Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penney Un Mel Pizhai
Penney Un Mel Pizhai
Penney Un Mel Pizhai
Ebook421 pages3 hours

Penney Un Mel Pizhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாஸந்தியின் வீண் பிடிவாதம், வறட்டு கோபம் தேவையற்ற சந்தேகம் ஆகியவற்றால் உண்மையான நேசத்தையும், அருமையான நட்பையும் தொலைத்து விடுகிறாள். இதனால் அரவிந்த்க்கும், வாஸந்திக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? தனிமையில் தவிர்த்த வாஸந்தியின் நிலை என்ன? தடைகள் பல கடந்து அரவிந்த், வாசந்தி இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா வாருங்கள் படிக்கலாம்……………..

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580153808295
Penney Un Mel Pizhai

Read more from Abibala

Related to Penney Un Mel Pizhai

Related ebooks

Reviews for Penney Un Mel Pizhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penney Un Mel Pizhai - Abibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெண்ணே உன்மேல் பிழை

    Penney Un Mel Pizhai

    Author:

    அபிபாலா

    Abibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/abibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    முன்னுரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு,

    அபிபாலாவின் வணக்கங்கள். பொழுதுபோக்காக எழுதத் துவங்கிய நான், ‘சுவாசமடி நீ எனக்கு’ நாவல் மூலமாக உங்களுக்கு அறிமுகமானேன். இதோ, என் ஐந்தாவது நாவலான, ‘பெண்ணே உன் மேல் பிழை!’ நாவலோடு, உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!

    நான் எழுத வேண்டும் என என்னைத் தூண்டிவிட்டு, இன்று வரை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் என் குடும்பத்தினருக்கும், எனது கதைகளைப் படித்து நேரிலும், அலைபேசி, முகநூல் வாயிலாகவும் தங்களது மேலான விமர்சனங்களைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கும்,

    எனது நாவல்களைத் தொடர்ந்து வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கண்ணைக் கவரும் அழகிய அட்டைப் படங்களைத் தேர்வு செய்து கொடுத்து, என் எழுத்துப் பணி தொடர ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    இக்கதையில் நீங்கள் சந்திக்கப் போகும் அரவிந்த், வாஸந்தி, சுனில், காயத்ரியோடு உங்கள் நேரம் சுவாரஸ்யமாகக் கழியும் என நம்புகிறேன்.

    என்ன... சந்திப்போமா? தங்களின் மேலான விமர்சனத்திற்காக, ஆவலோடு காத்திருக்கிறேன்.

    அன்புடன்

    அபிபாலா

    1

    கோவை இரயில் நிலையம்... அந்த இரவு நேரத்திலும் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்த கூட்டமுமாகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மக்கள் ஆர்வத்தோடு உள்ளே சென்று கொண்டும், களைப்போடு வெளியேறிக் கொண்டும் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தனர்.

    பயணிகளின் அன்பான கவனத்திற்கு... என்று தொடங்கிய இனிமையான குரல், ஆங்காங்கே அமர்ந்து உறக்கத்தைத் தழுவ முயன்று கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது, இரயில் நிலைய வாயிலில் இருளைக் கிழித்துக்கொண்டு, வெள்ளை நிற வெர்னா ஒன்று வெண்ணெயாய் வழுக்கி நின்றது. அதிலிருந்து இறங்கிய இளைஞனுக்கு முப்பது வயதிற்குள் இருக்கும். சாக்லெட் நிற பேண்ட், வெளிர்மஞ்சள் சைனீஸ் காலர் டீ-ஷர்ட்டில் வசீகரமாகத் தோற்றமளித்தான். குனிந்து டிரைவரிடம் ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை நீட்டி, சிறுபுன்னகையோடு தலையசைத்துவிட்டு, தன் ப்ரீப்கேஸுடன் கம்பீர நடையுடன் உள்ளே விரைந்தான்.

    அவன் செல்ல வேண்டிய பிளாட்பாரத்தில் பச்சை விளக்கு ஒளிரவும், கிளம்ப ஆயத்தமாகயிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் தாவியேறினான். தன் இருக்கையைத் தேடி அடைவதற்குள், இரயில் ஒலியெழுப்பியபடி மெதுவாக நகரத் தொடங்கியது.

    கூபேயின் உள்ளே நுழைந்து, தனது ப்ரீப்கேஸை மேலே வைத்துவிட்டு ஆசுவாசமாகக் கண்மூடித் திறந்தவன், தனது எதிர் இருக்கையைப் பார்த்ததும் திகைத்துப்போனான். கண்கள் பிரகாசிக்க, நம்பமுடியாத ஒன்றை நேரிலேயே கண்டது போல விழி விரித்தவன்... சந்தோஷ மின்னல் தெறிக்க, விழியகலாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அந்தப் பெண்ணிற்கு இருபத்தி ஐந்து வயதிருக்கும். சௌகரியமாகக் கால்களை மடித்து, சுற்றுப்புறத்தை மறந்தவளாக, தன் கையிலிருந்த நாவலில் மூழ்கியிருந்தாள். தனது நீண்ட பின்னலை முன்புறம் போட்டு, அதன் நுனியில் மெல்ல அலைந்து கொண்டிருந்தன அவளது நகப்பூச்சு அணிந்திருந்த மெல்லிய விரல்கள். அவளது கடல் போன்ற விழிகளை, அடர்த்தியான குடைவிரித்த இமைகள் வளைந்து பாதுகாத்துக் கொண்டிருந்தன.

