிறதெல்லாம் லைஃப்லே ஒரு பாஸிங் கிளவுட் மாதிரித் தான்! எப்பவுமே நாம் விரும்பறவங்களைவிட, நம்மை விரும்பி ஏத்துக்கறவங்களைக் கல்யாணம் செஞ்சு கிட்டா, வாழ்க்கை இன்னும் வண்ண மயமா இருக்கும்... மாமியும் பாவம்... ரொம்ப ஆசைகளும் எதிர்பார்ப்புமா இருக்காங்க... பழசை எல்லாம் மறந்திடுடி... புது வாழ்க்கைக்கு உன்னைத் தயார் பண்ணிக்க... ப்ளீஸ்...
மெதுவாகக் கூறினாள்.
இல்லைடி... இது என்னோட ஃபர்ஸ்ட் லவ்! உனக்கு சொன்னா புரியாது...
ப்ச்! எல்லாம் எனக்குப் புரியுது. முதல் காதல்தான் ஜெயிக்கணும்னா இந்த உலகத்துல பாதிப் பேர் பேச்சுலரா அலைய வேண்டியதுதான்... புரிஞ்சுக்க ஷீலா... நீ சின்னக் குழந்தையில்லை! அப்பா, அம்மா நம்மைப் பெத்து வளர்த்த வங்க. அவங்களுக்கு நம்ம மேல இல்லாத பாசமும் அக்கறையும், வேற யாருக்கும் வரப் போறதில்லை... அவங்க சந்தோஷத்துக்காக... நிம்மதிக்காக நீ இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கலாம் இல்லையா?
கனிவுடன் கேட்டாள்.
திடீரென்று ராமலிங்கத்தின் குரல் இடைமறித்தது.
"அப்படிச் சொல்லும்மா! நீ தான் இவகிட்ட பேசணும்னு உன்னை வரச் சொல்லலாம்கிறதுக்காக, ஹாஸ்டலுக்குப் போன் பண்ணப் போனேன்... வீட்டில் போன் சரியில்லை! அங்கே