    அவன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

    உள்ளுணர்வு உந்த, மெல்லத் தலையை உயர்த்தியவளின் கண்களில், அவனைப் பார்த்ததும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே தோன்றி மறைந்த மின்னலை, அவனும் கண்டு கொண்டான். மெல்ல முறுவலித்தவனைக் கண்டு முகம் சுளித்துவிட்டு, மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினாள்.

    அதை உணர்ந்தவனது முகம் பாறையாக இறுகியது. ‘தான் அவளைக் கண்ணிமைக்காது பார்த்தச் செயலும், கண்ணியமானது அல்ல!’ என்பது புரிய, அவளிடம் ஐ யாம் சாரி! என்றான் மன்னிப்புக் கோரும் விதமாக.

    இதற்கும் அவனை ஏறிட்டுப் பார்த்ததோடு சரி. பதிலேதும் சொல்லாமல் மறுபடியும் தன் புத்தகத்தில் ஆழ்ந்தாள். அவளின் செய்கையில் தோளைக் குலுக்கியவன், தன் ப்ரீப்கேஸிலிருந்த பிஸினஸ் மேகஸின் ஒன்றை எடுத்துப் படிக்கத் துவங்கினான்.

    ஒரு மணிநேரம் அமைதியாகக் கழிய, ஏதோ ஒன்று அவனது கவனத்தைக் கலைத்தது. அவள்தான்! முகம் சிவந்து பளபளக்க, மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்துத் திகைத்தவன், தவிப்போடு வேகமாக எழுந்தான்.

    ஹே... இங்க பாரு! என்னாச்சு? ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க. என்ன பண்ணுது? ஏதாவது உதவி வேணும்னா... தயங்காம கேளு! என்றவனின் முகத்தில் தெரிந்த ஏதோவொன்று அவளையும் பேச வைத்தது.

    அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்று தோற்றவளாய், ஒன்றுமில்லை... ஃபீவர் கொஞ்சம் அதிகமாயிருக்கு! மூச்சுவிட சிரமமாயிருக்கு... என்றாள் மெல்லிய குரலில், மேல் பர்த்தில் மடித்து வைத்திருந்த ப்ளாங்கெட்டை எடுத்து நீட்டினான்.

    தேங்க்யூ! என்றவாறு புன்னகைத்தாள்.

    அவளையே தன் கூர்விழிகளால் அளந்தபடி, பை தி வே... ஐ யாம் அரவிந்த், ஃப்ரம் சென்னை. பிஸினஸ் மேன்! அப்பாவோட பிஸினஸெல்லாம் இப்ப நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்! என்றான்.

    அவனின் பார்வையில் தலை குனிந்தவள், நான் டாக்டர், வாஸந்தி. சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்! புது ஜாப்ல ஜாயின் பண்ண போயிட்டிருக்கேன்! என்றாள் தயக்கம் மேலிட.

    ‘பேச்சு அவ்வளவு தானா?’ என்பது போலப் புருவத்தை உயர்த்தியவனை, தன் சிவந்த விழிகளால் ஏறிட்ட வாஸந்தி ப்ளீஸ்! நீங்க படிக்கலைன்னா... லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் படுக்கலாமே? எனக்குக் கொஞ்சம் அன்-ஈஸியா இருக்கு! என்றாள் தடுமாற்றத்துடன்.

    அவளுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தவன், லைட்டை அணைத்துவிட்டுத் தன் பர்த்தில் கால்களை நீட்டியவாறு ஜன்னலோரம் சாய்ந்தமர்ந்தான்.

    உறக்கம் வர மறுக்க, கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகள், அவன் மனப் பெட்டகத்திலிருந்து மெல்லக் கிளம்பி மேலெழுந்தது. அதோடு, இன்று அவன் படித்த கல்லூரியின் ஓஷன் டே! பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடியிருந்தனர். ஐந்து வருடங்களுக்கு முன் எம்.டெக். முடித்து, இப்போது சென்னையில் சிறந்த தொழிலதிபருக்கான விருதை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் முன்னேறிக் கொண்டிருப்பவன் அரவிந்த். தன் நண்பர்கள் அனைவரோடும் இன்று முழுவதும் பேசிக் களித்த நினைவில், அவனது மனம் நிறைந்திருந்தது.

    ஏறக்குறைய அவன் நண்பர்கள் அனைவருக்குமே திருமணம் ஆகியிருந்தது. அதிலும் அரவிந்தின் உயிர்தோழன் சுனில், அவன் மனைவி காயத்ரி, அவர்களின் குட்டி தேவதை ஷர்மிதாவின் சந்திப்பில் அவனது இதயம் இனித்தது. அந்தச் சுட்டிப்பெண் ஆசையோடு ஓடிவந்து. ‘மாமா’ என்று இவன் கழுத்தைக் கட்டிக்கொண்டதும், அதன் பஞ்சுப்பொதி போன்ற ஸ்பரிசத்தின் இனிமையில் உருகித்தான் போனான். இந்த ஐந்து வருடங்களாய், தன் உயிர் நண்பனைக் கூடச் சந்திக்கவில்லை அரவிந்த்.

    ஆனாலும், இன்று அவனைப் பார்த்தபோது அவர்களுக்கிடையே இருந்த சுணக்கமும், மனக் கிலேசமும், அப்படியே பொடிப் பொடியாய் உதிர்ந்து போயின. இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டபோது, மனதால் இத்தனை வருடங்களாகப் பிரிந்திருந்த உணர்வு சற்றும் எழவில்லை.

    அவனது நண்பர்கள் அனைவருமே, மனைவி, குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகியிருந்தார்கள். இவன் மட்டுமே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, தொழிலே வாழ்க்கையாக, அதன்பின்னே நிற்காமல் ஓடியோடிக் களைத்திருந்தான். இந்தச் சந்திப்பு ஏதோவொரு விதத்தில் சோர்ந்திருந்த அவன் மனதிற்கும், உடலுக்கும், நிம்மதியையும் உற்சாகத்தையும் மீட்டுத் தந்திருந்தது.

    அதையும் மீறி, சுனிலைப் போல அழகான கவிதை போன்ற ஒரு குடும்பம் அமைய, தனக்குக் கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கத்தில் மனம் வெதும்ப, கண்களைத் திறந்தவனின் பார்வை எதிரில் எழிலோவியமாய்த் துயில் கொண்டிருந்த வாஸந்தியின் மீது படிந்தது. ஒரு மெல்லிய பெருமூச்சோடு முயன்று உறக்கத்தைத் தழுவினான்.

    வெகு தொலைவிலிருந்து யாரோ அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் தேய்ந்து ஒலிக்க, சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தான். இரவு நண்பர்களின் வற்புறுத்தலை மீற முடியாமல் சிறிதளவு மது அருந்தியிருந்தவனுக்கு, இதுவே முதன்முறை என்பதால் தலை சுற்றியது. இதுவே கடைசி என்று நினைத்தே ஒப்புக் கொண்டிருந்தான். ஆதலால் கண் விழிக்கவே முடியாமல், எரிச்சலாக இருந்தது. ஆனாலும், அவனின் புத்திக்கு உறைத்த தீனமான மெலிந்த குரல், அவனின் நினைவை மீட்டிருந்தது.

    வாஸந்தியின், அர்வி..ந்...த்...! என்ற அழைப்பில், தூக்கமெல்லாம் பஞ்சாய்ப் பறக்க, விரைந்து எழுந்து அவளருகில் சென்றான்.

    வாஸந்தி... என்ன பண்ணுது?

    மூச்சு விடத் திணறியவளால் பேசக்கூட முடியவில்லை. உடனடியாக அவளுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததும், அரவிந்த் தயங்கியது சில விநாடிகளே! அதன்பின் தேவையான முதலுதவியில் அவளது சுவாசம் சீரானதும், அவளருகில் அமர்ந்தவன், அவளது தலையைத் தன் மடிமீது வைத்துக்கொண்டான்.

    அவனின் உத்தரவுக்குக் காத்திராமலேயே, அவனது விரல்கள், அவள் கன்னத்தில் ஒட்டிக்கிடந்த கேசத்தை ஒதுக்கின. அவளைப் பார்க்கப் பார்க்க, அவன் முகம் மென்மையானது, கலைந்த ஓவியம் போல ஓய்ந்து போய் உணர்வின்றி கிடந்தவளைக் கண்டு, மனம் பொங்கியது. அவளின் பட்டுக் கன்னங்களை மிருதுவாக வருடினான்.

    ‘இவள் தான் எத்தனை அழகு!’ என்று தோன்ற, விழியகலாது அவளையே பார்த்தான்.

    அவனின் ஸ்பரிசத்தில் உடல் கூசிச் சிலிர்க்க லேசாக அசைந்தவள், அவனைப் பார்த்ததும் மெல்லிய கீற்றாக புன்னகைத்து. தேங்க்ஸ்! என்றதும், வெறுமே தலையசைத்தான்.

    வாஸந்தி, இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கு! என்றதற்கும், அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

    அழகிய சித்திரமாய்த் மடிமீது கிடந்தவளை, அவனது விழிகள் ஆர்வத்துடன் விழுங்கிக் கொண்டிருந்தன. மாசு மருவில்லாத குழந்தைத்தனமான அவள் முகத்தைப் பார்த்து மலைத்துப்போனான்.

    அரவிந்தின் இந்தப் பார்வை வாஸந்தியைச் சிலீரென்று தாக்க, தான் இருக்கும் நிலை உணர்ந்து, தன் சோர்வையும் மீறி எழ முற்பட்டாள். அது முடியாமல் தடுமாறி, அவனது சட்டையைக் கொத்தாகப் பற்றி, அர்வி... எனப் பேச முற்பட்டாள்.

    அவளைப் பேச வேண்டாம் என்பது போலத் தலையசைத்ததோடு மட்டுமல்லாமல், அவளது இதழ்களைத் தன் விரல்களால் மெல்ல வருடி, தாளமாட்டாமல் அவளின் நெற்றியில் இதழ் பதித்து, தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

    அவனது கதகதப்பான இதழ்கள் தன் நெற்றியில் புதைந்தபோது, ஏதேதோ உணர்வுகள் பொங்கியெழ, நிலைகுலைந்து போன வாஸந்தி... அதிர்ச்சி, திகைப்பு. கோபம் என உணர்ச்சிக் குவியலாய், அவனிடமிருந்து விலக முயன்று திமிறினாள்.

    வாஸந்தியின் மென்மையான ஸ்பரிசமும், அருந்தியிருந்த மதுவின் போதையும் ஒன்றாய்ச் சேர்ந்து, அவன் இத்தனை வருடங்களாகக் காத்து வந்த ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் தகர்த்தெறிந்தது. இரயிலின் மெல்லிய தாலாட்டு, ஏஸியின் குளிர், தனிமை என அனைத்தும், அவனது கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டன.

    அழுகையோடு ஆத்திரமும் சூழ, வெறுப்போடு அவனை விலக்க முற்பட்டவளைப் பார்த்து, ப்ளீஸ்! என்ற அரவிந்தின் கைகள் நடுங்கின.

    ஆவேசத்தோடு விழுந்த வாஸந்தியின் அடிகள் பூப்பந்தாய் அவனைத் தாக்க, புன்சிரிப்போடு அவளது கைகளைப் பற்றியவன், குனிந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். அவளது உடல் பலவீனம், அவனது வலிமைக்கு முன் தோற்றுப் போக, எளிதாக அவளின் பெண்மையைத் தனதாக்கிக் கொண்டான். அவளின் அத்தனை முயற்சிகளும், எதிர்ப்புகளும், கண்ணீரும் பயனற்றுப் போயின.

    சிறிதுநேரம் கழித்தே, அரவிந்திற்கு செய்த செயலின் வீரியம் புரிந்தது. போதை முற்றிலுமாகத் தெளிய, தன்னையே நொந்து கொண்டான். முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வாஸந்தியின் கண்ணீர் நிற்கவேயில்லை. தன் இயலாமையை எண்ணி அழுகையில் அவள் உடல் குலுங்கியது. அவளை ஏறிட்டுப் பார்க்கவும் மனம் கூசியவனாய், தன்னிரு கைகளாலும் நெற்றியை அழுத்திப் பிடித்து அமர்ந்திருந்தான். அவளின் ஓய்ந்த தோற்றம், அவனது குற்றவுணர்வைப் பன்மடங்காக்க, வெகுநேர மௌனத்திற்குப் பிறகு வாய் திறந்தான்.

    வாஸந்தி! சாரி... நான் உன்கிட்ட நடந்துகிட்டது. ரொம்பக் கேவலமான செயல்தான்! ஆனா...

    ச்சீ... என்கிட்டப் பேசாதே! அவள் சீற்றத்தோடு கண்ணகியாய் அடிக்குரலில் வெளிப்படுத்திய வெறுப்பு, அவனது இதயத்தைக் கூறு போட்டது.

    ப்ளீஸ்.... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு! உன்னை நான் பார்த்ததுமே... என் மனசுல...

    என்னை விட்டிருங்க! என்று கை கூப்பினாள்.

    அவளின் செயலில் மேலும் கலங்கிப் போன அரவிந்த், அவளது கைப்பற்றி, என்னைக் கொஞ்சம் பேச விடேன் என்றான் கெஞ்சலாக,

    அவன் கைகளை உதறியவள், இங்க பாருங்க சார்! இனிமே என்மேல உங்க விரல் பட்டா கூட, நான் ட்ரெயினிலிருந்து குதிச்சிடுவேன்! தயவு செய்து இங்கேயிருந்து போயிடுங்க... என்ன விட்டிருங்க! உடம்பு சரியில்லாம உதவிக்கு உங்களைக் கூப்பிட்ட பாவத்துக்கு, என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா உங்களுக்கு? உங்ககூடப் பிறந்தவளுக்கு இது மாதிரி யாராவது செஞ்சா, அவனை என்ன பண்ணியிருப்பீங்க? ச்சே...! உங்க முகத்தில முழிக்கிறது கூடப் பாவம்! என் கண் முன்னாலயே வராதீங்க கண்களில் நீர் வழிய கொதித்தவளைக் கண்டு, எதுவும் பேச வகை இல்லாதவளாய் தன் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

    ஒரே இரவில் அவன் வாழ்க்கையே சூறாவளியானது. அவளை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவின்றி இருளையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வாஸந்தியின் முனகல் மறுபடியும் அவனது கவனத்தைக் கலைத்தது. மீண்டும் அவளருகில் சென்றபோது, அவளுக்குப் பாதி உணர்வு மங்கியிருக்க, அரவிந்த் பதட்டமானான்.

    ம்ம்... மா... என்று அனத்திக்கொண்டே உடலை முறுக்கினாள்.

    அவள் நெற்றியைத் தொட்டவனின் கை சூடு தாங்காமல் பின்வாங்கியது. சுற்றும் முற்றும் தேடி, அவள் ஹேண்ட் பேகை எடுத்து, பீவருக்கான டேப்லட்டைக் கண்டுபிடித்தான். அதில் ஒன்றைக் கட்டாயப்படுத்தி விழுங்க வைத்து, அவளைத் தன் மடியில் கிடத்திக்கொண்டான். சுயநினைவின்றி ஓய்ந்து போய்க் கிடந்தவளை, குற்றவுணர்வு மேலோங்க உறுத்து விழித்தவனின் கண்களில் ஈரம்! தன்னிச்சையாக அவனின் கைகள், அவள் நெற்றியை வருடின. அவளைத் தன் மார்போடு சேர்ந்தணைத்த போது, நெஞ்சம் கலங்கிப்போனது.

    ஐந்து வருடங்களுக்கு முன்பு, தன் தந்தை இறந்தபோது சந்தித்த இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே இந்தளவு கலங்கியிருக்கிறான். அரவிந்த் இயல்பிலேயே திடமானவன். எத்தகைய சூழ்நிலையையும் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை அவனுக்கிருந்தது. நேர்மையாளனும் கூட!

    முதன்முறையாக, ‘இனி என்ன செய்வது?’ என்று புரியாமல் திகைத்தான். யோசித்து ஒரு திடமான முடிவெடுக்கும் போது, அந்தக் கொடுமையான நீண்ட இரவு கழிந்து, இரயிலும் சென்னை சென்ட்ரலை வந்தடைந்திருந்தது. தாமதம் செய்யாமல் போர்ட்டரை அழைத்து இருவருடைய லக்கேஜையும் தூக்கிக் கொடுத்துவிட்டு, அவளுடைய ஹேண்ட் பேகை மட்டும் கையில் எடுத்துக்கொண்டான். மறுகையால் அவள் இடையைச் சுற்றி வளைத்து, தன் தோள் மீது சாய்த்துக்கொண்டு கைத்தாங்கலாக நடத்திச் சென்றான்.

    வாஸந்தி! இங்க பாருடா... சென்னை வந்தாச்சு! மெதுவாக நட... நம்ம கார் வெளியே வந்திருக்கும்..... போகலாம்! என்றவனின் குரலில் இருந்த திடமே, அவன் தன் கம்பீரத்தை மீட்டெடுத்து விட்டதைப் பறைசாற்றியது. மறுத்து ஏதோ சொல்ல முயன்றவளை, அவனின் கண்டிப்பு கலந்த ஒரே பார்வை அடக்கியது.

    காரை நெருங்கியதும், போர்ட்டரிடமிருந்து லக்கேஜை வாங்கி டிக்கியில் அடுக்கினார் அதன் டிரைவர் மாணிக்கம். வாஸந்தியோடு பின்சீட்டில் ஏறி அமர்ந்து, அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அரவிந்த்.

    அண்ணா! கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்...

    சரிங்க தம்பி! போயிடலாம்! என்றதற்கு மேல், அவரும் எதுவும் பேசவில்லை.

    கார் சாலையில் சீறிப் பாய்ந்தது. நகரின் நடுவே எழும்பியிருந்த பங்களாவின் போர்ட்டிகோவில் கார் நின்றதுமே, மாணிக்கம் ஓடி வந்து கதவைத் திறந்தார்.

    காரிலிருந்து இறங்கிய அரவிந்த், வாஸந்தியை ஒரு குழந்தையைப் போல கைகளிலும் ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தான். கீழேயிருந்த விருந்தினர் அறையில் அவளைப் பூப்போலப் படுக்க வைத்தான். திரைச்சீலைகளை இழுத்து மூடி, ஃபேனை ஓடவிட்டு, இரவு விளக்கையும் ஒளிரச் செய்தவன், சத்தம் செய்யாமல் அறைக்கதவைச் சாத்திவிட்டு, அவளருகில் அமர்ந்தான்.

    ஆறரை மணியாகியும் இன்னும் ஆதவனின் கதிர்கள் முழுவதுமாக வெளிவராமல், இருள் சூழ்ந்திருந்தது. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான் அரவிந்த்.

    வாஸந்தி! ஸாரி ஃபார் எவ்ரி திங்! இனி, எல்லாம் சரியாயிடும்! நீ நம்ம வீட்டுக்குத்தான் வந்திருக்க. உன்னை அம்மா பார்த்துக்குவாங்க! என்று மெதுவாக முணு முணுத்தவன், அவளுக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தான்.

    சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த கமலாவிடம், அக்கா! அம்மா தூங்கறாங்களா? அவங்க தானா எழுந்துக்கட்டும். எழுப்ப வேண்டாம்! நான் பிரஷ் பண்ணிட்டு வந்திடுறேன். அஞ்சே நிமிஷம்! சூடா ஒரு கப் காபி மட்டும் கொடுங்கக்கா... என்றவன், இரண்டிரண்டு படிகளாகத் தாவியேறி மாடியிலிருந்த அறைக்குச் சென்றான்.

    ஹீட்டரைப் போட்டு, பல் துலக்கி, குளித்து முடித்து விட்டு, லுங்கி டீ-ஷர்ட்டுடன் தலையைத் துவட்டிக் கொண்டே கீழிறங்கினான். பூஜையறைக்குள் நுழைந்து கண்மூடி நின்றவனின் மனம் லேசானது.

    கமலாம்மா கொடுத்த காபியைப் பருகியவாறு, அக்கா! ஒரு கப் பால் ப்ளீஸ்... கொஞ்சம் சூடு குறைவா கொண்டு வாங்களேன்! என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

    வாஸந்தியின் அருகிலமர்ந்து, அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, பாலைப் பருகச் செய்தான். விடிந்த பிறகும் கூட, தூக்க மாத்திரையின் வீரியம் குறையாமல், அவளை ஆழ்ந்த நித்திரைக்கு இட்டுக் சென்றிருந்தது. டிஷ்யூவால் அவளது வாய் துடைத்து. நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஒற்றியெடுத்தவன், அவளை மீண்டும் படுக்கையில் கிடத்தினான். அவளிருந்த மனநிலையில் இந்தத் தூக்கம் அவசியம் என்றுதான், அவளது கைப்பையில் இருந்த தூக்க மாத்திரை ஒன்றை அவளுக்குக் கொடுத்தான்.

    இதுவரை அவனிடமிருந்த குழப்பங்கள் விலகி ஓடியிருந்தன. இனி, எடுக்க வேண்டிய முடிவுகளை மனம் பட்டியலிட, தெளிவானான். மணி ஏழானதும் தங்கள் ஃபேமலி டாக்டர் புகழேந்திக்குப் போன் செய்து, மெல்லிய குரலில் பேசினான்.

    தன் அன்னையைப் பார்த்துப் பேச வேண்டியதை முடிவு செய்தவனாய், வெளியே வந்தான். அவரது அறையில் ஒலித்த இசையைக் கேட்டதும், அவரின் அறைக்குள் நுழைந்தான். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் தன்னை மறந்து லயித்திருந்த கௌசல்யா, தன் மகனைப் பார்த்தும் முகம் மலர்ந்தார்.

    அர்வி கண்ணா! வந்தாச்சா. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. குளிச்சிட்டியா? அதுக்குள்ள என்ன அவசரம்? ஏன் என்னை எழுப்பலை? காபி குடிச்சியா? உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொன்னாங்க? சுனில் எப்படியிருக்கான்? வீட்டுக்கு வரச் சொன்னீயா? அவனைப் பேசவே விடாமல் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனவரைப் பார்த்துச் சிரித்தவன், அவரைத் தன் தோளோடு அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டான்.

    ஸ்டாப்... ஸ்டாப்... அம்மா! நான் ஆறு மணிக்குத் தான் வந்தேன்! அப்ப நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. எழுப்ப மனசு வரலை! எனக்குத் தூக்கம் வராததால, கமலாக்காகிட்ட சூடா காபி வாங்கிக் குடிச்சாச்சு! உங்களுக்கும் கொண்டு வரச் சொல்றேன். சுனில் பத்திப் பேச நிறைய இருக்கும்மா. நிறைய போட்டோஸ் இருக்கு பார்க்க, எல்லாம் மெதுவா காண்பிக்கிறேன். விளக்கம் போதுமா? என்று கேட்டுச் சிரித்தான்.

    கமலா கொண்டு வந்த காபியில் தானும் ஒரு கப் எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் அமைதியாக யோசித்து விட்டு, எப்படி ஆரம்பிப்பது என்பதைத் தீர்மானம் செய்தவனாய், அவரது காலடியில் வந்து அமர்ந்தவன், எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் தாயை ஏறிட்டான்.

    அம்மா! உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! நான் ஒரு பெரிய தப்பு செஞ்சிட்டேம்மா... என்றவனின் குரலில், கௌசல்யா கலங்கித்தான் போனார். தழுதழுத்த அவன் குரலிலிருந்தே விஷயம் பெரிது என்றும் புரிந்து கொண்டார்.

    அரவிந்த் பேசப் பேச... அதிர்ச்சியில் உறைந்து போனவரால், எதுவுமே பேச இயலவில்லை. திகைத்துப் போய் அவனையே உறுத்து விழித்தார்.

    அவன் பேசி முடித்ததும், கண்ணப்பா! நீயா... நீயா இப்படிச் செஞ்சே? நான்... எ...ன் காதில் விழுந்ததெல்லாம் உண்மையா? என் பையன் ரொம்ப ஒழுக்கமானவன்னு நினைச்சேனே. அவனுக்கு ஒரு சின்னத் தப்பு கூடச் செய்யத் தெரியாதுன்னு பெருமையா இருந்தேனே... அதெல்லாம் பொய்யா? இத்தனை பெரிய கொடுமையை... நீயா? அந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்கா? என்றவரின் குரலிலிருந்த வலி, அவனைச் சுட்டுப் பொசுக்கியது.

    ‘என்னை இவர் அறைந்திருந்தால் கூட மனதில் இத்தனைப் பாரம் ஏறியிருக்காது. கொஞ்சமாவது ஆறுதலாக இருந்திருக்கும்!’ என்று நினைத்தவனுக்கு, அவரை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவில்லாமல் போனது.

    கீழே இருக்கிற கெஸ்ட் ரூமில் தூங்கிட்டு இருக்காம்மா. டாக்டர் அங்கிள் எட்டு மணிக்கு வர்றதா சொன்னார். ஃபீவர் குறையவே இல்லம்மா! நைட் ரொம்ப அனத்திக்கிட்டே இருந்தா, கண்ணே விழிக்கல! எனத் தப்பு செய்து தாயிடம் மாட்டிக் கொண்ட சிறுவனைப் போல, அவன் குரல் மெலிந்து ஒலித்தது.

    கௌசல்யாவோ சற்றும் இளகாமல், அரவிந்த்! நீ அந்தப் பொண்ணுகிட்ட நடந்து கிட்டதை நியாயப்படுத்தவே முடியாது! பெண்களோட பிறக்காததால, உனக்கு அந்த வலி தெரியலை! உன் கூடப் பிறந்தவளுக்கு இப்படியொரு அநியாயம் நடந்திருந்தா, நீ அவனை வெட்டிப் போட்டிருப்ப தானே? ம்... சொல்லு! அதிலயும் உடம்பு சரியில்லாம பலவீனமா இருக்கிற பொண்ணுகிட்ட, உன் வீரத்தைக் காட்டினது மிருகத்தனமான செயல். மன்னிக்கவே முடியாத குற்றம்! அவங்க வீட்டில இவளப்பத்தின தகவல் தெரியாம எப்படித் துடிச்சிருப்பாங்க? முன்னபின்ன தெரியாத ஒரு பெண்பிள்ளையை... ச்சீ... தேர்ட் ரேட் பொறுக்கிக்கும், உனக்கும் என்னடா வித்தியாசம்? என்றார் கண்டிக்கும் குரலில்.

    துடித்துப் போனவனாய், அ...ம்...மா... ஒரு நிமிஷம்! நான் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கு. ப்ளீஸ்! நான் பேசி முடிக்கிற வரை கொஞ்சம் பொறுமையா கேளுங்க! அவளை ட்ரெயினில் பார்த்ததும், கொஞ்சம் தடுமாறிட்டேன். ஏன்னா... என்று ஆரம்பித்தவனை, கையுயர்த்தித் தடுத்தார் கௌசல்யா.

    போதும் அர்வி! இந்த வீட்டில எந்தவொரு விஷயத்தையும் முடிவு செய்கிற அதிகாரமும், உரிமையும் இன்னும் என்கிட்ட தானே இருக்கு? அதில ஒண்ணும் மாற்றமில்லையே? விஷயத்தை என்கிட்டச் சொல்லியாச்சுல்ல, போதும். இனி, நீ எதுவும் பேசவேண்டாம்! என் வளர்ப்பு தப்பா போனதை நினைச்சாதான்.... வருத்தமாயிருக்கு! டாக்டர் வந்தா, ஹாலில் உட்கார வை. நான் வரேன்!

    அம்மா! நான்... நான் இப்படி நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. அவளைப் பார்த்ததுமே... என்றதைக் கேட்க, அவர் அங்கே இல்லை. கட்டிலில் தலைசாய்த்துக் கண்மூடி மௌனத்தில் ஆழ்ந்து போனான்.

    கௌசல்யா குளித்துவிட்டு நேராகக் கமலாவிடம் சென்று கஞ்சியைத் தயார் செய்யச் சொன்னார். பத்து நிமிடம் கழித்து ரூமுக்குக் கொண்டு வரச்சொல்லிவிட்டு, வாஸந்தி இருந்த அறைக்குள் நுழைந்தார். சோர்ந்து போய் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவளைப் பார்த்ததும், அவரது மனம் கனிந்தது. பால் போல மாசு மருவற்ற களங்கமில்லாத முகம், அவளது நிர்மலமான உள்ளத்தைக் காட்டியது. இந்தப் பெண்ணிடம் தவறு என்பதே இருக்காது என்பது துல்லியமாகத் தெரிந்தது அவருக்கு.

    2

    வாஸந்தி! அம்மா வாஸந்தி! இங்க பாரு! என்றவாறு அவள் கன்னத்தை வருட, காய்ச்சல் குறைந்திருப்பது புரிந்தது. உறக்கம் கலைந்து கண் விழித்தவள், கௌசல்யாவைப் பார்த்ததும் பதறிப் போனவளாய் வேகமாக எழ முயற்சி செய்தாள்.

    மெல்ல... பயம் வேண்டாம்! நம்ம வீடுதான். உட்கார முடியுதா பார். இப்ப எப்படியிருக்கு? இந்த ஓட்ஸ் கஞ்சியைக் குடிம்மா! கொஞ்சம் தெம்பா இருக்கும்! என்று சொல்லியவாறு ஸ்பூனால் கஞ்சியை எடுத்துக்கொடுத்து, அவளை விழுங்கச் செய்தார்.

    அவரின் மென்மையான அணுகுமுறையிலும், கனிவான பேச்சிலும் அயர்ந்து போனவளுக்குப் பேச நா எழவில்லை. தன்னை எந்தக் கேள்வியும் கேட்காமல், பரிவாகப் பேசிய அம்முதியவளின் கருணை பொங்கும் முகத்தைப் பார்த்ததுமே, ஏதோவொரு வகையில் நிம்மதி சூழ, அவர் ஊட்ட ஊட்ட மறுக்காமல் கஞ்சியை முழுவதுமாகக் குடித்து முடித்தாள்.

    அவளது பார்வையிலேயே, அவள் மனதில் ஓடும் எண்ணங்களைப் படித்தவராய், இப்ப எதுவும் பேசவேண்டாம். முதல்ல, உன் உடம்பு தேறட்டும். நல்லா ஓய்வெடுத்துக்க. இது உன் வீடு! நிம்மதியா தூங்கு. உன் உடம்பு சரியானதும் பேசலாம். டாக்டர் வந்ததும் அவரைக் கூட்டிட்டு வரேன்! என்று ஆறுதலாகக் கூறினார்.

    அவரின் வார்த்தைகள் வாஸந்தியை உருக்க, தன்னையறியாமலேயே அவளின் இரு கரங்களும் சேர்ந்து குவிந்தன. அதோடு, கீழே இறங்கி அவர் பாதம் பணிந்தவளை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் கௌசல்யா. அவரின் பரிவில் அவளுக்குத் தன் தாயின் நினைவு பீறிட்டு எழ, கண்கள் கசிய அவரது அணைப்பில் மேலும் ஒடுங்கிக்கொண்டாள்.

    அதேசமயம் அரவிந்த் தவிப்போடு அந்த அறைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் தாய் உள்ளே சென்று வெகு நேரமானதால், ‘என்ன ஆச்சோ?’ என்ற பதட்டத்தில், வேகமாக அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் மருண்டு போய், வாஸந்தி உடல் நடுங்க கௌசல்யவின் தோளில் தஞ்சமடைந்தாள். அதைப்பார்த்து வேதனையில் முகம் சுளித்தவனாய், தன் தாயைப் பார்த்தான்.

    நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்ட கௌசல்யா, என்ன அரவிந்த், நீ ரெடியா? சாப்பிடப் போகலாமா? வாஸந்தி கஞ்சி குடிச்சாச்சு! கமலாவை டிபன் எடுத்து வைக்கச் சொல்லு... இதோ வந்திடுறேன்! என்று நிலைமையைச் சமாளித்தார்.

    முகம் முழுக்க வலியும், வேதனையுமாக வாஸந்தியைப் பார்த்துவிட்டு வெளியேறிய அரவிந்தைக் கண்டு, அவருக்கும் வருத்தம் மண்டியது.

    அவளைப் படுக்கவைத்துப் போர்த்திவிட்டவர், நெற்றியை வருடி, "மறுபடியும் சூடு வர ஆரம்பிக்குது கண்ணம்மா! டாக்டர் இப்ப வந்திடுவார்! நீ எதையும்

    Enjoying the preview?
    Page 1 of 1